ரசம் , பரவசம்* ரசம் சாதம் சாப்பிடப் பிடிக்காதவர்கள் மேற்கொண்டு இதைப் படிக்க வேண்டாம்.. படித்தால் அது பிடித்துப் போகும் அபாயம் இருக்கிறது.....
*ரசம் , பரவசம்*
ரசம் சாதம் சாப்பிடப் பிடிக்காதவர்கள் மேற்கொண்டு இதைப் படிக்க வேண்டாம்..
படித்தால் அது பிடித்துப் போகும் அபாயம் இருக்கிறது.....
எனவே , யாரும் படிக்காதீர்கள்.
அட சொல்லச் சொல்ல என்ன பண்றிங்க....
சரி , இனி நான் ஒண்ணும் பண்ணமுடியாதுங்க...!
வாங்க என் கூட...
ரசம் சாதம் என்பது எனக்கு 2 வயதில் அறிமுகமானது.
ரசஞ்சாதம் சாப்பிடுறியா? என்று கேட்டாலே என் முகத்தில் நவரசமும் மிளிருமாம்.!
சூடான சாதம்.. கொஞ்சம் தக்காளிய தூக்கலா போட்டு புளிய லேசாக போட்டு பண்ணிய ரசம் எனது ஃபேவரிட்.
அதிலும் சூடாக ரசஞ்சாதத்துடன் மணல் போலிருக்கும் வீட்டில் செய்த நெய்யுடன் சாப்பிடுவதே.... ச்... ச்... ச்... திவ்யம்.👌
பருப்பு ரசம், மிளகு ரசம், தக்காளி ரசம், பூண்டு ரசம், எலுமிச்சை ரசம், கொத்தமல்லி ரசம், இப்படி பல ரசங்கள் என் வாழ்வின் சுவையான பரவசங்கள்.
பொதுவாக ரசம் சாதத்திற்கு உருளைக் கிழங்கு காரக்கறி/ பொரியல் இரண்டும் திகிரி தோஸ்த்து.!
சுட்ட அப்பளம் ரசத்தின் தாய் என்றால் , பொரித்த வடாமும் அப்பளமும் காதலிகள்.!
கூட்டுக்கு ரசத்தை பொறுத்து தொட்டுக் கொள்ள சில ஜோடிகள் உள்ளன .
எலுமிச்சை ரசம் என்றால் முட்டைகோஸ் பருப்புக்கூட்டு,
மிளகு ரசத்திற்கு தக்காளி கூட்டு,
பூண்டு ரசத்திற்கு பூசணிக் கூட்டு எனச் சாப்பிட வேண்டும்..
எலுமிச்சை ஊறுகாயும் பிரமாதம் அது கார சாரர்களின் விருப்பம்.!
எனக்கு மாவடு சாறுடன் எல்லா ரசஞ்சாதங்களும் சாப்பிட ரொம்பவே பிடிக்கும்....
அடுத்த இடத்தில் மாங்காய் தொக்கு.!
அப்பளம் வந்த பிறகு எனது மிக மிகப் பிடித்த உணவாகிப்போனது ரசம்.!
பூண்டு மற்றும் மிளகு ரசங்களுக்கு அப்பளம் செம ஜோடி.!
அரிசி வடாம், வெங்காய வடாம் எலுமிச்சை ரசத்திற்கு ஏற்ற பொருத்தமான ஜோடிகளாக்கும்!.
பருப்பு, சாதம், ரசம் போன்ற மெனுக்கள் எங்கள் வீட்டில் வாரத்தில் ஒரு நாளாவது இருந்தே ஆகவேண்டும்.
பருப்பு போட்டு ரசம் என்றால் முதலிடம் மிளகு ரசத்திற்கு! அடுத்த இடம் பூண்டு ரசத்திற்கு.!
சூடான சாதத்தில் சிறிது நெய்
விட்டு பருப்பு போட்டு பிசைந்து பிறகு ரசம் ஊற்றி சாப்பிட்டுப் பாருங்களேன்.. ஆஹா...! ஆஹா...அதை அமுதமென்றே அழைப்பீர்கள் அவ்வளவு ருசி.!
ரசம் சாதத்துடன் சாப்பிடத்தான் அப்பளம் கண்டு பிடிக்கப்பட்டது என்று யாரேனும் சொன்னால் நான்...
அதை மறுக்காமல் முதல் ஆளாக ஒப்புக்கொள்வேன்.!
ரசமும் அப்பளமும் அவ்வளவு இஷ்டம் எனக்கு.
அதைவிட இன்னொரு செளகரியம் என்னவெனில் , சாதம் கொஞ்சம் குழைந்து விட்டால் *ரசம் அதகளம் தான்....* குழைந்த சாதத்தில் ரசம் என்றால் அது விஷம் என்றாலும் தயங்காது சாப்பிடுவேன்.!
ஆயுள் முழுவதும் அது போதும் எனக்கு .
2 கரண்டி ரசம் ஊற்றிக் கொள்கிற அதே அளவு சூடான குழைவான சாதத்திற்கு நான் 6 கரண்டி ஊற்றி தட்டெங்கும் அலையடிக்க... அலையடிக்க... பிசைந்து சாப்பிடுவேன்.!
இன்றும் அது என் வழக்கம்.! கூடவே அப்பளம் மட்டும் இருந்தா போதும்.! இந்திர பதவி கிடைச்சா கூட இரண்டாம் பட்சம்தான்.
அதிலும் கடைசியில் தட்டோடு எடுத்து வாய் வைத்து சுர்ர்ர்ன்னு உறிஞ்சிக் குடிக்கும் சுகம் இருக்கே.. ஸ்ஸ்ஸ்ஸ்..... அடடா காரமும் புளிப்பும் நாவில் பட்டு தொண்டையில் காரம் எரியிற அந்த சுகம் இருக்கே! ம்.......
ஹலோ சொல்லாம கொல்லாம எங்க ஓடுறிங்க? ரசம் சாதம் சாப்பிடத்தானே!
இருங்க , இருங்க நானும் வர்றேன்.
ரசத்தை மட்டும் தான் சூப் போல குடிக்கலாம்.
குளிர் காலத்தில இரவில் குடித்து பாருங்கள். கண் முன்னே சொர்க்கமே தெரியும்.
எனக்கு மிகவும் பிடித்தது என்னோட பாட்டி செய்யிற ஈய சொம்பு ரசம் தான்......
நாக்கு கொட்டுதோ...
வாங்க சாப்டலாம் ரசம் சாதத்தை பரவசமாக...
படித்தேன்!
ரசித்தேன்!!
பகிர்ந்தேன்!!
Comments
Post a Comment