63 ஆண்டுகால அநீதி ஒப்பந்தத்துக்கு வேட்டு வைக்கும் மோடி.. ஒவ்வொரு அநீதியாக நீக்கி நீக்கி சீர்செய்யவே மோடிக்கு பத்தாண்டு போதாது என நிரூபிக்கும் நிலையில் தான் நடப்பு உள்ளது.. இப்போது சிந்து நதிநீர் ஒப்பந்தம் எனும் மிகப்பெரிய மோசடி ஒப்பந்தத்தை மோடி உடைக்க கிளம்பிவிட்டார்...

 


63 ஆண்டுகால அநீதி ஒப்பந்தத்துக்கு  வேட்டு வைக்கும் மோடி..

ஒவ்வொரு அநீதியாக நீக்கி நீக்கி சீர்செய்யவே மோடிக்கு பத்தாண்டு போதாது என நிரூபிக்கும் நிலையில் தான் நடப்பு உள்ளது..

இப்போது சிந்து நதிநீர் ஒப்பந்தம் எனும் மிகப்பெரிய மோசடி ஒப்பந்தத்தை மோடி உடைக்க கிளம்பிவிட்டார்...


விடுதலை பெற்ற பின் நாட்டை துண்டாடிய பின் சிந்து மற்றும் அதன் உபநதிகளாகிய ஐந்து பெரிய நதிகளான ஜீலம் சேனாப் சட்லஜ் பியாஸ் மற்றும் ராவி ஆகிய நதிநீர் பகிர்ந்து கொள்ளும் விசயத்தில் பெரிய சர்ச்சை உருவானது..

வழக்கம் போல சர்வதேச தலையீடுக்கு நேரு ...

காஷ்மீர் விவகாரத்துக்கு அதுவரை எவரும் எட்டி பார்க்காத ஐநாவை பஞ்சாயத்துக்கு அழைத்தது போலவே..


இதிலும் .. உலக வங்கி தலையீட்டுக்கு பாரதம் உட்பட்டது..

இழுத்து இழுத்து 9 ஆண்டு கடத்தி கடைசியாக 1960 ஆண்டில் ஒப்பந்தம் உருவானது. 

கராச்சிக்கு போய் பாகிஸ்தான் அதிபராக இருந்த அயூப் கானுடன் நேரு ஒப்பந்தம் முடித்து வந்தார்..  

அந்த ஒப்பந்தம் சொல்வதென்ன..


இந்தியாவுக்கு வெறும் 20% மட்டுமே..

பாகிஸ்தான் நாட்டுக்கு 80% பங்கு நதிநீரை தர வேண்டும்..

இந்திய மக்கள் தொகை என்ன.. இந்திய நிலப்பகுதி என்ன..

வரும் 20% எனும் ஒப்பந்தத்தை போட்டுவிட்டு.. வந்ததோடு நின்றதா..

நேரு உட்பட சோனியாவின் பொம்மை அரசு காலம் வரை அந்த பங்கு நீரை கூட தேக்கி வைத்து உபயோகிக்க எந்த நடவடிக்கைகள் எடுக்கவில்லை..

எனவே நமது 20% பங்கிலும் பெரும் பகுதி பாகிஸ்தான் காரனுக்கே போனது..


ஆக 90% க்கு மேல் பாகிஸ்தான் அனுபவித்தது.. இதற்கு எந்த கேள்வியும் இல்லை..

எந்த போர் வந்தாலும் . பாகிஸ்தான் எத்தனை தீவிரவாத தாக்குதல் செய்தாலும்.. இந்தியாவுக்கு எதிராக எத்தனை மூர்க்கத்தனமான மோசடி எதிர்ப்பை செய்தாலும் நாம் மட்டும் கவலையே படாமல் தங்கு தடையின்றி நதிநீரை கர்ண மகாபிரபு போல கொடுப்பதை கணக்கு பார்க்காமல் குருட்டுத்தனமாக கொடுத்துக் கொண்டே இருந்தோம்.


நீண்டகால கிஷன் கங்கா அணை போன்ற இந்தியாவின் திட்டத்துக்கு எல்லாம் துவக்க நிலையிலேயே பாகிஸ்தான் எதிர்ப்பை தெரிவித்தது..

அந்நிய ஆர்பிடேட்டர் மத்தியஸ்த கோரிக்கை வைத்தது.. இந்தியா நியூட்டரல் மத்தியஸ்தம் என கேட்டது..

அதெல்லாம் கதைக்கு ஆகாது என மோடி முடிவுக்கு வந்துவிட்டார்..

இந்த ஒப்பந்தத்தை தூக்கி போட கிளம்பிவிட்டார்..

90 நாள் அவகாசம் தந்து பாகிஸ்தான் பஞ்ச பண்ணாடை நாட்டுக்கு நோட்டிஸ் அனுப்பிவிட்டார்..


இது போரை விட பெரிய தாக்குதல்..  

இனி நமது பகுதியில் அணைகள் கட்டி ஜம்மு காஷ்மீர் லடாக் ஹரியானா பஞ்சாப் ராஜஸ்தான் தில்லி வரை நீர் பயன்பாடு கிடைக்க வழி காண்கிறார்..

நீர்மின்சாரம் தயாரித்து ஜம்மு காஷ்மீர் தொழில் மற்றும் வாழ்வாதார மாற்றத்தை உருவாக்க முடியும்..


இத்தகைய அறிவிப்பால் அலறி தவிக்குது பாகிஸ்தான். 

இதை கூட செய்யாத காங்கிரஸ் கட்சி மோடிக்கு எங்கே எப்போது எப்படி அந்நிய தீய சக்திகளோடு கைகோர்த்து வீழ்த்திட முடியும் என அனைத்து பாதக முயற்சிகளை செய்கிறது..

இந்திய மக்கள் நாம் ஒற்றுமையோடு மோடியின் முயற்சிகள் அனைத்துக்கும் பின் நின்று ஆதரித்தால் 

பாரத தேசம் நன்மை காணும்..


மோடியின் பலம்.. 

தேசத்தின் பலம்.

வளர்ச்சிக்கான பலம்..

உலக வல்லரசாக முதன்மை தேசமாக மாற்றம் காணும் நெடும் பயணத்தின் அஸ்திவாரம் மோடிஜி..


"எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியார்

திண்ணியர் ஆகப் பெறின். " 

#TRC_1217

#வெல்க_பாரதம்

#ஜெய்ஹிந்த்🇮🇳

Comments

Popular posts from this blog

நான் கிட்டத்தட்ட 22 வயது வரை நாத்திகனாக இருந்தேன். கோவில்களுக்குச் செல்வது பிடிக்க வில்லை. நான் அவற்றை பிராமணர்கள் மற்றும் பிறர் பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாகவே கருதினேன். ஒவ்வொரு அடியிலும் அவர்கள் எப்படி பணம் கேட்டார்கள் என்பதை நான் வெறுத்தேன்.

8th August 11am, Delhi: MAHA PANCHAYAT- 100Cr HINDU Movement for Abolition of totally Discrminatory HR&CE Act.1951, all over India. Temples should function as independently as MOSQUES & CHURCHES. Money taken/swindled should be given back by Govts.

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷