பாரத தேசத்தை ஒரே தேசமாக இணைக்கும் தேசாபிமான பிறப்புக்கள் எப்பொழுதும் ஒவ்வொரு காலத்தில் பிறந்து கொண்டே இருக்கும், அது இத்தேசத்தை ஒரே தேசமாக நிலைக்க வைக்க தன் வாழ்வை அர்பணிக்கும் மாபெரும் சவால் எடுத்து இந்த பாரத கண்டத்தை ஒரே கண்டமாக நிறுத்தும், அந்த அதிசயம் விக்ரமாதித்தன் காலத்தில் இருந்து உண்டு, பட்டேல் வரை உண்டு நம் கண்முன்னும் அப்படி ஒரு சாட்சி உண்டு, அவர்தான் இரண்டாம் வல்லபாய் பட்டேல் எனும் பட்டேலின் இன்னொரு வடிவமான அமித்ஷா

 



பாரத தேசத்தை ஒரே தேசமாக இணைக்கும் தேசாபிமான பிறப்புக்கள் எப்பொழுதும் ஒவ்வொரு காலத்தில் பிறந்து கொண்டே இருக்கும், அது இத்தேசத்தை ஒரே தேசமாக நிலைக்க வைக்க தன் வாழ்வை அர்பணிக்கும்


மாபெரும் சவால் எடுத்து இந்த பாரத கண்டத்தை ஒரே கண்டமாக நிறுத்தும், அந்த அதிசயம் விக்ரமாதித்தன் காலத்தில் இருந்து உண்டு, பட்டேல் வரை உண்டு


நம் கண்முன்னும் அப்படி ஒரு சாட்சி உண்டு, அவர்தான் இரண்டாம் வல்லபாய் பட்டேல் எனும் பட்டேலின் இன்னொரு வடிவமான அமித்ஷா


அந்த மனிதர் பிறக்கும்பொழுதே வசதியான குடும்பத்து பிறப்பு, தொழிலதிபராகவோ இன்னும் வேறு திசைக்கோ திரும்பியிருக்க வேண்டிய அவர் ஆர்.எஸ்.எஸில் இணைகின்றார்


அவர் பிறந்து வளரும்பொழுது அந்த குஜராத் காங்கிரஸின் கோட்டையாக இருந்த காலங்கள், கிட்டதட்ட 17 வயதில் இருந்தே அதிதீவிர உழைப்புக்கு வருகின்றார் அவர்


1984ல் இருந்து அவரின் உழைப்பு பெருக பெருக காங்கிரஸ் அங்கு வலுவிழக்கின்றது, 21 வயதில் அவர் பாஜகவுக்கு உழைக்க தொடங்கியபொழுது அது வெறும் 11 இடங்களில் மட்டும் வென்றது, அடுத்த 11 வருடத்தில் பாஜக ஆட்சிக்கு வருகின்றது


அது குஜராத்தில் ஆட்சிக்கு வர ஏகபட்டபேர் உழைத்தனர் என்றாலும் அன்று 31 வயதே ஆன அவர் கவனிக்கபட்டார்


அதன்பின்பே அமித்ஷா எனும் பெயர் உச்சரிக்கபட்டது


கேசுபாய் பட்டேலுக்கு பின் மோடி ஆட்சிக்கு வருகின்றார், மோடியிடம் உள்ள பிரதான குணம் மிக சரியான நபர்களை சரியான இடத்தில் வைப்பது


ஆம் இன்றும் ஈழவிவகாரத்துக்கு இந்திராவின் காலத்து பார்த்தசாரதியினை அமர்த்தியிருக்கின்றார் அல்லவா அப்படி, மோடியிடம் உள்ள விஷேஷ குணம் அது


மோடி அமிதஷாவினை அமைச்சராக்கினார், அதன் பின் வேகமாக வளர்கின்றார் அமித்ஷா தேசிய அரசியலில் இரண்டாம் கட்ட தலமைக்கு அப்பொழுதே அவர் பெயர் அடிபட்டது


ஒரு விஷயத்தை ஒப்புகொள்ளவேண்டும், மோடி அமித்ஷா காலங்களில் குஜராத் மகா வேகமாக வளர்ந்தது, மிக பிரமாண்டமான திட்டங்களும் இன்னும் பெரும் முன்னேற்றங்களும் ஏற்பட்டன, அதில்தான் குஜராத் இன்னும் பாஜக அரசையே விரும்புகின்றது


2002க்கு பின் அமித்ஷாவுக்கு சோதனை காலம், அது அந்த கோத்ரா ரயில் எரிப்பில் தொடங்கியது


குஜராத் கலவரம் என வரிந்து கட்டுபவர்கள் அந்த ரயில் எரிப்பு சம்பவத்தை சொல்லமாட்டார்கள், அந்த கொடூர சம்பவத்தை தொடர்ந்து குஜராத் எரிய ஆரம்பித்தது


கலவரம் எனபது சாதாரணம் அல்ல, அந்த சூழலை அனுபவித்தால் அன்றி உணரமுடியாது. அதை அடக்க வேண்டும் என ஒரு மாநில அரசு முன் நிற்பதும் தவறல்ல, கட்டாய நிலை அது


மோடியும் அமித்ஷாவும் அந்த கலவரத்தை முன் நின்று அடக்கினர், அந்த கலவர இடத்துக்கே மோடி சென்றது அன்று பெரும் சர்ச்சையானது, கலவரத்தை முன் நின்று அடக்கினார் மோடி


அந்த கலவரத்தில் இந்துக்களும் பெருவாரி கொல்லபட்டனர் என்பதை பல ஊடகங்கள் சொல்லாது

அந்த கலவரத்துக்கு பின் அமித்ஷா மேல் சர்ச்சைகள் வெடித்தன, பல வழக்குகள் பாய்ந்தன. அவர் குஜராத்தை விட்டு வெளியேறவேண்டும் என நீதிமன்றமும் உத்தரவிட்டது


நிச்சயம் அவருக்கும் மற்றவர்களுக்கும் சொந்தபகை என ஏதுமில்லை, கட்சி வாக்கு சண்டையுமில்லை. அந்த கலவரத்தின் தொடர்ச்சியும் தொடந்து குஜராத்தின் அமைதியினை நிலை நிறுத்தவவும் அவர்மேற்கொண்ட சில முயற்சிகள் அவருக்கே பாதகமாயின‌


அமித்ஷாவினை முடக்க நினைத்ததில் அரசியலும் இருந்தது


(அமித்ஷாவினை மிக மோசமாக விமர்சிப்பவர்கள் யாரென்றால் அவன் இவன் என சொல்லும் தமிழன் யார் தெரியுமா? பேரரிவாளன் கோஷ்டியினை, அடுத்த நாட்டு கொலைகாரனை தியாகி என்றும் அவனை வெளியே விடு என சொல்பவாகவும் இருப்பான்

அவன் சொல்வதுதான் அமித்ஷாவின் உண்மை பிம்பம் என கருதுவீராயின் உங்களை விட பரிதாபத்துகுரியவர் யாரும் இருக்கமுடியாது)


2015க்கு பின் மகா ஆச்சரியமாக 14 ஆண்டுகளுக்கு பின் அமித்ஷாவுக்கு பொற்காலம் திரும்பியது, அவரின் அணுகுமுறையோ இல்லை அவருக்கு கட்டுபட்ட கட்சி தொண்டர்களோ எதுவோ ஒன்று மாபெரும் வெற்றியினை அவருக்கு கொடுத்தது


பாஜக தனிபெரும் கட்சியாக ஆட்சியில் அமர்ந்ததில்  அமித்ஷாவின் பங்கு அதிகம்


ஆம்  குஜராத்துக்குள் நுழைய கூடாது என அவரை எந்த உபியில் அடைத்தார்களோ அந்த உபியினை பாஜகவின் கோட்டையாக மாற்றிகாட்டினார்


சிறைவைத்த இடத்திலே வலைபின்னி எதிரியினை சிக்க வைத்த சிலந்தி வித்தைக்காரர்


இதுதான் எதிரிகளை அதிர்ச்சியும் பயத்தையும் கொடுத்தது, அவரை அடைத்த சிறையே அவருக்கு அரண்மனையானது அவரின் ஜாதகமோ இல்லை சாணக்கியதனமோ எதுவோ ஒன்று


அமித்ஷாவின் மிகபெரும் சாதனை இரண்டாம் முறை பாஜகவினை ஆட்சியில் அமர்த்தியது

நேரு இந்திரா காலத்துக்கு பின்பு அது அமித்ஷா என்பவருக்கே சாத்தியமானது இந்திய வரலாறு


இரண்டாம் முறை பாஜக ஆட்சிக்கு வந்ததும் உள்துறை அமைச்சராக அவர் அமர்ந்தபொழுதே பலரின் புருவங்கள் உயர்ந்தன, இனி இந்த அரசு அதிரடியாக ஆடும் என்பது அன்றே உணரபட்டது


குஜராத்திலே பல பாடங்களை கற்றவர் அமித்ஷா, நிச்சயம் இனி இன்னொரு காந்தி என்றோ இல்லை நேரு என்றோ தேசம் சொல்லபோவதில்லை என்பதால் அதிரடி முடிவினை எடுத்தார்


"என்ன நடந்தாலும்  ஏகபட்ட "நல்ல" பெயர்களில்தான் எதிர்கட்சிகள் அழைக்கபோகின்றன, எதிரியிடம் நல்லவன் எனும் பட்டம் வாங்குவது தோல்விக்கு சமம்


ஆம் நாம் அந்த அதிரடிக்காரனாகவே இருப்போம், குஜராத்தில் செய்த அதிரடியினை நாட்டுக்கும் செய்ய போகின்றேன், தடுப்பவன் முடிந்தால் தடுக்கட்டும். எனக்கு தேவை பூரண அமைதி குஜராத்தில் நிலைநாட்டபட்ட அந்த அமைதி இந்தியா முழுக்க வேண்டும்


பொல்லாதவன், இறுக்கமானவன் என பெயர் எடுத்தாகிவிட்டது, அந்த பெயரை களைந்தெறிவதை விட அதே பெயரில் நாட்டுக்கு நல்லதை செய்தால் என்ன? காந்திவழியோ பட்டேல் வழியோ தேசம் செழித்தால் சரி

இந்தியருக்கு தான் யார் எனபதை வார்த்தைகளால் அல்ல, செயலால் விளக்க போகின்றேன்"


ஆம் அதிரடிகள் தொடங்கின, 70 ஆண்டு வரலாற்றில் முதன் முறையாக தீவிரவாத தாக்குதலுக்கு இந்திய விமானங்கள் எல்லை தாண்டி அடித்தன. அதிர்ந்தது உலகம்


அந்த அதிர்ச்சி தீருமுன்பே 70 ஆண்டு சிக்கலான காஷ்மீரின் வெற்று கோட்டையான 370 சுவரை துடைத்தெறிந்தார் அமித்ஷா


அய்யகோ உலகம் பொங்கும், நீதி பாயும், இஸ்லாம் உலகம் படையெடுக்கும், கச்சா எண்ணெய் வராது, அரேபியா இந்திய தொழிலாளரை திருப்பி அனுப்பும் என் ஏக மிரட்டல்கள்


எதையுமே கொஞ்சமும் காதில் வாங்காமல் அவர் போக்கில் சமாளித்தார், இன்று எல்லாமே சுபம்.


உலக எதிர்ப்பை விட உள்ளூர் திமுக எதிர்ப்பினை அவர் சமாளித்தது சுவாரஸ்யம், எத்தனையோ பல்புகளை இந்திராவிடம் வாங்கிய திமுக நெடுநாளைக்கு பின் அதை அமித்ஷாவிடம் வாங்கியது


நிச்சயம் அமித்ஷா அசாத்திய மனிதர், பட்டேலை நாம் பார்த்ததில்லை ஆனால் அந்த பட்டேல் இப்படித்தான் இருந்திருப்பார் என கண்முன் நிறுத்துகின்றார்


நாம் சங்கி என சொல்பவர்கள் சொல்லட்டும் ஆனால் நாம் உண்மையினை சொல்லிவிடுவோம்


அமித்ஷாவின் இரும்புகரத்தில் தேசத்தில் தீவிரவாத தாக்குதல் இல்லை, அனுதினமும் எவ்வளவோ திட்டம் போட்டு காஷ்மீர் பஞ்சாப் குஜராத் மும்பை கேரளா வங்கம் தமிழ்நாடு என எந்த எல்லை ஊடாகவாவது வரமுடியாதா என தவிக்கும் கொடும் தீவிரவாத குழுக்களுக்கு இங்கு வழியில்லை


அரசியலில் இம்சை அரசியல்வாதிகளை ஒடுக்கி வைத்திருக்கின்றார்


இந்த மாயாவதி, முலாயம், மம்தா, சந்திரபாபு, தேவகவுடா,லாலு, கம்யூனிஸ்டுகள் திமுக என எதுவுமே சத்தமில்லை, இவைகளை கட்டியழுத பாவத்திற்காக காங்கிரசும் காலி


தேசம் அரசியல் ரீதியாக அமைதியாக இருக்கின்றது, பாதுகாப்பு ரீதியாக பலமாக இருக்கின்றது

பிரிவினை குரல்கள் இல்லை , தேசவிரோத அழிச்சாட்டிமில்லை எல்லாம் அடக்கி ஒடுக்கபட்டு தேசம் அமைதியாய் இருக்கின்றது, சிறிய சலசலப்புமிலை


பெரும் அதிகாரம் கையில் இருந்தும் வீணான அழிச்சாட்டியங்களை அமித்ஷா செய்யவில்லை என்பதும் குறிப்பிடதக்கது, அவர் நிலையில் மிக மிக பொறுப்பாக நாட்டை நடத்துகின்றார்.


நேற்று அதிசய மனிதர் அமித்ஷாவுக்கு பிறந்த நாள்


அவருக்கு வயது 58  தான் ஆனால் 550 ஆண்டுகளாக இத்தேசம் ஏங்கிகிடந்த தலைவன் அவர், அந்த இரண்டாம் பட்டேல் இன்னும் இன்னும் தேசத்தை வலுபடுத்தட்டும்


தமிழ்நாட்டில் உள்ள வெற்று பிம்பத்தையும் பிரிவினைவாத அரசியலையும் வைத்து அமித்ஷாவினை நீங்கள் அணுகினால் அல்லது அவரை இந்து அடையாளமாகவும் வெறுப்பு அரசியலாகவும் அணுகினால் நாம் ஒன்றும் சொல்லமுடியாது


தமிழகத்தை தாண்டி இந்தியா முழுக்க அவருக்கு பெரும் அபிமானமும் வரவேற்பும் இன்னும் பெரும் எதிர்பார்ப்பும் இருக்கின்றது


உலகம் முழுக்க அவரை இரும்பு மனிதராகத்தான் பார்க்கின்றார்கள், இந்திய அரசியலை நிர்ணயிம் செய்யும் மாபெரும் அதிகாரபீடமாக அவர் நோக்கபடுகின்றார் என்பதுதான் நிஜம்


பொதுவாக நிஜத்துக்கும் தமிழகத்துக்கும் வெகுதூரம் என்பதால் இங்கு சிரிப்பவன் சிரித்துகொண்டே இருக்கட்டும்


ஆனால் நம்புகின்றீர்களோ இல்லையோ அமித்ஷாவின் கரங்கள் ஒருநாள் தமிழகத்தை இறுக்கும் இங்கும் அவரால் பெரும் மாற்றங்களை கொடுக்கமுடியும், அவர் கொடுப்பார்


நாம் மகா உறுதியாக சொல்கின்றோம், பட்டேலுக்கு பின் சாஸ்த்திக்கு பின்  இந்திராகாந்திக்கு பின்  தேசம் காணும் இரும்பு அடையாளம் அமித்ஷா


அவர் இந்நாட்டின் பெரும் பலம், சாணக்கியன். அவரின் தயாரிப்பான மோடியே பெரும் பலம் பெற்றிருக்கும் பொழுது இதை போல ஆயிரம் மோடிக்களை அவரால் உருவாக்க முடியும்


அந்த இரண்டாம் வல்லபாய் பட்டேலை, பட்டேலுக்கு பின் அதிரடி முடிவுகளை எடுக்க வந்திருக்கும் அபூர்வ தலைவனுக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்துக்களை சொல்வதில் பெருமை அடைகின்றோம்


நவீன இந்தியாவின் சாணக்கியனின் இக்காலத்தில் இந்தியா தன் பொற்காலத்தை மீட்டெடுக்கட்டும்


58 வயதே ஆன அமித்ஷாவுக்கு இனிதான் காலமே இருக்கின்றது, அந்த பலமான வருங்காலத்தில் இன்னும் இங்கு ஆற்றவேண்டிய பெரும் கடமைகளை அவர் ஆற்றி இந்த தேசத்தை மாபெரும் வல்லரசாக நிறுத்தட்டும்


தமிழர் இருவரை கவர்னராக அவர்தான் அறிவித்தார்


1960கள் போல, மறக்கமுடியாத துன்பமான 1980களின் தமிழகம் போல, 1990களின் சம்பவங்கள் போல பன்மடங்கு வீரியத்துடன் தேசமும் தமிழகமும் சந்திக்க இருந்த ஆபத்துக்களை அவர்தான் என்.ஐ.ஏ என சொல்லி முறித்து போட்டார்


உலகம் வியந்த மாபெரும் தேடுதல் வேட்டை மிக துல்லியமான தேசவிரோத வேட்டை அவரால்தான் நடந்து தேசம் பாதுகாப்பாக இருக்கின்றது, தமிழகமும் அதில் தப்பி பிழைத்திருக்கின்றது


இரும்பு கவசம் போல ஒரு கவர்னரை தமிழகத்துக்கு தந்ததும் அவரே


இந்தியாவுன் இரும்பு மனிதனுக்கு, கண்துஞ்சாமல் ஓய்வறியாமல் கண்ணுக்கும் தெரியாமல் தேசத்தை காக்கும் அவருக்கு தேசாபிமானிகள் வாழ்த்துக்களை தெரிவிப்போம்


பாகிஸ்தான் இன்று பம்மி கிடக்கவும், சீனா வடக்கு எல்லையில் வாலை சுருட்டி அடங்கி நிற்கவும், அண்டை நாடுகள் இந்தியாவின் குரலுக்கு கட்டுபடுவதும், உலக அரங்கில் இந்தியா பாதுகாப்பான தேசம் என முதலீடுகள் குவிப்பதும், பல நாடுகளில் இந்து ஆலயங்கள் துலங்குவதும் அவராலே


தேசத்தின் மிகபெரிய கனவான பொதுசிவில் சட்டமும், இது இந்துநாடு இந்துக்களுக்கும் இந்து மதத்துக்கும் முழு பாதுகாப்பான நாடு எனும் சட்டமும் அவர் கொண்டுவரவேண்டும், கொண்டுவருவார் என அவரை எதிர்பாத்திருக்கும் தேசம் அவர் பல்லாண்டு வாழ வாழ்த்திகொண்டே இருக்கின்றது

Comments

Popular posts from this blog

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது

Om NAMO NArendra MOdi Namaha*🔥🙏🪷 Shri Narendra Modi Ashtotra Namavali ஓம் ஸ்ரீ நரேந்த்ராய நமஹ (Salutations to the revered Narendra) 1. ஓம் விஶ்வ-நேத்ரே நமஹ – Salutations to the leader of the world stage. 2. ஓம் பாரத-பக்தாய நமஹ – Salutations to India’s devoted champion. 3. ஓம் ஜடூ-ஜப்பி-ப்ரதாய நமஹ – Salutations to the giver of world-famous hugs.

நான் கிட்டத்தட்ட 22 வயது வரை நாத்திகனாக இருந்தேன். கோவில்களுக்குச் செல்வது பிடிக்க வில்லை. நான் அவற்றை பிராமணர்கள் மற்றும் பிறர் பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாகவே கருதினேன். ஒவ்வொரு அடியிலும் அவர்கள் எப்படி பணம் கேட்டார்கள் என்பதை நான் வெறுத்தேன்.