குஜராத்தில் ரூ.22 ஆயிரம் கோடியில் போர் விமான தொழிற்சாலை - பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்*

 


*குஜராத்தில் ரூ.22 ஆயிரம் கோடியில் போர் விமான தொழிற்சாலை - பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்*


பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிற குஜராத் மாநிலத்தில், சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பை எந்த நேரத்திலும் தேர்தல் கமிஷன் வெளியிடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த தருணத்தில், அந்த மாநிலத்தில் வதோதரா நகரத்தில் இந்திய விமானப்படைக்கு தேவையான 'சி-295' ரக போர் விமானங்களை (போக்குவரத்து விமானங்களை) தயாரிக்கும் தொழிற்சாலையை ரூ.21 ஆயிரத்து 935 கோடியில் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.


இந்த தொழிற்சாலையில் விமானங்களை ஐரோப்பாவின் முன்னணி விமான நிறுவனமான ஏர்பஸ் நிறுவனமும், டாடா குழுமமும் இணைந்து தயாரிக்க உள்ளன. இங்கு தயாரிக்கப்படுகிற போர் விமானங்கள் இந்திய விமானப்படைக்கு வழங்கப்படுவதோடு ஏற்றுமதியும் செய்யப்படும். ஐரோப்பாவுக்கு வெளியே இந்த 'சி-295' விமானம் தயாரிக்கப்படப்போவது இதுவே முதல் முறை ஆகும்.


இந்த விமான தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா நேற்று நடந்தது. ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், சிவில் விமான போக்குவரத்து மந்திரி ஜோதிர் ஆதித்ய சிந்தியா ஆகியோர் முன்னிலையில் நடந்த விழாவில் பிரதமர் மோடி இந்த தொழிற்சாலைக்கான அடிக்கல்லை நாட்டினார். இந்த விழாவில் பேசுகையில் பிரதமர் மோடி கூறியதாவது:-


*• The Seithikathir News Service!*

*• TELEGRAM:* t.me/Seithikathir


"உலகின் உற்பத்தி மையமாக உருவாகும் இலக்கை நோக்கி ஒரு பெரிய நடவடிக்கையை இன்றைக்கு நாங்கள் எடுத்திருக்கிறோம். இந்தியா போர் விமானங்களையும், டாங்கிகளையும், நீர்மூழ்கிக்கப்பல்களையும், மருந்துகளையும், தடுப்பூசிகளையும், மின்னணு சாதனங்களையும், செல்போன்களையும், கார்களையும் தயாரிக்கின்றன. அவை பல நாடுகளில் பிரபலமாக உள்ளன.


'இந்தியாவில் தயாரிப்போம், உலகத்துக்காக தயாரிப்போம்' என்ற தாரக மந்திரத்துடன் முன்னோக்கி நடைபோடுகிறோம். தற்போது இந்தியா உலகின் மாபெரும் போக்குவரத்து விமான உற்பத்தியாளராகி வருகிறது. எதிர்காலத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது என்ற பெருமைமிக்க வார்த்தைகளுடன் இந்தியா மிகப்பெரிய பயணிகள் விமானங்களை தயாரிக்கும்,


இன்றைக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ள இந்த தொழிற்சாலை, நாட்டின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விமான துறையை மாற்றியமைக்கும் வலிமையைக் கொண்டிருக்கிறது. இந்திய பாதுகாப்பு துறையில் மிகப்பெரிய முதலீடு செய்யப்படுவது இதுவே முதல் முறை ஆகும். இங்கு தயாரிக்கப்படுகிற போக்குவரத்து விமானங்கள் நமது பாதுகாப்பு படைகளுக்கு வலிமையைத் தருவதோடு மட்டுமல்லாமல், விமான தயாரிப்பில் புதிய சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கவும் உதவும். கலாசார மையமாக, கல்வி மையமாக திகழ்கிற புகழ் பெற்ற வதோதரா, விமானத்துறை மையமாக ஒரு புதிய அடையாளத்தை உருவாக்கும்.


*• The Seithikathir News Service!*

*• TELEGRAM:* t.me/Seithikathir


இந்த தொழிற்சாலைக்கு எதிர்காலத்தில் பிற நாடுகளிடம் இருந்து ஏற்றுமதி ஆர்டர்கள் கிடைக்கும் என்பதால் 'இந்தியாவில் தயாரிப்போம், உலகுக்காக தயாரிப்போம்' என்ற உறுதிமொழி, இந்த மண்ணுக்கு ஒரு பெரிய உந்துதலைப்பெற்றுத்தரும்.


விமான போக்குவரத்தில் உலகின் 3 முன்னணி நாடுகளில் ஒன்றாக நாம் நுழையப்போகிறோம். இந்தியாவுக்கு அடுத்த 15 ஆண்டுகளில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான விமானங்கள் தேவைப்படுகின்றன. இந்த இலக்கை நோக்கி இந்த ஆலையை நிறுவ அடிக்கல் நாட்டி இருப்பது ஒரு முக்கிய படி ஆகும். இதற்கான ஆயத்தங்களை ஏற்கனவே இந்தியா தொடங்கி விட்டது.


கடந்த 8 ஆண்டுகளில் 160-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்துள்ளன. வெளிநாட்டு முதலீடுகள் குறிப்பிட்ட தொழில்துறைகளுடன் மட்டுப்படுத்தப்படவில்லை. அவை, 61 துறைகளில், 31 மாநிலங்களில் பரவி உள்ளன. விண்வெளித்துறையில் மட்டுமே 3 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.24 ஆயிரம் கோடி) முதலீடு செய்யப்பட்டுள்ளது. 2014-ம் ஆண்டுக்கு பின்னர் இந்த துறையில் முதலீடு, 2000-2014 ஆண்டுகளில் செய்யப்பட்டதைவிட 5 மடங்கு வளர்ந்துள்ளது. இனிவரும் காலத்தில் ராணுவம், விண்வெளி துறைகள் தற்சார்பு துறையில் முக்கிய தூண்களாக இருக்கப்போகின்றன.


2025-ம் ஆண்டுக்குள் நமது ராணுவ தளவாட உற்பத்தி இலக்கு 25 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் (சுமார் ரூ.2 லட்சம் கோடி)அதிகமாக இருக்க வேண்டும் என்று இலக்கு வைத்துள்ளோம். நமது பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 5 பில்லியன் அமெரிக்க டாலர்களை (சுமார் ரூ.40 ஆயிரம் கோடி) விட அதிகமாக இருக்கும்.


உத்தரபிரதேசத்திலும், தமிழ்நாட்டிலும் பாதுகாப்பு வழித்தடங்கள் இந்த துறையை மேலும் உயர்த்துவதற்கு மிகவும் உதவியாக இருக்கும்."


இவ்வாறு அவர் கூறினார்.


🔥🙏🔥🙏🔥🙏🔥🙏

குஜராத்தில் விமான தயாரிப்பு தொழிற்சாலை அமைக்க மோடி நேற்று அடிக்கல் நாட்டியிருப்பது இந்தியாவில் நடக்க இருக்கும் விமான புரட்சிக்கு அடிக்கல்லாக அமையலாம் என்பதுதான் உலகம் கவனிக்கும் செய்தி


நேற்று மோடி குஜராத்தின் வதேராவில் சுமார் 23 ஆயிரம் கோடியில் விமானம் தயாரிக்கும் ஆலையினை தொடங்கிவைத்தார், இது ராணுவ சேவைக்கான விமானம் அதாவது தாக்குதல் விமானம் அல்ல மாறாக பொதுபயன்பாட்டுக்கான விமானங்களை தயாரிக்கும் ஆலையாக இயங்கும்


மேக் இன் இந்தியாதிட்டபடி ஸ்பெயினில் இயங்கும் ஏர்பஸ் விமானமும் இந்தியாவின் டாட்டா நிறுவணமும் இணைந்து நடத்தும் இந்த ஆலை தொடக்கத்தில் ராணுவபயன்பாட்டுக்கான விமானங்களை தயாரிக்கும் என அறிவிக்கபட்டிருக்கின்றது


இது இந்தியாவில் புதிது


இந்தியாவில் பெங்களுரில் இருக்கும் எச்.ஏ.எல் நிறுவணமே இந்திய விமான தயாரிப்பு நிறுவணமாக அறியபட்டது, ஆனால் அது இலகு ரக போர்விமானம் போன்றவற்றோடு நிறுத்திகொள்ளும் அதாவது ஒரு விமானி அல்லது இரு விமானிக்கு மேல் அமரமுடியாது


இப்பொழுது அறிவிக்கபட்டிருப்பது பல நூறு ராணுவவீரர்களை ஏற்றிசெல்லும் விமானங்கள், இப்படி 40 விமானம் தயாரிக்க முடிவு செய்யபட்டு இப்பொழுது இந்தியாவில் மேக் இன் இந்தியா திட்டபடி இங்கே தயாரிக்கபட இருக்கின்றது


இது ராணுவ பாவனைக்கான விமான தயாரிப்பு என சொல்லபட்டாலும் எதிகாலத்தில் ஆச்சரியங்கள் நிகழலாம்


காரணம் உலகளவில் பயணிகள் விமான தயாரிப்பில் அமெரிக்காவின் போயிங், பிரான்ஸின் ஏர்பஸ் ஆகிய இரு நிறுவணங்கள்தான் உண்டு இவற்றை தாண்டி யாருமில்லை ஆங்காங்கே இருப்பவர்களும் 10 பேர் செல்லும் குட்டிவிமானம் தாண்டி தயாரிக்கமாட்டார்கள்


ரஷ்யாவிடம் கூட பயணிகள் விமான தயாரிப்பு இல்லை, இருந்திருந்தால் இப்போதைய பொருளாதார தடையால் உதிரிபாகம் கிடைக்காமல் பலநூறு விமானங்கள் தரையில் நிற்காது


இப்பொழுது ஏர்பஸ் நிறுவணத்துடன் இந்தியாவின் டாடா நிறுவணம் செய்யும் இந்த கூட்டுதயாரிப்பு நாளடைவில் இந்தியாவின் சொந்த பயணிகள் விமானமாக கூட மாறலாம்


அமெரிக்கா, பிரான்ஸுக்கு அடுத்து சீனா பயணிகள் விமானத்தை தயாரிப்பதாக அறிவித்தது ஆனால் இன்னும் அது முடிந்தபாடில்லை அல்லது முடியவும் முடியாது


இந்தியா இந்த ஆச்சரியத்தை எதிர்காலத்தில் நிகழ்த்தலாம் என்பதுதான் நேற்று மோடி அடிக்கல் நாட்டிய அந்த தொழிற்ச்சலை நாட்டுக்கு தரும் நற்செய்தி


இம்மாதிரி பெரும் தொழிற்சாலை அதுவும் விமான தொழிற்சாலை அமைய தமிழகம் சரியான இடம், அதன் இரு புறமும் கடல் மக்கள் நெருக்கம் அதிகமில்லா இடம் என பல அனுகூலங்கள் தமிழகத்தில்தான் உண்டு


ஆனால் மாகாண அரசியலும் சில முரண்பாடுகளும் இம்மாதிரி திட்டங்களை இங்கு வரவேற்கவில்லை, கோவை, திருச்சி போன்ற  பல தொழில் நகரம் இருக்கும் தமிழகம் இந்த திட்டத்திற்கு சரியான தேர்வாக இருக்க முடியும், ஆனால் மாகான அரசு ஆர்வம் காட்டவில்லை


விளைவு பல்லாயிரம் கோடியும் பெரும் எதிர்காலமும் கொண்ட தொழிற்சாலை குஜராத்துக்கு சென்றுவிட்டது


மத்திய அரசோடு இணக்கமாக இருந்தால் பெரும் நலதிட்டங்கள் தமிழகத்துக்கு கிடைக்கும் என்பது முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள் அடிக்கடி சொல்லும் விஷயம், அப்படி ஒரு நல்லதிட்டம் இப்பொழுது கை நழுவியிருப்பது துரதிருஷ்டம்


பலருக்கு மறந்திருக்கலாம் அல்லது மறக்கடிகக்பட்டிருக்கலாம், முன்பு டாட்டா தாதுமணலில் இருந்து சில கனிமங்களை செய்ய தமிழகத்தின் இரண்டாயிரம் ஏக்கர் நிலத்தை வாங்கியபொழுது பலத்த எதிர்ப்பால் அது விரட்டபட்டது


தாதுமணல் வியாபாரிகளோடு தமிழக அன்றைய அதிமுக அரசும் அதற்கு உடைந்தையானது


ஒருவேளை டாட்டா அதனை வாங்கி தொழிலை தொடங்கியிருந்தால் இந்நேரம் இந்த விமான தொழிற்சாலை தமிழகத்துக்காதன் வந்திருக்கும்


குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதள தொடர்ச்சியாக இந்த விமான தொழிற்சாலையும் அன்மித்து தொழிலும் பாதுகாப்பும் பெருகியிருக்கும்


ஆனால் நடக்கவில்லை, ஏனென்றால் அதுதான் தமிழகம் அது அப்படித்தான் இருக்கும்

Comments

Popular posts from this blog

நான் கிட்டத்தட்ட 22 வயது வரை நாத்திகனாக இருந்தேன். கோவில்களுக்குச் செல்வது பிடிக்க வில்லை. நான் அவற்றை பிராமணர்கள் மற்றும் பிறர் பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாகவே கருதினேன். ஒவ்வொரு அடியிலும் அவர்கள் எப்படி பணம் கேட்டார்கள் என்பதை நான் வெறுத்தேன்.

8th August 11am, Delhi: MAHA PANCHAYAT- 100Cr HINDU Movement for Abolition of totally Discrminatory HR&CE Act.1951, all over India. Temples should function as independently as MOSQUES & CHURCHES. Money taken/swindled should be given back by Govts.

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷