இந்தியா வரலாற்று புரட்சி ஒன்றை செய்துள்ளது, அதன்படி 18 நாடுகள் இந்திய பணமான ரூபாயினை பயன்படுத்தலாம் என அறிவித்துவிட்டது இந்திய ரிசர்வ் வங்கி

 

இந்தியா வரலாற்று புரட்சி ஒன்றை செய்துள்ளது, அதன்படி 18 நாடுகள் இந்திய பணமான ரூபாயினை பயன்படுத்தலாம் என அறிவித்துவிட்டது இந்திய ரிசர்வ் வங்கி


போட்ஸ்வானா, பிஜி, ஜெர்மனி, கயானா, இஸ்ரேல், பிரிட்டன், கென்யா, மலேஷியா, மொரீஷியஸ், மியான்மர், நியூசிலலாந்து, ஓமன், ரஷ்யா, சீஷெல்ஸ், சிங்கப்பூர், இலங்கை, தான்சானியா, உகாண்டா என 18 நாடுகளில் இந்திய பணம் புழங்க அனுமதி என இந்திய தலமை வங்கி அறிவித்துவிட்டது


இதனால் என்னாகும் என்றால் இந்த நாடுகளில் நடக்கும் வியாபாரம் இந்திய பணத்தில் நடக்கும், அப்பொழுது அமெரிக்க டாலரை வாங்க வேண்டிய அவசியம் இராது


ஒரு நாட்டின் ஒவ்வொரு கரன்சியும் வியாபார பரிவர்த்தனை செய்யபடும் பொழுது குறிப்பிட்ட பங்கு பணம் அந்நாட்டுக்கு செல்லும் இது பணமாற்று விதி


இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் டாலரில் வர்த்தகம் நடந்தால் ஒரு அமெரிக்க டாலருக்கு 3% சதவீத வருமானம் அமெரிக்காவுக்கு செல்லும், அப்படியானால் இந்த பெரும் மதிப்பினை நினைத்து பாருங்கள்


அமெரிக்க வருமான ரகசியம் இதுதான்


இனி இந்த பணம் இந்திய ரூபாய்க்கான கமிஷனாக இந்திய அரசுக்கே செல்லும்


நதி ஓட ஓட அதன் கரையெல்லாம் விளைவது போல, பணம் இப்படி சுற்றி சுற்றி புழங்க புழங்க அரசுக்கு வருமானம் வந்துகொண்டே இருக்க வேண்டும் அதுதான் கரன்சி பொருளாதார விதி


முன்பு இந்தியாவின் பணம் இந்தியா தாண்டி செல்லாது, அதனை டாலரிலோ இல்லை சம்பந்தபட்ட நாட்டின் மதிப்பிலோதான் மாற்ற வேண்டும் இதனால் இந்திய பணத்துக்கு இந்தியா தாண்டி சந்தையில்லை


இப்பொழுது அக்கம்பக்கம் எல்லா நாடுகளிலும் செல்ல தொடங்கிவிட்டது, இனி இந்திய பணமதிப்பு மெல்ல மெல்ல மேலெழும்


கடந்த ஓராண்டாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல் இருக்க ரஷ்யாவுடன் பெரும் எண்ணெயினை இந்திய பணத்தில் வாங்குவதுதான் காரணம்


1920களில் ஒருஇந்திய ரூபாய்க்கு வெகு கீழே கிடந்த அமெரிக்கன் டாலர் அடுத்த 100 ஆண்டுகளில் இப்படி எகிற காரணம் உலகளாவிய பணமாக டாலரை தங்கள் போர் வெற்றியால் கொண்டுவந்து தங்கம், கச்சா எண்ணெய் இன்னும் உலக வியாபாரம் அனைத்தும் டாலருக்கு அவர்கள் மாற்றியதால் மட்டுமே


அதனில் இருந்து தன்னை விடுவித்தாலே இந்தியா மெல்ல மேலெழும் இதோ தொடங்கிவிட்டது


இந்திய பணத்தை டாலரில் வைக்க 1960களிலே கட்டுபாடு வைத்தது அமெரிக்கா இந்திரா அதை ஏற்றார், அதனை ரூபிள் அதாவது ரஷ்ய பணத்துக்கு மாற்ற சோவியத் முனைந்தது அதுவும் நடக்கவில்லை


இப்படி இந்தியாவின் கரன்ஸி வெளிநாட்டு பிடியில் இருந்தது


டாலரை இத்தேசம் வாங்கிய காலம் மாறி இனி இந்திய கரன்சியினை மற்ற நாடுகள் வாங்கும்


இப்பொழுது உலகில் இந்தியாவுக்கு சாதகமான நேரம்


உக்ரைன் விவகாரம், சீனாவுக்கு லாடம் அடிக்கும் விவகாரம் என இந்தியாவினை அமெரிக்க தரப்பால் ஐரோப்பிய தரப்பால் பகைக்கமுடியவில்லை


இந்தியா தவிர்க்கமுடியா நாடு என்பதால் இதனை மனவலியோடுதான் அனுமதிக்கின்றன‌


இன்னொரு பக்கம் இந்தியா இதை செய்யாவிட்டால் சீனா செய்ய வாய்ப்பு உண்டு என்பதால் மவுனமாக தலையசைக்கின்றன‌


இப்படி கால சூழலை கணக்கிட்டு இந்திய பணத்தை உலக பணமாக்கிவிட்டார் மோடி


மோடி ஏன் நாடுநாடாக சென்றார், அவரை தொடர்ந்து ஜெய்சங்கர் ஏன் சென்றார் என்றால் அதன் பலன் இதுதான்


சரி, 19ம் நாடாக இணைய முழு எதிர்பார்ப்பில் இருக்கும் நாடு எது தெரியுமா?


நமது எதிரி நாடான பாகிஸ்தான்காரனும் வெகுவிரைவில் வந்து விடுவான் ஆனால் வழக்கமான பாணியான இந்திய கரன்சியின் கள்ளநோட்டுடன் திருட்டு வேலை செய்ய வருவான் ஆனால் இந்த அரசிடம் அவர்கள் பாச்சா  பலிக்காது.


Comments

Popular posts from this blog

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷

*TENT DECOR CATERING EXPO 2024* - 4,5,6-Oct-2024 - Chennai Trade Centre, Nandambakkam Chennai

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது