சார் ஓரு நிமிடம் ப்ளீஸ் .. கொஞ்சம் பேசி யோசிப்போமா ??? 15 நிமிடமா? அல்லது நம் ஆயுளா? எது வேண்டும் CHOICE IS YOURS !!!

 

சார் ஓரு நிமிடம் ப்ளீஸ் .. கொஞ்சம் பேசி யோசிப்போமா ???



15 நிமிடமா? அல்லது நம் ஆயுளா? 

எது வேண்டும் 

CHOICE IS YOURS !!!  


ஒரு நிமிடம் ப்ளீஸ்.!

👏👏👏👏👏👏👏

*வாகனத்தில் 50 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் ஒருவர் ஒரு மணிநேரத்தில் 50 கிலோமீட்டர் தூரம் கடந்து இருப்பார்.*


*அப்படி போகும் போது அலைபேசி அடிக்க, அதை அப்படியே பேசியவாரே செல்கிறார் (இப்படி செல்லுவதால் 3 நிமிடம் சேமித்து உள்ளார்.*


*அப்படி போகும் போது ஒரு இடத்தில் ஒரு 🚛 லாரியை முந்திசெல்ல முயலுகிறார், அப்போது ஒரு 🚌 பேருந்து வேகமாக வருகிறது அதை பொருட்படுத்தாமல் 🚛 லாரியை முந்திவிட்டார், இதனால் அவருக்கு 3 நிமிடம் மிச்சம் ஆகியது*


*இன்னொரு இடத்தில் டிராபிக் ஜாம், அதையும் பொருட்படுத்தாமல் புகுந்துகிகுந்து சென்றுவிட்டார். இதனால் அவருக்கு 3 நிமிடம் மிச்சம் ஆகியது*


*ஒரு இடத்தில் சிக்னலில் மஞ்சள் விழுந்து, சிவப்பு விளக்கு விழுகிறது, அதிலும் நிற்காமல் சொல்லுகிறார். இதனால் அவருக்கு இங்கேயும் 3 நிமிடம் மிச்சம் ஆகியது*


*ஆக மொத்தம் 12 நிமிடங்கள் மிஞ்சம் ஆகிவிட்டது.*


*இந்த 4-க்கு இடத்தில் ஏதாவது ஒரு இடத்தில் விபத்துக்கு உள்ளாகிறார் என வைத்துக் கொள்ளுவோம், அப்படியென்றால் அவருடைய குடும்பத்தின் வாழ்க்கை தரம் 5 ஆண்டுக்கு பின்னோக்கி செல்லுகிறது, மேலும் உடலில் பல்வேறு அவஸ்தைகள், பணம் செலவு, வருவாய் இழப்பு, குடும்ப நிம்மதி இழப்பு மற்றும் பல*


*ஏதாவது ஒரு இடத்தில் விபத்தில் இறந்துவிட்டார் என வைத்துக் கொள்ளுவோம். அவருடைய குடும்பத்தின் வாழ்க்கை தரம் 20 ஆண்டுக்கு பின்னோக்கி செல்லுகிறது.*


*5 மற்றும் 20 ஆண்டுகள் வாழ்க்கை தரம் பின்னோக்கி செல்கிறது என்பது ஓர் ஆய்வறிக்கை ஆகும்.*


*இறந்தால் காப்பீடு மூலமாக இழப்பீடு கிடைக்கலாம்.*


*ஆனால் மனைவிக்கு கணவர் கிடைப்பாரா?*


*பிள்ளைகளுக்கு அப்பா கிடைப்பாரா?*


*பெற்றோருக்கு பிள்ளை கிடைப்பாரா?*

*உடன்பிறப்புக்கு சகோதரன் கிடைப்பாரா?*


*ஒரு மணிநேரத்தில் 50 கிலோமீட்டர் தூரம் சென்றோம் என்றால், 12 நிமிடத்தில் 10 கிலோமீட்டர் (50 கிலோமீட்டர் / 60 நிமிடம் * 12 நிமிடம். அதாவது 50/60*12= 10 கிலோமீட்டர்) தூரம் தான்*


*10 கிலோமீட்டர் தூரம் முந்தி செல்வதில் எதையும் சாதித்துவிடுவது இல்லை அல்லவா?*


*சில நேரங்களில் நேரம் ஆகிட்டு என்று வேகமாக போகிறோம், அப்படி செல்வதில் 5 நிமிடம் சேமிக்கிறோம் என்றால் 4.15 கிலோமீட்டர் தான் முன்னால் சென்று உள்ளோம். அப்படி வேகமாக செல்வதினால் நமக்கு நாமே எமனாகி விடுகிறோம் அல்லது எதிரே வந்தவருக்கோ நாம் எமனாய் மாறிவிடுகிறோம்.*


*சிந்திப்பீர்*

*செயல்படுவீர்*


*கருத்து:*


*வேகம் என்பது விவேகம் அல்ல.*


*5 நிமிடத்தில் ஒன்றுமே சாதித்துவிட போவதில்லை.*


*வேகத்தினால் நம் குடும்பத்தினரை அல்லது எதிரே வந்த நபரின் குடும்பத்தினரை கஷ்டப்படுத்தாதீர்கள்*


*ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்றால் 5 நிமிடம் முன்னதாகவே கிளம்பினால் எவ்வித பிரச்சினையும் இல்லை அல்லவா, ஆதலால் சரியான நேரத்தில் அல்லது 5 முதல் 10 நிமிடம் முன்கூட்டியே கிளம்புவோம்.*


*நம்மில் இனி மாற்றம் உருவாக்குவோமா?*


*திருப்புமுனையை செயல்படுத்துவோம்*                      


*விவேகமற்ற அதிவேகத்தில் செல்லும் முன், நமது குழந்தைகளையும் குடும்பத்தையும் ஒருமுறை நினைத்துப் பார்த்தால்., வேகம் தானாக குறைந்து விடும்!*

Comments

Popular posts from this blog

SUGA Elite Cruise Travellers Club* SUGA Elite Cruise Travellers Club is in tie-ups with international Cruise T I'll keep you ours and Travels companies. We can travel with the following major cruise lines:

சிறுகதை: *வெங்கட்ராமன் முடிவு சரியா தப்பா??* வெங்கட்ராமன் நன்கு படித்த பிராமண பையன். நல்ல வேலை. ஆள் பார்க்க மிக நன்றாக இருப்பான். வயது 38. ஆனால் திருமணத்திற்கு பிராமண பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சரியாக அமையவில்லை. அவர்கள் குடும்பம் பழமையான பிராமண குடும்பம். வெங்கட்ராமன் வீட்டுக்கு வந்து அம்மா அப்பாவிடம் பேசினான். "அப்பா, எல்லாம் நல்லபடியா முடிஞ்சது அந்த ஆபீசுக்கு போய் அந்த பொண்ணோட பேசிட்டேன்...

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது