வந்தவர் சமையல் மாமி இல்லை என் எண்ணங்களை மாற்ற வந்த அந்த அம்பாளின் அவதாரம் என்று தான் சொல்லு வேன். அன்று என் அம்மா கரண்டி பிடித்ததால் தான் நான் இன்று பேனா பிடிக்கின்றேன். ஏன்னா என் அம்மாவும் சமையல் பண்ணி தான் என்ன கஷ்டப்பட்டு படிக்க வச்சா !
* *சமையல் மாமி** 👆👇
அன்று என் friend ஆத்தில் திவசம். அன்னிக்கு ஒரு முக்கியமான மேட்டரா அவனை பாத்துட்டு அங்கேந்து கிளம்பிண்டு இருந்தபோது ஒரு 70 வயது மதிக்கத் தக்க மாமி சட்டென்று உள்ளே சமையலறையி லேந்து மடிசாருடன் வெளியே வந்து,
" ஏம்பா !! நீங்க இப்போ கெளம்ப போறேளா?? அப்படினா நேக்கு ஒரு ஒத்தாசை பண்றேளா!! னு கேட்டா !!!
என் சின்ன பிள்ளையாண்டான் எனக்காக ஆத்துல ரொம்ப நேரமா காத்துண்டு இருப்பான். சாப்பிட்டானான்னு தெரியல!
போற வழியில ஒரு பஸ் ஸடாப்ல என்ன எறக்கி விட்டுட றேளா?? நான் ஊரப்பாக்கம் வரை பஸ்ல போனோம் ....
என்று ஸ்பஷ்டமான பிராமண பாஷையில கேட்டா
நானும் அதுக் கென்ன மாமி !தாராளமா கூட்டிண்டு போய் விடறேனே என்று சொன்னவுடன், சித்த இருங்கோ நான் மடிசார் மாத்திண்டு வந்துடறேன்.
இங்க இருக்கிற
2 கிலோமீட்டருக்கு இந்த ஆட்டோகாரன் 100 ரூபாய் கேக்கறான்பா...
என்று கூறியவாறு உள்ளே சென்று உடை மாற்றி கொண்டு வந்தார்...!!
பிறகு அவருடன் காரில் செல்லும் போது மெதுவாக, யாரு மாமி நீங்க??
உங்களை நான் இதற்கு முன் இங்கு பார்த்ததில்லையே, அவாளுக்கு நீங்க சொந்தக்காராளா என்று நான் கேட்க...?
இல்லைப்பா !! அவாளுக்கு நான் எந்த சொந்தமும் இல்ல. நான் அவா வீட்டுக்கு தெவசத்துக்கு சமைக்கிறத்துக் காக வந்தேன்.
ஏறக்குறைய 20 to 30 items மடியோட பண்ணணும். பெரிய வேலை.
ப்ரமணாளுக்கு , சாஸ்திரிகளுக்கு, பிண்டம், அதிரசம், வடை, பிரண்டை தொகையல்னு நிறைய வேலை இருக்கு...
இப்போ இருக்கிற நிறைய பேருக்கு தெவச சாப்பாட்ட சமைக்கத் தெரியாது.
நான் சின்ன வயசுல இருந்தே அக்ரஹாரத்துல வளர்ந்த பொண்ணு. கஷ்டப்பட்ட ப்ராமண குடும்பம்.
மெட்ராஸ் வந்து 45 வருஷம் ஆச்சு.. நான் நல்லா மடியா மடிசார் உடுத்திண்டு எல்லா ஸ்ராத்த பக்ஷணமும் சமைப்பேன்.
தெவசம், சுப காரியம்னு எதுக்கு கூப்பிடறாளோ அவா அவா வழக்கப்படி அவாளுக்கு சமைச்சு கொடுப்பேன். அதுக்கு ரூ1,550= வாங்கிப்பேன். அவ்ளோதான்.
விடிய காலைல எங்காத்துல இருந்து 4.30 மணிக்கு பஸ் புடிச்சி வந்து மடியோட வந்து சமைக்க ஆரம்பிச் சேன்னா 11.30 மணிவரைக்கும் வேலை இருக்கும்.
அப்பறம் அவா எல்லாரும் சாப்பிட்டு முடிச்ச உடனே நான் கெளம்பிடுவேன்.
பகவான் புண்ணியத்துல நீங்க வந்தேள். இல்லன்ன இந்த வேகாத வெயில்ல நான் நடந்துதான் போயிருப்பேன்...
என்று கூற, எனக்கு உள்ளே எதுவோ செய்தது...!!
மாமி, மாமா என்ன பண்றார்? ஏன் இந்த வயசுல இவ்வளோ கஷ்டப்படறீங்க...? வீட்டுலயே இருக்கலாம் இல்லயா? என்று நான் கேட்க...!!
அம்பி !! நம்பி வந்த எங்க ஆத்துகாரர் என்னை 2 பிள்ளைகளோடு விட்டுட்டு மேல போய் 40 வருடம் ஆச்சுப்பா.
பொறந்த ஆத்துக்கும் போக கூட முடியாத அளவு கஷ்ட ஜீவனம். புகுந்த ஆத்துலயும் எங்கள மதிக்கல.
என்ன கர்ம வினையோ. நான் படிச்சதும் 4 வது வரை தான்.. இவ்ளோ பெரிய ஊர்ல நான் தனியா என்ன செய்ய முடியும்னு இந்த ரெண்டு புள்ளேள வெச்சுண்டு நிராதரவா நின்னவப்பா நான்...
என்று கூற, எனக்குள் சொல்ல முடியாத ஒரு துயரம் ஏற்பட்டது...
எதுவும் பேசாமல் நான் அப்படியே இருக்க , அவரே தொடர்ந்தார்...
பிறகு ஒரு சாஸ்திரிகள் என்னை இந்த மாதிரிசமையல் உதவி கேட்க, நான் செஞ்ச விதமும் , ருசியும் எல்லாருக்கும் பிடிச்சு போக ஏறக்குறைய 30 வருடமா இந்த வேலைய செஞ்சுண்டு இருக்கேன்.
மாசம் 30,000 ரூபாய் இந்த சமையல் வேலைலயே நான் சம்பாதிச்சுடுவேன்..
இன்னோன்னு தெரியுமோ!!!
என் பெரிய பிள்ளையாண்டான் ஒரு Engineer. ஒரு IT கம்பெனிலதான் வேலை பண்ணிட்டு இருக்கான். Wipro வாமே அதுல இருக்கான்.
சின்னவனும் வேலைல இருக்கான். இன்னும ஸ்திரமான வேலை கிடைக்கல. ஆனாலும் உத்யோகம் புருஷ லட்சணமோன்னோ!
ஆத்துல புருஷா சும்மா இருக்கப் டாதோல்யோ...!!
சம்பளம் கூடவோ , கொறைவோ, வேலைக்கு போய்ண்டு இருக்கான் என்று கூறினார்.
முடியறதோ இல்லையோ வைராக்யத்தோட அத்தன கஷ்டத்தோட அவாள நான் படிக்கவெச்சேன். அவாளும் இப்போ தலையெடுத்துட்டா என்று கூற, நான் ஒன்றுமே இல்லாத ஒரு தனி மனுஷி யாக செய்த பிரம்மாண்ட சாதனையை இவர் போகிற போக்கில் சாதாரணமாக சொன்ன விதத்தில் ஆச்சரியப்பட்டு போனேன்.
பிறகு நான் சும்மா இருக்காமல், என்ன மாமி பசங்களுக்கு கல்யாணம் ஆயிடுத்தா என்று கேட்க??
அதுவரை தைரியமாக வீராப்பாய் இருந்து மாமி உடைந்து கண்கலங்கினார்.
ஆமாப்பா பெரியவனுக்கு கல்யாணம் ஆய்டுத்து. ஆனா, அவன்கூட பேசி ரெண்டு வருஷமாச்சி...
என்று கூற எனக்கு என்ன சொல்வ தென்றே தெரிய வில்லை...
பிறகு அழுகையை அடக்கி கொண்டு ஒன்று சொன்னார்.
மாட்டு பொண்ணுக்கு என்ன சுத்தமா பிடிக்கல. ஆத்துக்கு ஆத்து வாசப்படி. நான் வாங்கி வந்த வரமோ என்னமோ...!!
நான் யாருக்குமே பாரமாஇருக்க விரும்பியதே இல்லை.
முதல்ல தனி குடித்தனம் போனா??
அது கூட சந்தோஷம் தான். அவா ரெண்டு பேரும் சந்தோஷமா இருந்தா அதவிட எனக்கு என்ன வேணும். சரி
மாட்டுபொண்ணு மதிக்கலேன்னா பேசலேண்ணா என்ன ??பையன் இருக்கானேன்னு இருந்தேன்.
ஆனா என்ன நடந்ததுன்னே இப்பவரைக்கும் தெரியல.
ஆளாளுக்கு 1000 நியாயங்கள் இருக்கலாம்பா...
தர்மம் ஒண்ணு தானேப்பா!!
எனக்கு அப்பாவுக்கு அப்பாவா, மகனுக்கு மகனா இருந்த என் பெரிய மகன் இப்போ ஆத்துக்கு வரற்து கூட இல்ல...
அட அதவிடுப்பா என்னோட பேசறது கூட இல்ல... Atleast தெனம் ஒரு முறை, அட அதுகூட இல்லேண்ணா ஒரு வாரத்துக்கு ஒரு முறை,அட அதுவும் வேண்டாம் ஒரு மாசத்துக்கு ஒரு முறை ஒரு 5 நிமிஷம் பேசகூட நேரம் இல்லைப்பா அவனுக்கு...
நான் என்ன அவன் கிட்ட பணம்காசா கேட்கபோறேன். ஆறுதலான ஒரு வார்த்தை என்னம்மா ? எப்படி இருக்க? சாப்டியா. இவ்ளோதாம்பா... அது போதும் எனக்கு...
ஆனா அதக்கூட கேட்க மனசில் லேப்பா அவனுக்கு...!!
மனசு கேட்காம நான் போன் பண்ணிணா கூட, 10 தடவைக்கு ஒரு தடவை எடுப்பான்...!! ஏம்மா நான் எவ்ளோ பிசி... சொல்லு என்ன வேணும்னு அவன் கேட்கும் போது...
நான் என்னப்பா சாப்டியா ?? நல்லா இருக்கியான்னு கேட்டா கூட...??
இதுக்குதான் போன் பண்ணியா?
ஏம்மா படுத்தறனு. வெச்சுடுவான்பா...!!
ஒரு அவசர உதவினாலும் 1000 முறை யோசிச்சு தான் பெத்த மகனுக்கே போன் செய்யவேண்டி இருக்குப்பா இந்த வயசான காலத்துல...
என்று கண்ணீருடன் கூற என் இதயம் கனத்தது...!!
சின்னவன் இன்னும் இருக்கான். அவன் எப்படியோ அவன் கல்யாணத்துக்கு அப்புறம்.
என்றவாறே முடிக்கவும் பஸ் ஸ்டாப்வரவும் சரியாக இருந்தது..!
அவர் இறங்கும் போது சொன்னார்...
அம்பி என்ன தப்பா நினைக்காதே .. முன்ன பின்ன தெரியாத ஒருத்தர் கிட்ட இந்த மாமி இப்படி பேசிட்டா ளேன்னு... காலைல இருந்து மனசு சஞ்சலமா இருந்தது...!! ஒரு மாதிரி கஷ்டமா இருந்தது...
கார்ல ஏறின உடனே நீங்க ரொம்ப இயல்பா வேற பேசினேளா... என்னை அறியாம உங்கிட்ட கண் கலங்கிட்டேன்..
நீயும் என் பிள்ளை மாதிரினு சொன்னேன்.
அந்த பகவான் உங்களுக்கு சகல சௌபாக்கியத்தையும் கொடுக்கட்டும்னு சொல்லியவாறு இறங்கி சென்று விட்டார்..!!
காரை ஓரமாக நிறுத்தினேன். என் கண்களில் கண்ணீர் வழிந்தோட கைகள் மொபைலைத் தேடி என் அம்மாவை அழைத்தேன்.
எதிர் திசை யிலிருந்து கண்ணா என் ராஜா... எப்படிப்பா இருக்க... நல்லாருக்கியா- பா என்ற அம்மாவின் வாஞ்சையான குரல்.
பல வருடங்களுக்கு பிறகு தாயின் பாசமான வார்த்தைகளை கேட்டவுடன் என்னால் மறு வார்த்தை பேச முடியாமல் நடுங்கியது என் குரல்,என் உடல் முழுவதும் சிலிர்த்து விட்டது.
என் குரலை கேட்டதும் என் தாயின் மனநிலை எப்படி இருந்தி ருக்கும்.? அந்த குரலில் அவ்வளவு சந்தோஷம் தெரிந்ததே..
.
என்னை வளர்த்து ஆளாக்க என் தாய் பட்ட கஷ்டங்களை உடனிருந்து வளர்ந்து பார்த்து, படித்து நான் நல்ல வேலைக்கு சென்று கை நிறைய சம்பாதிக்க தொடங்கிய பிறகு, நான் செளகர்யமாக வாழவேண்டும் அதற்கு அம்மா இங்கு வந்தால் இடைஞ்சலாகி விடும் என்ற கேடு கெட்ட சுயநல புத்தியால்
என் தாயை தனியே தவிக்கவிட்ட பாவத்தை இனி மேலும் செய்ய மாட்டேன்
.
என் தாய் என்னோடு தான் இருக்கனும் என்ற முடிவுடன் என் தாயார் வசிக்கும் கிராமத்தை நோக்கி காரை திருப்பி னேன்.
வந்தவர் சமையல் மாமி இல்லை
என் எண்ணங்களை மாற்ற வந்த
அந்த அம்பாளின் அவதாரம் என்று தான் சொல்லு வேன்.
அன்று
என் அம்மா கரண்டி
பிடித்ததால் தான்
நான் இன்று பேனா பிடிக்கின்றேன்.
ஏன்னா என் அம்மாவும் சமையல் பண்ணி தான் என்ன கஷ்டப்பட்டு படிக்க வச்சா !!!
Comments
Post a Comment