கடந்த சனிக்கிழமை மாலை, சென்னை தொலைபேசி எண்ணிலிருந்து ஒரு அழைப்பு. ஏதாவது கம்பெனி காலாக இருக்கலாம் என்று ஆன் செய்த போது, மெல்லிய பெண் குரல் ஒன்று பாஜக அலுவலகத்தில் இருந்து பேசுவதாக அறிமுகப்படுத்தி கொண்டு பேச தொடங்கியது. ஜி நீங்க என் மண் என் மக்கள் யாத்திரையில் கலந்து கொள்ள பதிவு செய்திருக்கிறீர்களா
கடந்த சனிக்கிழமை மாலை, சென்னை தொலைபேசி எண்ணிலிருந்து ஒரு அழைப்பு. ஏதாவது கம்பெனி காலாக இருக்கலாம் என்று ஆன் செய்த போது, மெல்லிய பெண் குரல் ஒன்று பாஜக அலுவலகத்தில் இருந்து பேசுவதாக அறிமுகப்படுத்தி கொண்டு பேச தொடங்கியது.
ஜி நீங்க என் மண் என் மக்கள் யாத்திரையில் கலந்து கொள்ள பதிவு செய்திருக்கிறீர்களா?
ஆமா என்றதும் அடுக்கடுக்கான கேள்விகள், நீங்க யார், என்ன பண்றீங்க என்பதில் தொடங்கி நீங்க பாஜக உறுப்பினரா, எதனால் ஆர்வம்,என்று கேட்டு கவனமாக குறிப்பெடுத்து கொண்டார்.
கேள்விகள் கேட்கப்பட்ட விதத்தை பார்க்கும் போது தவறான மனிதர்கள் யாத்திரையில் புகுந்து கலகம் விளைவித்து விடக்கூடாது என்பதை நோக்கமாக கொண்டு விவரம் சேகரிப்பதாகவும், மேலும் அதில் கலந்து கொள்பவர்களின் மனநிலையையும் எண்ண ஓட்டங்களை புரிய முயற்சிப்பது போலவும் இருந்தது.
அதாவது நம்முடைய கருத்துக்களின் அடிப்படையில் பயண நிகழ்ச்சிகளை வடிவமைக்க திட்டமிடுகிறார்கள் போலும்.
நம்முடைய பதில்கள் திருப்தியாக இருந்தால் கடைசியாக நீங்கள் எங்கே எப்போது எவ்வளவு நேரம் கலந்து கொள்ள வேண்டும் என்ற விவரங்கள் உங்களுக்கு விரைவில் தெரிவிக்கபடும், இணைந்திருங்கள், நன்றிஜி என்று இணைப்பு துண்டிக்கப்படுகிறது.
ஆக மொத்தத்தில் பயண திட்டம் பார்த்து பார்த்து திட்டமிடப்படுகிறது. இந்த யாத்திரை தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவரும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
அமித்ஷா தொடங்கி அனைத்து தேசிய தலைவர்களும் ஆங்காங்கே யாத்திரையில் கலந்து கொள்ள தமிழகம் வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாளை தொடங்கி ஜனவரி 2024 வரை ஐந்து கட்டங்களாக மொத்தம் நூறு நாட்கள் நடைபெற உள்ள இந்த யாத்திரையால் தமிழகம் அகதளமாகப் போகிறது.
முதல் கட்டமாக நாளை முதல் ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளில் நடைபெற உள்ள யாத்திரையில் இயன்றவரை எல்லோரும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவியுங்கள்.
பிரிட்டிஷ் சுதந்திர போராட்டத்தில் நடந்த யாத்திரை போன்று இது ஒரு வகையான திராவிட விடுதலை போராட்ட யாத்திரை பயணம்...
தவறாது கலந்து கொள்ளுங்கள், நாம் ஒவ்வொருவர் கொடுக்கும் ஆதரவும் திராவிட எதிர்ப்பு ஓட்டுக்களாக வேண்டும் ...
மாற்றம் மிக விரைவில்...
ஜெய் ஹிந்த்... அருணகிரி
Comments
Post a Comment