இளைஞர்களின் குரலாக பாஜக திருநெல்வேலி கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்சாலைகளில் ஏற்கனவே உத்திரவாதம் அளித்த குறிப்பின்படி உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டி மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் திருநெல்வேலி வடக்கு மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி சார்பாக நடைபெற்றது.

 

இளைஞர்களின் குரலாக பாஜக 


திருநெல்வேலி கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்சாலைகளில் ஏற்கனவே உத்திரவாதம் அளித்த குறிப்பின்படி உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டி மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் திருநெல்வேலி வடக்கு மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி சார்பாக  நடைபெற்றது. 


பொதுவாகவே தென் மாவட்டங்களில் தொழிற்சாலைகள் மிகக் குறைவு அதனால் இளைஞர்கள் மனநிலை சில சமூக விரோதிகளால் சிந்திக்கவிடாமல் போதை கலாச்சாரம், கொலைகள் , 

ஜாதிய பிரச்சினைகளுக்குள் சிக்குகின்றன.


இதற்கு ஒரு காரணம்

வேலைவாய்ப்பின்மையும்.


 20 வருடங்களுக்கு முன்பே கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்சாலை வளாகம் ஆரம்பிக்கப்பட்டது.

 அதற்காக உள்ளூர் மக்களின் நிலங்கள் பயன்படுத்த பட்டன,

அவர்களுக்கு வேலை வாய்ப்பு உறுதி அளித்ததின் அடிப்படையில் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன ஆனால் சிப்காட் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்காமல் அறிமுகமே இல்லாத மேற்கு வங்காளம் என்று சொல்லி  போலியான முகவரியுடன் சுற்றி வரும் பங்களாதேஷ் அந்நியர்களுக்கு வேலைகளை வழங்கியும் உள்ளூர் இளைஞர்களின் வளர்ச்சியின் எந்த முன்னேற்ற முயற்சி இல்லாமல் செயல்பட்டு வருகிறது இதை கண்டித்து ஒரு மாதம் முன்பே  கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் தயாரானது ஆனால் இந்த த்ராவிடன்ஸ் மாடல் தடை விதித்தது.


மதுரை ஐகோர்ட் வரை சென்று ஆர்ப்பாட்டத்திற்கான உத்தரவை பெற்று நடைபெற்றுள்ளது இன்று. 


கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் 

இதுவரை 156 தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

60 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

30 தொழிற்சாலைகள் கட்டிட கட்டுமானத்தில் இருக்கின்றன.

66 தொழிற்சாலைகள் அனைத்து வேலைகளும் முடிந்து தயாராகி இருக்கின்றன. 


19-11-22 அன்று சிப்காட் வளாகத்தில் மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்படா யோஜனா திட்டத்தின் நிதி உதவியின் கீழ் 77 கோடி ரூபாய்க்கான 50 ஏக்கரில் 'உணவு பூங்கா' ஏற்படுத்த செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. 


இதே போல நாங்குநேரி சிப்காட் 1999 ஆண்டு தொடங்கப்பட்டது 2500 உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் என்று அறிவிக்கப்பட்டு தற்போது வரை கிடப்பில் உள்ளது. 


தற்போதைய த்ரவிடியன்ஸ் மாடல் அமைச்சர் தென் மாவட்டங்களில் 913 கோடி ரூபாயில் 7300 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று கூறி வருகின்றனர் அதில் எந்தவித முன்னேற்றமும் இல்லை பொய்யான வாக்குறுதியாகவே கடந்து விடுகிறது. 


சிறு பெரு தொழில் முனைவர்கள் 

தென் மாவட்டங்களில் கவனம் கொடுத்து இளைஞர்களின் வாழ்வில் முன்னேற்றத்துடன் தொழில் வளர்ச்சியும் பெற வழிவகை செய்ய வேண்டும். 


தென் மாவட்டங்கள் பொதுமக்களின் பார்வையில் முன்பு இருந்ததை விட தற்போது படித்த இளைஞர்கள் அதிகம் பேர் வெளிநாடுகள் வேலைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.


அரசும் தொழில் முனைவர்களும் கவனம் செலுத்துவது நல்லது.

Comments

Popular posts from this blog

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷

*TENT DECOR CATERING EXPO 2024* - 4,5,6-Oct-2024 - Chennai Trade Centre, Nandambakkam Chennai

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது