பிள்ளையார் சிலை உடைப்பும் .. ஈவேரா பட்ட பாடும், ஓடிய ஓட்டமும், உச்சநீதிமன்றம் கொடுத்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பும். கடவுள் இருக்கிறான் செட்டியாரே .....!!! இந்த பதிவு மக்களுக்கு, சட்ட மாணவர்களுக்கு, சட்ட ஆர்வலர்களுக்கு சட்டம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே தவிர அரசியல் உள்நோக்கம் இதில் ஏதும் இல்லை.

 

பிள்ளையார் சிலை உடைப்பும் .. 


ஈவேரா பட்ட பாடும், ஓடிய ஓட்டமும்,  உச்சநீதிமன்றம் கொடுத்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பும்.


கடவுள் இருக்கிறான் செட்டியாரே .....!!!


இந்த பதிவு மக்களுக்கு, சட்ட மாணவர்களுக்கு, சட்ட ஆர்வலர்களுக்கு சட்டம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே தவிர அரசியல் உள்நோக்கம்  இதில் ஏதும் இல்லை.

மே 27, 1953 அன்று மாலை 5.30 அளவில் திருச்சி டவுன்ஹால் மைதானத்தில் ஒரு பிள்ளையார் சிலையை உடைத்து, இந்து சமூகத்தினரது மனங்களில் பீதி, வருத்தம் மற்றும் உணர்ச்சிகள் கிளம்பியுள்ளது மட்டுமல்லாமல். இந்துமத கடவுள்களை பற்றி அவதூறாக பேசியும் உள்ளார் பெரியார் இவ்வாறு பேசியது இந்திய குற்றவியல் சட்டத்தின் பிரிவுகள் 295 மற்றும் 295ஆ கீழ், மத உணர்வுகளைப் புண்படும் வகையில் உள்ளது என்று எஸ். வீரபத்ரன் செட்டியார் என்பவர் ஜூன் 5, 1953 அன்று புகார் கொடுத்தார்.


இந்த புகார் கொடுத்த பின் வீரபத்ரன் செட்டியார் பல இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டார், மிரட்டப்பட்டார் இருந்தும் மனம் தளராமல் கீழமை நீதிமன்றம், செஸன்ஸ் கோர்ட், உயர் நீதிமன்றம், உச்சநீதி மன்றம் என விடாமல் வழக்கு நடத்தி பெரியாரை கலக்கமடைய செய்தார்.


முதல் நிலையில் மாஜிஸ்ட்ரேட் சர்கிள் இன்ஸ்பெக்டரை குற்றவியல் நடத்தை விதி பிரிவு 202ன் கீழ் விசாரிக்க ஆணையிட்டார். கீழமை நீதிமன்ற மாஜிஸ்டிரேட்ஜூன் 26, 1953 அன்று தனது தீர்ப்பில் “மண்ணால் செய்யப்பட்ட பிள்ளையார் விக்கிரம் புனிதமானதாகாது. அது பிள்ளையார் போன்று இருப்பதனால் அது புனிதமான வஸ்து ஆகாது. மக்களால் விடப்படுகின்ற விக்கிரங்கள் வழிபாட்டிற்கு ஆகாது. ஏனெனில் அத்தகைய விக்கிரங்கள் பல இடங்களில் காணப்படுகின்றன. ஆகவே ஒரு மனிதன் அத்தகைய விடப்பட்ட விக்கிரத்துடன் மோதினால் குற்றாமாகாது. ஆகையால் இது இந்திய குற்றவியல் சட்டத்தின் பிரிவு 295 கீழ் குற்றாமாகாது” இதற்கு மேல் இவ்வழக்கில் குற்றவியல் நடத்தை விதி பிரிவு 203ன் கீழ் தொடர ஆதாரம் இல்லை என்ற காரணத்தால் நிராகரிக்கிறேன்” என்றார்.

இதனால் வீரபத்ரன் செட்டியார், தனது புகாரை செஸன்ஸ் கோர்டிற்கு ஜூலை 9, 1953 அன்று எடுத்துச் செல்கிறார். இதில் வாதிட்டவர்கள் பெரியார் காசு கொடுத்து பிள்ளையார் போன்ற மண்சிலையை வாங்குகிறார் அது அவரது பொருளாகிவிடுகிறது, அவரது பொருளை அவர் உடைக்கலாம், சிதைக்கலாம் இது எப்படி குற்றமாகும் என்றனர்... 


ஜனவரி 12, 1954 அன்று நீதிபதி, “மாஜிஸ்ட்ரேட் சொல்லியபடியே, அத்தகைய நடத்தைகள் குற்றாமாகாது என்று ஒப்புக்க் கொள்கிறேன். குற்றஞ்சாட்டப்பட்டவர் ஒரு பொதுகூட்டத்தை ஏற்பாடு செய்து, உருவ வழிபாட்டிற்கு எதிராகப் பிரச்சாரம் செய்து, மண்ணால் செய்யப் பட்ட கடவுள் பிள்ளையார் உருவத்தை உடைத்துள்ளார். அந்த உருவம் குற்றஞ்சாட்டப்பட்டவருடைய சொந்தப் பொருளாகும், ஆகையால் அது மற்றவர்களால் புனிதமாகக் கருதப்படும் பொருளாகாது. அதே மாதிரி, நானும், ஒரு நம்பிக்கையில்லாதவன், இம்மாதிரி நம்பிக்கையுள்ளவனை புண்படுத்த முடியும் என்று நினைக்கவில்லை. ஆகையால் அது பிரிவு 295ஆ கீழ் குற்றம் தான் என மெய்பிக்க வேண்டிய கூறுகளுக்கு ஏற்றபடி இல்லை” என்று கூறி வழக்கைத் தள்ளுபடி செய்கிறார்.


இதை எதிர்த்து வீரபத்திரன் செட்டியார் உயர் நீதிமன்றம் செல்கிறார் ஆனால் அங்கேயும் குற்றஞ்சாட்டப் பட்டவர்களின் மீது குற்றத்தை மெய்ப்பிக்க போதியா ஆதாரங்கள் காட்டப்படவில்லை, என்று சில வழக்கு உதாரணங்கள் மூலம் எடுத்துக் காட்டினார்.

(1) (1887) I.L.R. 10 All. 150.

(2) (1890) I.L.R. 117 Cal. 852.


செட்டியார் இதற்கு எதிராக அப்பீல் / முறையீடு செய்ய தேவையான சான்றிதழ் கொடுக்குமாறு வேண்டிக் கொண்டார். ஆனால், இந்திய அரசியல் நிர்ணய சட்டத்தின் பிரிவு Art. 134(1)(c) கீழ், மேல்முறையீடு செல்வதற்கான வழக்கு இல்லை என்று மறுத்து உய்ரநீதிமன்றம். மனதளராத செட்டியார் மறுபடியும் நீதிமன்றத்திற்கு சென்று, தேவையான அனுமதி பெற்று உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.


இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த வழக்கில்,  இந்துக்கள் புண்படுத்தக்கூடிய செயல் நடந்துள்ளது இந்துக்கள் வணங்கக்கூடிய பிள்ளையார் உருவத்தை உடைத்துள்ளார்கள். இந்துக்களுக்கு உருவம் ஸ்தாபிக்கப்பட்டாலும் இல்லையென்றாலும் பிள்ளையார் உருவம் புனிதமானது காசுகொடுத்தே வாங்கிய பொருள் என்றாலும் அந்த பொருள் இந்து மக்களுக்கு புனிதமானது அதை அவமரியாதை செய்வது குற்றமாகும்.


எந்த வஸ்து, எவ்வளவு அற்பமேயாகிலும் அல்லது விலையில் மிகவும் குறைவானதாக இருந்தாலும், மற்றவர் அது புனிதமானது என்று மதித்தால், இந்த சட்டப்பிரிவில் வரும். அவமதிப்பவர்களை சட்டம் கவனித்துக் கொள்ளும். ஆகையால் அந்த புனிதமானதாக மதிக்கப்படும் வஸ்து, வழிபாட்டிற்குட்பட்டிருக்க வேண்டும் என்ற நிலை தேவையில்லை. ஆகையால் கீழ் கோர்ட்டார்கள் பலத்ரப்பட்ட மக்களின் மத உணர்வுகள், நம்பிக்கைகளை மதிக்காமல், விஷயத்தை மிகவும் சாதாரணமாக எடுத்துக் கொண்டு கொடுத்த புகாரை அணுகியுள்ளர்கள்.

 இந்திய குற்றவியல் சட்டத்தின் பிரிவு 295  பலதரப்பட்ட மத நம்பிக்கையாளர்களின் மத உணர்வுகள், நம்பிக்கைகளை மதிக்க ஏற்படுத்தப்பட்டு உள்ளதாகும். ஆகவே, கோர்ட்டாரே அத்தகைய நம்பிக்கைகளை ஏற்கிறார்களோ இல்லையோ, இத்தகைய விஷயங்களில் மற்றவர்களின் உணர்ச்சிகளை நம்பிக்கைகளை நிச்சயமாக மதிக்க வேண்டும்.


 பைபிள், குரான், குரு கிரந்த சாஹப் முதலியவையெல்லாம் மத புனித நூல்கள் இவைகளை காசுகொடுத்து வாங்கி அது எனது சொந்த பொருள் என்று கூறி அவமதிப்பு செய்தால், சேதப்படுத்தினால் அல்லது எரித்தால் கீழ் கோர்ட்டாரின் திரிபுவாத விளக்கத்தின்படி பார்த்தால் இந்திய குற்றவியல் சட்டத்தின் பிரிவு 295 கீழ் குற்றாமாகாது என்றாகிவிடும். இது தவறான முன்னுதாரணம், மக்களின் நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் விஷயங்களில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். கீழ்கோர்ட்டின் நீதிபதிகள் நிச்சயமாக சரத்தில் உள்ள வார்த்தைகளுக்கு மிகவும் குறுகிய அர்த்ததைக் கொண்டு அதற்கேற்றபடியான விளக்கத்தை அளித்துள்ளனர்.


குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் நடத்தையை மென்மையான வார்த்தைகளில் சொல்வதானால், அது மிகவும் மட/முட்டாள் தனமானது, இருப்பினும், இவ்வழக்கு காலந்தாழ்ந்து விட்டபடியால், விசாரிக்க ஆணையிடவில்லை. இருப்பினும் மறுபடியும் அத்தகைய முட்டாள்தனமன நடத்தை சமூகத்தின் எந்த பிரிவினராவது செய்ய முற்பட்டால், நிச்சயமாக சட்டம் மற்றும் ஒழுங்குமுறை கட்டுப்படித்த அவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்திய குற்றவியல் சட்டத்தின் பிரிவு 295ஐ பற்றி தெளிவான விளக்கத்தை நாங்கள் கொடுத்துள்ளோம். இவ்வழக்கு காலந்தாழ்ந்து விட்டபடியால் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது, “No one appeared for the respondents”! பிரதிவாதிகளின் தரப்பில் யாரும் ஆஜராகவில்லை! “It is regrettable that the respondents have remained ex parts in this Court.”!! “குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்திற்கு வராமலேயே இருந்தது வருத்ததிற்கு உகந்தது”, என்று பெரியார் மீது கடுமையான விமர்சனத்தை வைத்து இந்த வழக்கை தள்ளுபடி செய்தது.


இன்று வரை இந்த வழக்கு ஒரு முன்னுதாரண வழக்காகவே(Landmark Case) பார்க்கப்படுகிறது. இந்த வழக்கின் தீர்ப்பிற்கு பின்பே சாமி சிலைகளை உடைப்பது, மத கடவுள்களை அவமரியாதை செய்வது, புனித நூல்களை எரிப்பது மிகவும் குறைந்துவிட்டது. நீதிமன்றங்கள் என்றால் எங்களுக்கு பயமா, நாங்கள் பார்க்காத நீதிமன்றங்களா என்றெல்லாம் அதிகாரத்தை கையில் வைத்து வாய் சவடால் விட்டவர்களை நீதிமன்றத்தில் நிற்கவைத்து வெற்றி பெற்றார் வீரபத்திர செட்டியார்.

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

2175M

Comments

Popular posts from this blog

நான் கிட்டத்தட்ட 22 வயது வரை நாத்திகனாக இருந்தேன். கோவில்களுக்குச் செல்வது பிடிக்க வில்லை. நான் அவற்றை பிராமணர்கள் மற்றும் பிறர் பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாகவே கருதினேன். ஒவ்வொரு அடியிலும் அவர்கள் எப்படி பணம் கேட்டார்கள் என்பதை நான் வெறுத்தேன்.

8th August 11am, Delhi: MAHA PANCHAYAT- 100Cr HINDU Movement for Abolition of totally Discrminatory HR&CE Act.1951, all over India. Temples should function as independently as MOSQUES & CHURCHES. Money taken/swindled should be given back by Govts.

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷