அஹம்_பிரம்மாஸ்மி..... வீர் சாவர்க்கரின்140 வது ஆண்டு தினத்தில் புதிய சர்கார் கட்டிடம் திறப்பு என சர்ச்சை எழுந்தாலும்.... நிஜத்தில் வேறு சில நல்ல விஷயங்களும் இதில் மறைமுகமாக ஊடாடிக்கொண்டே வருகிறது.
💖 #அஹம்_பிரம்மாஸ்மி.....
வீர் சாவர்க்கரின்140 வது ஆண்டு தினத்தில் புதிய சர்கார் கட்டிடம் திறப்பு என சர்ச்சை எழுந்தாலும்.... நிஜத்தில் வேறு சில நல்ல விஷயங்களும் இதில் மறைமுகமாக ஊடாடிக்கொண்டே வருகிறது.
நம் இந்திய மத்திய அரசு சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் புது தில்லியில் உள்ள நாடாளுமன்ற மைய வளாகத்தை விரிவுப் படுத்தி புதியதாக பல விஷயங்கள் அதில் ஏற்படுத்தி வருகிறார்கள்.
ஏற்கனவே இங்கு வரும் பாதையை கர்தர்விய பாதை என பெயர் சூட்டி அதில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் சிலையை திறந்து வைத்து இருக்கிறார்கள். அதற்கு முன்னதாக நம் இந்திய அசோக சக்கரத்தோடு கூடிய புதிய வடிவிலான கர்ஜிக்கும் நான்கு சிங்க முகங்களை கட்டத்தின் மேல் நிலை நிறுத்தி வைத்திருக்கிறார்கள்.
இவற்றை எல்லாம் தொடர்ந்து தற்போது இந்தியாவில் G20 உலத உச்சி மாநாடு நடக்கும் இந்த தருணத்தில் நாடாளுமன்ற புதிய கட்டத்தை வரும் ஞாயிறன்று (28/05/2023) திறந்து வைக்க இருக்கிறார்கள்.
இந்த விழாவிற்கு முன்னதாக அன்று காலை 5:00 மணியளவில் பிரம்ம முகூர்த்தத்தில் வேத கோஷம் முழங்க யாக வேள்விகளை மேற்கொள்ள இருக்கிறார்கள். இந்த பொறுப்பினை சிருங்கேரி சாரதா பீடத்தை சார்ந்த மடத்தவர் வசம் ஒப்படைத்திருப்பதாக சொல்லியிருக்கிறார்கள்.
நாட்டில் எத்தனையோ பேர் இருக்க..... இவர்கள் வசம் ஏன் இந்த ஏற்பாடு என பாமரனை போன்று யாரேனும் கேள்வி எழுப்பினால்...... முழு சமாச்சாரமும் தெரிந்து கொண்டு பிறகு நீங்களே சொல்லுங்கள் என்ன நடக்கிறது.... என்னவெல்லாம் நடக்கிறது என்று...!
ஆதி சங்கரர் தெரியுமல்லவா....
இந்த பாரத தேசத்தை தனது பொன்னடிகளால் அளந்தவர். சனாதனம் தழைக்க கால் கடுக்க நடந்தவர்.பாரதம் தழைக்க அதன் நான்கு திசைகளிலும் நான்கு மடங்களை நிறுவி வேத மார்க்கமும்.... சமூக தர்மமும் தழைக்க வழி கோலியவர்.
இதன் மூலம் மதத்தை தனது நிர்வாக திறன்கள் மூலம் கட்டிக் காத்தவர்.
வேதத்தின் சாரமான.... அதாவது நான்கு வேதங்களின் சாராம்ஸமான ரஸத்தை.... அதாவது அதன் மூலத்தை ...... அது சொன்ன தத்துவார்த்த ரகசியத்தை அடிப்படையில் தான் இந்த மடங்களை இயக்க அனுமதித்தார்.
பண்டைய பாரதத்தின் கிழக்கில் அமைந்துள்ள பூரியில் (இன்றைய ஒடிசா) பத்மபாதரை தலைவராக கொண்டு #ரிக்_வேத சாராம்சத்தில் கோவர்த்தன பீடத்தை ஏற்படுத்தி வைத்தார்.அநாதி காலமாக உள்ளது ரிக் வேத சாகை. இதற்கு கோவர்த்தன கிரியை தூக்கி சுமந்த கோபாலனை பிரதானமாக கொண்டுள்ளது போல் இந்த மடம் தோன்றிடுகிறது. ஸ்ரீவைணஷ்வ சம்பிரதாயத்தில் புகழ் பெற்ற ஜகன்நாதர் ஆலயமும் இங்கு தான் இருக்கிறது. கீதை சொன்ன கண்ணனின் கால் பெருவிரல் நகம் இங்கு வைக்கப்பட்டுள்ளதாக பலரும் நம்புகிறார்கள் என்பது வேறு விஷயம்.கிருஷ்ணனின் தங்கை சுபத்ரா மற்றும் அண்ணன் பலராமரோடு மரத்தாலான பதுமையாக காட்சி தருகிறார்கள்.
ஐத்ரேய உபநிஷத்தில் வரும் ப்ரக்ஞானம் பிரம்ம என்கிற மஹாவாக்கியத்தை அதன் ஊடான தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது இந்த சங்கர மடம். ஆதி சங்கரரின் கிழக்கு எல்லையாக உள்ளது.
அடுத்ததாக மேற்கில்... (இன்றைய குஜராத்..) துவாரகையில் அஸ்தாமலகரை தலைவராக கொண்ட துவாரகா பீடம். இதன் தாத்பரியம் சாந்தோக்கிய உபநிஷத்தில் வரும் தத்துவமஸி என்கிற பதத்தை ஒட்டி சாம வேத சாராம்சத்தில் செயல்படுகிறது.
வடக்கில் பத்ரிகாஸ்ரமம் வருகிறது....தோடகாச்சாரியரை தலைவராக கொண்டு ஜோதிர் மடங்களை நிறுவி அதர்வண வேத சாராம்சத்தில் மாண்டூக உபநிஷத்தில் வரும் அகம் ஆத்மா பிரம்மம் என்பதனையே பிரமாணங்களாக கொண்டு இயக்கிவருகிறார்கள்.
பாரதத்தின் தெற்கில்.... தென்னாட்டுடைய சிவமே போற்றி... என பலரும் நெக்குருகிய ஞானியர்களையும் ஞானவான்களையும் தந்த தென் திசையில்...
ஸ்ரீசைலத்தின் மேற்கு திக்கில் துங்கபத்ரை ஆற்றின் ஒரு கரையில் அஹோபிலமும் மறுகரையில் மஹாமஹனீயரான ரிஷ்யசிங்கர் ஆஸ்ரமம் இந்த இடத்தில் தான் இந்த சிருங்கேரி பீடம் ஏற்படுத்தப்பட்டது.
பின் நாட்களில் இந்த இடத்தில் தோன்றியது தான் விஜயநகர சாம்ராஜ்யமும் கூட.
ஓர் சுவாரஸ்யம் சொல்வர். அந்நாட்களில் ஆதி சங்கரரை வாதுக்கு அழைத்தவர்களில் மண்டலமிஸ்ரரும் ஒருவர்.இவரை வாதில் வென்ற பின்னர் இவரது மனைவி சரஸவாணி என்பவர் கணவரின் சரிபாதி மணைவி ஆதலால் தன்னையும் தர்க்கத்தில் வெற்றி கொண்டால் தான் அவரை வெற்றி கண்டது செல்லும் என்று வாதிட்டார். பதினோரு நாட்களுக்கு வாதப்பிரதிவாதங்கள் நடந்தது. பிரம்மசாரியத்தை கடைப்பிடித்த சங்கரிடம் பெண் தத்துவ பரிமாணங்களை கேள்விகளாக கேட்டு மடக்கினார் அவர் என்கிறார்கள்.
நீண்ட வாதப் பிரதி வாதங்களுக்கு பிறகே அவரை வெற்றிக்கொண்டார் சங்கரர். இவரது அத்வைத வேதாந்த கொள்கைகள் அப்படியே ஏற்றதும் அவர் ஒருவரே. மண்டனமிஸ்ரரை சுரேஸ்வரர் என புதிய பெயர் கொடுத்து இந்த மடத்திற்கு அனுப்பி வைத்தார் ஆதி சங்கரர். அது போலவே வாது செய்த சரஸவாணிக்கு வென்ற பின்னர் சாரதா எனப் புதிய பெயர் கொடுத்தார்.
பின்னாட்களில் இவர் பெயரில் தான் சிருங்கேரி சாரதா பீடம் என்றே பலராலும் அறியப்பட்டது.
இஃது யஜூர் வேத சாராம்சத்தில்.... பிருகுதாரிண்ய உபநிஷத்தில் வரும் #அகம்_பிரம்மாஸ்மி தத்துவத்தை தாத்பரியமாக கொண்டு இன்றளவும் செயல்பட்டுக் கொண்டு வருகிறார்கள்.
இப்பொழுது நினைவு படுத்தி பாருங்கள்...... நம் பாரதப் பிரதமரின் கடந்த கால கேரள மாநில விஜயத்தின் போது அங்கு உள்ள காலடியில் உள்ள ஆதி சங்கரரின் பிறந்த இடத்தில் அமைந்துள்ள கோவிலுக்கு சென்றும்..... கேதார்நாத்தில் ஆதி சங்கரர் சிலா ரூபத்தை நிறுவி திறந்து வைத்ததும் ...... இதன் ஓர் பகுதியாகவே புரியத் துவங்கும்.
வரும் ஞாயிறன்றும் ஓர் வகையில் ஜோதிட ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாளாக இருக்கிறது.
அன்று காலை வேளையில் அஷ்டமி திதி நடப்பில் இருக்க சித்த அமிர்த யோகத்துடன் கூடின பூர நட்சத்திரம் வருகிறது. பூஜாபுனஸ்காரங்கள் அத்தனையும் அஷ்டமி திதியிலும் நாடாளுமன்ற கட்டிட திறப்பு நவமி திதியில் வருவது போன்று பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். இஃது மிக மிக விஷேசமானதொரு அம்சம்.
பொதுவாக நம் இந்திய தேசத்தினை மகர ராசிக்கு உட்பட்டதாக கணிப்பர். அந்த வகையில் மகர ராசிக்கு அதிபதியான சனி அன்றைய தினம் நேர் பார்வையில் பார்க்கும் படியான கும்ப ராசியில் இருக்கிறது. அதேசமயம் குரு, ஐந்தாம் பார்வையாக பூர நட்சத்திரம் வரும் சிம்மத்தை பார்க்கிறார்.
ஓர் அரசினை ஆளும் தன்மையினை சனியினை கொண்டே கணிப்பர்.அதிலும் குறிப்பாக சூரியனோடு சம்மந்தம் கொண்டு சனி என்றால் கேட்கவே வேண்டாம். இதற்கு குரு பார்வை இருக்கிறது என்று சொன்னால்..... எப்படிப்பட்டது என்பதை உங்கள் யூகத்திற்கு விட்டுவிடுகிறோம். அது போக அந்த குரு செவ்வாய் வீட்டில் இருந்து பார்த்தால்.......
இங்கு நிலம் மற்றும் வீரம் செறிந்த ராணுவ பலம் ஆகியவற்றுக்கு செவ்வாய் கிரகத்தை கைக்கொண்டு கணக்கிடுவர் என்பதனையும் நினைவில் வைத்திருங்கள்.
கட்டிடப் பணிக்கான பூமி பூஜையன்றும் மிக முக்கியமான ஒரு அம்சம் நடப்பில் இருந்தது அன்று. அஃது காலசர்ப்ப யோகம். அதுபோலவே கடந்த ஆண்டு திறந்து வைக்கப்பட்ட கர்ஜிக்கும் நான்முக சிங்கத்தை நாட்டிற்கு திறந்து வைத்த சமயத்தில் கூட கிரகங்கள் இருந்த அமைப்பிற்கும் ஓர் ஒற்றுமை இருந்தது.இதோ வரும் ஞாயிறன்று திறப்பு விழாவிற்கு காத்திருக்கும் சமயத்தில்..... அன்றைய தினம் திரேக்காண ராசியில் சஞ்சரிக்கும் கிரகங்கள் பல மர்ம ரகசியங்களை வரும் நாட்களில் அவிழ்க்க இருக்கிறது. பலவற்றையும் சாதித்துக் கொடுக்கக்கூடிய சாத்தியங்களை கோடிட்டுக் காட்டுகிறது. 2027 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மிக நீண்ட சூரிய கிரகணத்திற்கு (சற்றேறக்குறைய 6 நிமிடங்கள் 37 விநாடிகள் முழு கிரகண காலமாக இருக்கும்) முன்பாக இந்த தேசம் உலக அளவில் மிக பெரிய உச்சத்தை தொட இருப்பதை கணிக்க முடிகிறது. மிக முக்கியமானதொரு காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை இவையெல்லாம் நமக்கு கணித ரீதியாக காண்பித்து கொடுத்திருக்கிறது.,.... அதனை சன்னக்குரலில் நமக்கும் சொல்லவும் செய்கிறது.
வெளியே இருந்து பார்க்க.... வெகு சாதாரணமான தெரியும் தற்போதைய நடைமுறை சமாச்சாரங்கள் அத்தனையும் வேறோர் வடிவத்தில்.... உள்ளார்ந்த மறைப்பொருளோடு ஆழமான பிணைப்போடு செயல்பட்டு கொண்டு வருகிறது. அதற்கு நாடாளுமன்ற கட்டிட அமைப்பே சாட்சி. யாரும் இதுவரை காலமும் மிக முக்கியமான கட்டிடங்களை முக்கோண வடிவில் கட்ட அமைப்பதில்லை. ஆனால் நம் இந்திய புதிய நாடாளுமன்ற கட்டிடம் கிட்டத்தட்ட முக்கோண வடிவில் இருக்கிறது......., ஸ்ரீசக்ரத்தில் உள்ள மையம்....மூல பிந்து முக்கோண வடிவம் தான்.
உள்ளே மைய வளாகத்தை ஒட்டிய மேல் கூரையில் இதே விதத்திலான வடிவமைப்பு ஏற்படுத்தியிருக்கிறார்கள். நாடாளுமன்ற உறுப்பினர் இருக்கை என்பதும் ஓர் கணித ரீதியிலான வடிவமைப்புக்கு உட்பட்டே ஏற்படுத்தி இருக்கின்றனர்.
மேலோட்டமாகவாவது சில விஷயங்களை நம்மவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த நீண்ட பதிவு. பொறுமை காத்து படித்திட்ட அத்துனை நல்லிதயங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் பல...
பொறுத்திருந்து பார்க்கலாம் காலச் சக்கரத்தில் இந்த விளையாட்டு என்னென்னவிதங்களில் பரிமளிக்கப்போகிறது என்பதை... ஏனெனில் ஸ்ரீராமபிரான் நட்சத்திரமான புனர்பூச நட்சத்திரம் நேற்று நடப்பில் இருந்த காலத்தில் தான்... யாரும் எதிர்பாராத வண்ணம் நம் பாரதத்திற்கு வெளியே முதல் முறையாக அந்நிய மண்ணில் நம் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை #தி_பாஸ் என்று அழைத்து.... சுமார் ஐம்பதாயிரம் பேர் திரண்டு நின்ற கூட்டத்தில் அறிமுகப்படுத்தி புளங்காகிதம் அடைந்திருக்கிறது ஆஸ்திரேலியா. இது சாதாரண விஷயமல்ல. ஆனால் இவையெல்லாம் ஆரம்பம் மட்டுமே என்கிறது காலக்கணக்கு......
❣️வாழ்க பாரதம்.
💓 ஜெய் ஹிந்த்.
🔥🙏🔥🙏🔥🙏
Do you know why a new secretariat called 'VISTA' is being built in New Delhi at an estimated cost of 975 Crores?
Read on. There are 30 to 40 secretariats in New Delhi belonging to the various ministries. All of them are situated in rented accommodations.
The rental value of EACH Secretariat is a whopping 20-25 CRORES!! And most of these buildings are owned by either Congress leaders or Communist Comrades!!
You can calculate the total rent of all these buildings which is regularly being paid to these 'owners', thus draining out around 500 crores every year !!!!
This, exactly, is the reason that the central govt plans to shift all these Secretariats to one huge complex called VISTA. Apart from saving the huge rental expenditure on the exchequer, it saves on logistics for files and personnel to move from one secretariat to another on duty. Saves movement time too!
As you can see the entire cost of construction of the new VISTA Complex would be recovered in just TWO years' period.
The proposed complex is strongly opposed by the Congress & Communist leaders because they would lose the easy money which the central govt was paying them towards rent. Hence they filed their objections in the Supreme Court !!!
But the Supreme Court was wise enough to understand the logic and dismissed the appeal as superfluous and untenable, also imposing a fine of One lakh rupees on them and warning those who indulged in such superfluous appeals.
Now we can appreciate the need for the centralised Secretariat VISTA which is under construction.
Comments
Post a Comment