நான் ஒரு பெரிய ஐடி கம்பெனியில் வேலை பார்த்த போது. ஹாங்காங்கில் இருந்த ஒரு ப்ராஜக்ட்டில் என்னை சேரச் சொன்னார்கள். நான் நிரந்தரமாக அங்கே குடியேற மறுக்க, என்னை alternate வாரங்கள் இந்தியாவிலும் ஹாங்காங்கிலுமாக வேலை செய்யக் கேட்டார்கள். அதாவது இரண்டு வாரத்துக்கு ஒரு தடவை ஹாங்காங் பிரயாணம்..! ஃப்ளைட்டில் ஃபர்ஸ்ட் கிளாஸ்; எல்லா வசதிகளும் எனக்கு கொடுக்கப்பட்டன.
நான் ஒரு பெரிய ஐடி கம்பெனியில் வேலை பார்த்த போது. ஹாங்காங்கில் இருந்த ஒரு ப்ராஜக்ட்டில் என்னை சேரச் சொன்னார்கள். நான் நிரந்தரமாக அங்கே குடியேற மறுக்க, என்னை alternate வாரங்கள் இந்தியாவிலும் ஹாங்காங்கிலுமாக வேலை செய்யக் கேட்டார்கள். அதாவது இரண்டு வாரத்துக்கு ஒரு தடவை ஹாங்காங் பிரயாணம்..! ஃப்ளைட்டில் ஃபர்ஸ்ட் கிளாஸ்; எல்லா வசதிகளும் எனக்கு கொடுக்கப்பட்டன.
'ஹையா..! நிறையா டிராவலிங் செய்லாம்..!' என்று முதலில் ஜாலியாக இருந்தாலும், ஆறே மாதத்தில் எனக்கு அந்த வேலை கசந்தது..!
ஃப்ளைட் take-off போதும் landing போதும் நம் உடலில் உபாதைகள் நேரும்..! இரண்டு நாட்கள் ஜெட் லாகால் தூக்கம் கெடும்..! கக்கா ஒழுங்காய் போகாது..! இது தவிர, அங்கே கிளையண்ட் மீட்டிங் நடந்து முடியும் வரையில் டென்ஷன்.! எனக்கு ஆகவில்லை..! நான் வேறு ப்ராஜக்ட் மாற்றிக் கொண்டேன்.
ஆனால், எங்கள் கம்பெனியின் தலைவர் அப்படி செய்ய முடியாது..! பிடிக்காவிட்டாலும் அவர் ஏகமாய் டிராவல் செய்துதான் ஆக வேண்டும்..! அதிக பிராயாணம் என்பது நிஜத்தில் ஒரு பெரும் கஷ்டம்..! வேலையின் நிர்ப்பந்தத்தால் செய்ய வேண்டுமே என்ற எரிச்சலோடுதான் ட்ராவல் செய்வார்கள்..! "அடிக்கடி ஃப்ளைட்ல பறக்கறான்..! கொடுத்து வெச்சவன்டா..!" என்று அறியாதவர்களும் புரியாதவர்களும் மட்டுமே பேசுவார்கள்..!
ஆனால் உண்மை அது அல்ல
ஒரு நாட்டின் பிரதமர் இன்னொரு நாட்டிற்குச் செல்வது உல்லாசமாய் இருக்கவா..? ஜாலிக்காகவா..?
இன்னொரு நாட்டுடன் கிடைக்கும் நல்லுறவு என்பது இண்டர்னேஷனல் தளத்தில் நம் நாட்டிற்குக் கிடைக்கும் ஒரு துருப்புச் சீட்டு..!
ஐ.நாவிலும், பிற குரூப்புகளிலும் இந்தியா வலிமை பெற கிடைக்கும் ஒவ்வொரு ஓட்டும் முக்கியம்..!
ஒரு உதாரணம்: கொஞ்சம் நாள்களுக்கு முன்னாடி சீனா நம்முடன் மோதும் போது எந்த நாடும் சீனாவை ஆதரிக்கவில்லை பாகிஸ்தானை தவிர
நாளை பாகிஸ்தானுடன் நாம் போருக்கு போனால், பல நாடுகள் நம் பக்கம் நிற்கும்..!
இது தவிர, ஒவ்வொரு நாடும் ஒரு Export Market..! முந்துபவர்கள் பயன் பெறுவார்கள்..!
எந்த ஒரு நாட்டின் பிரதமருக்கும் பிரயாணம் என்பது ஒரு ஜாலியல்ல..! தீவிரவாத அச்சுறுத்தல் உண்டு..!
ஒவ்வொரு பிரயாணம், மீட்டிங், பேச்சு வார்த்தைக்கும், பிரதமர், EA டீமுடன் தீர்க்கமாய் preparation செய்ய வேண்டும்..! தவறாய் ஒரு வார்த்தை பேசிட முடியாது..! ஸ்ட்ரெஸ்தான்..! டென்ஷன்தான்..! தேவை இல்லாமல் பயணம் செய்ய விரும்பவே மாட்டார்கள்..!
நம்மில் 67 வயதானவர் எத்தனை பேர் அதிக பிரயாணத்தை மனமுவந்து ஏற்றுக் கொளவீர்கள், சொல்லுங்கள்..?
மற்ற பிரதமர்கள் வெளிநாடு சென்றால்,,,,, சம்பிரதாயத்துக்காக அந்த நாட்டு அதிபரை/பிரதமரை பார்த்துவிட்டு,,,,,,,குடும்பத்தாருடன் ஜாலியாக விஐபி ஹோதாவில் எல்லா சுற்றுலா ஸ்தலங்களையும் பார்ப்பார்கள்.
மோடிஜி இதுவரை ஒரு சுற்றுலா ஸ்தலங்களையும் அவ்வாறு வெளிநாட்டு பயணத்தின் போது என்ஜாய் பண்ணியதில்லை. போன காரியம் என்னவோ அதை முடித்து கொண்டு உடனே திரும்புகிறார்.
ஒரு இரவு தூக்கத்திற்காக நட்சத்திர ஹோட்டலில் தங்குவதில்லை,,,,, விமானத்திலேயே தூக்கம்.
பலகாலம் தவமிருந்தாலும் இப்படி ஒரு பிரதமர் கிடைக்க மாட்டார்,,,,,,
இது ஏதும் புரியாமல், எந்த விவரங்களும் தெரிந்து கொள்ளும் அடிப்படை அறிவில்லாமல், "மோடி அவ்ளோ பிரயாணம் செய்கிறார்..! அவ்ளோ செலவு..!" என்று அதையெல்லாம் கூட தவறாய் எழுதுவது, மீம்ஸ் போடுவதைப் போன்ற சின்ன பிள்ளைத்தனம் வேறு உண்டா..? எதை எதிர்ப்பது என்பதில் விவஸ்தை வேண்டாமா..?
நம் நாட்டின் பிரதமர் பல நாடுகளுக்கு பிரயாணம் செய்து, US உட்பட பல நாடுகளின் நல்மதிப்பை ஈன்றதால்தான், பாகிஸ்தான் + சீனா தம் வாலாட்டல்களைக் குறைத்திருக்கின்றன என்பதில் சந்தேகமே வேண்டாம்..! இன்று பல இண்டர்னேஷனல் தளங்களில் - UN, BRIC, ASEAN, IMF etc - இந்தியா லீடர்ஷிப் நிலைக்குச் சென்றது, பிரதமரின் பிராயணங்களினால் விளைந்த நன்மையே..!
ஒரு பிரதமர் பிரயாணங்கள் செய்வது குஜாலாய் இருக்க அல்ல; நாட்டின் செக்யூரிட்டிக்கும், பொருளாதார நலனுக்காவும் மட்டுமே என்பதை நான் இன்னும் டீடெய்லாய் விளக்கலாம்..!
ஆனால், இந்த விவஸ்தையில்லா போராளிகள் விளங்கிக் கொள்ளவா போகிறார்கள்..?
Comments
Post a Comment