காசி தமிழ்சங்கமம் நிகழ்வு ஏகபட்ட விஷயங்களை, அதாவது தமிழகத்துக்கும் காசிக்குமான பல தொடர்புகளை வெளிகொண்டுவருகின்றது அதில் முக்கியமானது 17ம் நூற்றாண்டில் வாழ்ந்த முத்துசாமி தீட்சிதரின் காசி வாழ்வும் அங்கே சரஸ்வதியிடம் அவர் பெற்ற அந்த வீணையும் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவர் என போற்றபடுபவரும், இசையில் பல பாடங்களையும் ராகங்களையும் இயற்றி அழியா புகழ் பெற்றவருமான அவருக்கு அப்படி ஒரு வரலாறு உண்டு
காசி தமிழ்சங்கமம் நிகழ்வு ஏகபட்ட விஷயங்களை, அதாவது தமிழகத்துக்கும் காசிக்குமான பல தொடர்புகளை வெளிகொண்டுவருகின்றது அதில் முக்கியமானது 17ம் நூற்றாண்டில் வாழ்ந்த முத்துசாமி தீட்சிதரின் காசி வாழ்வும் அங்கே சரஸ்வதியிடம் அவர் பெற்ற அந்த வீணையும்
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவர் என போற்றபடுபவரும், இசையில் பல பாடங்களையும் ராகங்களையும் இயற்றி அழியா புகழ் பெற்றவருமான அவருக்கு அப்படி ஒரு வரலாறு உண்டு
அவர் 1775ல் திருவாரூரில் பிறந்தவர், பாடலும் ராகமும் அவருக்கு எளிதாக வந்தது,
முருகனை ஞான குருவாக கொண்டு வாழ்ந்த அந்த இசைமேதை திருத்தணியில் இருந்து காசிக்கு சென்றார், எல்லா ஞானியருக்கும் காசிபயணம் ஒரு அங்கீகாரம் என்பதற்கு அவர் விலக்காகிவிட முடியாது
காசியில் சிதம்பர யோகி எனும் மகானுடன் அவர் சுமார் 5 ஆண்டுகாலம் தங்கியிருந்தார், அப்பொழுதுதான் அந்த அதிசயம் நடந்தது
காசியின் கங்கையில் அவர் குளித்து கரையேறிய நேரம் அன்னை சரஸ்வதியே தோன்றி ஒரு வீணை வழங்கினாள், அது மற்ற வீணைகளைவிட வித்தியாசமாய் இருந்தது, அந்த யாழ் பகுதி மேல் நோக்கி இருந்தது
அதை கொண்டுதான் அழியா ராகங்களை படைத்தார் முத்துசாமி தீட்சிதர்
தன் இறுதிகாலத்தில் நெல்லை மாவட்டம் எட்டயபுரத்துக்கு அவர் ஜமீனின் அழைப்பை ஏற்று வந்திருந்தார், அங்கே காலமானார், அவரின் ஆத்மா ஒரு ஒளியாக பிரிந்ததை கண்டவர் உண்டு
அந்த எட்டயபுரத்தில்தான் அவருக்கு எட்டப்ப மன்னரால் ஒரு சமாதியும் எழுப்பபட்டது
இப்படி காவேரி கரையில் பிறந்து கங்கைகரையில் அன்னையிடம் வீணை வாங்கி தாமிரபரணி கரையில் சமாதியானார் அந்த இசை மாமேதை
அவரின் வீணை எங்கே என்ற கேள்வி நெடுங்காலம் உண்டு, அந்த கேள்வியினை எழுப்பியவர் இளையராஜா, காசியில் எழுப்பினார்
இப்பொழுது அந்த வீணை கோவையில் முத்துசாமி தீட்சிதரின் குடும்பத்தால் வழிபடபடுகின்றது எனும் தகவல் வந்திருக்கின்றது
எப்படியான தொடர்புகள் காசிக்கும் தமிழகத்துக்கும் இருந்திருக்கின்றன? குமரகுருபரர் போன்றோருக்கு காசியில் அதிசயம் நிகழ்த்திய அன்னை, தமிழக முத்துசாமி தீட்சிதருக்கும் வீணை வழங்கியிருந்தாள்
இதெல்லாம் இப்பொழுதுதான் வெளிவருகின்றன
"இதயம் ஒரு கோயில்
அதில் உதயம் ஒரு பாடல்
இதில் வாழும் தேவி
நீ இசையை மலராய் நாளும்
சூட்டுவேன் இசையை மலராய்
நாளும் சூட்டுவேன்" என அன்னையினை மனமார பாடியவர் இளையராஜா
அதன் தொடர்ச்சிதான் "ஜனனி ஜனனி" என கேட்போர் உள்ளம் உருக வந்தது
ஆம், இளையராஜா ஏதோ ஒரு பழைய இந்து இசைமேதையின் இப்பிறவி வாரிசு, அந்த ஜென்மாந்திர தொடர்ச்சியில் சரியான நேரத்தில் சரியான இடமான காசியில் அந்த வீணைபற்றி சொல்ல அது வெளிவந்திருக்கின்றது
காசி துலங்க இந்திய திருநாடும் துலங்குகின்றது, அதனில் தமிழக காசி தொடர்புகளும் ஒவ்வொன்றாக வெளிவருகின்றன
கோயம்புத்தூரில் சத்காரியா அறக்கட்டளையிடம் அந்த வீணை இப்பொழுதும் உண்டு, ஆண்டுதோறும் முத்துசாமி தீட்சிதர் குருபூஜையில் அது பார்வைக்கு வைக்கபட்டு வழிபாடு நடத்தபடும்
கோவையில் வசிப்போர் முடிந்தால் அந்த வீணையினை காணலாம், சத்காரியா அறக்கட்டளை அதனை மறுப்பதில்லை
பத்மநாபபுரத்தில் இருக்கும் கம்பன் வழிபட்ட சரஸ்வதி சிலை போல இந்த வீணையும் மிக மிக அபூர்வமானது, தமிழக இந்துக்களின் பாரம்பரியத்துக்கும் அதற்கு தெய்வமே கொடுத்த வெகுமதிக்கும் சாட்சியானது
இவையெல்லாம் இந்து பாரம்பரியத்தின் கம்பீர பெருமைகள், அழியா சாட்சிகள், யாருக்குமில்லா அடையாள சின்னங்கள்
திருவாரூர் என்றாலே கருணாநிதி என ஒரு கும்பல் ஏன் மாற்ற துடிக்கின்றது என்றால் இதற்காகத்தான், காசி என்றாலே ஏன் அலறுகின்றார்கள் என்றால் இப்படிபட்ட சாட்சிகளை மறைக்கத்தான்
Comments
Post a Comment