இந்தியாவில் மத சுதந்திரம் இல்லை என்று சொல்லும்.அமெரிக்காவில் சில மாநிலங்களில், அந்த நாட்டை உடல் உழைப்பால் உயர்த்திய கருப்பினத்தவருக்கு இன்னும் சரியான மனித உரிமையே இல்லை என்பது எத்தனை பேருக்கு தெரியும்?
📌🎯🔥 இந்தியாவில் மத சுதந்திரம் இல்லை என்று சொல்லும்.அமெரிக்காவில் சில மாநிலங்களில், அந்த நாட்டை உடல் உழைப்பால் உயர்த்திய கருப்பினத்தவருக்கு இன்னும் சரியான மனித உரிமையே இல்லை என்பது எத்தனை பேருக்கு தெரியும்?
சமீபத்தில் சில தரவுகளையும், வெள்ளை இனத்தவர்களின் மன நிலையும் பார்த்தபோது, வருங்காலம் இந்தியர்களுக்கு அமெரிக்கா பாதுகாப்பானதா என்ற கேள்வி எழுகிறது.
முன்பெல்லாம் இந்தியர்கள் தங்கள் வேலை வாய்ப்புகளை திருடிக்கொண்டார்கள் என்று பலர் கோபப்பட்டார்கள், இன்றும் நினைக்கிறார்கள். ஆனால் இந்தியா ஒரு ஏழை நாடு, அதனால் நம்மை எதுவும் செய்ய முடியாத பிச்சைக்காரரகள் நிறைந்த நாடு என்று பார்த்ததில் அவர்களின் கோபத்துக்கு அது ஆறுதல் தந்தது.
உக்ரைன் போருக்கு பின்னால், அமெரிக்காவும், ஐரோப்பியாவும் மிகப்பெரிய பிரச்சினைகளை சந்திக்கிறது, அதற்கு காரணம் ரஷ்யா என்பதை விட இந்தியா என்ற எண்ணம் அவர்கள் அடிமனதில் ஆழமாக் பதிந்துள்ளதை அறிய முடிந்தது. அதை தாண்டி இந்தியா ஒரு வலிமையான நாடால வளர்வதை அவர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை.
வரும் காலத்தில் அமெரிக்காவின் பொருளாதார நிலை மிக மோசமான வீழ்ச்சியை சந்திக்கும். முன்பெல்லாம் உலகத்தில் ஏதாவது ஒரு மூளையில் நடக்கும் போர் என்பது அமெரிக்காவின் பொருளாதாரத்தை உயர்த்தும் என்பதும், அதற்கு பின்னால் ஆய்த விற்பபனை மட்டுமல்ல டாலர் இருந்தது என்பதை அறிவோம். அது இன்று மதிப்பிழக்கும் சூழலில், கடனில் மூழ்கிவிட்ட அமெரிக்காவின் எதிர்காலம் மிகப்பெரிய கேள்விக்குறியே.
அது ஏற்கனவே வேலை இழப்புகளையும், கடுமையான விலைவாசி உயர்வையும், கிரிடிட் என்பதே வாழ்க்கையின் அடிப்படையாக கொண்ட அவர்களுக்கு கடுமையான வட்டி உயர்வையும், பணப்புழக்கத்தையும தடுத்து, வங்கிகள் லிகுடிட்டி இல்லாமல் எப்போது வேண்டுமானாலும் மூடப்படும் நிலையில் உள்ள 190 வங்கிகள் எனபது உறங்கிக்கொண்டிருக்கும்ம் எரிமைலைகள்.
இவை நடக்கும்போது அவர்களின் கோபமும் 😡 அடிமனதில் இருக்கும் வெறியும் Psychological disorder கொடுக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.
அப்போது இதெற்கெல்லாம் காரணம் இந்தியா என்பதும், அதன் வளர்ச்சியை சகித்துக்கொள்ள முடியாத சூழலில், அந்த கோபம் அங்கே இருக்கும் நம் சகோதரர்கள் மீது திரும்ப வாய்ப்புகள் உண்டு.
அதற்கு இன்னொரு காரணம், அமெரிக்கர்கள் வறுமையில் வாடும்போது, இந்தியர்கள் அங்கே ஆடம்பரமாக வாழ்வதும், கொண்டாட்டங்களில் ஈடுபடுவதையும் அவர்கள் விரும்பவில்லை என்பதை விட வெறுக்கிறார்கள்.
எனவே ஒரு நாடே வறுமையில் செல்லுமெயானால், தேவையில்லல்லாத நமது கண்ணை உறுத்தும் நமது ஆடம்பர வாழ்க்கையும், கொண்டாட்டங்களை தவிருங்கள். அது இந்த மோசமான காலங்களில் நமது தேவையற்ற செலவுகளை குறைப்பது மட்டுமல்ல, நம்மோடு வாழ்பவர்களை எரிச்சல் படுத்தும், கோபப்படுத்தும்.
ஆகையால் நம்மால் முடிந்தால் அவர்களுக்கு உதவுவோம், அல்லது அவர்களோடு நாமும் சம நிலையில் இருந்து பிரச்சினைகளை தவிர்ப்போம்.
அமெரிக்கா ஒரு மிகப்பெரிய வல்லரசு, இயறகை வளம் உற்பட பல வசதிகள் இருந்தாலும், அசெட்டுகள் இருந்தாலும், லிக்விடிட்டி இல்லாத வங்கியை போன்றதுதான் அமெரிக்கா.
இது நடக்காமல் போனால் நானும் சந்தோஷப்படுவேன், ஏனெனில் அதன் மூலம் நேரடியாக பாதிக்கப்படுவதில் நானும் ஒருவன் என்பதை நன்கு உணர்ந்தவன். ஆனால் இருக்கும் உலக நிலவரம் அதற்கு சாதகமானதாக இல்லை என்பதே எதார்த்தம்.
🐶
#Indhea
Comments
Post a Comment