America ஒரு புலிவால் நான் சமூக வலைதளங்களில் அமெரிக்காவிற்கு படிக்க சென்ற பெண்/ பிள்ளைகள் திரும்பி வருவதில்லை . பெற்றோரின் கடைசி காலத்தில் அவர்களுடன் வந்து இருப்பதில்லை . அவர்கள் அந்த சௌகரியத்திற்கு பழகி விட்டார்கள் திரும்பி வர மனமில்லை என்று பலர் எழுதுவதை பார்த்திருக்கிறேன். அவர்கள் நினைப்பது அவர்கள் பணமும் வசதியுமே பெரியது என்று அங்கு போகிறார்கள் என்று.
5.America ஒரு புலிவால்
நான் சமூக வலைதளங்களில் அமெரிக்காவிற்கு படிக்க சென்ற பெண்/ பிள்ளைகள் திரும்பி வருவதில்லை . பெற்றோரின் கடைசி காலத்தில் அவர்களுடன் வந்து இருப்பதில்லை . அவர்கள் அந்த சௌகரியத்திற்கு பழகி விட்டார்கள் திரும்பி வர மனமில்லை என்று பலர் எழுதுவதை பார்த்திருக்கிறேன். அவர்கள் நினைப்பது அவர்கள் பணமும் வசதியுமே பெரியது என்று அங்கு போகிறார்கள் என்று.
ஆனால் Ground reality வேறு.
நாணயத்துக்கு 2 பக்கம் உண்டு. நான் அவர்கள் பக்கத்தையும் பார்க்க விரும்புகிறேன். அவர்களாகவே foreign college க்கு apply செய்து போவதில்லை. நாமதான் அனுப்பறோம். ஆனால் தான் விரும்பிய படிப்பை படிக்க வரும் குழந்தைகளின் student life எப்படிபட்டது தெரியுமா? Middle class அப்பாவால் fees boarding கொஞ்சம் கைச்செலவுக்கு மட்டும்தான் பணம் அனுப்பமுடியும். எல்லோருக்கும் scholarship கிடைப்பதில்லை .நிறைய குழந்தைகள் பணத்தேவைக்காக அந்த குளிரில் part time வேலை செய்யும். வீட்டில் சாப்பிட்ட தட்டை அலம்பாத பையன் அங்கே hotelல் தட்டை எடுத்து table clean பண்ணுவான். வீட்டில் துடைப்பத்தை எடுத்து பெருக்காத பெண் அங்கு canteenல் தரைக்கு mob போடுவாள். வீட்டு வேலை செய்ய ஆண் பெண் வித்தியாசம் இல்லை என்பதை அம்மா சொல்லி தர மாட்டாள். அமெரிக்கா சொல்லி தரும்.
Vacationல் அமெரிக்க குழந்தைகள் அவரவர்கள் வீட்டிற்கு போய்விடும். உறவினர்கள் யாராவது அமெரிக்காவில் இருந்து அவர்கள் மனது வைத்து நம் குழந்தைகளை ticket வாங்கி அழைத்துக்கொண்டால் உண்டு. இல்லையென்றால் homesickல் அம்மாவை நினைத்துக்கொண்டு அழுது கொண்டிருக்கும்.
படிப்பு மிகவும் கடினம். நல்ல grade வாங்கவில்லை என்றால் collegeல் திருப்பி அனுப்பி விடுவார்கள். Tension.
படிப்பு முடிந்தவுடன் ஒரு வருடத்திற்குள் வேலை கிடைக்கவில்லை என்றால் திரும்பி போக வேண்டும் . பணம் waste. அப்பா மூஞ்சியை திருப்புவார். Tension.
வேலை கிடைத்தவுடன் 3 வருடத்திற்குள் h1b work visa lotteryல் விழ வேண்டும்.இல்லாவிட்டால் திரும்பி போக
வேண்டும். Tension.
இத்தனையையும் தாண்டி வந்தால் அடுத்தது கல்யாணம். இங்கே வேலை பார்க்க தகுதி உள்ள பெண்/பையன் அல்லது இங்கேயே வேலை பார்ப்பவர்களை பார்க்க வேண்டும். இந்தியாவாக இருந்தால் படிப்பு, வேலை, family background பார்த்தால் போதும்.
இங்கே location, career முக்யம்.
North carolina, south carolina -
Low cost area. Bay area, California. அதே area வரன்தான் வேண்டும். cost of living அதிகம். வேறு state வரன் என்றால் வேலையை விட்டு விட்டு இங்கு வந்து வேலை தேட முடியாது. Visa transfer ,amendment என்று ஏகப்பட்ட ப்ரச்னை. ஒருசம்பளத்தில் California வில் குடுத்தனம் பண்ண முடியாது.
Minasotta, Detroit, Chicago - snow area-
Social drinking- NO
பாதி பேர் west coast california Bay areaல் இருப்பார்கள். அவர்கள் east coast வரன்களை திரும்பி கூட பார்க்க மாட்டார்கள்.
இந்தியாவிலிருந்து பெண்/பையன் கல்யாணம் பண்ணிக்கொண்டு இங்கு வந்தால் அவர்கள் இங்கு வேலை பார்க்க EAD permit உள்ள வரன் வேண்டும். வீட்டில் வருடக்கணக்கில் வேலைக்கு போகாமல் உட்கார்ந்து இருக்க முடியாது.அப்படியே வேலை பார்த்தாலும் dependent visa என்றால் ஒருத்தருக்கு வேலை போனால் அடுத்தவருக்கும் போய்விடும். இப்போதெல்லாம் இந்தியாவிலேயே எல்லா வசதியும் இருப்பதால் கல்யாணம் பண்ணிக்கொண்டு அமெரிக்கா வர யாரும் ஆர்வம் காட்டுவதும் இல்லை.
Citizen வரன்கள் born and brought up in USA வரன்தான் வேண்டும் என்பார்கள்.
அதற்குள் நிறைய குழந்தைகளுக்குஇந்த ஊர் climate ,தண்ணிக்கு முடி கொட்டிவிடும். இதெல்லாம் தெரியாமல் இந்தியாவில் அப்பா அம்மா நட்சத்திர பொருத்தம் ஜாதக பொருத்தம் பார்த்துக்கொண்டு வரும் வரனையெல்லாம் reject பண்ணிக்கொண்டிருப்பார்கள்.
2 வருடத்திற்கு ஒரு முறைதான் 3 weeks leave கிடைக்கும். இரண்டு குழந்தைகளுடன் ஒருமுறை இந்தியா போய் வந்தால் இரண்டு வருட savings காலி.
பெற்றோர்கள் இங்கு வரும்போது அவர்களை Nayagara falls, New york, Sanfrancisco, Disneyland என்று சுற்றிக்காட்டிவிட்டு கைநிறைய சாமானும் வாங்கி கொடுத்து அனுப்புவார்கள்.
வயதான பெற்றோர்களை இங்கே அழைத்துக்கொண்டு வந்து வைத்துக்கொண்டால் life, health, பல்லுக்கு என்று தனித்தனியாக insurance எடுக்க வேண்டும். Insuranceல் cover ஆகாத வியாதி வந்தால் அவ்வளவுதான். சொத்தையே எழுதி வைக்க வேண்டும்.
Doctor appointment கிடைக்க நாட்கணக்கில் காத்திருக்க வேண்டும் அதற்குள் ஒண்ணு வந்த வியாதி அதுவாகவே போய் விடும் அல்லது நாமளே போய்விடுவோம்.
Doctors உம் சனி, ஞாயிறு லீவு எடுப்பார்கள். சனி, ஞாயிறு உடம்புக்கு எதுவும் வரக்கூடாது என்று வேண்டிக் கொள்ள வேண்டும்.
Weekdaysல் நட்ட நடு பகல் நேரத்தில் doctor appointment குடுப்பார்கள். அப்போதுதான் இவர்களுக்கு office meeting இருக்கும். அதற்கு நடுவில் நமக்காக வருவார்கள். அதனால்தான் பணத்தை இந்தியாவுக்கு அனுப்பி இங்கேயே ராஜ வைத்யம் பார்த்துக்கொள் என்கிறார்கள்.
நினைத்தபோது இந்தியா போக முடியுமா? முடியாது. சமீபத்தில் அப்பா மறைவுக்கு சொந்த ஊருக்கு போய் வந்த ஒரு பையனை companyல் ஆட்குறைப்பு நடவடிக்கையில் வேலையிலிருந்து தூக்கி விட்டார்கள்.
Survival முக்கியம். வேலை எப்போது போகுமோ என்ற பயத்திலேயே வாழ்க்கையை ஓட்ட வேண்டும். இப்போது இந்தியாவிலும் இப்படித்தான். Greencard கிடைக்க வருடங்கள் ஆகலாம்.
Coronaவா? ஊருக்கு போக முடியாது Stamping வாங்கலையா. இந்தியா போனால் stamping வாங்காமல் USA க்குள் திரும்ப முடியாது. Stamping வாங்க Indian embassy slotக்கு ஒரு வருடம் காத்திருக்க வேண்டும். நடுவில் அப்பா போனாலோ அம்மா போனாலோ USA வை விட்டு கிளம்ப முடியாது. ஊரார் சாபத்தையும் வாங்கிக்கொள்ள வேண்டும். பெற்றோர்களுக்கு குழந்தைகள் நிலைமை புரிந்தாலும் சுற்றி உள்ளவர்கள் பேசும்போது என்ன செய்வது. Society pressure.
சரி. பரவாயில்லை ஊரோடு போய்விடுவோம் என்றால் இங்கேயே பிறந்து வளர்ந்த குழந்தைகள் மக்கர் பண்ணும்.
இந்தியாவுக்கு திரும்பி போவதென்று முடிவு எடுத்தால் வீட்டு கடன் கார் கடன் என எல்லா கடனையும் அடைத்து விட்டு
எஞ்சிய சொற்ப பணத்தோடு ஊர்போனால் மாசா மாசம் லட்சலட்சமாய் சம்பாதித்தெல்லாம் என்ன செய்தாய் என்று பெற்றோரை அலட்சியம் செய்ததாக சொன்னவர்கள் கேட்பார்கள்.
இந்தியாவுக்கு திரும்பி போனவர்களும் இருக்கிறார்கள். அது அவரவர் குடும்ப சூழ்நிலயை பொறுத்தது.
Company மூலமாக onsightல் வந்து போகிறவர்களுக்கு இது பொருந்தாது. அவர்களுக்கு இந்தியா திரும்பி போனாலும் வேலை இருக்கும்.
இவ்வளவையும் தாண்டித்தான் இங்கு settle ஆனவர்கள் பெற்றோர்களை பார்க்க ஓடி வருகிறார்கள். இது அங்கிருப்பவர்களுக்கு புரிவதில்லை.
மொத்தத்தில் அமெரிக்கா புலி வால் பிடித்த கதைதான். விடவும் முடியாது. கூடவே ஓடவும் முடியாது.
அட இவ்வளவு கஷ்டம் இருந்தால் அப்படியாவது அமெரிக்கா போகாட்டா என்ன என்கிறீர்களா. மற்றவர்கள் நினைப்பது போல் பணம் வசதிக்காக மட்டும் யாரும் இங்கு வருவது இல்லை. இங்கு நிறைய கனவுகளோடு சாதிக்க வந்திருப்பவர்கள் அவரவர் துறையில் சாதித்தும் இருக்கிறார்கள். இந்த மனித சமுதாயத்துக்கு நாம் ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இங்கு படிப்பு/research வசதி வாய்ப்புகள் சற்று அதிகம். சொந்தமாக startup companyகள் ஆரம்பித்து அமெரிக்கர்களுக்கே வேலை கொடுக்கும் கண்ணுக்கு தெரியாத சுந்தர் பிச்சைகள் இங்கு ஏராளம்.
எனக்கு தெரிந்தவர் ஒருவரின் பையன் இங்கு ஆராய்ச்சி படிப்புக்கு வந்து ஒரு குறிப்பிட்ட cancerக்கு மருந்து கண்டு பிடித்து இங்குள்ளவர்களின் பாராட்டை பெற்றிருக்கிறார்.
வெறும் பணத்துக்காக என்று பொதுவாக முத்திரை குத்தாமல் “”அவர்களின் கனவுகளையும் நாம் மதிப்போம்”””
Comments
Post a Comment