இதனால் தான் வீரம் ,விஞ்ஞானம், ஆன்மிகம், கலாச்சாரம் , பண்பாடு தோய்ந்த நமது உண்மையான வரலாற்றை கொண்டு இப்பொழுதுள்ள நமது வரலாறு திருத்தி எழுதப்படவேண்டும் என்பது அவசியமாகிறது

 

மறைந்த பாரத பிரதமர் உயர்திரு. அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள் பிரதமராக இருந்த போது முதல்முறையாக ஆப்கானிஸ்தான் சென்றாராம். அப்பொழுது அங்கிருந்தவர்களிடம் தான் கஜினிக்கு போகவேண்டும் என்று கேட்டாராம். அங்கிருந்தவர்களுக்கு ஒரே ஆச்சர்யம். பாரத பிரதமர் நமது தேசத்தில் உள்ள ஒரு இடத்திற்கு செல்ல ஆசைபடுகிறார் என்ற மகிழ்ச்சி அவர்களுக்கு. ஆனால் பின்பு நடந்ததுதான் துயரம். கஜினி என்ற ஊர் அவர்களின் சுற்றுலா தலத்திலேயே இருக்கவில்லை . அவ்வளவு ஏன்  அங்குள்ள ஒருவருக்கும் அந்த  ஊர் எங்கு எங்கிருக்கிறது என்றே தெரியவில்லை. ஒருவழியாக கண்டுபிடித்தால் அது ஒரு குக்கிராமம். போக சரியான சாலை வசதி இல்லாத கிராமம். ஓட்டல்கள் ஒன்றுகூட இல்லாத இடம். பாரத பிரதமரிடம் இதை சொல்ல தயக்கம். அவசர அவசரமாக ரோடு போடப்பட்டு பிரதமரை அங்கு கூட்டி செல்கிறார்கள் ஆப்கான் அதிகாரிகள். அங்கு சென்ற வாஜ்பாய் அவர்கள் இந்த குக் கிராமமா கஜினி என்று வினவுகிறார். அவர்கள் ஆமாம் என்று பதிலுரைக்கிறார்கள். இங்கு முகமது என்று ஒரு மன்னன் இருந்தாரே அவரை பற்றி சொல்லுங்கள் என்று கேட்கிறார். அவர்கள் ஒருவருக்கும் முகமதுவை பற்றி தெரிந்திருக்கவில்லை. அவர்களது வரலாற்றில் கஜினி முகமது இடம் பெறவில்லை. அவர்கள் எதற்காக இந்த முகமதுவை பற்றி தெரிந்துகொள்ள ஆசைபடுகிறீர்கள் என்ற கேள்விக்கு வாஜ்பாய் அவர்கள் எங்கள் நாட்டில் இந்த கஜினி முகமதுவை பற்றி பள்ளி கல்லூரி வரலாற்றில் விலாவரியாக படித்துக்கொண்டு இருக்கிறோம். வரலாறு ஆராய்ச்சி மாணவர்கள் கூட கஜினி முகமதுவை பற்றி படித்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று மிகவும் கவலைபட சொன்னாராம்.


இதை பற்றி வருத்தத்துடன் ஒரு கவிதையும் எழுதியுள்ளார் திரு வாஜ்பாய் அவர்கள்.


இப்படி அந்த நாட்டிலேயே தெரியாத ஒரு நபருக்கு, அந்த நாட்டு வரலாற்றில் இடம்பெறாத ஒருவருக்கு  நமது வரலாற்றில் இடம் கொடுத்து, அவனை கதாநாயகனாக்கி பெருமைப்படுத்திக்கொண்டு இருக்கிறோம். (சோமநாதர் சிவாலயத்தையும் அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபட்டுக்கொண்டிருந்த லிங்கத்தையும் தகர்த்து பெருமளவில் பொன்னும் பொருளும், சந்தன மரங்களில் இருந்து தயாரிக்கப்பட்டிருந்த பெரிய பெரிய கதவுகளையும் கொள்ளையடித்துச் சென்றதும் இந்த மன்னன்தான்.)


இது ஒரு சிறு உதாரணம் தான். வேறு உதாரணங்களை பின்பு பார்க்கலாம்.


இதனால் தான்  வீரம் ,விஞ்ஞானம்,

ஆன்மிகம், கலாச்சாரம் , பண்பாடு  தோய்ந்த நமது உண்மையான வரலாற்றை கொண்டு இப்பொழுதுள்ள நமது வரலாறு திருத்தி எழுதப்படவேண்டும் என்பது அவசியமாகிறது.

(பாலாஜி ராவ் அவர்கள் பதிவிலிருந்து..)

Comments

Popular posts from this blog

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷

*TENT DECOR CATERING EXPO 2024* - 4,5,6-Oct-2024 - Chennai Trade Centre, Nandambakkam Chennai

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது