திருச்சிற்றம்பலம் என்றால் என்ன?🌿🌹 ::::::::: 🌿 🌹 🌿 :::::::: 🌿 🌹 🌿 :::::::::: 🌿 🌹 🌿 #சிறு+அம்பலம்= சிற்றம்பலம். சிறிய வெளி என்று பொருள். அம்பலம்- வெளி, ஆகாயம்

 

🙏🏼🔥#திருச்சிற்றம்பலம் என்றால் என்ன?🌿🌹


::::::::: 🌿 🌹 🌿 :::::::: 🌿 🌹 🌿 :::::::::: 🌿 🌹 🌿 


#சிறு+அம்பலம்= சிற்றம்பலம். சிறிய வெளி என்று பொருள். அம்பலம்- வெளி, ஆகாயம்.


#நமது இதயத்தில் ஒரு சிறு வெளி இருப்பதாகவும் அதில் கட்டைவிரல் அளவே நம் ஆன்மா இருப்பதாகவும் கடோபநிஷத் கூறுகிறது. 


அவ்வான்மாவுக்குள் ஆன்மாவாய் இறைவன் #ஆனந்த நடனம் ஆடிக்கொண்டிருப்பதாய் சிவாகமங்கள் கூறுகின்றன. 


இதனை நம் போன்றோர் உணர்ந்து வழிபட்டு உய்வதற்காக தில்லையில் திருச்சிற்றம்பலத்தில் இறைவன் திருக்காட்சியளித்ததாக கோயில்புராணம் எடுத்துரைக்கின்றது.


அதாவது நாம் தான் அது,

அதுவே நாம் என்பதை உணர்த்துவதற்க்கே இந்த ஆனந்ததிருநடனம்.

அதாவது மனிதனின் 

அகம் ஒரு கோயில்

உள்ளம் பெருங்கோயில், ஊன் உடம்பு ஆலயம்,


திருச்சிற்றம்பலம் என்றால் நம்முள் இருக்கும் ஆன்மாதான்.


பொதுவே தில்லையை சுற்றி வசிக்கும் மக்களும்,

#சீவனே #சிவம் என்று உணர்ந்த ஆன்மீக பெருமக்களும் ஒருவருக்கொருவர் பார்க்கும் போதும், பேசும் போதும், தொடக்கத்திலும் , முடிவிலும் இரு கைகூப்பி #திருச்சிற்றம்பலம் என்று கூறுவர். 


அதற்க்கு எதிர்புரம் உள்ளவர் தில்லையம்பலம் என்று பதில் வணக்கம் கூறுவர். 


#இதற்க்கு என்ன பொருள் என்றால் உண்ணுள் இருக்கும் (பின்டத்தில் இருக்கும் உன் ஆன்மா அண்டத்தில் கரையட்டும்)உன் ஆன்மா சிற்றம்பலத்தில் இருக்கும் உன் ஆன்மா நிறைவு பெறுவதாக பரிபூரணமாவதாக என்று பொருள் 


அதற்க்கு எதிரில் உள்ளவர் தில்லையம்பலம் என்று பதில் வணக்கம் சொல்லுவர்.


#உங்களை பார்த்து இனிமேல் யாராவது திருச்சிற்றம்பலம் என்று சொன்னால் உங்கள் #ஆத்மா  நிறைவுபெறட்டும் என்று அவர்கள் வாழ்த்துகிறாற்கள் என்று அர்த்தம் பதிலுக்கு தாங்களும் தில்லையம்பலம் என்று கூறவேண்டும்.


கூறுவதோடு நில்லாமல்


#தில்லையம்பலத்தில் உள்ள ஆனந்த கூத்தனை மனதால் தரிசிக்க வேண்டும்.

உருவத்தில் இருந்து அருவமாக உன் ஆன்ம கரைய வேண்டும் என்றால் தில்லைக்கு போக முக்தி. 


இதனை உணர்த்தவே #திருசிற்றம்பலத்தில் #நடராஜ  பெருமான் மனித ரூபத்தில் #ஆனந்தகூத்தாடுகிறான். 


#நடராசப் பெருமானின் விமானக் கூரையில் 21,600 பொன் ஏடுகளை 72,000 ஆணிகளால் அடித்துப் பொருத்தியிருக்கிறார்கள் .


மனிதன் நாள்தோறும் 21, 000 தடவை மூச்சுவிடுவதையும் , அவன் உடலில் 72,000 நரம்புகள் உள்ளதையும் குறிக்கவே அப்படிச் செய்திருக்கிறார்கள் . 


மனித உடலும் கோயில்தான் என்பதை உணர்த்துவதே சிதம்பர ரகசியம் .!


#சிதம்பரகசியம் என்றால் வேறு ஒன்றுமில்லை ; எல்லாம் மனக் கண்ணால் பார்க்கவேண்டியது . திரை ரகசியம் . திரை விலகினால் ஒளி தெரியும் . மாயை விலகினால் ஞானம் பிறக்கும்


#இப்பதிவை படிக்கும் அனைத்து ஆன்மீக அன்பர்களுக்கும் #திருச்சிற்றம்பல வணக்கம்


#திருச்சிற்றம்பலம் என்று சொல்ல சொல்ல நாம் அறியாமல் பார்க்கும் பேசும் செய்யும் அனைத்து பாவச்செயல்களும் நீங்கி நம் ஆன்மாவிற்கு புண்ணியம் சேற்க்கிறோம்..... அப்போது அறியாமையால் ஏற்படும் தவறு எவ்வளவு என்பது நமக்கு தெரியாது


அதனால் நாம் #திருச்சிற்றம்பலம் என்று நித்தமும் எவ்வளவு முறை சொன்னாலும் போதாதல்லவா? 


மேலும் திருச்சிற்றம்பலத்தை தரிசிக்க வாய்ப்பு கிடைக்காமலும் உணராமலும் பலர் வாழ்வு முடிந்து விடுகிறது ஆனால் திருச்சிற்றம்பலம் என்று சொல்லி சொல்லியாவது அடுத்த பிறவியிலாவது சிவகதி அடைய வேண்டும் என்பதற்காக ஒரு ரஹசிய கோட் வேர்டாக இதை இறைவனே திருச்சிற்றம்பலமுடையான் என்று தன்பெயரை குறிப்பிட்டான்.....🌿🌹

நன்றி..

Comments

Popular posts from this blog

The sound of gunfire pierced the air of the quiet valleys. A terrorist attack took place near the Pahalgam market area — *turning a place like paradise into hell.* People screamed. Blood flowed. There was chaos everywhere. *👺 "The terrorists were asking for names and religions and then firing bullets."*

SUGA Elite Cruise Travellers Club* SUGA Elite Cruise Travellers Club is in tie-ups with international Cruise T I'll keep you ours and Travels companies. We can travel with the following major cruise lines:

சிறுகதை: *வெங்கட்ராமன் முடிவு சரியா தப்பா??* வெங்கட்ராமன் நன்கு படித்த பிராமண பையன். நல்ல வேலை. ஆள் பார்க்க மிக நன்றாக இருப்பான். வயது 38. ஆனால் திருமணத்திற்கு பிராமண பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சரியாக அமையவில்லை. அவர்கள் குடும்பம் பழமையான பிராமண குடும்பம். வெங்கட்ராமன் வீட்டுக்கு வந்து அம்மா அப்பாவிடம் பேசினான். "அப்பா, எல்லாம் நல்லபடியா முடிஞ்சது அந்த ஆபீசுக்கு போய் அந்த பொண்ணோட பேசிட்டேன்...