அந்தச் சம்பவம் நடந்தபிறகு அறையை விட்டு வெளியில் வரவே பயந்து 24 மணி நேரம் அடைந்து கிடந்தேன். ஆனால், இந்த ஒரு விஷயத்தால் என் பயணத்திட்டம் சிதைந்துவிடக்கூடாது என்று கவனமாக இருந்தேன்.
இரண்டு இந்தியாக்களின் முகம்!
அகஸ்டஸ்
பார்க் ஹ்யோ-ஜியாங்
பிரீமியம் ஸ்டோரி
News
அந்தச் சம்பவம் நடந்தபிறகு அறையை விட்டு வெளியில் வரவே பயந்து 24 மணி நேரம் அடைந்து கிடந்தேன். ஆனால், இந்த ஒரு விஷயத்தால் என் பயணத்திட்டம் சிதைந்துவிடக்கூடாது என்று கவனமாக இருந்தேன்.
மும்பை வீதி ஒன்றில் நள்ளிரவில் நடைபெற்ற சம்பவம், இரண்டு வெவ்வேறு இந்தியாக்களை நமக்கு மீண்டும் ஒருமுறை அறிமுகம் செய்திருக்கிறது.
தென்கொரியாவில் பிறந்து பெல்ஜியத்தில் வசிக்கும் 24 வயது மாடலிங் பெண் பார்க் ஹ்யோ-ஜியாங். 16 வயதிலிருந்து பல்வேறு நாடுகளுக்குச் சென்று வீடியோ செய்துவரும் சோஷியல் மீடியா கன்டென்ட் கிரியேட்டர். இதுவரை 26 நாடுகளுக்குப் பயணம் செய்திருக்கிறார். இப்போது இந்தியா வந்திருக்கும் அவர், கடந்த மூன்று வாரங்களாக மும்பையில் தங்கி வீடியோக்கள் செய்துவருகிறார்.
மும்பையில் அவர் தங்கியிருக்கும் ஹோட்டல் பகுதியில் உள்ள எஸ்.வி ரோடு என்ற பிசியான மார்க்கெட் ஏரியாவில் செல்ஃபி ஸ்டிக் எடுத்துக்கொண்டு வீடியோ செய்யப் போனார். அது, இரவு 11.45. அந்த நேரத்திலும் நகரம் பிசியாக இயங்கிக்கொண்டிருந்ததாலும், தான் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு அருகில் இருக்கும் ஏரியா என்பதாலும் அது பாதுகாப்பான விஷயம் என அவர் உணர்ந்திருக்கலாம்.
பார்க் ஹ்யோ-ஜியாங்.
பார்க் ஹ்யோ-ஜியாங்.
வீடியோ செய்ய ஆரம்பித்த சில நிமிடங்களில் எதிர்பாராத அந்தச் சம்பவம் நடைபெற்றது. ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு இளைஞர்கள் அவரை நெருங்கினர். ‘‘எங்களுடன் இந்த வண்டியில் வா'' என்று அவரைக் கூப்பிட்டனர். பார்க் அப்போதும் நிதானம் இழக்காமல், புன்சிரிப்புடன் அவர்களை சமாளித்தார். ‘‘நான் போய்க்கொள்கிறேன். என் வாகனம் அருகில்தான் இருக்கிறது'' என்றார். அவர்களில் ஒருவன் அந்தப் பெண்ணின் கையைப் பிடித்து இழுத்துத் தன் வாகனத்துக்குக் கூட்டிச் செல்ல முயன்றான். அவர் எதிர்ப்பு தெரிவித்ததைப் பொருட்படுத்தவில்லை. அவர் இடுப்பை இழுத்து அணைத்து முகத்துக்கு நெருங்கி முத்தம் கொடுக்க முயன்றான். பார்க் மிரண்டு விலகி, ‘‘நான் அறைக்குத் திரும்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது'' என்று அவர்களிடமிருந்து விலகிச் சென்றார்.
புன்சிரிப்புடன் தொடர்ந்து வீடியோ எடுத்தபடி இருந்த பார்க்கை விட்டு அவர்கள் அகலவில்லை. நடந்தபடி வீடியோ எடுத்த அவர் பின்னாலேயே வாகனத்தில் வந்து, அவரிடம் போன் நம்பர் கேட்டனர். அவர்கள் எப்படியாவது விலகிப் போனால் பரவாயில்லை என்று தப்பான ஒரு நம்பரை பார்க் சொன்னார். அப்போதும் அவர்கள் போவதாக இல்லை.
இரண்டு இந்தியாக்களின் முகம்!
இவ்வளவும் சோஷியல் மீடியாவில் லைவ் போய்க்கொண்டிருந்தது. அதை நேரடி ஒளிபரப்பில் பார்த்துக்கொண்டிருந்த பலரில் ஒருவர், அதர்வா டிக்கா. மும்பையில் பார்க் வீடியோ எடுத்த பகுதியில்தான் அவர் வீடு. நம் ஏரியாவில் இப்படி ஒரு அநியாயம் நடக்கிறதே என்று அவர் உடனே கிளம்பி ஸ்பாட்டுக்கு வந்துவிட்டார். பார்க்கை நெருங்கிய அவர், ‘‘உங்கள் வீடியோவை லைவ்வில் பார்க்கிறேன். கவலைப்படாதீர்கள், ஒன்றும் ஆகாது'' என்று சொல்லிவிட்டு அந்த இளைஞர்களை நெருங்கி எச்சரிக்கிறார். ஆதித்யா என்ற இன்னொரு இளைஞரும் சேர்ந்துகொண்டு அவர்களை அதட்ட, அவர்கள் உடனே வாகனத்தைச் சீறவிட்டு அங்கிருந்து மறைகிறார்கள்.
சில நிமிடங்களில் நடந்த இந்த சித்திரவதை பார்க்கைப் பெரும்பதற்றத்தில் தள்ளுகிறது. எல்லாம் நேரடி ஒளிபரப்பு என்பதால், பலர் அந்த வீடியோவை ட்விட்டரில் ஷேர் செய்து மும்பை போலீஸிடம் நியாயம் கேட்கின்றனர். பார்க் முறைப்படி புகார் செய்வதற்கு முன்பாகவே போலீஸ் களத்தில் இறங்கிவிட்டது. அந்தப்பகுதிக் கடை ஒன்றில் வேலை செய்யும் முகம்மது ஷேக், அன்சாரி ஆகிய இருவர்தான் அந்தக் குற்றவாளிகள் என்று கண்டறிந்து இரண்டே நாள்களில் கைது செய்கிறது. பார்க் முறைப்படி புகார் தர, அதர்வாவும் ஆதித்யாவும் சாட்சியம் சொல்கிறார்கள்.
இரண்டு இந்தியாக்களின் முகம்!
‘‘அந்தச் சம்பவம் நடந்தபிறகு அறையை விட்டு வெளியில் வரவே பயந்து 24 மணி நேரம் அடைந்து கிடந்தேன். ஆனால், இந்த ஒரு விஷயத்தால் என் பயணத்திட்டம் சிதைந்துவிடக்கூடாது என்று கவனமாக இருந்தேன். எகிப்தில் இதேபோன்ற ஒரு சம்பவம் எனக்கு நடந்தபோது யாரும் உதவிக்கும் வரவில்லை, போலீஸையும் அழைக்க முடியவில்லை. இந்தியாவில் எல்லாமே நடந்தது. இந்தியா அழகான நாடு. அதன் அழகை உலகுக்குக் காட்டும் பணியைத் தொடர்ந்து செய்வேன்'' என்கிறார் பார்க்.
போலீஸ் ஆக்ஷன் எடுத்த அடுத்த நாள், தனக்கு உதவிய அதர்வா மற்றும் ஆதித்யாவுடன் மதிய உணவு சாப்பிட்டபடி நன்றி சொன்னார் பார்க். கேட்வே ஆஃப் இந்தியாவில் அவர் வீடியோ எடுத்தபோது பழக்கமான சில குடும்பத்தினர், தங்கள் குடும்பத்தில் நடக்கும் திருமணத்துக்கு அவரை அழைத்தார்களாம். இப்படி இரண்டு திருமணங்களில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றிருக்கிறார் பார்க்.
இந்த அழகிய இந்திய முகமே உலகுக்குத் தெரிய வேண்டும்.
Comments
Post a Comment