ஒரு கோவிலுக்காக 50,000 பேர் உயிர் விட்ட கோவில்.. எங்கள் பிணத்தை கடந்து தான் கோவில் உள்ளே நுழைய முடியும் என நின்ற கோவில்... 20,000 ஹிந்துக்களை அடிமைகளாக பிடித்து சென்ற கோவில்.. 6 முறை தரைமட்டமாக்கப்பட்டு மீண்டும் உயிர்தெழுந்து பிரம்மாண்டமாய் நிற்கும் கோவில். யானைகள் நடக்க முடியாமல் திணற திணற சுமை ஏற்றபட்டு கோடானு கோடி பொக்கிஷங்கள் கொள்ளையடிக்கப்பட்ட கோவில். ஆம். சோமநாதர் கோவில் ஆலயம்..

 



ஒரு கோவிலுக்காக 50,000 பேர் உயிர் விட்ட கோவில்..

எங்கள் பிணத்தை கடந்து தான் கோவில் உள்ளே நுழைய முடியும் என நின்ற கோவில்...

20,000 ஹிந்துக்களை அடிமைகளாக பிடித்து சென்ற கோவில்..

6 முறை தரைமட்டமாக்கப்பட்டு மீண்டும் உயிர்தெழுந்து பிரம்மாண்டமாய் நிற்கும் கோவில்.

யானைகள் நடக்க முடியாமல் திணற திணற சுமை ஏற்றபட்டு கோடானு கோடி பொக்கிஷங்கள் கொள்ளையடிக்கப்பட்ட கோவில்.

ஆம்.

சோமநாதர் கோவில் ஆலயம்..

மூல லிங்கம் அந்தரத்தில் நிற்க்கும் படி பிரதிஷ்டை செய்யப்பட்ட கோவில்..

முதல் முறை இதை கண்ட போது ஆச்சர்யபட்ட கஜினி அம்புகளால் சோதித்து பார்த்திருக்கின்றான் என்ன பிடிமானத்தில் நிற்கின்றது என..

விடை தெரியாத அதிர்ச்சியில் சிவலிங்கத்தை காலால் எட்டி உதைத்து கீழே தள்ளி உடைத்தெறிந்தான். 

கோவிலில் இருந்த வெள்ளி கதவுகள், சந்தன மரத்தால் ஆன கதவுகளையும் முற்றிலும் பெயர்த்து எடுத்து சென்றான்.

(அந்த  கதவுகள் ஆப்கானிஸ்தானில் இருந்தன. 1842-ம் ஆண்டு இந்தியாவை ஆண்ட இங்கிலாந்து கவர்னர் ஜெனரல் எட்வர்டு லா இந்த கதவுகளை இந்தியா கொண்டு வர உத்தரவிட்டார். அதன்படி அவை கொண்டு வரப்பட்டன. ஆனால், இதற்கு இங்கிலாந்து பாராளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் கதவுகள் ஆக்ரா கோட்டையில் வைக்கப்பட்டன. இப்போதும் அந்த கதவுகள் அங்குதான் உள்ளன.)

அவன் ஊருக்கு திரும்புவதற்கு முன்பு கோவிலை முற்றிலும் தரைமட்டமாக்கி விட்டுதான் சென்றான்.

அன்றைய பண மதிப்புபடி அவன் கொள்ளையடித்து சென்ற பொருட்களின் மதிப்பு 2 கோடி தினார் ஆகும். இப்போதைய கணக்குப்படி பார்த்தால் எத்தனையோ ஆயிரம் கோடி இருக்கும் என்கிறார்கள். 

பின்னர்  ஆட்சிக்கு வந்த 2-ம் குமார பாலா கோவிலை மீண்டும் கட்டினார். கற்களால் கட்டப்பட்ட கோவிலை அவர், தங்கம், வெள்ளியால் பிரமாண்டமாக அலங்கரித்தார். ஆனாலும், கோவில் மீண்டும் தாக்குதலுக்கு ஆளானது. 1299-ல் டெல்லியை ஆண்ட அலாவுதீன் கில்ஜி தனது தளபதி உலுக்கான் தலைமையில் படையை அனுப்பி கோவிலை தகர்க்க செய்தான்.

முதல் முறையாக  சௌராட்டிர தேசத்து வல்லபீபுர யாதவகுல மன்னர், சோமநாதபுர ஆலயத்தை அதே இடத்தில் இரண்டாம் முறையாக சோமநாதரின் ஆலயத்தை சீரமைத்து கட்டினார்..

ஆக தொடரந்து 6 முறை தொடர் தாக்குதலுக்கும் சிதைவுக்கும் உள்ளானது கோவில் ஆனாலும் மீண்டும் நுமிர்ந்த து..

சோம்நாத் ஆலயம் மீண்டும் எழுவதற்கு மூல காரணமாய் இருந்த சர்தார் வல்லபாய் படேல் அவர்களுக்கும் திரு. K.M. முன்ஷி அவர்களுக்கும் ஹிந்துக்கள் என்றென்றும் கடமைப்பட்டவர்கள் ஆவார்கள். 

1922 ம்  ஆண்டு டிசம்பர் மாதம் ஓர் இளைஞனாக இங்கு சென்ற திரு முன்ஷிஜி அவர்கள் கோயிலின் நிலையைக் கண்டு கதறி அழுதிருக்கிறார்.

 கிருஷ்ண பகவான் தன்னுடலை நீத்த இடத்திலிருந்து கடலை நோக்கிய வண்ணம் குமுறியிருக்கிறார். 

மீண்டும் அங்கு கோயில் எழும்புமா என்பது அப்போது அவருக்கு எளிதில் நிறைவேற முடியாத கனவாகவே தோன்றியது.

 கோயில் கட்டுவதற்கு காந்தி-நேரு ஆகியோர் மூலம் அரசாங்க உதவி மறுக்கப்பட்ட நிலையிலும், இவ்விருவரும் ஒரு ட்ரஸ்ட் நிறுவி ஆலயத்தை எழுப்பி அழியாப் புகழ் பெற்றனர். 

அதற்கு நன்றி செலுத்தும் விதமாக சர்தார் படேலின் திருவுருவச் சிலை சோமநாதர் ஆலயத்தை நோக்கி நிறுவப்பட்டிருப்பதைக் காணலாம். 

திரு முன்ஷி அவர்கள் அகழ்வாராய்ச்சிகள்  மூலமும், பொறியியல் வல்லுனர்கள் மூலமும் நன்கு பரிசீலித்து இத்தனை அழகான கோயிலை நிர்மாணிக்க உதவியுள்ளார்கள். அவர்கள் எழுதியுள்ள “ Somanatha the shrine eternal “ என்ற அருமையான நூல் வெளி வந்தது. 

இந்த வரலாற்று பெருமை வாய்ந்த கோவிலுக்கு தான் செளராஷ்டிரா தமிழ் சங்கமத்தில் அழைத்து சென்றனர்..

என்ன புண்ணியம் செய்தோம்.

வெட்ட வெட்ட துளிர்க்கும் ஆலமரமாய் வளர்ந்து நிற்க்கும் எம் பெருமான் ஈசன் சோமநாதனை காண..

பல்லாயிரம் பேர் உயிர் தியாகம் செய்த்து இந்த ஈசனுக்கு தானா..? 

எத்தனை முறை கொள்ளையடித்தாலும் நாங்கள் மறுபடி மறுபடி கொட்டுவோம் என கொட்டி கொடுத்தது இந்த ஈசனுக்கு தானா? 

எந்த  காரியமும் காரணமின்றி நடக்காது..எங்கள் பயணமும் அப்படியே..

எந்த காரணமும் நாங்கள் அறியவில்லை.எம் பெருமான் ஈசன் அழைத்திருக்கிறான் அவரை காண..

அவரின் திருவுள்ளபடி பாரத பிரதமர் என்ற மகாராஜாவின் வழிகாட்டுதலில் ஈசனை தரிசித்தோம்.

ஈசனடி போற்றி போற்றி..

பதிவு தம்பி புகழ்

Comments

Popular posts from this blog

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷

*TENT DECOR CATERING EXPO 2024* - 4,5,6-Oct-2024 - Chennai Trade Centre, Nandambakkam Chennai

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது