அவர் கடந்த நூற்றாண்டின் மிகபெரும் வானியல் விஞ்ஞானி, அதுவும் தமிழ் வம்சாவளி தமிழ் விஞ்ஞானி, நோபல் பரிசுபெற்ற பெரும் விஞ்ஞானி ஆனால் அப்படி ஒரு விஞ்ஞானி இருந்தான் என் தமிழகத்தில் யாருக்கும் தெரியாது

 




அவர் கடந்த நூற்றாண்டின் மிகபெரும் வானியல் விஞ்ஞானி, அதுவும் தமிழ் வம்சாவளி தமிழ் விஞ்ஞானி, நோபல் பரிசுபெற்ற பெரும் விஞ்ஞானி ஆனால் அப்படி ஒரு விஞ்ஞானி இருந்தான் என் தமிழகத்தில் யாருக்கும் தெரியாது


ராம்சாமி, அண்ணா, கருணாநிதி என பிம்பம் உள்ள மாகாணத்தில் இவரை போன்றவர்கள் தெரியாது, அதுவும் பிராமணனாக இருந்தால் சுத்தமாக தெரியாது


அந்த விஞ்ஞானியின் பெயர் சுப்பிரமணிய சந்திரசேகர்


அவர் தமிழக பிராமண குடும்பத்து பிறப்பு, 1910ம் ஆண்டு பிறந்தார், பிரபல அறிவியல் மேதை சர்.சிவி ராமன் இவரின் சித்தப்பா. இவரின் குடும்பம் பிரிட்டிஷ் இந்தியாவின் லாகூரில் பணியாற்றியதால் அங்கு பிறந்தார் பின் இளம் வயதில் சென்னை திரும்பி சென்னை திருவல்லிகேணியில்தான் வளர்ந்தார்


அவர் பட்டபடிப்பு வரை சென்னையில்தான் படித்தார், சித்தபப சர்.சிவி ராமன் நோபல் வாங்கும்பொழுது அவருக்கு வயது 18


1920ல் ஆர்னோல்ட் சம்மர்ஃபெல்ட் எனும் விஞ்ஞானி சென்னை வந்தபொழுது அவரின் உரையால் கவரபட்டு இவரும் இயற்பியல் கட்டுரைகள் எழுத ஆரம்பித்தார், அது உலகளவில் கவனம் பெற 1930ம் ஆண்டு லண்டன் கேம்பிரிட்ஜ் கழகம் இவரை உபகார சம்பளத்துடன் சேர்த்து கொண்டது


சீனிவாச ராமானுஜம் போல அங்கு பிரகாசித்தார் சந்திரசேகரன், சீனிவாச ராமானுஜனுக்கு பின் ராயல் சொசைட்டி அங்கீகாரம் பெற்ற இரண்டாம் தமிழர் அவர்தான்


அவரின் ஆய்வுமுடிவுகள் அவரை விஞ்ஞானி என ஒப்புகொள்ள வைத்தன, வானியல் நட்சத்திரங்களின் அமைப்பு அவற்றின் உட்பொருள் அது எப்படி எரிகின்றது? சக்தி என்ன என பெரும் ஆய்வுகளை செய்து நட்சத்திரங்களுக்கு இடையேயான தூரத்தை அளப்பது உள்ளிட்ட முடிவுகளை சொன்னார்


முதன் முதலில் நட்சத்திரங்களின் எல்லை தூரம் போன்றவற்றை வரையறுத்தவர் அவர்தான், இன்றுவரை அது என்றேதான் அழைக்கபடுகின்றது


நட்சத்திர எடை, நட்சத்திரங்களின் பருமன், அவை எப்படி தோன்றி மறையும் என்பதையெல்லாம் தன் ஆய்வில் சொன்னார்


உலக பெரும்போர்களால் தடைபட்ட அவரின் ஆய்வு 1950க்கு பின் பெரும் வேகம் எடுத்தது, 1983ல் அவர் நோபல் பரிசும் பெற்றார்


இதுவரை நோபல் பரிசு வாங்கிய இரு தமிழர்களில் அவரும் ஒருவர், சித்தப்பா சர் சிவி ராமனை போல் இவரும் வாங்கினார்


ஆனால் இந்த இருவரையும் பற்றி தமிழகத்தில் யாருக்கும் தெரியாது


தன் ஆய்வுகளை தன் அந்திம காலமான 1995 வரை செய்துகொண்டே இருந்தார், 1930களில் அவர் ஆய்வினை தொடங்கியபொழுது இப்போதிருக்கும் செயற்கைகோள், செயற்கைகோள் டெலஸ்கோப் இன்னும் பல விஷயம் கிடையாது, ஆனால் இன்று அதன் மூலம் நிருபிக்கபடும் முடிவுகள் சந்திரசேகரின் ஆய்வின் துல்லியத்தை சொல்கின்றன‌


இன்று வானியலின நட்சத்திரம், சூப்பர் நோவா, கரும்புள்ளி, டார்க் எனர்ஜி என எவ்வளவோ விஷயங்கள் விவாதிக்கபடுகின்றன, அதையெல்லாம் தொடங்கி வைத்தவரும் அந்த ஆய்வுக்கு அடிதளமிட்டவரும் ஒரு இந்திய தமிழர் என்பது எல்லோருக்கும் பெருமையான விஷயம்


எப்படி சாதித்தார் சந்திரசேகரன்?


சர்.சிவி ராமன் வானமும் கடலும் நீல நிறமாக இருப்பதன் ரகசியத்தை தன் ஆய்வு மூலம் சொன்னார், சூரிய கதிரில் இருந்து வரும் 7 நிறங்கள் உண்டு என்றும் அதில் நீல நிறம் அதிக தூரம் சிதறடிக்கபடுவதை சொல்லி நிரூபித்து நோபல் வாங்கினார்


இதனை அவர் இந்துக்களின் புராண செய்தியான சூரிய பகவான் 7 குதிரை பூட்டிய தேரில் வருவதையும் ராமனும் கண்ணனும் நீலநிறம் அன்னை தேவியும் நீலவேணி என சொல்லபட்டதில் இருந்து எடுத்து கொண்டார்


இந்துமதம் அவருக்கு வழிகாட்டிற்று, புராணம் சொன்னதை அவர் விஞ்ஞான பூர்வமாக நிரூபித்தார்


அப்படியே இந்துக்கள் வாழ்வாங்கு வாழ்ந்தவர்களை துருவன், அருந்ததி என பெயரிட்டு காட்டியதையும் இன்னும் பல வகையான நட்சத்திரங்கள் இந்திய வானவியலிலு ஜோதிடத்திலும் இருப்பதை சிறுவயதில் இருந்தே கவனித்து வளர்ந்தவர் சந்திரசேகரன்


இந்து ஜோதிட அறிவும் புராணங்களுமே அவருக்குள் விதையினை வளர்த்தன, அது கனவாக எழுந்தது


நட்சத்திரம் தோன்றும், நிலைக்கும், மறையும் என்பதை இந்துக்களின் புராணங்கள் சொல்லும், அதைத்தான் விஞ்ஞான ஆய்வாக செய்து நிருபித்து நோபல் பரிசும் பெற்றார் சந்திரசேகர்


சூரியனுக்கும் பூமிக்கும் இடைபட்ட தூரம், சந்திரனுக்கும்  பூமிக்கும் இடைபட்ட தூரம் என மிக துல்லியமாக கணித்து பாடலிலும் மந்திரங்களிலும் வைத்திருந்த இந்துமத அறிவியல் அவருக்குள் விருடசமானது


அந்த தூர தொடர்புதான் நட்சத்திரங்களுக்கு இடையிலும் வரும் என்பதை துல்லியமாக அவரால் உணரமுடிந்தது


கருந்துளை என்பது இந்துமதத்தில் சொல்லபட்ட விஷயம் என்பதால் அவரால் எளிதில் அதனை கணிக்க முடிந்தது, கீதையின் 11ம் அத்தியாயமே அதுதான்


உலகம் கோள வடிவ பிம்பத்தில் தோன்றியது , இங்கு எல்லாமோ கோள் வடிவம் என்பதை ஹிரண்ய கர்பம் எனும் தங்கமுட்டையின் தத்துவத்தை சொல்லியது இந்துமதமே, இப்பொழுது விஞ்ஞானம் அதனை ஒப்புகொள்கின்றது


இதுவரை தமிழர் பெற்ற இரு நோபல் பரிசுகளும் இந்து நம்பிக்கைகளை ஆதாரமாய் கொண்டவை என்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயம், அப்படிபட்ட தமிழகம் இது


இந்துமதம் என்பது வெறும் மூடநம்பிக்கை கொண்டதல்ல, அது கட்டுகதையுமல்ல‌


இந்துமதம் விஞ்ஞானத்தை முழுக்க புரிந்து அதனை அக்கால மக்களுக்காக பல லவுகீக விஷயங்களோடு கலந்து சொல்லி புரியவைக்க முயன்ற முழு ஞானமதம்


அதன் தாத்பரியம் முழுக்க பிரபஞ்ச ரகசியமும் அதன் சூட்சுமமுமே


அதனை புரிந்த ரிஷிகளும் ஞானிகளும் மக்களுக்கு புரியும்படி போதித்து சில வாழ்வியல் முறைகளை சொன்னார்கள் அதுதான் இந்துமதம் ஆயிற்று


அதனாலே எல்லா விஞ்ஞான முடிவும் இந்துமதத்திலே சங்கமாகின்றன, இன்று விஞ்ஞானம் சொல்வதையெல்லாம் என்றோ சொன்னது இந்துமதம்


இன்று ஐன்ஸ்டீன் முதல் டெஸ்லா, ராமன் என எல்லா விஞ்ஞானிகளும் சொன்னதைத்தான் இந்துமதமும் என்றோ சொன்னது, அதனை சந்திரசேகரன் ஆதாரத்தோடு நிருபித்தார்


இன்று அந்த சுப்பிரமணிய சந்திரசேகருக்கு பிறந்த நாள்


சென்னையில் பிறந்த அந்த வானியல் மேதைக்கு சென்னையில் அடையாளமோ சிலையோ சிறப்போ ஏதுமில்லை, ஆனால் சென்னையில் இருக்கும் வானியல் கோளரங்கத்தின் பெயர் "பெரியார் கோளரங்கம்"


அய்யா ராம்சாமி எனும் பெரியார் என்ன வானியல் ஆய்வை செய்தார் என்பதுதான் வரலாற்று மர்மம்


ஒருகாலம் வரும் அப்பொழுது உண்மையான இந்தியருக்கும், இந்நாட்டுக்கு பெருமை சேர்த்தவர்களுக்கும் அழியா அடையாளம் செய்யபடும்


அன்று சுப்பிரமணிய சந்திரசேகருக்கு சென்னையில் பெரும் அடையாளம் நிறுவபடும், அதுவரை அயல்நாட்டினர் மட்டும் அவர் பெருமை பேசட்டும்


இப்படி சொந்த மண்ணில் அந்த பெரும் விஞ்ஞானி புறக்கணிக்கபடவும், மாகாண பாடதிட்டத்தில் அவன் சாதனையும் கண்டுபிடிப்பும் இடம்பெறாமலே போக காரணம் என்னவென்றால் விஷயம் எளிது

நன்றி திரு ஸ்டான்லி ராஜன் அவர்களுக்கு

அவன் ஒரு பிராமணன், இரண்டாவது அவன் பரிபூரண இந்து


இங்கு அந்த சாதியில் இந்துவாய் பிறந்ததுதான் அவன் பெற்ற சாபம் என்றாலும் உலகளவில் சாதிக்க‌ அவன் பெற்ற வரமும் அதுதான், அது ஒன்றுதான்



Comments

Popular posts from this blog

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது

Om NAMO NArendra MOdi Namaha*🔥🙏🪷 Shri Narendra Modi Ashtotra Namavali ஓம் ஸ்ரீ நரேந்த்ராய நமஹ (Salutations to the revered Narendra) 1. ஓம் விஶ்வ-நேத்ரே நமஹ – Salutations to the leader of the world stage. 2. ஓம் பாரத-பக்தாய நமஹ – Salutations to India’s devoted champion. 3. ஓம் ஜடூ-ஜப்பி-ப்ரதாய நமஹ – Salutations to the giver of world-famous hugs.

நான் கிட்டத்தட்ட 22 வயது வரை நாத்திகனாக இருந்தேன். கோவில்களுக்குச் செல்வது பிடிக்க வில்லை. நான் அவற்றை பிராமணர்கள் மற்றும் பிறர் பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாகவே கருதினேன். ஒவ்வொரு அடியிலும் அவர்கள் எப்படி பணம் கேட்டார்கள் என்பதை நான் வெறுத்தேன்.