ஜம்மு & காஷ்மீர் - மற்றும் லே லடாக்கை இணைக்க.....₹1.4 இலட்சம் கோடி செலவில் - 31Tunnel என All weather சாலை வேலைகள் படு அமர்க்களமாய் நடந்து வருகிறது. 2026 என்பது அரசின் கடைசி தேதி - ஆனால் 2025லேயே முடித்துக்கொடுப்பதாக கண்ட்ரக்டர்கள் உறுதி கொடுத்துள்ளனர்.
ஜம்மு & காஷ்மீர் - மற்றும் லே லடாக்கை இணைக்க.....₹1.4 இலட்சம் கோடி செலவில் - 31Tunnel என All weather சாலை வேலைகள் படு அமர்க்களமாய் நடந்து வருகிறது. 2026 என்பது அரசின் கடைசி தேதி - ஆனால் 2025லேயே முடித்துக்கொடுப்பதாக கண்ட்ரக்டர்கள் உறுதி கொடுத்துள்ளனர்.
மறுபக்கம் இரயில்வே இணைப்பும் செல்கிறது என்பதை மறக்க வேண்டாம்.
31 Tunnelலில்.... ஒன்று மட்டும்(Zojila Tunnel) 14 கிமீ நீளத்துக்கு அமைய உள்ளது - அதுவும் இரு வழி பாதையாக (போக வர என தனி தனியாக) - இந்தியாவில் மட்டுமல்ல ஆசியாவிலேயே இதுதான் மிக நீளமான Bipolar Tunnelஆக இது இருக்கும்!!!
இது சுதந்திர இந்தியாவில் மிகப்பெரிய சாதனையாகவும் இருக்கும் என்கிறார்கள் பொறியாளர்கள்!!! இத்தனை உயரத்தில் இப்படியொரு All weather tunnelஐ இந்தியா இதுவரை அமைத்தது இல்லை - முதல் முயற்சிலேயே உள்ளூர் ஒப்பந்ததாரர்களை வைத்தே சாதிக்க போகிறோம்.
இதுவரை வருடத்தில் பாதிநாள் - காஷ்மீர் & லடாக்கிற்கு போகும் பாதை மூடப்படும்.... பனிப்புயல் - மலை சரிவுனு பல காரணங்களால். அப்பெல்லாம் இலகுரக ஹெலிகாப்டர்கள் மட்டுமே இராணுவத்துக்கு பொருட்களை கொண்டு செல்லும்.... அதனாலேயே பாக்கும் 1999ல் கார்கிலை பிடித்து காஷ்மீரை & லடாக்கை ப இந்தியாவிலிருந்து துண்டிக்க முயன்றது.
அதேபோல் போரால் இறந்த இராணுவ வீரர்களை விட....... இந்த கரடு முரடான சவால் நிறைந்த குறைந்த அகலம் கொண்ட இந்த பாதையில் இராணுவ வாகனங்களில் செல்லும் போது - விபத்தில் இறந்தவர்களே அதிகம்.
இவை இரண்டுக்கும் தீர்வாகவே இந்த ₹45 ஆயிரம் கோடி சாலை திட்டம். வருடம் 365 நாளும் போகும் வகையிலும் - பயண தொலைவையும் நேரத்தையும் இரு மடங்காக குறைக்கும் வகையிலும்!!! அதாவது Srinagar-Kargil-Leh (NH1) பாதையில் அமைய போகும் Zojilla Tunnel மட்டும்..... Sonamarg to Minamarg இடையே கடக்கும் தூரத்தை 4 மணி நேரத்தில் இருந்து 40 நிமிடமாக மாற்றுகிறது - பாதுகாப்பான பயணத்தையும் உறுதி செய்கிறது!!!
உடலுக்கு எப்படி இரத்த நாளங்களோ அப்படிதான் தேசத்துக்கு சாலைகள்!!!
இத்தனை காலமும் தரமான சாலைகள் இல்லாமல் போனதுதான்..... காஷ்மீர் - லடாக் - வடகிழக்கு பிரதேசங்கள் என அனைத்திலும் வளர்ச்சிகள் முடங்கிபோய் - ஆயுதம் ஏந்தும் போராட்ட குழுக்கள் அதிகமாகி - நாட்டின் வளர்ச்சியையே முடக்கி போட்டது.
புதிய ரத்தம் பாயட்டும் இந்த பகுதிகளுக்கு - புத்துணர்ச்சியோடு இந்தியா வளரட்டும்..!!!
Comments
Post a Comment