சமுதாய சமத்துவப் போராளியாக வீர சாவர்க்கர்" என்ற கட்டுரையிலிருந்து.
"இந்தியாவிலேயே தாழ்த்தப் பட்ட சாதி மக்கள் மற்றவர்களுடன் சமமாக உட்கார்ந்து உணவருந்தச் செய்த முதல் உணவகத்தை 1931ல் சாவர்க்கர் தொடங்கினார். அதில் பரிமாறுபவர்களாக மஹார் சமூகத்தினர் இருந்தனர். தன்னை பார்க்க வருபவர்கள் யாராயிருந்தாலும் முதலில் அங்கு சென்று தேநீர் அருந்தி விட்டு வரவேண்டும் என்பதை ஒரு நிபந்தனையாக அவர் விதித்திருந்தார்...
"நான் இறக்கும் போது, எனது சடலத்தை தேண்ட்களும், டோம்களும் (தாழ்த்தப் பட்ட சமூகத்தினர்), பிராமணர்களும் பனியாக்களும் சேர்ந்து சுமந்து வந்து, ஒன்றாக இணைந்து எரியூட்ட வேண்டும். அப்போது தான் என் ஆத்மா சாந்தியடையும்" என்று உயில் எழுதியவர் வீர சாவர்க்கர்..
கிறிஸ்தவ மதத்திற்கு மாறியிருந்த தாழ்த்தப் பட்ட டாக்ரா (Dhakra) சமூகத்து மக்களை ஆரிய சமாஜ “சுத்தி” சடங்கு வழியாக சாவர்க்கர் தாய்மதம் திரும்பச் செய்தார். அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த பெண்களை மற்ற இந்துக் குடும்பங்கள் மணமுடிக்க வேண்டும் என்பதை முனைந்து செயல்படுத்தினார். இத்தகைய ஒரு பெண்ணின் திருமணத்தில் தானே அவளது தந்தையாக இருந்து கன்யாதானம் செய்து வைத்தார்...
மாயி யமுனாபாய் (சாவர்க்கரின் மனைவி) அனைத்து சாதி இந்துப் பெண்களையும் அழைத்து மஞ்சள் குங்குமம் தாம்பூலம் வழங்கும் நிகழ்ச்சிகளை நடத்தினார். தாழ்த்தப் பட்ட சாதி மகளிருக்கு மற்ற சாதிப் பெண்கள் குங்குமம் வைப்பது, அதே போல அவர்களிடம் குங்குமம் வைத்துக் கொள்வது என்ற இரண்டு விஷயங்களையும் அந்த நிகழ்ச்சிகளில் நடைமுறைப் படுத்தினார்....
"நமது மதத்தைச் சார்ந்த 7 கோடி மக்களை மிருகங்களுக்கும் கீழாக நடத்துவது மானுடத்தின் மீதான களங்கம் மட்டுமல்ல. நமது ஆத்மாவின் மீது படிந்துள்ள களங்கமாகும். அதனால் தான் தீண்டாமையும் சாதியமும் வேரோடு அழிக்கப் படவேண்டும் என நான் நம்புகிறேன். ஆம், இந்து சமுதாயத்தின் நலனுக்காக அது ஒழிய வேண்டும் தான். ஆனால், இந்தப் பழக்கத்தினால் இந்து சமுதாயத்திற்கு ஏதேனும் கொஞ்சம் பலன் உண்டு என்று இருந்தாலும் கூட, இதே தீவிரத்துடன் அதை நான் எதிர்த்திருப்பேன். ஏனென்றால் மற்றொரு மனிதனை அவனது பிறப்பைக் காரணம் காட்டி அவமதிப்பது என்பது மனித குலத்துக்கே எதிரான குற்றம்.. அந்தக் குற்றத்தை ஒழிப்பதே தர்மத்திக்கும், நீதிக்கும், மனிதப் பண்புக்கும் உகந்த செயலாகும்" என்று 1927ல் எழுதுகிறார்..
- "சமுதாய சமத்துவப் போராளியாக வீர சாவர்க்கர்" என்ற கட்டுரையிலிருந்து.
Comments
Post a Comment