49வருடங்களுக்கு முன்பு பெரும் வெற்றிப் பெற்று, மறக்கப்பட்ட திரைப்படம்!* *சொல்லத்தான் நினைக்கிறேன்
*49வருடங்களுக்கு முன்பு பெரும் வெற்றிப் பெற்று, மறக்கப்பட்ட திரைப்படம்!*
*சொல்லத்தான் நினைக்கிறேன்*
_*golden 🕐 times*_
தயாரிப்பு:எழுத்தாளர் மணியன்,வித்வான் வே.லட்சுமணன்
திரைக்கதை,இயக்கம்:கே.பாலச்சந்தர்
நாவல்:இலவுக்காத்த கிளி,ஆசிரியர்:மணியன்
நடிகர்-நடிகைகள்:
சிவக்குமார்,
உலக நாயகன்
கமல்ஹாசன்
Play boyயாக வலம் வருவார்
ஜெய்சித்ரா,
ஸ்ரீவித்யா,
ஜெயசுதா,
சுபா,எஸ்.வி.சுப்பையா
ஒளிப்பதிவு:B.S.லோகநாத்
எடிட்டிங்:N.R.கிட்டு
வருடம்:1973
டிசம்பர் _11_தேதி_ரிலிஸ்_
திரைப் படம் வெளியாகி
49 வருடங்கள் கடக்க போகிறது
திரைப்படம்:சொல்லத்தான் நினைக்கிறேன்!
1973ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் மாபெரும் வெற்றிப் பெற்றுள்ளது.ஆனால்,காலப்போக்கில் இத் திரைப்படம் ரசிகர்களால் மறக்கடிக்கப்பட்டு விட்டது.
இத் திரைப்படத்தை இப்பொழுது பார்த்தாலும் அவ்வளவு freshness-ஆ இருக்கு.
இயக்குனர் கே.பாலச்சந்தர் அவர்கள் தனது திரைக்கதையால் சூப்பரா விளையாண்டியிருக்கிறார்.
படத்தில் நம் மனதிற்கு நெருக்கமான கதாபாத்திரங்கள்!
சிவக்குமார்(ராகவன்):கம்பெனி மேனேஜர்.ரொம்ப ரொம்ப நல்லவன்னு ஒருத்தரை சுட்டிக்காட்டணும்னா,இந்தக் கதாபாத்திரத்தை சுட்டிக்காட்டலாம்.பக்கா ஜெண்டில்மேன்.எந்தப் பெண்ணுக்குமே இப்படியொரு ஆம்பளையா பாத்தா விட மனசு வராது.மூன்று அழகிய பெண்கள் அருகில் இருந்தால் இப்படியொரு ஆண்மகனை விடுவார்களா?
தனது குணத்தாலும் செயலாலும் மற்றவர்களின் உள்ளங்களில் சுலபமாக உள்ளே நுழைந்து விடக்கூடிய அற்புதமான கேரக்டர்.
ஜெய்சித்ரா:வீட்டின் கடைக்குட்டி.கல்லூரி மாணவி,துடுக்குக்காரி,வாயாடி,தைரியசாலி,புத்திசாலி இப்படி அனைத்து பரிமாணங்களையும் உடையவள்தான் இவள்.இவளுடைய பேச்சுக்கும், சேட்டைக்கும் மயங்குகிறான் மிஸ்டர் ராகவன்(சிவக்குமார்).இவள்தான் குடும்பத்தின் கடைசிப்பெண்.
ஸ்ரீவித்யா:வீட்டின் இரண்டாவது பெண்.சமையற்க்கட்டே கதியாக கிடப்பவள்.சமையலே உலகம் என்று இருப்பவள்.சிவக்குமாரின் மீதுள்ள காதலை சொல்லாமலே தன் மனதிற்குள்ளேயே பூட்டி வைக்கிறாள்.
சுபா:இவள்தான் வீட்டின் மூத்தப் பெண்.ஆசிரியை.திக்குவாய்.அதனால் அவளுக்கு திருமணம் தள்ளி தள்ளிப் போகிறது.இவளுக்கும் சிவக்குமாரின் மீது காதல்தான்.
எஸ்.வி.சுப்பையா:குடும்பத் தலைவர்.தகப்பனார்.மேனஜர் ஆகமுடியாமல் போய்விட்டதே என்ற விரக்தியில் இருப்பவர்.திடீரென்று அவருடைய ஆபிஸிற்குச் சென்று, மேனேஜர் சீட்டில் உட்கார்ந்து அதிகாரம் செலுத்துவார்.தகவலறிந்து மூத்த மகள் அவரைக் கண்டித்து வீட்டிற்கு அழைத்து வருவாள்.
கமல்ஹாசன்:Play boy.அழகான பெண்களை தன் வலையில் விழ வைத்து, அனுபவித்து,தூக்கி எறிபவர்.
பூர்ணம் விஸ்வநான்:பெரிய கோடீஸ்வரன்.கார் பைத்தியம்.விதவிதமாக கார்வாங்குவதில் ஆர்வம் உடையவர்.வயதானவர்.இவருடைய நண்பர்தான் கமல்.இவருடைய இளம் மனைவியாக ஜெயசுதா.
கம்பெனி மேனேஜர் சிவக்குமாரிடம் ஜெய்சித்ரா குடும்பம் அறிமுகமாகி பழக்கமாகி, அவருடைய வீட்டிற்கே வாடகைக்கு வந்தப் பிறகு நடக்கும் சம்பவங்களே கதை.
அழகான மூன்று பெண்கள் அருகில் இருக்கும் பொழுது, ஒரு இளைஞனுக்கு காதல் வராமல் இருக்குமா?அப்படி வராமல் இருந்தால் அவனை மனநல மருத்துவமனையில்தான் சேர்க்க வேண்டும்.
நான்கு பேருமே தங்களுடைய காதலை வெளிப்படுத்தாமல் இருந்தால் என்னாகும் என்பதே கதை.
கோபப்படும் சூழ்நிலையில் கூட பொறுமையைக் கையாண்டு, அடுத்தவர்களின் மனதை மாற்றம் செய்யும் மனிதரை, எந்தப் பெண்ணுக்குத்தான் பிடிக்காது.அதுவும் அழகு வேறு.
மூத்தவள்,தான் திக்கு வாய் என்பதால் தன்னுடைய காதலை சொல்லத் தயங்குகிறாள்.
ஸ்ரீவித்யா,படிக்காதவள்.சமையற்க்கட்டிலேயே கதியாக கிடப்பவள் என்ற தாழ்வு மனப்பான்மையால், தன்னுடைய காதலை மறைமுகமாக வெளிப்படுத்த முயற்சிக்கிறாள்.
ஜெய்சித்ரா,அக்கா ஸ்ரீவித்யா சிவக்குமாரை விரும்புகிறாள் என்று தெரிந்து கொண்டு, அதற்கேற்ப நடந்து கொள்கிறாள்.
இதற்கிடையில்,தன் தோழியை ஏமாற்றியதற்காக ,கமல்ஹாசனை பழிவாங்க எண்ணுகிறாள்.அதற்காக திட்டம் தீட்டுகிறாள்.கமல்ஹாசனின் நடத்தையில் வெறுத்துப் போய் உள்ள தாயும் ஜெய்சித்ராவின் திட்டங்களுக்கு ஒத்துழைக்கிறாள்.
ஜெய்சித்ராவின் தோழி ஜெயசுதா வயதான பூர்ணம்விஸ்வநாதனை விருப்பமில்லாமல் திருமணம் செய்து கொள்கிறாள்.பூர்ணம் விஸ்வநாதனின் நண்பனான கமல்ஹாசன் ஜெயசுதாவை தன் பக்கம் இழுக்க முயற்சிக்கிறான்.அதற்கு அவளும் ஒத்துழைக்கிறாள்.அவர்களிருவரும் ஓடிப் போக திட்டமிடுகிறார்கள்.இதையறிந்த பூர்ணம் விஸ்வநாதன் ஜெய்சித்ராவிடம் வந்து சொல்கிறார்.அவள் ஓடிப்போனால் தன்னுடைய குடும்ப கௌரவமே பாழாகிவிடும் என்கிறார்.
ஜெய்சித்ரா எடுக்கும் முடிவு க்ளைமாக்ஸை நோக்கி..(இந்த முடிவைத் தவிர வேறு வழியா இல்லை என தோன்றும் அளவிற்கு க்ளைமாக்ஸ்)
இந்தப் படத்தில் M.S.விஸ்வநாதன் அவர்கள் பாடிய, 'சொல்லத்தான் நினைக்கிறேன்',என்ற பாடலை கே.பாலச்சந்தர் அவர்கள் மிக அழகாக படமாக்கியிருப்பார்.
ஒளிப்பதிவாளர் B.S.லோக்நாத்தின் ஒவ்வொரு கோணங்களும் மிகப் பிரமாதமாகயிருக்கும்.
பாடல் முழுவதும் High speed framesதான்(slow motion).High speed frames tecnhnolgy-ஐ அப்பொழுதுதான் பயன்படுத்த ஆரம்பித்துள்ளார்கள் என்று நினைக்கிறேன்.
படம் பார்த்து முடித்தப் பிறகு, இந்தப் படத்தை பெரிய திரையில் பார்க்க வாய்ப்பு இல்லாமல் போய்விட்டதே என்ற ஏக்கமே பிறந்தது.
Comments
Post a Comment