சித்ரா பௌர்ணமி ******************************** சித்ர புத்ர நாயனார் கதை (சற்று நீண்ட பதிவு) (இந்த சரித்திரத்தைப் படித்தவரும், கேட்டவ ரும், படிப்பிக்கச் செய்தவரும் பூலோகத்தில் தீர்க்கா யுளுடன், ஸகல ஸௌபாக் கியங்க ளுடன் வாழ்வார். பெண்கள் தீர்க்க சுமங்கலி யாய், நோய் நொடியின்றி, புத்ரபௌத்ராதிக ளுடன், பதினாறு பேறுகளும் பெற்று சீருடனு ம் சிறப்புடனும் வாழ்வார்கள்.)
சித்ரா பௌர்ணமி
********************************
சித்ர புத்ர நாயனார் கதை
(சற்று நீண்ட பதிவு)
(இந்த சரித்திரத்தைப் படித்தவரும், கேட்டவ ரும், படிப்பிக்கச் செய்தவரும் பூலோகத்தில் தீர்க்கா யுளுடன், ஸகல ஸௌபாக் கியங்க ளுடன் வாழ்வார். பெண்கள் தீர்க்க சுமங்கலி யாய், நோய் நொடியின்றி, புத்ரபௌத்ராதிக ளுடன், பதினாறு பேறுகளும் பெற்று சீருடனு ம் சிறப்புடனும் வாழ்வார்கள்.)
பூலோகத்தை படைக்கும் முன்னர் இன்னார்க் கு இன்னபணி என பணிகள் வகுக்கப்பட்டன. யமனுக்கு தண்டனை கொடுக் கும் தொழில் விதிக்கப்பட்டது. ஆனால் சாட்சி வேண்டுமே என யோசித்தார் சிவபெருமான்.
விநாயகரை அனுப்பலாமென்றால் அப்போது தான் பாரதம் எழுதி ஓய்ந்திருந்தார். முருகன் முன்கோபக்காரன். பிரணவத்திற்குப் பொருள் தெரியவில்லை என்று பிரம்மனையே தலையில் குட்டிச் சிறையிலடைத்த தகப்பன் சுவாமி அல்லவா
கைலாஸபதி “பொற்பலகையும், வண்ணங்க ளும், தூரிகை யும் கொண்டு வரப்பணித்தார்.” அவர் கேட்டதெல்லாம் கொண்டு வந்து தந்தாள் உமாதேவி. பச்சை, நீலம், மஞ்சள், வெண்மை , சிவப்பு என ஐந்து நிறம் கொண்டு தன்னைப் போலவே ஒரு அழகிய உருவம் வரைந்தவர்
“தேவி.. சித்திரம் எப்படி இருக்கிறது?” என்றார்.
“அழகாகத் தான் இருக்கிறது, வலதுகையில் தங்க நிற எழுத்தாணி: இடது கையில் ஓலைச் சுவடி…. என்ன செய்யப் போகிறான் உங்கள் சித்திரத்துப் புத்திரன்?” என்று கேட்டாள் சக்தி.
நம்புத்திரன்’ என்று சக்தியின் வார்த்தைகளை திருத்தினார் ஈசன். “விநாயகரை நீ உருவாக்கி னாய்! நான் தலையைக் கொய்து யானைத்த லையை பொருத்தினேன். சண்முகனை நீ சரவணப் பொய்கையில் சேர்த்தணைத்தாய். அவன் ஆறுமுக னானான். உன் அருள்பார்வை பட்டால்தான் இவனும் வெளிவருவான். இன்று ஞாயிற்றுக்கிழமை. சூரிய பலம் மிகுந்த நாள்."
கண்பார்வை கூர்மையாயிருந்தால் தான் கண க்கெழுத முடியும். சித்திரை மாதம் சூரியன் உச்சமான சீர்பெற்ற மாதம். சித்திரை நட்சத்தி ரம் கன்யா ராசிக்குரியது. அதில் பிறந்தவன் கணக்கில் வல்லவனாக இருப்பான், பௌர்ண மி தாயான உனக்குரிய நாள். இதுவே நல்ல லக்னம் கூப்பிடு” என்றார்.
கருணையை கண்களில் தேக்கி“கண்மணியே
என்றாள் அன்னை பராசக்தி. பொற்பலகையி லிருந்து வெளியே.. வந்த புதல்வன் உலக மா தா பிதாவாகிய பார்வதி, பரமேஸ்வரர் களின் பாதங்களை பவ்யமாக பணிந்து கைகட்டி வாய்பொத்தி நின்றான்.
“சித்ர குப்தா ஆம். அதுதான் இனி உன் பெயர். சிரஞ்சீவி யாய் ஜீவராசிகளின் பாவ புண்ணி ய கணக்கெழுதிக் கொண்டிரு அன்னை வயிற் றில் கரு உதித்தவுடன் புதிதாய் ஓலைக்கட்டு போட்டுவிடு. சின்னச் சின்ன எழுத்துக்களில் சன்னமான ஓலைகளில் நீ எழுதும் பாவ புண்ணியக் கணக்கு முடிந்து விடுமானால் புண்ணியத்துக்கு புதுக்கட்டு போடலாம்.."
"பாவத்துக்கு தண்டனையை பூலோகத்திலே யே அனுபவிக் கட்டும். பூலோக நரகம் முடிந்து மேலுலக நரகம் வேண்டும்."
" கைலாயம், வைகுண்டம், ஸத்யலோகம், ஸ்வர்க்க லோகம், கோலோகம் என்ற எல்லா உலகத்துக் கணக்குகளையும் தனித்தனியே எழுது. இத்தனை நாள் பாவம், இத்தனை நாள் புண்ணியம் என்று வகை வகுத்து எழுது. யார் யார் எங்கெங்கே எத்தனை நாள் கழித்துப்பிற க்க வேண்டும் என்று பிரம்மனிடம் கேட்டறிந்து குறித்துக்கொள்” என்று ஈசன் சொல்ல,
“குழந்தாய்! விநாயகர் சதுர்த்தி, வைகாசி விசாகம், கார்த்திகை போலவே சித்திரை மாதம் “சித்ரா பௌர்ணமி” உன் பிறந்த நாள் அன்று உன்னை சிறப்பாக பூஜிப்பவர்களுக்கு பாபங்களிலி ருந்து விலக்களிக்கலாம். மைந்த ர்களில் எங்களுக்கு ஏற்றத் தாழ்வு கிடையாது” என உமையம்மையும் ஆசீர்வதித்தார்
சித்ர குப்தனை அருகில் அழைத்து உச்சி முகர்ந்து விபூதி யிட்டு வலது காதிலே சிவனும் உமையும் சித்திர குப்தா என்று பெயர் சொல்லி அழைப்பார்கள் பட்டுக்கட்டி நகைக ளெல்லாம்பூட்டி, “மற்றவர்களுக்குக் கஷ்டமா யிருக்கின்ற கணக் குகள் யாவும் உனக்கு சுலபமாய் வரும்” எனவும் ஆசீர்வதித்தனர்.
இந்திரனும் இந்திராணியும் குழந்தை இல்லை என்று நெடுங்காலமாய் தவம் செய்தனர்.
கௌதமர் சாபத்தால் பூமி மலடானது, வானம் மலடானது மரங்கள் மலடானது, செடி கொடிக ளில் பூ வில்லை, காயில்லை
பசுக்கள் மலடானது. அதனால் பாலில். ஒரு ஊசியை உச்சியில் வைத்து, அந்த ஊசிமேல் உள்ளங்கால் வைத்து ஒற்றைக்காலால் பசுப தியை நோக்கித்தவமிருந்தான் இந்திரன்.சில காலங்கள் சென்றபின், சுற்றிலும் குழிவெட்டி அக்கினி குண்டம் வளர்த்து இரண்டாயிரம் வருஷங்கள் தவமிருந்தான்.
தேவி “ஸ்வாமி! இந்திரன் அகலிகையை ஏமாற்றியது பெரும் குற்றம்தான்! ஆனாலும் அவன் உம்மை நோக்கிக் கடும் தவம் புரிகின் றானே! மன்னித்து அருளை கூடாது” என்று கேட்க, நந்தியை அழைத்து இந்திரனை அவள து மனைவியுடன் அழைத்துவரச் சொன்னார்.
நந்தி இந்திரன் இந்திராணியை அழைத்து வந்தார். ஈசன் இந்திரனிடம் “என்ன வரம் வே ண்டுமென்று கேட்க, இந்திரன்”, லோமஸுந்தர பெருமானே! நாடே மலடாகி விட்டது. காடு பற்றி எரிகிறது பூமி செழிக்க வேண்டும், புத்தி ரன் பிறக்க வேண்டும், பூக்கள் மலர வேண்டும் என வேண்டினான்.
“பூவையர் சாபம் பொல்லாதது அமரேந்திர… அகலிகை கல்லாய் கிடக்கிறாள். அந்தப்பாவம் லேசில் விடுமா? காமதேனு வயிற்றில் பாலன் பிறப்பான். பாலன் பிறந்த பிறகு எங்குமே செ ழிப்பு தான்” என்று வரம் கொடுத்தனுப்பினார்.
இந்திரன் சென்ற பிறகு காமதேனுவை வரவ ழைத்து “இந்திரனின் கொட்டிலில் ஒரு புத்திர னை ஈன்ற பிறகு. வா” என்றார். பசு கண்ணீ ரோடு நிற்க, “சித்திரை மாதம் சித்திரை நட்ச த்திரம் பௌர்ணமி அன்று உனக்கு மோட்சம் கிடைக்கும்” என்று வரமும் கொடுத்தார்கள்.
காமதேனு கன்று மாறி இந்திரன் இந்திராணி க்குப் பின்னால் போய் செல்லமாய் முட்ட, இது ஈசனளித்த வரம் என்று புரிந்து கொண்டு அம ராவதிப்பட்டணம் சென்றபின், வளர்பிறையில் வைகாசி மாதம் 21ம் நாள் வெள்ளிக்கிழமை திருவாதிரை நட்சத்திரத்தில் ‘மாவேந்திரி’ எனப் பெயர் சூட்டினார்கள். பெயர் சூட்டு விழா தான தருமங்களோடு, வேடிக்கைகளோடு இருபது நாட்கள் கோலாகலமாய் நடந்தது.
கன்றாய் மாறிய காமதேனு மந்தைகளோடு ஓட்டுவதில்லை.தினமும் கோபூஜை செய்தாள் இந்திராணி. பசு வயிற்றில் எப்போது புத்திரன் பிறக்கும் என்று தினமும் அதன் வயிற்றைத் தடவிப் பார்ப்பாள்.
இந்திராணியின் ஏக்கத்தைக் கண்டு மீண்டும் தவம் செய்யப் புறப்பட்டான் இந்திரன். இடை யில் புலித்தோல், கழுத்தில் ருத்ராட்சம்; ஒரு கையில் பிட்சாபாத்திரம்; மறுகையில் கமண்ட லம்; மழுவாள்; (தவத்தைக் கலைப்பவரை ஓடுக்க) இந்திராணி அரணிக்கட்டையைக் கடைந்து நெருப்புண்டாக்கி மண் கலயத் தில் போட்டுக் கொடுக்க, காடு சென்று அக்கினி வளர்த்துத் தவமிருந்தான் இந்திரன். மறுபடி சக்தி சிவபெருமானைத் தூண்டிவிட நந்தியை கூப்பிட்டு சித்திர குப்தனை அழைத்து வரச் செய்தார் ஈசன்.
சித்திராபுத்ரன் வந்ததும் “இந்திரன் கணக்கி லே சந்தான ப்ராப்தி உண்டா?” என்று கேட்டார்.
“அதிக புண்ணியம் செய்தவர்க்கு சத்புத்திரன் பிறப்பான் அதிக பாவம் செய்தவனுக்குத் தீயே புத்திரன் பிறந்து அவமா னத்தை ஏற்படுத்து வான். கடனைக் கழிக்கப் பிறக்கும் பிள்ளை கள் பெற்றோருக்கு முன்பே காலமாகி விடுவர்.
"பாப புண்ணியம் இரண்டும் கலந்து செய்வோ ருக்கு கர்மவினைப்படி புத்திர யோகம் ஏற்படு ம். முற்பிறவியில் பெற்றோரை தவிக்க விட்ட வர்களுக்கு பிள்ளை பாக்கியம் கிடையாது. சென்ற பிறவியில் மனைவி இருக்கச் சோரம் போனவனுக்கு பிள்ளைகள் பிறந்து பிறந்து மரிக்கும். அகலிகையை ஏமாற்றிய பாவம் தவ த்தால் அழியாதது. அதனால் இந்திரன் விந்து வில் ஜீவன் இல்லை ” என்றார் சித்ரகுப்தன்.
“சரி நீயே போய் இந்திரன் வளர்க்கும் பசுவின் வயிற்றில் பிறப்பாய்” என்றார் கைலயங்கிரி நாதர்.
“சுவர்க்கத்திலுள்ள சம்புப் பொய்கையில் ஒரு தாமரைப் பூவாக இரு. காமதேனு அங்கே தண்ணீர் அருந்த வரும். தாமரை மலரையும் சேர்த்துத் தின்று விடும். அதுவரை கணக்குக ளை மகாவிஷ்ணுவிடம் ஒப்புவித்துவிடு” என்று உத்தரவிட்டார் மகேசன்
ஆயிரம் பேர் சேர்ந்தாலும் அசைக்க முடியாத சுவடிக்கட்டை திருமாலிடம் கொடுத்துவிட்டு ஒரு சிறு குறிப்பு எழுதிக் கையில் வைத்துக் கொண்டார் சித்ரகுப்தன்.
“இது என்ன ஓலை?” என்று உமை கேட்க, “தாயே! எல்லாக் கணக்கின் தலைக்குறிப்பும் இதனுள் இருக்கிறது. இதையும் எழுத்தாணி யையும் நான் யாரிடமும் தரமாட்டேன்” என்று பணிவுடன் சித்ர குப்தர் மறுக்க, ஈசன் விட்டுவிடு, ஏடும் எழுத்தாணியும் கொண்டே பிறக்கட்டும்” என்று அனுமதி அளித்தார்.
தாமரை மலராக இருந்த சித்ராபுத்திரன் சுற்றி லும் பார்க்கின்றார். “ஆகா… இந்தப்பொய்கை எத்தனை பெரியது. அடேயப்பா…. எத்தனை ஆழம்… சுற்றிலும் என்ன அழகு! என்ன மணம் இந்த செண்பக மலர்களால் வாசனையா? அன்னக் கூட்டங்களும், வாத்துக்களும் நீந்தும் காட்சி தான் என்ன ரம்யமாய் இருக்கின் றது! பவளக் கொடிகள் என் தண்டிலே சிக்குகின்ற தே... "
ஆ…. முத்தும், பவளமும் விளையும் இடத் தில் ஜனிக்க என்ன புண்ணியம் செய்திருக்கிறேன் அதோ… கிழவர்கள் மூழ்கி எழுந்து குமரர்களா கி விட்டனரே! பொய்கையில் அமிர்தம் கலந்தி இருக்கிறது போலும்! அதோ பலாவும், மாவும் பிஞ்சு விட்டிருக் கிறதே! குழந்தை பிறக்கும் வேளையில் அற்புதங்கள் நிகழும் என்று ஈசன் வரம் கொடுத்திருக்கிறாரே..
மல்லிகை, முல்லை, பிச்சிப்பூ, இருவாட்சி எல்லாம் மொட்டு விட்டிருக்கின்றதே, மூன்று பக்கமும் மலையிலிருந்து சிற்றருவிகள் விழு ந்து பொய்கையை நிறைக்கின்றன. ஏலம், கிராம்பு, சாதிக்காய், சாதிபத்திரி ஆகியவற்றி ன் வாசனை மலைகளிலிருந்து வரு கின்றது!” இப்படி அதிசயப்படும் வேளையில், இந்திரா ணி சுபக்கனவுகள் கண்டு பசுவை மேய்ச்சலு க்கு விடுகின்றாள்.
மேய்ப்பவரிடம் “ரொம்பதூரம் அடர்ந்த காட்டு க்குள் போகாதீர்கள். சிங்கம், புலி, மலைப்பா ம்பு இருக்கும். சாவிப்பயிர், நாய்க்கடுகு, ஆம ணக்கு, கள்ளி, எருக்கு, ஊமத்தை ஆகிய வற் றை உண்ணாமல் ஜாக்கிரதையாய் பார்த்துக் கொள்ளுங்கள்” என சொல்லி அனுப்பினாள்.
தண்ணீர் குடிக்க பொய்கைக்கு வந்தது காம தேனு. வாயுவின் பலத்தால் தண்ணீரில் தாம ரைப்பூவும் உள்ளே போயிற்று. போனநேரம் சூல்கண்டது. வாலைச் சுழற்றி அடித்தது. வாயில் நுரைதள்ள மயங்கிப்படுத்தது. பின் எழுந்து தள்ளாடி நடந்து வந்தது.
மாட்டைப்பார்த்த மங்கையர் “நச்சுப்புல்லைத் தின்றி ருக்குமோ? நாகம் தீண்டியிருக்குமோ? சிங்கம், புலி எதையாவது கண்டு மிரண்ட இரு க்குமோ” என்று எண்ணி திருஷ்டி சுற்றினர். மஞ்சளைப் பூசி சந்தனம், குங்குமம் இட்டனர். கெட்டிக்காம நீரில் தவிடும் புண்ணாக்கும் கல ந்து வைத்தனர். ஒருத்தி பச்சைப்புல் அறுத்துக் கொண்டு வந்து போட்டாள். இந்திராணி யிடம் செய்தி சொல்ல ஓடினாள் ஒருத்தி.
செய்தி கேட்ட இந்திராணி பதறிப் போய் ஓடி வந்தாள். பசு இலக்கணம் தெரிந்த மருத்துவர் களையும், அனுபவமுள்ள இடையர் தலைவர்க ளையும் அழைத்து வரச் சொன்னாள்.
அவர்கள் வந்து மாட்டை பரிசோதித்து “இன்றைக்கோ நாளைக்கோ கன்று போடும் போலிருக்கிறதம்மா. ஆனால் பசு சூலானதே. தெரியவில்லையே” என்றார்கள். பஞ்சாட்சரம் ஜெபித்து தியானத்தில் ஆழ்ந்துவிட்டாள் இந்திராணி.
“பார்வதி, இந்திரன் தவத்திலிருக்கிறான். இந்திரன் செய்த பாபங்களுக்கு எந்தத் தவமும் ஈடாகாது. இந்திராணியும் தியானத் திலாழ்ந்து விட்டாள். நீ போய் ஆறுதல் சொல்லிவா” என்றார் வெள்ளியங்கிரி வாசன்.
ஈச்’வரி குறத்தி வடிவில் வந்தாள். இடுப்பிலே கூடையும், பொற்பூண் பூட்டிய பிரம்புமாக பாடிக்கொண்டு வந்தாள். பாடல் கேட்டு கண் விழித்தாள் அமராவதி. “குறத்தியை கூட்டிவா. குறிகேட்கலாம்” எனப்பணிப்பெண்ணை ஏவினாள். பார்வதி யான குறத்தி வந்தாள்.
“உட்காரம்மா, இந்தப்பசு இன்று காலை மேயப் போகும் வரை நன்றாக இருந்தது. அங்கே எதைத்தின்றதோ? எது கடித்தது கொட்டிலில் நிற்காமல் அலைபாய்கிறது. வாலை அடித்துக் கொள்கிறது. உட்காருவதும், எழுந்திருப்பது மாகா… அதோ பார் அந்த மாதிரித்தான் கண் சொருகிக்கொள்கிறது.."
"மாந்திரீகன் காற்று அடித்துவிட்டது என்று பூச போடுகிறான். ஜோதிடம் கிரகம் சரியில்லை என்று பரிகாரம் சொல்கிறான். மருத்துவன் கர்ப்பம்; இன்றோ நாளையோ கன்று போட்டு விடும் என்று மருந்து கொடுக்கிறான். ஆனால் வயிறு புடைத்து இருக்கிறது. மாடு இறந்து விடுமோ என்று பயமாக இருக்கிறது. பரமேஸ் வரனைத் தவிர வேறெவரும் எனக்குத்துணை இல்லை” என்று பலவாறு புலம்பினாள் இந்திராணி.
"பயப்படாதே அம்மா, நான் பார்த்து சொல்கிறே ன். பரமசிவன் தாயுமானவர் வந்து பிரசவம் பார்த்தவராயிற்றே! அவரை நம்பினவர்களை க் கைவிடமாட்டார்” என்றவள் பசுவைத் தலை முதல் கால் வரை தடவிக் கொடுத்து, சாணியா ல் பிள்ளையார் பிடித்து, தேன் தினைமாவைப் பிசைந்து நிவேதனம் செய்து விட்டு கண்ணை மூடித்தியானம் செய்துவிட்டு, “புத்திரன் வேணுமென்று தபஸிருந்ததால், பரமசிவன் அருள் பசு வயிற்றில் புத்திரன் பிறக்கப் போகி றான். கையிலே பொன்னேடும், எழுத்தாணி யும், கொண்டு பிறக்கப்போகிறான். பொற்கு ண்டலமும் பூணூலும் போட்டிருப்பான்.
சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரம், ஞாயிற் றுக்கிழமை, பௌர்ணமி அன்று குழந்தை பிற க்கவில்லையென்றால் நான் குறி சொல்லும் கோலை இனி எடுக்கமாட்டேன். கருவூலம் அவ ன் கையிலிருப் பதால் பதினான்கு லோகக் கணக்குக் குறிப்பையும் தாங்க மாட்டாத பசு தவிக்கிறது; தள்ளாடுகிறது. என்பேர் முத்தா லம்மா; நிறைநாழிமுத்து அளந்து கொடு; நான் உத்தரவு வாங்கிக் கிறேன்” என்று கேட்கவும், இந்திராணி ஈச்’வரியின் கூடையில் நிறைநா ழி முத்து அளந்து போட்டாள்.
குறத்தியாய் வந்த பார்வதி சென்றபிறகு மாட் டுப் பிரசவம் பார்ப்பவர்கள், மனிதப் பிரசவம் பார்ப்பவர்கள் இருவரையும் அழைத்தாள் இந்திராணி. பசுவை விஸ்தாரமான மண்டபத் துக்குக் கொண்டுவரச் செய்து நான்கு பக்கமு ம் மறைப்புக் கட்டினார்கள். கருப்பட்டி கலந்த கழுநீரில் பருத்திக்கொட்டை அரைத்து வைத்தாள்.
இந்த அதிசயத்தைப் பார்க்க தேவர்களும், ரிஷிகளும், அந்தணர்களும் ஆகாயத்தில் கூடியிருந்தனர். முகூர்த்தம் பார்த்து ஜாதகம் எழுத முனிசிரேஷ்டர்கள் காத்திருந்தனர். தான ம் வாங்க வென்று ஒரு கூட்டம் காத்திருந்தது.
குறத்தியாய் வந்த ஈஸ்வரி குறித்த நாழிகையி ல் குழந்தை பிறந்தது. மாட்டின் குளம்பு பட்டு விடக் கூடாதென்று தங்கத் தாம்பாளத்தில் குழந்தையை ஏந்தினர். எங்கும் வாத்திய கோஷங்கள். தவமிருக்கும் இந்திரனுக்குச் செய்தி சொல்லி அனுப்பினாள் இந்திராணி.
தொப்புள் கொடி அறுத்து, சோணை எடுத்து குழந்தையை நீராட்டி பட்டுத்துணியில் போட் டார்கள். இந்திரன் விரைந்து வந்து குழந்தை யைப் பார்த்து உச்சி முகர்ந்து, உள்ளங்கால் கண்ணில் வைத்து ஈச்’வரப்பிரசாதம் என அகமகிழ்ந்தான்.
எல்லாமே சித்திரையானதால் சித்திராபுத்திர னென்று பெயர் சூட்டினார்கள். ஏராளமான தான தர்மங்களும் செய்தனர். அன்னக் கொடி கட்டி, அன்னதானம் செய்தான் இந்திரன். நாடெல்லாம் மழை பெய்து செழித்தது. ‘பாலன் வாழ்க” என அனைவரும் குலவையிட்டனர்.
குழந்தைக்குப் பசிக்கும்போது பசுவின்மடி அருகே தாதியர் கொண்டு சென்று பால் குடிக்கச் செய்வர். அவ்வேளை பசு அன்போடு நக்கிக் கொடுக்கும். இந்திராணி அருகிலிரு ந்து கண்காணிப்பாள். ஒரு நாள் பாலன் பால் குடிக்கையில் பசு காலை உதற , குழந்தை முகத்தில் கால்பட்டு அலற. இந்திராணி கோப முற்று அருகிலிருந்த தடியால் பசுவை அடித்து விட்டாள்
குழந்தையை உள்ளே தூக்கி வந்து சமாதான ப்படுத்த முனைந்தனரே தவிர பசுவை எவரும் கவனிக்கவில்லை .
பசு கண்ணீர் பெருக “சிவபெருமானே! குழந்தை என்ற பாசம் எனக்கில்லையா? புல்லிலிருந்து வந்து என் முழங்காலில் ஊர்ந்த புழு குழந்தையைத் தாங்கியிருந்த இளம் பட்டு த் துணிக்கு தாவ இருந்தது. காலை உதறினே ன். எனக்கு வாயா இருக்கிறது. இதை எடுத்துச் சொல்ல சொன்னபடி இனி என்னை அழைத்து க் கொள்ளும்” என வேண்டியது.
அடுத்த நிமிடம் சப்தமில்லாமல் அங்கே தேவ அலோக விமானம் வந்திறங்க காமதேனு அதில் ஏறிக்கொண்டு தேவலோகம் போய் சேர்ந்தது. குழந்தை சமாதானமுற்று உறங்க, தொட்டிலிலிட்டு இந்திராணி தாலாட்டு பாடுகிறாள்.
இந்திரனார் செல்வங்கள் ஈடேற்ற வந்தவனே!
வானுலகம் ஆளவந்து பிறந்தவர்
மைந்தனாய் வந்து மகவாசை தீர்த்தவனே!
எங்கள் குறை தீர்த்த இளம்பிறையே கண்வளராய்
மண்ணின் கணக்கை மகிழ்ந்தெழுத வந்தவனோ!
விண்ணுலக கணக்கையும் விரைந்தெழுத வந்தாயோ!
முற்கணக்கும் பிற்கணக்கும் முன்னேட்டனுப்படியும்
துஷ்டர் கணக்கும், துரோகியர்கள் தன் கணக்கும்
சிஷ்டர் கணக்கும் தெரிந்ததெழுத வந்தவனே!
எங்கள் குலம் வாழ எழுந்தருளும் நாயகமே
தேவேந்திரன் தவத்தால் சிறிய உயிரும் செய்யும்
நன்மைகளும் தீமைகளும் நன்றறிய வந்தவனோ!
சீராய் சிவலோகம் சேருகின்ற புண்ணியர்
ஆராய்ந்து சொல்ல அறிவுடனே வந்தவனோ!
ஆவின் வயிற்றில் அவதரித்து பாலகனே
எங்கள் அரும் பொருளோ! இந்திரனார் கண்மணியோ!
இந்த நல்ல தொட்டிலிலே என்மகனே நித்திரை போ!
ஆதிசிவன் அருளால் அவதரித்த மாணிக்கமே!
ஏடெடுத்து வந்தவனே! எழுத்தாணி பிடித்தவனே!
சித்திரையின் புத்திரனே! சிறப்புடனே கண்வளராய்!
குழந்தை நன்றாகத்தூங்கி எழுந்து விளையா டிய பின் பசியால் அழுதபோது தான் மாட்டை தேடினார்கள். மாட்டைக்காணோம் என்ற செய் தி கேட்ட இந்திராணி ஊரெங்கும் தேடச்சொ ல்லி சலித்துப் போனான்.
குழந்தை கைவிடாமல் கதறுகின்றது. பிள்ளை பெற்ற மங்கையரெல்லாம் பால் கொடுக்க முன்வந்தார்கள். குழந்தை திமிறிக் கொண்டு அலறியது. பின்னர் வேறொரு பசுவின் பாலை வலுக்கட்டாயமாகப் புகட்டி சமாதானம் செய்தனர்.
‘மாயையாய் வந்த பசு பாலகனை ஈன்றுவிட்டு மாயமாய் போய்விட்டது’ என்று யாவரும் பேசி க் கொண்டார்கள். சித்திரா புத்திரன் முகம் பார்த்து சிரித்தான்; நீந்தினால் நெஞ்சு தேயு தென்று ஓடிப்போய் எடுப்பாள் இந்திராணி. தவழ்ந்தால், இந்திராணி பார்த்தால் முட்டிக்கா ல் தேயுமென்று கோபிப்பாள் என்று தாதியர் தாவிச் சென்று தூக்குவர், உட்கார்ந் தான், நின்றான்; தளர்நடை பயின்றான். ஓடி விளை யாடினான். இந்திரனும் சசிதேவியும் மகிழ்ந்த னர். குழந்தைக்கு ஐந்து வயதாயிற்று. உபாத் தியாரை அழைத்து வித்யாப்பியாஸம் செய்தனர்.
மணல் பிஞ்சுக்கையை உறுத்து மென்று தவிட்டைக் கொட்டச் செய்தாள் இந்திராணி. ‘ஹரி ஓம்…’ என்று ஆசிரியர் சொல்ல, சித்திரா புத்திரன் அவரை உற்றுப் பார்த்து, “நீங்கள், அருமையான மனைவி இருக்க, அவளை ஏமா ற்றிவிட்டு செட்டிமார் தெருவில் ஒரு பெண் ணை சேர்த்துக் கொண்டீர்களே. இது நியாய மா?” என கேட்க ஆசிரியர் பேந்தப்பேந்த விழித்துக் கொண்டு “அப்புறம் வருகிறேன். அவசரஜோலி யொன்றிருக் கிறது” என்று போய்விட்டார். விசாரித்ததில் அது நிஜம்தான் என்று தெரிய வந்தது.
அது முதல் சித்ராபுத்ரன் பக்கத்தில் அணுகவே எவரும் அஞ்சினர். வேலைக்காரி, வண்ணான், நாவிதன் எல்லோர் குட்டையும் அம்பலப்படுத் தினான் சித்ராபுத்திரன்.
பாடம் சொல்லிக் கொடுக்க எவரும் முன்வரவி ல்லை. பழைய ஆசிரியர் எங்கு போனார் என்றே தெரியவில்லை
“எது களவாடினாலும் எண்ணையைக் களவா டக் கூடாது” என்றான் ஒரு நாள். தூக்கோடு எண்ணையைக் கீழே விட்டு விட்டாள் தாதிப் பெண். அது முதல் மைந்தனுக்கு இந்திராணி யே எண்ணை தேய்த்து நீராட்டும் படி ஆயிற்று.
சித்ராபுத்திரன் வளர வளர தொல்லைகளும் வளர்ந்து உன்னோடு பெரிய தொல்லையாய் போயிற்று’ என பெற்றவர் கடிந்து கொண்டனர்
அம்மா, என் பணிகணக்கெழுதுவது. ஈஸ்வரன் எனக்களித்த வரப்பிரசாதம் ஞாபக சக்தி, வேகமாய், விட்டுப் போகாமல் கணக் கெழுதும் திறன். என்னை விட்டு விட்டால் நான் போய் கணக் கெழுதுவேன் என வேண்ட, பெற்றோர் பிரியா விடை கொடுத்தனர்.
கைலாயம் அடைந்தான் சித்ரகுப்தன். பார்வதி பரமேச்’ வர ரைப் பணிந்தான். காமதேனுவை அழைத்து “உன் பிள்ளையைப் பார்க்காயா?” என்று கேட்டார் ஈசன். காமதேனு சித்ராபுத்ர னை நக்கிக் கொடுத்தது. முகத்தை உரசியது.
ஈசன் “சித்ரபுத்ரா…. பூலோகத்தை சுற்றிவா… யமதர்மனோடு சேர்ந்து பாவங்களுக்கான நரகங்களை ஏற்படுத்து.." என்று கூறி ஆசி வழங்கினார்.
சித்ரகுப்தன் சென்றபிறகு தேவேந்திரன் வந் தான். “பிள்ளை வரம் கேட்டால் பிரசினையைப் பிள்ளையாகத் தந்து விட்டீர்களே” என்றான் இந்திரன்.
“நீ எத்தனை பேர்களுக்குப் பிரச்சினையாய் இருந்திருக் கிறாய்? ஒரு பிரச்சினைக்கே இப்படி துக்கப்படுகிறாயே… போ, போ” என்று கடிந்து கொண்டார்.
யமதருமனும், சித்ரபுத்ரனும் கலந்து பேசினர். மயனும், விசுவகர்மாவும் அவர்கள் சொன்ன படியெல்லாம் முள்ளாலான காடுகள், சரளைக் கற்களாலான படுக்கைகள், தரைகள்.
இரும்புச் செக்குகள் இரும்புத் தூண்கள் செப்பு தூண்கள் அடியிலே குழிவெட்டி, தணலிட்டு அதன் மேல் இரும்பு முக்காலிகள், விதவிதமா ன கிடுக்கிகள், தொட்டிகள் கொறடாக்கள், சகதிக்குழிகள், மேலே நூற்பாலங்கள், அட்டை க் குழிகள், கிருமிக்குழிகள் எனப்பலவிதமான நரகங்களை அமைத்துக் கொடுத்தனர்.
“பெற்றவர்களைப் பேணாத பாவியர்க்கு அட்டைக்குழி: பொய்வழக்கு ஜோடித்தவர்களு க்கு கொறடாவால் நாக்கை பிடுங்க வேண்டும் பணத்துக்காக பொய் சாட்சி சொல்வோரை அரணைக் குழியில் தள்ள வேண்டும். கன்றுக் குப் பால்விடாமல் ஓட்டக் கறப்பவர்களை இந்த இரும்பு முக்காலியில் கட்டிப்போட வேண்டும். அனல் தகிக்கும் போதுதான் பசுவின் தாபமும், கன்றின் தவிப்பும் புரியும்.
மனைவிக்கு, கணவனுக்கு துரோகம் செய்பவ ரை இந்தப் பழுக்கக் காய்ச்சிய இரும்பு, செப்பு த் தூண்களில் கட்டிப் போட வேண்டும். தவறா ன எடை போட்டு சாமான் விற்றவரை நூல் பாலம் கடந்து வரும்போது அறுத்து சகதி குழி க்குள் தள்ள வேண்டும். ஊரார் உடமையை மோசம் செய்தவர்களை முள்ளுவனத்தில் நடக்கவிட்டு ஆணிப்படுக் கையில் கட்டிப்போட வேண்டும்.
கொலை செய்வோரை கண் களைப் பிடுங்கி அனற்குழியில் தள்ள வேண்டும். கொள்ளை யடிப்போரை மாறுகால், மாறுகை வாங்கி சரளைச்சாலையில் தள்ளிவிட வேண்டும். பிறரைப் பற்றி கோள் சொல்வோரின் காதில் ஈயத்தைக்காய்ச்சி ஊற்ற வேண்டும். தவறான வதந்தி பரப்புவோரை பாம்புக் குழியில் தள்ள வேண்டும். வேண்டிய செல்வத்தை ஏழைப்படு பவர்க்கு உதவாமல் பூட்டி வைப் போரை, உடலி லே ஊசிகளால் புண்ணாக்கி உப்புக் கரைத்த குளத்தில் தள்ள வேண்டும்.
ஆட்சியில் இருப்பவர்கள் செய்யும் தவறுகளு க்கு கொதிக்கும் சுண்ணாம்புக் காளவாயில் தள்ளப் படவேண்டும். இப்படி பலவாறாக பாவ ங்களுக்கு தண்டனை களையும், புண்ணியங் களுக்குத் தக்கபடி சுவர்க்க போகங்க ளையும் குறித்துக் கொண்டார் சித்திராபுத்திரன்.
மார்க்கண்டேயருக்காக பாசக்கயிறு வீச, அது லிங்கத்தையும் பற்றி இழுக்க சிவனால் உதைபட்டு பாதாளம் போய் வீழ்ந்தான் யமன். மரணம் ஏற்படாததால் பாரம் தாங்கமாட்டாமல் பூமா தேவி படைப்புத் தொழிலை நிறுத்தும்படி, பிரம்மனிடம் வேண்ட, பிரும்மா தேவர்களின் மகா விஷ்ணுவிடம் சென்று பிரார்த்திக்க, விஷ்ணு, எல்லோருடனும் கைலாயம் சென்று சிவபெருமானிடம் முறையிட்டனர். சிவன் யம னை உயிர்பித்து, சித்ரகுப்தனின் “கொடுத்த ஆயுள் வளரும்படி கணக்கை மாற்றிக்கொள்” என்றார்.
அன்னதானம் செய்தவர்கள், ஆலயம் எழுப்பியவர். அதற்கு காரணமாக இருந்தவர், கருணை மிக்கவர், கன்றுக்குப் பால் விட்டோர், இறைத்தொண்டு செய்வோர், நல்லெண்ணம், நன்னடத்தை உடையோர், மாதா பிதாவை மகிழ்ச்சியோடு காப்பாற்றுபவர்கள், ஆலயத் தொண்டு அனுதினமும் செய்பவர்கள், பத்தி னிதனை விட்டு பரத்தை இல்லா நாடாதார், விபூதி, ருத்ராட்சம், துளசி மாலை அணிந்தவ ர்கள், பிறர் பொருளைக் கண்டு பாம்பென்று பயந்து ஒதுங்குவோர், கடமை முடிப்பவன் பிதுர்க்கள் காட்டிய பாதையைக் கடைபிடித்து அனுசரிக்கும் மானிடர்கள் இவர்களின் ஆயுளைக் கூட்டிக் கொள்ளுங்கள்.
அவர்கள் பூவுலகக் கடமை முடிந்தபிறகு தேவ லோகத்திற்கு அழைத்து வாருங்கள் என்று கூறி அனைவருக்கும் ஆசி றினார்” யமன் உமா மகேச்’வரரை, லஷ்மி நாராயணரை, ஸ்ரீ வித்யா ரூபிணியான ஸரஸ்வதியுடன் கூடிய பிரம்மனையும் வணங்கி பணிவுடன், சித்திர குப்தன் யமலோகம் வந்து தன் கடமையைச் சீராக செய்ய ஆரம்பித்தான்.
வடக்கு வாசலில் தண்ணீர் பந்தல், தாகமென் று வந்தவர்க்கு தண்ணீர் கொடுத்தவர்க்கு, குளம் வெட்டியவர்களுக்கு, பூமியில் (மண்) மல, ஜலம், வாய் கொப்பளித்தல் போன்ற அசுத்தங்கள் செய்யாதவர்களுக்கு நதிகளை, நீர்நிலைகளைப் புனிதமாய் கருதியவர்களு க்கு ஆலயங்களில் பக்தியுடன் அபிஷேக நீர் கொணர்ந்தவருக்கு அந்த வாசல் வழியே வந் து தண்ணீர் சாப்பிட்டு இளைப்பாறிச் செல்ல அனுமதியுண்டு. அதற்கு கைலாச வாயில் எனப் பெயர்.
ஏகாதசி விரதம் இருந்தவர், திருமாலை தினம் துதித்து வணங்கியவர், கோவில்களைப் பெரு க்கி, மெழுகி, நீர்தெளித்து கோலமிட்டோர், கங்கை போன்ற புண்ணிய நதியில் நீராடுவர் துளசியும், பூஞ்செடிகளும் வைத்து தினமும் பூக்கட்டிச் சாற்றியவர்களுக்கு கிழக்கு வாசல். அதற்கு வைகுண்ட வாசல் என்று பெயர். தீபங் களும், வாசனைகளும், கலை அழகுகளும் கண்ணையும், மனதையும் கவரச் செய்யும்.
மேற்கு வாசலும், தெற்கு வாசலும் நரகத்துக்கு ச் செல்பவை. மாளிகையின் நடுவில் சித்திரா புத்திரன் அமர்ந்து பட்டோலை வாசித்து ஆத்மாக்களை அனுப்பிக் கொண்டிருக்கிறார்.
அதலம், விதலம், ஸுதலம், தலாதலம், ரஸாதலம், மஹா தலம், பாதாள லோகம் என்ற லோகங்களுக்கு ஆத்மாக்கள் செய்த புண்ணி யங்களின் தரத்திற்கேற்ப அனுப்புகிறார்.
தாமிஸ்ரம், ரௌரவம், மகாரௌரவம், கும்பீ பாகம், காலசூஸ் திரம், அசிபத்திரம், பன்றி முகம், அந்தகூபம், கிருமிபோஜனம், அக்கினி குண்டம், வஜ்ர கண்டகம், சான்மலி, வைதர ணி, பூயோ தம், பிராண ரோதம், விசஸனம், லாலாபக்ஷம், சாரமேயாதனம், அவீசி, பரிபா தனம், க்ஷாரகர்த்தமம். ரக்ஷோக்னம், சூலப் ரோதம், தந்தசூகம், வடாரோதம், பர்யா வர்த்த னகம், சூசி முகம் என்ற பற்பல நரகங்களுக்கு ஆத்மாக்கள் செய்த பாபக்கணக்கைப் படித்து மேற்கு, தெற்கு வாசல் வழியாக யமகிங்கர ர்களால் கொண்டு செல்லப்படுகின்றனர்.
“முதலில் பாப பலனை அனுபவிக்கிறாயா? புண்ணிய பலனை அனுபவிக்கிறேன்” என்ற கேள்வி ஏறத்தாழ பாபபுண்ணியங்கள் சமமாக இருக்கும் ஆத்மாக்களிடம் கேட்டு அவர்கள் விருப்பப்படி அழைத்து செல்லப்படுகிறார்கள்.
பாவம் சிறிதளவு செய்தவர்களுக்கு பகவானா ல் கணக்கு பரிசீலிக்கப்பட்டு ‘மறுபிறவியில் அனுபவித்துக் கொள்ளலாம் என்ற சலுகை தரப்படுகிறது. புண்ணியம் கொஞ்சமே செய்தி ருப்பவர்களுக்கும் அதே போன்று தான் பகவான் கட்டளையிடுகிறார்.
பாவ புண்ணிய பலன்களை அனுபவித்தபின் உயிர்களுக்கு செய்த நன்மை தீமைகளுககொ ப்ப மறுபிறவி தரப்படுகிறது.
இந்தப் புண்ணிய சித்திரா பௌர்ணமி தினத் தில் சித்திரா புத்திர பூஜை செய்த பிறகு இக்க தையை பயபக்தியுடனும் சிரத்தையுடனும் படிப்பவர்களுக்கு சித்ரா புத்திரன் கருணை காட்டுகிறார். எப்படி? காய் நறுக்கும்போது கொல்லப்படும் புழுக்கள், காலடியில் சாகும் எறும்பு முதலான ஜீவராசிகள், வாழை இலை யை மரத்தினின்றே நடுவில் நறுக்குதல் இப்படிப்பட்ட சின்னச் சின்னத் தவறுகளை கணக்குகளில் பதிப்பிப்பதில்லை.
அமராவதி என்னும் புண்ணியவதி எத்தனை யோ தான தருமங்கள் செய்திருப்பினும் சித்தி ராபுத்திர நோன்பு நோற்க வில்லை . சித்ரா புத்திரனிடம் வரம் வாங்கி பூலோகம் வந்து சித்திரபுத்திர விரதம் இருந்து, பூஜை முடித்து தானதர்மங்கள் செய்து மீண்டும் சுவர்க்க லோகம் அடைந்தாள்.
சொர்க்கமா? நரகமா?
படிப்பு வரவில்லை; முரட்டுத்தனமும், கோபமு ம் அதிகம் எல்லோரிடமும் சண்டை தாய் கவலைப்பட்டாள்.
" சித்ர குப்தா இவன் கணக்கை எழுதி முடித்து புது மலைக்கட்டுப் போடுவாயோ, இல்லை … இங்கேயே நரகம் ஆரம்பித்து விடுமோ” என்று தினமும் புலம்புவாள்.
மகன் காரணம் கேட்டால்
“சித்ர குப்தாய நம:” என்று தினம் சொல்லிக் கொண்டு வா. சித்ர குப்தன் உனக்கு நல்லவழி காண்பிப்பார்” என்றாள். தினமும் அதேபோல் சொல்லி வந்தான்.
சிறுவன் பெரியவனானான்.
அவன் வயதில் கெட்ட பழக்கங்களும் வளர்ந்த ன. ஆனால் ‘சித்ர குப்தாய நம:” என்று சொல் லுவதை நிறுத்தவில்லை! தாயின் போதனை ஆயிற்றே!
சித்ரகுப்தன் யோசித்தான். உலகில் சிவன், விஷ்ணு, பிரம்மன், இந்திரன், சக்தி, முருகன், விநாயகர் இப்படி ஏராளமான தெய்வங்கள் இருக்க, விடாமல் நம் பெயரைத் தினமும் உச்சரிக்கிறானே இவன்! வருஷத்திற்கு 365 வீதம் பத்து வயதிலிருந்து சொல்கிறான். தற் போது இவனுக்கு 52 வயது கிறது. இதுவரை 15,000 நாமாவளிக்கு மேல் சொல்லிவிட்டான்.
இவனது ஏட்டைப் புரட்டுவோம்” என்று ஏட்டுச் சுவடியைப் படித்தவர் திடுக்கிட்டார்.
அவனுக்கு ஒரு வாரத்தில் மரணம் என்றிருந்த து அவனது கனவில் போய், “அப்பனே, நீ செய்யாத பாவம் இல்லை … உன் ஆயுள் முடிய ஏழு நாட்களே உள்ளன. தினமும் என் நாமா வை மட்டுமே உச்சரித்து வந்த உன்னை நரக சிட்சை அனுபவிக்க செய்ய எனக்கு வேதனை யாக இருக்கிறது.
உன் “மூதாதையர் உனக்களித்த நிலத்தில் ஒரு குளம் வெட்டு. ஆழமாக நீர் வரும்படியாக இரவும், பகலும் வேலை செய்தாவது குளத்தை வெட்டி மூடி ஒரு மாடு நீர் அருந்தினால் 3¾ நாழிகை வர்க்கவாஸம் உண்டு. பசுவின் உடம்பில் முப்பத்து முக்கோடி தேவதைகளும் வாஸம் செய்கின்றனர். நிறைய மாடுகள் தண்ணீர் குடித்தால் உனக்கு சொர்க்கம் நிரந்தரமாக கிடைக்கும்”
“முதலில் சொர்க்க வாஸம் அனுபவிக்கிறாயா? நரக வாஸம் அனுபவிக் கிறாயா?” என்று யமன் கேட்பார். “முதலில் சொர்க்கம் என்று சொல்லி விடு என்றார்.
முரடன் எழுந்தான். சித்ரகுப்தர் கனவில் கூறியபடி ஏராளமான ஆட்களை வைத்து நிலத்தின் நடுவில் குளம் வெட்டினேன். இரவு பகல் ஏராளமான ஆட்கள் வேலை செய்தும் குளத்தில் பொட்டு தண்ணீர் வரவில்லை… எல்லாம் பாபவினை! நாட்கள் ஆறு முடிந்து விட்டதே! ஏழாவது நாள். ஓர் ஓரத்தில் மிக மெ ல்லிய ஊற்று சுரந்தது. முரடன் மகிழ்ந்தான் மாடு வர வேண்டுமே….? சித்ரகுப்தன் மாடாக வந்தார். குளக்கரையில் நின்று ம்மா’ என்று குரல் கொடுத்தார். இந்த ‘ம்மா’வுக்கு இங்கே நீர் இருக்கிறது வாருங்கள்” என்று பொருள். மாடுகள் ஓடி வந்து ஒரு மாடு தண்ணீர் குடித்தது
அதே சமயம் ‘நெஞ்சுவலி” என்று சாய்ந்த குள ம் வெட்டியின் உயிரும் பிரிந்தது. யம பட்டணம் யம தர்மன் முன் குளம் வெட்டி நிறுத்தப் பட்டிருக்கிறான்.
“சித்ரகுப்தா இந்த ஆத்மாவின் பாவ புண்ணிய கணக்கைச் சொல்லு” என்றார் யமதர்மன்
சித்ரகுப்தன் ஏடுகளைப் புரட்டிவிட்டு “இவன் பெரும் துராத்மா. ஒரே ஒரு புண்ணிய காரியம் மட்டும் செய்திருக்கிறான். ஜீவன் பிரியுமுன் ஒரு குளம் வெட்டி இருக்கிறான் ஒரே ஒரு மாடு அதில் தண்ணீர் குடித்திருக்கிறது” என்று உதட்டைப் பிதுக்கினான் சித்ரகுப்தன்”.
“3¾ நாழிகை உனக்கு ஸ்வர்க்கவாஸம் உண்டு முதலில் சொர்க்கவாஸம் அனுபவிக்கிறாயா? நரக வாசமா?” என்று கேட்டார் யமன்.
“முதலில் சொர்க்க வாஸம் அனுபவிக்கிறேன்” என்றான் முரடன். உடனே அவன் சொர்க்கத்தி ற்கனுப்பப்பட்டான். தினமும் அங்கே பூலோக த்தில் தண்ணீர் ஊற ஊற மாடுகள் வந்து நீர் குடிக்கலாயின. முரடனின் புண்ணியக் கணக் கும் ஏறிக்கொண்டே இருந்தது. சொர்க்கத்தி லேயே சுகமாக இருக்கலானான்.
எல்லாம் எதனால்? சித்ரகுப்தரின் அருளினால் அவர் மட்டும் கனவில் வந்து உபாயம் சொல்லி ததந்திராவிட்டால் முரடன் எத்தகைய கொடூர மான நரக வேதனை அனுபவித் திருப்பான்! சித்திரகுப்தன் தான் வந்ததின் காரணம் அவரையே நம்பி நாமம் உரு விட்டதால் தானே.
எவரும் முறைப்படி ஒரு கடவுளையாவது பூர்ணமாக நம்பி வழிபட்டு வந்தால் சித்ர குப்தர் அருளும் கட்டாயம் கிடைக்கும்.
அங்கு சித்ரகுப்தனுக்கு சித்ரா பௌர்ணமி அன்று காலையில் மஹா அபிஷேகமும், மாலையில் திருக்கல்யாணமும் நடை பெறுகிறது. சித்ரகுப்தன் மனைவி பெயர் ஸ்ரீகாணாம்பிணி தேவி.
சித்ர குப்தனின் அதிதேவதை ப்ரம்மா. சித்ரகுப்தன் பிர தான தேவதை கேது சித்ரகுப்தனை பூஜிப்ப தால் கேதுவின் உபாதைகளிலிருந்தும் விடுபடலாம்.
நாமும் முறைப்படி சித்ரபுத்ர விரதம் இருந்தால் அவரின் எல்லையில்லா கருணைக்குப் பாத்திரமாவது. நிச்சயம்..ஓம் சித்ரபுத்தாய நம:🙏🌹
Comments
Post a Comment