காசி விஸ்வநாதர் கோயிலில் டிச.15-ல் இளையராஜாவின் பக்தி இசை: சிவபெருமானே அழைத்ததாக கருதி உணர்ச்சிவசப்படும் இசைஞானி அருள்மிகு காசி விஸ்வநாதர் கோயிலில் இசை நிகழ்ச்சி நடத்த எனக்கு கிடைத்த அழைப்பால் அளவில்லா ஆனந்தம் அடைந்தேன்.
காசி விஸ்வநாதர் கோயிலில் டிச.15-ல் இளையராஜாவின் பக்தி இசை: சிவபெருமானே அழைத்ததாக கருதி உணர்ச்சிவசப்படும் இசைஞானி
அருள்மிகு காசி விஸ்வநாதர் கோயிலில் இசை நிகழ்ச்சி நடத்த எனக்கு கிடைத்த அழைப்பால் அளவில்லா ஆனந்தம் அடைந்தேன்.
கணக்கிட முடியாத நூற்றாண்டுகளாக இந்த கோயிலை நாடு முழுவதிலுமிருந்து பொதுமக்கள் வந்து வழிபடுகிறார்கள்.
விஸ்வநாதர் ஆசிபெற்று, புனித கங்கையில் மூழ்கி புண்ணியம் அடைபவர்களும் ஏராளம்.
அதேபோல், புத்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர், கபீர்தாசர் என எத்தனையோ மகான்களும், சித்தர்களும், யோகிகளும், ஞானிகளும் வந்து தரிசித்த இடம் இந்த காசி.
கோயில் வளாகத்தில் இதுவரை நடைபெறாத இசை நிகழ்ச்சியை நடத்தும் முதல் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது.
இதை அந்த சிவபெருமானே அருளியது போல் உணர்கிறேன். எனது இசையை கேட்க சிவபெருமான் என்னை அழைப்பது போல் உணர்கிறேன்.
காசி மக்களும் எனது இசையை கேட்க உள்ளார்கள் என்பது என்னுள் பரவசத்தை ஏற்படுத்துகிறது.
இந்த நிகழ்ச்சியில் நானே இசையமைத்த பக்திப் பாடல்கள் மற்றும் திரைப்படங்களில் வந்த பக்திப் பாடல்களை பாடுவேன் என்றார் இசைஞானி.
இதுகுறித்து ‘ வாரணாசி மாவட்ட ஆட்சியரான தமிழர் எஸ்.ராஜலிங்கம் கூறும்போது, “கோயில் புதுப்பிக்கப்பட்டு ஒரு வருடம் முடிந்தபோதும் இதுவரை எந்த இசை நிகழ்ச்சியும் நடைபெற்றதில்லை.
இதில் முதல் நிகழ்ச்சியாக தமிழரான இளையராஜாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதற்காக கோயில் நிர்வாகத்திடம் இளையராஜா எந்தக் கட்டணமும் பெறவில்லை. வழக்கம்போல் கோயிலுக்கு வரும் அனைத்து பக்தர்களும் இசையை ரசிக்கலாம்” என்றார்.
Comments
Post a Comment