BJP Aswathamanji great message: நேற்றைய தினம் எங்களுடைய மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்களுடைய அறிவுறுத்தல்படி , டெல்லியில் மாண்புமிகு நிலக்கரித்துறை அமைச்சர் பிரலாத் ஜோசி அவர்களை சந்தித்து NLC தொடர்பாக மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி இருந்தேன். மிக முக்கியமாக, வளையமாதேவி உள்ளிட்ட கிராமங்களில் NLC நில எடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தி வைக்குமாறும் கோரியிருந்தேன்.
BJP Aswathamanji great message:
நேற்றைய தினம் எங்களுடைய மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்களுடைய அறிவுறுத்தல்படி , டெல்லியில் மாண்புமிகு நிலக்கரித்துறை அமைச்சர் பிரலாத் ஜோசி அவர்களை சந்தித்து NLC தொடர்பாக மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி இருந்தேன். மிக முக்கியமாக, வளையமாதேவி உள்ளிட்ட கிராமங்களில் NLC நில எடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தி வைக்குமாறும் கோரியிருந்தேன். மாண்புமிகு மத்திய அமைச்சர் அவர்களும் இது சம்பந்தமாக அதிகாரிகளுடன் பேசிவிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். "நீங்கள் மீண்டும் ஒருநாள் டெல்லி வாருங்கள், அன்று என்எல்சி சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் வரவழைத்து, அதில் உங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்" எனவும் மத்திய அமைச்சர் கூறியிருந்தார் .
மேலும் இது சம்பந்தமாக இன்று இரவு என்எல்சி இயக்குனர் சுப்ராதோ சௌத்ரி அவர்களையும் மாநிலத்தலைவர் அண்ணாமலை அவர்களுடைய அறிவுறுத்தல்படி சந்திக்க உள்ளேன்.
இப்பொழுது அவசர அவசரமாக தமிழக அரசு வளையமாதேவியில் பச்சை பசுமையாக உள்ள பயிர்களை அழிப்பதை அறிந்து வேதனை அடைகிறேன். எங்களுடைய தேவைக்காக எங்களுக்கு இவ்வளவு நில நிலம் வேண்டும் என்று தான் என்எல்சி கூற முடியும் . அதை நிலை எடுப்பு நடவடிக்கைகள் மூலமாக எடுத்து தர வேண்டிய பகுதி தமிழக அரசை சார்ந்தது. தீர்வு எட்டப்பட்டு வரும் சூழ்நிலையில் நேற்று மத்திய அமைச்சரை நான் சந்தித்துள்ள நிலையில், இன்று காலை அவசர அவசரமாக இந்த செயலை தமிழக அரசின் அதிகாரிகள் செய்துள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இது தொடர்பாக கடலூர் மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொள்ள நான் பலமுறை முயற்சி செய்தும் முடியவில்லை.
ஏற்கனவே இது சம்பந்தமாக என்எல்சி சேர்மன் அவர்களை சந்தித்து நான் பேசும் பொழுது அவரிடம் நிலத்திற்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிற தொகையை உயர்த்தி தருமாறு கோரிக்கை வைத்த போது அது எங்களுடைய கைகளில் இல்லை மாநில அரசாங்கம் கூறுகிற விலையை விட அதிகமாக தருவதற்கு எங்களுக்கு அதிகாரம் இல்லை என்று கூறினார். இதிலிருந்தே, நில எடுப்பு நடவடிக்கைகளைப் பொறுத்தவரை NLC யினுடைய பகுதி என்பது மிக குறைந்த அளவு என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.
இது சம்பந்தமாக எங்களுடைய மாநிலத் தலைவர் என்எல்சி சேர்மேன்னிடம் உடனடியாக பேசியுள்ளார். நானும் உடனடியாக மத்திய அமைச்சரின் நிலக்கரித்துறை நேர்முக உதவியாளரை உடனடியாக தொடர்புகொண்டு NLC அதிகாரிகள் மூலம் தமிழக அரசு அதிகாரிகளிடம் பேசி உடனடியாக இந்த பயிர்களை அழிக்கும் நடவடிக்கையை நிறுத்தவேண்டும் என கூறியுள்ளேன்.
இது சம்பந்தமாக மத்திய நிலக்கரி துறை அமைச்சர் பிரலாத் ஜோசி அவர்களிடம் பேசுவதாக , மாநிலத்தலைவர் அண்ணாமலை அவர்கள் என்னிடம் கூறியுள்ளார்.
எனவே பாரதிய ஜனதா கட்சி எடுக்கிற தொடர்ச்சியான நடவடிக்கைகளால் நிச்சயமாக வளையமாதேவி, கருவெட்டி,கத்தாழை, மும்முடிசோழகன் ,கம்மாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் நில எடுப்பு பிரச்சனைக்கு ஒரு தீர்வு எட்டப்படும். அதுவரை தமிழக அரசின் அதிகாரிகள், இது போன்ற அவச்செயல்களில் ஈடுபடாமல் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
Comments
Post a Comment