எத்தனை முறை படித்தாலும் விழியோரம் நீர் ததும்பிடச் செய்யும் பதிவு..... " ஸ்வாமி '' வீட்டு திண்ணையில் அமர்ந்தபடி , கண்களை மூடியவாறு ராம ஜபம் செய்து கொண்டிருந்த தியாகராஜர் , குரல் கேட்டு சட்டென்று கண் விழித்தார் !

 




எத்தனை முறை படித்தாலும் விழியோரம் நீர் ததும்பிடச் செய்யும் பதிவு.....


" ஸ்வாமி ''


வீட்டு திண்ணையில் அமர்ந்தபடி , கண்களை  மூடியவாறு ராம ஜபம் செய்து கொண்டிருந்த தியாகராஜர் , குரல் கேட்டு சட்டென்று  கண் விழித்தார் !

எதிரே ஒரு  வயதான தம்பதி !

அருகே  ,கூப்பிய கரங்களுடன் ஒரு இளைஞன் !, 

மெல்லிய குரலில் அந்த முதியவர் இப்போது பேச ஆரம்பித்தார் ;..


'' ..ஸ்வாமி ...நாங்கள் வடக்கே ரொம்ப தூரத்திலிருந்து கால்நடையாய்  ஷேத்ராடனம்   பண்ணிண்டு வரோம் !.நாளை ராமேஸ்வரம் போகணும் !..இன்று ஒரு ராத்திரி மட்டும் உங்க க்ருஹத்துல  தங்கிவிட்டு ,  காலை பொழுது விடிந்ததும் கிளம்பிடறோம் !.தயவுசெய்து  ஒத்தாசை  பண்ணணும் !''

கம்மிய  குரலில் , பேசினார் அவர்;


வயதான அந்த தம்பதியின்   அழுக்கு படிந்த உடைகள்  , முகங்களில் தெரிந்த களைப்பு , வாட்டம் மற்றும் ,  பேச்சில் தெரிந்த ஆயாசம் ..இவையெல்லாவற்றையும் தாண்டி , அம்மூவரின் முக லாவண்யமும் , தெய்வீக அம்சமும்     தியாகராஜரை என்னவோ செய்ய ...அவருக்கு ஒரு வித பக்தி மயக்கம் ஏற்பட்டது  ! 

ஒரு கணம் நிலை தடுமாறியவர்  பின் , மெலிதான புன்னகையுடன் , இரு கரங்களையும் கூப்பி அவர்களை வணங்கினார் ;


'' அதற்கென்ன ... பேஷாய் தங்கலாம் !...இரவு  போஜனம் பண்ணிட்டு நிம்மதியாய் தூங்குங்கோ !''

அவர்களை உள்ளே அழைத்து சென்று அமர செய்தவர் பின் , அடுக்களையை நோக்கி , உரத்த குரலில் , 

'' கமலா ...குடிக்க தீர்த்தம் கொண்டு வா ..''

என்றார் ;


அடுத்த கணம் தீர்த்த சொம்பு சகிதம் அங்கே வந்த கமலாம்பாளின் கண்கள்  , அங்கு அமர்ந்திருந்த புதியவர்களை  கண்டு வியப்பில் விரிந்தன ! 

' யார் இவர்கள் ?'

'' கமலா ...''

தியாகராஜரின் குரல் அவளை தட்டியெழுப்பியது ; 

'' கமலா .....இவர்கள் நமது விருந்தாளிகள் ..! .இன்று  நமது கிருஹத்தில் தங்க போகிறார்கள் ..இரவு உணவை இவர்களுக்கும் சேர்த்து தயார் செய் ! ''

தீர்த்த சொம்பை அவளிடமிருந்து வாங்கியவாறே இயல்பாய்  பேசினார் அவர் ;


' ....அடடா ..வீட்டில் இரண்டு பேர்களுக்கு போதுமான அரிசியே இல்லை ..  !..இப்போது , .ஐந்து  பேர்களுக்கு உணவு தயாரிக்க வேண்டுமானால் அரிசிக்கு என்ன செய்வது ?...பக்கத்து வீட்டுக்கு சென்று அரிசி வாங்கி வர வேண்டியது தான் '  

உள்ளுக்குள் எண்ணியவள்  , பின் எதையும் வெளிக்காட்டாமல் ,  புன்னகையுடன் அவருக்கு தலையசைத்து விட்டு , அடுக்களையை நோக்கி விரைந்தாள் ;


போன வேகத்திலேயே ,அங்கிருந்த பாத்திரங்களில் ஒன்றை  கையில் எடுத்தவள் , பின் அதை  யார் கண்ணிலும் படாமலிருக்க  புடவையால் மறைத்தவாறு    அங்கிருந்து   வெளியே வந்த அக்கணம் ....

அந்த சிறிய கூடத்தில் அமர்ந்திருந்த அந்த முதியவரின் குரல் அவளை தடுத்து நிறுத்தியது ;


'' அடடா ...எங்கே செல்கிறீர்கள் அம்மா ?........எங்களுக்காக  சிரமப்பட வேண்டாம் .!  ....எங்களிடம் , வேண்டிய அளவு தேனும் , தினை  மாவும் இருக்கிறது .....இரண்டையும் பிசைந்து ..ரொட்டி தட்டி , நாம் அனைவரும் சேர்ந்தே சாப்பிடலாம் !''

அவளின் மனதை படம் பிடித்து காட்டியது போன்று  பேசியவரை   , வியப்புடனும் , தர்மசங்கடத்துடனும் அவள் பார்த்து கொண்டிருக்கும் போதே, அவள் சற்றும் எதிர்பாராத கையில் , தேனும் , தினை மாவும் அடங்கிய ஒரு சிறிய பையை  அவளிடம் நீட்டினார்  அந்த முதியவர் ;....! 

தயக்கத்துடனும் , சங்கோஜத்துடனும்  அதனை பெற்று கொண்ட அவள் , உணவுத்தயாரிக்கும் பொருட்டு ,  அடுக்களையை நோக்கி விரைந்தாள் ...

        

அன்று இரவு ,அனைவரும் அந்த ரொட்டியை சாப்பிட்டு பசியாற .....

.தியாகராஜர்  ,  அவர்களுடன்  விடிய விடிய பேசிக்கொண்டிருந்து விட்டு  ,   பின் , ஒரு கட்டத்தில் உறங்கி போனார் .. ..

பொழுது  விடிந்தது !

காலைக்கடன்களை முடித்து விட்டு , கூடத்தில் அமர்ந்து , வழக்கம் போல கண்களை மூடியவாறு , ராம நாமத்தை ஜபித்தவாறிருந்த  தியாகராஜர் , குரல் கேட்டு கண்களை திறந்தார் .

"  ஸ்வாமி .. ..! "..


எதிரே புன்னகையுடன் அந்த முதியவர் !

அருகே , அவரின் பார்யாளும் , மற்றும் அந்த இளைஞனும் ...!

அந்த முதியவர்  தொடர்ந்தார்   ....;

''  ரொம்ப சந்தோஷம் .....நாங்க காவேரியில் ஸ்நானம் பண்ணிட்டு அப்படியே  கிளம்பறோம் .....இரவு தங்க இடம் கொடுத்து ....வாய்க்கு ருசியாய் ஆகாரமும் கொடுத்து ...அன்பாய் உபசரித்ததற்கு மிக்க நன்றி ..''


கூப்பிய கரங்களுடன்  அந்த முதியவர் பேச  ..

அருகே அந்த மூதாட்டியும்  ,  இளைஞனும் அவரின் வார்த்தைகளை ஆமோதிப்பது போன்று தலையசைத்தவாறு  நின்றிருந்தனர் .. 

சொல்லி விட்டு  மூவரும் அங்கிருந்து கிளம்ப ......

.தியாகராஜரும் அவர்களை வழியனுப்பும் நிமித்தமாய் , அவர்களுடன் வாசலுக்கு வந்தார் ...

அவர்கள் மூவரும் வாசலை கடந்து , தெருவில் இறங்கி நடக்க ஆரம்பிக்க ...


அவர்கள் செல்வதையே கண் இமைக்காமல் பார்த்தவாறு நின்றிருந்த தியாகராஜரின் கண்களில் ' சட்டென்று ' ஒரு தெய்வீக காட்சி இப்போது !

அந்த வயோதிகர் ,  ஸ்ரீ ராமனாகவும் .

அந்த மூதாட்டி , சீதையாகவும் ,

அந்த இளைஞன் , ஸ்ரீ அனுமனாகவும் தோற்றமளிக்க .....

அவருக்குள் இனம் புரியாத ஒரு பதைதைப்பு !

கண்கள் பனிசோர ..நா தழுதழுக்க .. ... தன்னை மறந்து  பக்தி பரவசத்தில் ஆனந்த கூத்தாடினார்  !


'' என் தெய்வமே ....தசரதகுமாரா ....ஜானகி மணாளா  ....நீயா என் கிருஹத்துக்கு வந்தாய் ?..... என்னே நாங்கள் செய்த பாக்கியம் ...அடடா .....வெகு தூரத்திலிருந்து நடந்து வந்ததாய் சொன்னாயே ... உன் காலை பிடித்து அமுக்கி ,  உன் கால் வலியை  போக்குவதை விடுத்து ,  ..உன்னை தூங்க விடாமல் ..விடிய விடிய  பேசிக்கொண்டே இருந்தேனே ...மகா பாவி நான் ! .....என் வீட்டில் தரித்திரம் தாண்டவமாடறதுன்னு தெரிஞ்சு , ஆகாரத்தையும் கொண்டு  வந்ததுடன் , ஒரு தாய் , தகப்பனாயிருந்து எங்கள்  பசியையும்  போக்கினாயே ! உனக்கு  அநேக கோடி நமஸ்காரம் ! ''

நடு வீதி   என்பதையும் மறந்து கண்ணீர் மல்க  கதறி அழுதார் தியாகராஜர் !

அப்போது அவர் திருவாயினின்று , அனிசையாய் , 

'' சீதம்ம.....மாயம்ம...''


ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா !

Comments

Popular posts from this blog

Om NAMO NArendra MOdi Namaha*🔥🙏🪷 Shri Narendra Modi Ashtotra Namavali ஓம் ஸ்ரீ நரேந்த்ராய நமஹ (Salutations to the revered Narendra) 1. ஓம் விஶ்வ-நேத்ரே நமஹ – Salutations to the leader of the world stage. 2. ஓம் பாரத-பக்தாய நமஹ – Salutations to India’s devoted champion. 3. ஓம் ஜடூ-ஜப்பி-ப்ரதாய நமஹ – Salutations to the giver of world-famous hugs.

The sound of gunfire pierced the air of the quiet valleys. A terrorist attack took place near the Pahalgam market area — *turning a place like paradise into hell.* People screamed. Blood flowed. There was chaos everywhere. *👺 "The terrorists were asking for names and religions and then firing bullets."*

SUGA Elite Cruise Travellers Club* SUGA Elite Cruise Travellers Club is in tie-ups with international Cruise T I'll keep you ours and Travels companies. We can travel with the following major cruise lines: