கொத்தமல்லி இலைச்சாற்றின் மகத்துவம்....👍 *அரவக்குறிச்சி பெரியாஸ்பத்திரி வார்டில் ஓர் கிழிந்த துணிபோல படுத்திருந்தார் தாத்தா...* *உழைத்து மெலிந்த தேகம். 84 வது வயதில் கல்லீரல் சுத்தமாய் பழுதாகி போய் மரணத்தின் நாட்களை மருத்துவமனையில் எண்ணி கொண்டிருந்தார்...!...

 

*👌🏾... கொத்தமல்லி இலைச்சாற்றின் மகத்துவம்....👍


*அரவக்குறிச்சி பெரியாஸ்பத்திரி வார்டில் ஓர் கிழிந்த துணிபோல படுத்திருந்தார்  தாத்தா...*


*உழைத்து மெலிந்த தேகம். 84 வது வயதில் கல்லீரல் சுத்தமாய் பழுதாகி போய் மரணத்தின் நாட்களை மருத்துவமனையில் எண்ணி கொண்டிருந்தார்...!...*


*ரவுண்ட்ஸ் வந்த சீஃப் டாக்டர் வீரமணி தாத்தாவின் கைநாடியை பிடித்து பார்த்துவிட்டு மேவாயை தடவியபடியே.... இன்னும் இரண்டு நாள்தான் தாங்குவார் சொந்த காரங்களுக்கு எல்லாம் சொல்லி அனுப்பிடுங்க....*


*வீட்டுக்கு எடுத்துட்டு போய்டுங்க என்று கூறியபடியே அவர் பிள்ளைகளின் பெருங்குரலெடுத்த அழுகையை காதில் வாங்கிக்கொள்ளாமல் அடுத்த நோயாளியை பார்க்க நகர்ந்தார்...!...*


*ஆம்புலன்ஸில் வீட்டுக்கு கொண்டுவரப்பட்டார் வீரமணி தாத்தா. அவர் மூச்சு எப்போது வேண்டுமானாலும் நின்று விடுவேன் என்று போக்கு காட்டியது...*


*கட்டிலில் மூச்சுவிட சிரமப்பட்டபடி கண்மூடி படுத்திருந்தார் தாத்தா. தம் தங்கை முறையான தாத்தாவின் மகளிடம் விசாரித்தார் அக்கா....*


*"சாப்பாடு இறங்குதா..?"...*


*"அப்பப்போ கூழாக ஏதாவது கொடுக்கிறோம். கொஞ்சமா உள்ளே போகுது"....*


*"நான் ஒன்னு சொன்னா கேட்பியா தங்கச்சி"...*


*"சொல்லுக்கா... நான் என்ன செய்யனும்...?"...*


*"எப்படியும் இரண்டு நாளில் இறந்திடுவார்னு டாக்கடர் சொல்லிட்டாரு இல்ல. கடைசியா ஒரு முயற்சி செய்து பார்ப்போம்.....*


*இன்னில இருந்து இந்த இரண்டு நாளும் வெறும் மல்லிச்சாறு மட்டுமே கொடுப்போம். அது கழிவுகளை வெளியேத்தி புது ரத்தத்தை ஊற வைக்கும். சித்தப்பா எழுந்து உட்காருவார்னு எனக்கு நம்பிக்கை இருக்கு..!" சரோஜா அக்காவின் கண்களில் அத்தனை உறுதி....*


*அவர்கள் குடும்பத்தில் சரோஜா அக்கா மீது மிகுந்த மரியாதை உண்டு. குடும்ப உறுப்பினர்கள் ஒன்றுகூடி ஆலோசித்தனர். அந்த குடும்பத்தின் ஆணிவேர் வீரமணி தாத்தா. அவர் இன்னும் சிலகாலம் உயிரோடு இருந்தால் அதுபோல வேறு சந்தோசம் உண்டா..?..*

👇🏿

*அக்காவின் ஆலோசனையை ஏற்றுக்கொண்டனர். வீட்டில் மல்லிச்சாறு தயாரானது. ஓர் எதிர்பார்ப்போடும், பரபரப்போடும் அங்கும் இங்கும் ஓடினர். தாத்தாவை மடியில் கிடத்தி மல்லிச்சாறை அவர் வாயில் சிறிது சிறிதாக புகட்டினர்....*

👆🏿

*இரண்டுநாள் முழுக்க மல்லிச்சாறு மட்டுமே..!.. இடையிடையே கொஞ்சமாய் பழச்சாறும்....*


*டாக்டர் விதித்த கெடு இன்றோடு முடிகிறது. நாளை விடியலில் தாத்தா உயிரோடு இருப்பாரா என்கிற பதைபதைப்பில் உறவினர்கள் எல்லாம் தாத்தாவையே சுற்றி வந்தனர்...*


*இரவு உறங்கி போனது...!...*


*மூன்றாம் நாள் விடியலில் நெஞ்சு திக்... திக்..... என அடித்து கொள்ள சொந்தங்கள் தாத்தாவை நெருங்கி சென்றனர்....*


*கண்மூடி படுத்திருந்தவர்.....  ஓர் இருமலோடு விழித்து கொண்டார்....*


*ஓடு... மல்லிஜுஸ் எடுத்துட்டு வாங்க.. ஐயாவுக்கு கொடுப்போம். எங்கிருந்தோ குரல் ஒலித்தது....,*


*மீண்டும் ஓர் இருமல் இருமியபடி தாத்தா எழுந்து உட்கார்ந்தார்....*


*"ஏன் புள்ள என்ன பார்த்து அழுதுகிட்டு நிக்கித.... எதுக்கு இம்புட்டுபேரு வந்திருக்காங்க" தன் மனைவியை கேள்வியோடு பார்த்தார் வீரமணி தாத்தா.....*


*இந்த எண்பத்தாறு வயதிலும் ஆரோக்கியமாய் இருக்கிறார். நாம் பார்க்கசென்ற நேரம் மனிதர் கட்டிலில் ஒய்யாரமாய் படுத்திருந்தார். எவர் துணையுமின்றி எழுந்து நடமாடுகிறார்.....*


*தொடர்ந்து..." இந்த மல்லிசாறை எல்லா ஏழை,பாளைகளும் குடிக்கோணும். டாக்டர் கிட்டபோயி ஆயிரகணக்குல செலவு பண்ணியும் குணமாகத என் நோய் இந்தமல்லிசாறால குணமாயிட்டுதே. எனக்கு இருந்த சுகர்நோயும் இப்ப இல்ல. மல்லிச்சாறு பத்தி எல்லா மக்களுக்கும் எடுத்து சொல்லுங்கள்....*


*அமிர்த பானம் கொத்தமல்லி இலைச்சாறு தயாரிப்பது எப்படி?:-....*


*நாட்டு கொத்துமல்லி இலை - கால் கட்டு,...*


*தேங்காய் - 1 ,...*


*நாட்டு சர்க்கரை - தேவையான அளவு ...*


*சுத்தம் செய்த கொத்துமல்லி இலையுடன் தேங்காய் சேர்த்து அரைத்து வடிகட்டவும்....*


*இதன் கூட தேவையான அளவு தண்ணீர்,நாட்டு சர்க்கரை கலந்து பருகலாம்....*


*இந்த சாற்றினை கண்டிப்பாக அடுப்பில் வைக்க கூடாது....*


*(1). வெறும் கொத்துமல்லி இலைச்சாறுடன் எலுமிச்சை சாறு, உப்பும், மிளகு தூளும் சேர்த்து அருந்தலாம்....*


*(2). கொத்துமல்லி இலைச்சாறுடன், பசும்மோர், உப்பும் கலந்தும் அருந்தலாம்....*


*(3). கொத்துமல்லி இலைச்சாறு அருந்தும் நாள் அன்று பசிக்கும் போது மட்டுமே சாப்பிட வேண்டும்....*


*இதை தொடர்ந்து பருகுவதால் காமாலை, கேன்சர் போன்ற மிகக் கொடிய நோய்கள் அனைத்தும் குணமாகும்....*


*உடலில் உள்ள கழிவுகள் அனைத்தையும் வெளியேற்றும்....*


*வயிறு சம்பந்தபட்ட அனைத்து பிரச்சினைகளையும் குணமாக்கும்....*


*கல்லீரலை பலப்படுத்தும். பித்தம் கட்டுக்குள் இருக்கும்....*


*இதை தயார் செய்வது மிகவும் எளிதானது.....*


*இதை அனைவரும் பருகலாம்,....*


*தினமும் தண்ணீர்க்கு, டீ, காபிக்கு பதில் இதை அருந்தலாம்.....*


*கொத்துமல்லிக்கு பதில் கருவேப்பிலையும் , புதினாவையும் இதே போன்று சாறு தயார் செய்து  உபயோகிக்கலாம்....*


*ஆனாலும் கொத்துமல்லி இலைச்சாறுதான் சிறந்தது.....*


*படித்ததில் மிகவும் பிடித்தது*


*ஏங்கும் உடலை தேத்துவது எத்தச் சொல்லி* *-நீ*

*வாங்கு உடனே உயிர் காக்கும் கொத்துமல்லி.*


*கவின்*

*வாலி தாசன்*

*9282327537*

Comments

Popular posts from this blog

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷

*TENT DECOR CATERING EXPO 2024* - 4,5,6-Oct-2024 - Chennai Trade Centre, Nandambakkam Chennai

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது