அப்பொழுது அவன் காலில் குண்டு பாய்ந்தது, அவன் திருப்பி சுட்டதில் காவலர்களுக்கும் காயம் வந்தது கடைசியில் ஒரு தோட்டா மட்டும் எஞ்சியது அதனை வைத்து தன்னை தானே சுட துணிந்தான் ஆசாத், அந்நியர் கையில் சிக்கி சாவதை விட தானே இறந்துவிடுவது என முடிவெடுத்தான் அவன் மரணத்துக்கு துணிந்துதான் போராட் வந்தான், 16 வயதிலே அம்முடிவினை எடுத்திருந்தான், அது எட்டாண்டுகள் கழித்து நிறைவேறியது
இந்துஸ்தான விடுதலைக்கு எத்தனையோ பேர் தியாகம் செய்தனர், குதிராம் போஸ் சூர்யா சென் தொடங்கி பகத்சிங், வாஞ்சிநாதன் என இளம் வயதிலே போராடி வீழ்ந்தோர் ஏராளம் உண்டு
அப்படி ஒரு உணர்ச்சியான நெருப்பு பிழம்பென இருந்த பூமி இது, சரியான தலைவன் இல்லை அரசன் இல்லை என்றாலும் தன்னால் முடிந்ததை ஒவ்வொருவரும் செய்து
அப்படி இளம் வயதிலே நாட்டுக்காய் போராடி வீழ்ந்தவன் அந்த சந்திரசேகர ஆசாத், அவன் பெயர் சந்திரசேகரன் தான் ஒரு சுதந்திரமான இந்துஸ்தானி என சொல்லி "ஆசாத்" எனும் பெயர
1906ம் ஆண்டு உத்திரபிரதேச மாகாணம் பதர்க்கா ஊரில் பிறந்தார், பள்ளி பயிலும் காலத்தில் சமஸ்கிருத கல்வி ஆங்கில கல்விய்டன் பழங்குடினரிடம் வில்வித்தையும் ஆர்வமாக கற்றுகொண்டார்
அவருக்கு 15 வயதானபொழுத்தான் ஒத்துழையாமை இயக்கத்தை காந்தி தொடக்கினார், அதனில் 15 வயதான சந்திரசேகரும் கலந்துகொண்டு கைதானார், அப்பொழுது 15 பிரம்படிகள் தண்டனை விதிக்கபட்டது, ஒவ்வொரு அடியினையும் "பாரத் மாதாக்கி ஜே" என அவர் சொல்லி வாங்கியது காவல் நிலையத்தை அதிர வைத்தது
அந்த அடிதான் அவர் பெயரை "சந்திரசேகர ஆசாத்" என மாற்றிற்று
அதன் பின் அவர் நிரம்ப சிந்தித்தார், காந்தியின் கொள்கை பயனற்றது என்பதும் போர்குணத்தை ஒடுக்கும் குழப்பமான சித்தாந்தம் என்பதையும் உணர்ந்து "இந்துஸ்தான் குடியரசு" எனும் போராளி இயக்கத்தில் இணைந்தார்
17 வயதிலே இணைந்த அவர் தீவிரமாக போராடினார்
இந்த "இந்துஸ்தான் குடியரசு" அமைப்பு ராம்பிரசாத் பிஸ்மில் என்பவரால் தொடங்கபட்ட போராளி அமைப்பு, இதன் கொள்கை பிரிட்டிசாரின் நிதி வளங்களை கொள்ளையடித்து அவர்களையே திருப்பி தாக்குவது
காவல் நிலையத்தை தாக்கி ஆயுதங்களை எடுப்பார்கள், பிரிட்டிசார் வங்கிகளை தாக்கி பணத்தை எடுப்பார்கள், எங்கெல்லாம் பிரிட்டிசார் எதனையெல்லாம் வைத்திருப்பார்களோ அது எல்லாம் பறித்து போராடுவார்கள்
1920களில் இந்த இயக்கம் பிரசித்தியானது, ஜான்சி பிரதேசம் பக்கம் சுமார் 20 கிராமங்களை தன் கட்டுபாட்டில் வைத்து "ஆசாத் இந்துஸ்தான்" என பிரிட்டிசாரை மிரட்டிய இயக்கம் அது
அந்த இயக்கம் 1925ம் ஆண்டு ஒரு பெரும் தாக்குதலை செய்தது, ககோரி ரயில் கொள்ளை எனும் பிரமாண்டமான தாக்குதல் அது
உத்திரபிரதேசம் லக்னோ அருகே ககோரி நடந்த சம்பவம் அது, அக்காலத்தில் டெல்லி இந்தியாவின் தலைநகரமாக மாறி 10 ஆண்டுகள் ஆகியிருந்தது, அரச ஊழியருக்கான சம்பள பணம் அந்த ரயிலில் இருந்தது, அன்றைய கணக்கில் பல லட்சம் மதிப்பு கொண்ட பணம் அது, இன்றைக்கு சில நூறு கோடிகள் ஏன் ஆயிரம் கோடிகளை கூட தாண்டும் பிரமாண்ட பணம் அது
அந்த ரயிலை ககோரி ரயில் நிலையத்தில் "இந்துஸ்தான் குடியரசு" அமைப்பு தாக்கியது, காவலர்களை வீழ்த்தி "இன்குலாப் ஜிந்தாபாத், இந்துஸ்தான் ஜிந்தாபாத்" எனும் முழக்கத்துடன் அந்த அமைப்பு பணபெட்டிகள் அனைத்தையும் தூக்கி சென்றுவிட்டது
பிரிட்டிஷ் அரசாங்கம் அதிர்ந்தது, கடும் வேட்டையினை தொடர்ந்தது
இதனால் "இந்துஸ்தான் குடியர்சு" இயக்கம் பெரும் சோதனையினை சந்தித்தது, அதன் தலைவர் ராம்பிரசாத் உள்ளிட்ட எல்லோரும் கொல்லபட்டார்கள், பலர் சிறைபிடிக்கபட்டார்கள்
ஆனால் சந்திரசேகர ஆசாத் தலைமறைவானார், அவரை பிடிக்க போலிசால் முடியவில்லை
தலைமறைவாக சுற்றிய காலத்தில்தான் அவருக்கு பக்த்சிங் அறிமுகம் கிடைத்தது, பகத்சிங் சோஷலிஸ்ட் மனப்பான்மை கொண்டவர், அவர் ஆலோசனைபடி "இந்துஸ்தான் குடியரசு" என இருந்து அழிக்கபட்ட இயக்கம் "இந்துஸ்தான் சோஷலிஸ்ட் குடியரசு" இயக்கம் என மீண்டெழுந்தது
பகத்சிங்கின் பிரதான தாக்குதலையெல்லாம் இந்த இயக்கமே நடத்திற்று, பல தாக்குதல்கள் நடந்தன அவை பிரிட்டிசாருக்கு பெரும் சேதம் கொடுத்தது
பஞ்சாபின் லாகூர், உத்திரபிரதேசம் ஹர்யானா டெல்லி என அந்த பிரதேசங்கள் முழுக்க அடுததடுத்த தாக்குதல்கள் அரங்கேறி கொண்டே இருந்தன
ஒரு கட்டத்தில் இவர்களை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்க தொடங்கிய பிரிட்டிஷ் அரசு உள்ளூர் கைகூலிகள் பலரை உளவாளிகளாக இறக்கிற்று
அப்படி பல உள்ளுர்வாசிகள் போராளி வேடம் பூண்டு காசுக்காக பழகி சந்திரசேகர ஆசாத்தின் நடமாட்டத்தை காட்டி கொடுத்தன
1931ம் ஆண்டு இதே பிப்ரவரி 27ம் ஆண்டு தன் கூட்டாளிகளுடன் சிக்கி கொண்டான் ஆசாத்
ஆனாலும் அவர்களை தப்ப வைக்கும் விதமாக அவர்களை வெளியேற சொல்லிவிட்டு தன் கைதுப்பாக்கியுடன் கடைசி யுத்தத்தை தனியாக செய்தான்
அப்பொழுது அவன் காலில் குண்டு பாய்ந்தது, அவன் திருப்பி சுட்டதில் காவலர்களுக்கும் காயம் வந்தது கடைசியில் ஒரு தோட்டா மட்டும் எஞ்சியது
அதனை வைத்து தன்னை தானே சுட துணிந்தான் ஆசாத், அந்நியர் கையில் சிக்கி சாவதை விட தானே இறந்துவிடுவது என முடிவெடுத்தான்
அவன் மரணத்துக்கு துணிந்துதான் போராட் வந்தான், 16 வயதிலே அம்முடிவினை எடுத்திருந்தான், அது எட்டாண்டுகள் கழித்து நிறைவேறியது
1931ம் ஆண்டு இதே நாளில் "இன்குலாப் ஜிந்தாபாத்" என முழங்கியபடி தன்னை தானே சுட்டுகொண்டு உயிர்தியாகம் செய்தான் அந்த இளம் தியாகி
எந்த அளவு அவனை கண்டு பிரிட்டிசார் அஞ்சினர் என்றால் அவன் இறந்தபின்பு பல மணி நேரம் அவன் உடல் அருகே செல்ல கூட யாருக்கும் தைரியமில்லை, அந்த அளவு பயம் கொடுத்திருந்தான் அந்த இந்துஸ்தான சிங்கம்
இன்று அவன் நினைவு நாள்
24 வயதிலே தேசத்துக்காய் போராடி வீழ்ந்த அந்த இளம் சிம்மத்தின் நினைவு நாள்
இங்கு பக்த்சிங் கொண்டாபடும் அளவு ஆசாத் கொண்டாடபடுவதில்லை, காரணம் பகத்சிங் ஒரு கம்யூனிச சாயல் போராளி என்பதால் சில ஆதரவுகள் உண்டு
சந்திரசேகர் ஆசாத்துக்கு அந்த பலமில்லை, காங்கிரசும் அவனை கண்டுகொள்ளவில்லை என்பதால் அவன் தியாகம் தெரியாமலே போனது
இப்பொழுது அவன் எல்லா பக்கமும் நினைவு கூறபடுகின்றான், அலகாபாத் நகரில் அவன் சுட்டுகொல்லபட்ட பூங்கா, "சந்திரசேகர ஆசாத்" பூங்காவாக இன்றும் நிலைபெற்றிருக்கின்றது
அவன் பயன்படுத்திய துப்பாக்கி இன்றும் அருங்காட்சியகத்தில் உண்டு
இளம்வயதிலே நாட்டுக்காய் போராடி வீழ்ந்தோர் வரிசையில் உன்னத இடத்தில் எக்காலமும் அந்த மாவீரன் மின்னி கொண்டே இருப்பான், அவன் போராடிய "இந்துஸ்தான் குடியரசு" அமைப்பின் போராட்டமும் வீரமும் எக்காலமும் இங்கு இந்தியரின் போர்குணத்தை சொல்லி கொண்டே இருக்கும்
காந்தியின் ஒத்துழையாமை இயக்கம் சாத்வீகம் எனும் பெயரில் பிரிட்டிசாருக்கு அனுகூலமனது, அது எந்த பெரிய நெருக்கடியும் தராது என்பதை உணர்ந்து, உண்மையான ஒத்துழையாமை என்பது பிரிட்டிசாரின் பணத்துக்கும் உயிருக்கும் இங்கு ஒததுழைப்பதில்லை என காட்டுவதே என செயலில் இறங்கியவன் அந்த சந்திரசேகர ஆசாத்
உண்மையான ஒத்துழையாமை போராட்டத்தை அவனே நடத்தினான், அன்னிய ஆட்சியாளரின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பான நாடு இது என ஒத்துழைக்க முடியாது என கிளம்பியவன் அவனே
அந்நிய ஆட்சியாளர் பாதுகாவலுக்கு ஒத்துழைக்கமாட்டேன் என துப்பாக்கி ஏந்தியவன் அவனே
அதனாலே அந்த உண்மையான ஒத்துழையாமை இயக்கத்தை நடத்திய அவனை வேட்டையாடிய பிரிட்டிசார், போலி நாடகம் ஆடிய காந்தியினை மாளிகை சிறையில் வைத்து தாங்கினர்
24 வயதே வாழ்ந்தாலும் தான் வாழ்ந்த ஒவ்வொரு நொடியும் தேசத்துக்காக வாழ்ந்த அந்த மாவீரனுக்கு தேசம் அஞ்சலி செலுத்தி கொண்டிருக்கின்றது
Comments
Post a Comment