நாம் ஆழ்ந்த தவத்தில் இருந்து நம் ஞானதிருஷ்டையால் கண்டறிவோம் வா... நான் ஆழ்ந்துவிட்டேன் இன்னும் ஆழமாக செல் சென்றுவிட்டேன் என்ன தெரிகின்றது பூனூலும், தர்ப்பையும், பொங்கலும் , புளியோதரையும், காயத்ரிமந்திரமும் சில ஸ்லோகங்களும் தெரிகின்றது".🇳🇪🕉️🚩 சர்வம் கிருஷ்ணார்ப்பணம்
🙏 ஐயா
ஐயரையும் அய்யங்கார்களையும் பழி சுமத்தும் தமிழர்களே இதை கொஞ்சம் கவனமாக படியுங்கள்
முன்னாள் அமைச்சர் பல நூறு ஆயிரம் கோடிகளை சேர்க்கமுடிகின்றது, இதுபற்றி வழக்குகளும் ஆதாரமும் உண்டு
ஒரு ஏரியா கவுன்சிலர் சில மாதங்களிலே பெரும் பங்களா கட்டமுடிகின்றது
அதெல்லாம் வழமை ..
இங்கு 150 ஆண்டுகள் ஆண்ட மொகலாயர் கூட பெரும் மாளிகை கூடம் கோபுரம் அழியா மகால் எல்லாம் ஜொலிக்க ஜொலிக்க பிரமாண்டமாய் கட்டியிருக்கின்றார்கள்
ஆமாம் அவ்வளவு பிரமாண்டம்
அவர்களுக்கு முன் ஆண்ட இந்துமன்னர்கள் மாளிகை ஏன் அவர்கள் கட்டிய கோவில் கூட உண்டு
ஆமாம் சாமி அதனால் என்ன?
200 ஆண்டுகாலம் இந்தியாவினை ஆண்ட பிரிட்டிசார் சுரண்டிய செல்வம் உலகறியும்
என்ன சொல்லவருகின்றீர்கள், தலையே சுற்றுகின்றது
இப்படி 5 மாத கவுன்சிலர் முதல் , 5 வருட அமைச்சர் முதல் 150 ஆண்டுகாலம் ஆண்ட மொகலாயர் முதல் 200 ஆண்டுகால ஆங்கிலேயர் முதல் இவ்வளவு சுரண்டியிருக்கும் பொழுது..
என்ன பொழுது? சொல்லி தொலையுங்கள் சுவாமி
இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்தியாவின் மக்களை சுரண்டிய பிராமணர்களிடம் எவ்வளவு செல்வம் இருக்க வேண்டும் , ஆனால் இல்லையே ஏன்?
அதுதான் கோவில்களாக இருக்கின்றதே?
அதெல்லாம் மன்னர்கள் கட்டியது , பிராமணர் சுரண்டி கட்டிய மாளிகை எங்கே? கோட்டைகள் எங்கே? தங்க வைர குவியல்கள் எங்கே? எங்கே?
அப்படி ஒன்றும் இல்லையே
எப்படியம்மா இல்லாமல் போகும்? வெறும் 30 வருடம் பிராமணர்களின் அட்டகாசத்தை எதிர்த்து பேசிய ராம்சாமி அய்யாவுக்கே அவ்வளவு சொத்து, 5 முறை தமிழர்க்கு உழைத்து உழைத்தே ஓய்ந்த புரட்சியாளர் அய்யா கலைஞர் குடும்பத்துக்கே அவ்வளவு சொத்து,
ஒரு படம் எடுத்து சுரண்டுபவனுக்கே அவ்வளவு சொத்து, பார் நடத்தி சுரண்டுபவனுக்கே பலநூறு கோடி சொத்து எனும்பொழுது இரண்டாயிரம் ஆண்டுகளாக சுரண்டிய இனத்துக்கு எவ்வளவு சொத்து இருக்க வேண்டும்
வாருங்கள் தேடுவோம்
சுவாமி இந்த கனரக தொழிற்சாலை யாருடையது?, இந்த மில்? இந்த டிவி? இந்த நகைகடை, இந்த பள்ளி கல்லூரி, இந்த கம்பெனி, இதெல்லாம் பாருங்கள்
எதுவும் பிராமணருக்கு இல்லை
இந்த மாளிகை, இந்த சாம்ராஜ்யம், இந்த பெரும் படையணி, இந்த பெரும் அதிகார அடையாளம்?
அதுவும் அவர்களுக்கு இல்லை
இந்த கல்குவாரி , மண்குவாரி
அதுவுமில்லை
..அதோ அந்த பெட்டிகடை, தள்ளுவண்டி?
அதுவுமில்லை
இதைத்தான் நானும் சொல்கின்றேன், ஒவ்வொரு சுரண்டல்காரனுக்கும் அவன் சுரண்டியதின் அடையாளம் ஏதோ ஒரு வகையில் எஞ்சியிருக்கும் அதுதான் வரலாறு, ஆனால் பிராமணருக்கு அன்றும் அடையாளமில்லை இன்றும் அடையாளமில்லையம்மா
அப்படியானால் இரண்டாயிரம் ஆண்டுளாக சுரண்டியதை எங்கே வைத்திருக்கின்றார்கள்
அதனால்தானே இந்த தீவிர தேடலில் இருக்கின்றேன்
ஆச்சரியம் , அவர்களை திட்டுவோரெல்லாம் பல்லாயிரம் கோடி கொண்டிருக்க , சில வருடங்களாக இந்துமதத்தை தாக்கும் போதகர்களுக்கே கோடான கோடி சொத்து குவியஅவர்களுக்கு சொல்லும்படி ஏதுமில்லையே எப்படி?
அதுதான் எனக்கும் தெரியவில்லை,
ஆனால் நம் புரட்சியாளர்கள் பொய்சொல்லமாட்டார்கள் என தமிழகம் நம்புவது போல் நாமும் நம்பி கண்டுபிடிப்போம்
எப்படி ?
நாம் ஆழ்ந்த தவத்தில் இருந்து நம் ஞானதிருஷ்டையால் கண்டறிவோம் வா...
நான் ஆழ்ந்துவிட்டேன்
இன்னும் ஆழமாக செல்
சென்றுவிட்டேன்
என்ன தெரிகின்றது
பூனூலும், தர்ப்பையும், பொங்கலும் , புளியோதரையும், காயத்ரிமந்திரமும் சில ஸ்லோகங்களும் தெரிகின்றது".🇳🇪🕉️🚩 சர்வம் கிருஷ்ணார்ப்பணம்
Comments
Post a Comment