அண்ணாமலைக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக வேகமாக பரவுகிறது. அதற்கு அவரின் 234 தொகுதிகளுக்கான பாத யாத்திரை, அவர் மீது இருக்கும் நம்பிக்கை, மத்தியில் இருக்கும் மோடியின் நல்லாட்சி, பிரதிபலன் எதிர்பாராதா RSS, கட்சி தொண்டர்கள், திராவிடத்திற்கு மாற்றை தேடும் மக்கள், தவறு மேல் தவறு செய்யும் திராவிட கட்சிகள் என்று சொல்லிக்கொண்டே போகலாம்!
நிஜவுலகம் தெரியாமல் கனவுலகில் தமிழக பாஜகவினர்!
📌📩🎯 அண்ணாமலைக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக வேகமாக பரவுகிறது. அதற்கு அவரின் 234 தொகுதிகளுக்கான பாத யாத்திரை, அவர் மீது இருக்கும் நம்பிக்கை, மத்தியில் இருக்கும் மோடியின் நல்லாட்சி, பிரதிபலன் எதிர்பாராதா RSS, கட்சி தொண்டர்கள், திராவிடத்திற்கு மாற்றை தேடும் மக்கள், தவறு மேல் தவறு செய்யும் திராவிட கட்சிகள் என்று சொல்லிக்கொண்டே போகலாம்!
அதன் விளைவுதான் அதிமுக, திமுகவின் கடுமையான அண்ணாமலை எதிர்ப்பு. 60 களில் திமுகவிற்கு எப்படி ஒரு இளைஞர் பட்டாளம் திராவிடத்தை நோக்கி ஈர்த்ததை போல ஈர்க்கும் திறனை அண்ணாமலை செய்துவிட்டார் என்றே சொல்லலாம். அதை இன்று எளிதாக செய்ய சோஷியல் மீடியாக்கள், டெக்னாலஜி என்று பலவும் அதை வேகப்படுத்த உதவுகிறது.
அதனால் பாஜகவிற்கு மாறும் அந்த ஓட்டுக்களை வாக்குகளாக மாற்றும் திறன் பாஜக நிர்வாகிகளிடம்தான் இருக்க முடியும். ஆனால் கண்டிப்பாக அது இல்லை அல்லது பல இடங்களில் அந்த நிர்வாகிகள் கட்டமைப்பு பேப்பரில்தான் இருக்கிறது. அவர்களுக்கு Team Work எனபதை அவர்கள் சுத்தமாக அறிந்திருக்க வில்லை என்பது எதார்த்தமான உண்மை. ஒருங்கிணைப்பு என்பது மிக மோசம்.
இன்னும் பூத் கமிட்டி அமைச்சாச்சான்னு அந்த ஏரியாவில் இருக்கிற பாஜக கட்சி ஆதரவுக்காரர்களிடம் கேட்டு பாருங்க? அதெல்லாம் இல்லை என்பார்கள், ஆனால் பாஜகவின் புத்தகத்தில், அங்கே நிர்வாகிகள் எல்லாம் அமைத்தாகிவிட்டது என்று இருப்பதாக நிர்வாகிகளால் சொல்லப்படுகிறது. அது இருக்கிறதா, செயல்படுகிறதா என்று நிரூபிக்க வேண்டியது அந்தந்த பகுதியின் அடுத்த லெவல் தலைமையின் பொறுப்பு. அதை ஒரு எளிய, ஆனால் Systematic லிட்மஸ் டெஸ்ட் மூலம் செய்துவிடலாம்.
இன்று பாஜகவில் மாவட்ட அளவில் ஒரு தலைவர் இருந்தால், அவர் தனக்கு தெரிந்தவரை தாலூகா அளவில் நியமிப்பார். அவர் ஒன்றிய அளவில் வேண்டப்பட்ட ஒருவரை நிர்வாகியாக என்று, அவருக்கு தெரிந்தவரை அடுத்த அளவில் நியமிப்பார். இதை செய்யவே அண்ணாமலை போராட வேண்டி இருந்தது.
அது நடக்காததால் நிர்வாகியை உடனே நியமிக்க வேண்டும் என்று அண்ணாமலை கட்டளையிட்டதும், பேருக்கு நாலுபேரை போட்டுக் கொடுங்கப்பா என்று வாங்கிவிட்டார்கள். அது அவர்களிடம் கேட்டார்களா, அதன் வேலை என்ன, அவரால் செய்ய முடியுமா என்பதெல்லாம் கடவுளுக்குத்தான் தெரியும்.
ஆனால் மற்ற கூடாத விஷயங்கள் மட்டும் சூப்பராக நடக்கிறது. சமீபத்தில் திராவிட கட்சிகள், மீடியாக்கள் குற்றச்சாட்டு, பாஜக அண்ணாமலையின் யாத்திரையை வைத்து வசூல் வேட்டை நடக்கிறது என்பதுதான். உடனே நாம் மறுத்து, அவனை திட்டிவிட்டு கடந்து விடுவோம். அதில் உண்மை இருக்கிறதா என்று ஒரு போதும் பார்ப்பதில்லை. அது உண்மையே.. அதற்கு எந்த கணக்கும் இல்லை, வழக்கும் இல்லை.
இது ஏதோ நான் நினைத்ததை எழுதுகிறேன் என்று சொல்லவில்லை. ஈரோடு தொகுதிக்கு உற்பட்ட ஒரு சிறு பஞ்சாயத்தில் அண்ணாமலை கூட்டத்திற்கு என்று 1 லட்சத்திக்கு மேலாக வசூல் செய்திருக்கிறார்கள். அதுவும் பிஸினஸ் செய்பவர்கள் சந்தோஷமாக கேட்டதை கொடுத்திருக்கிறார்கள். அதனால், அடடா, இன்னும் கொஞ்சம் கூடுதலாக கேட்டிருக்கலாமோ என்றளவில் தான் அவர்களின் எண்ண ஓட்டம் உள்ளது.
ஆனால் ஒரு ₹10,000 கூட செலவு செய்யவில்லை. அந்த ஊரில் முக்கியமான இடத்தில் ஒரு கொடிக்கம்பம் கூட இந்த பணத்தை வைத்து வைக்கவில்லை. அதுவும் அந்த தொகுதியில் "ஆற்றல்" அசோக் என்பவர் கொடிக்கம்பம் நடுவதற்கு கேட்டால உடனே பணம் கொடுக்கிறார். ஆனால் கேட்டு வாங்கினால் அதை எப்போது செய்கிறாய், செய்துவிட்டாயா என்று மேலும் கேட்கிறார். அவனவனுக்கு ஆயிரம் வேலை இருக்குது, அதுக்கு நீ ஜெய்க்க நான் கொடி கம்பம் வைக்க வேண்டுமா என்ற ரீதியில் நிர்வாகிகளின் மனோ நிலை மோசமாக இருக்கிறது.
அதாவது பண வசூல் செய்யும் அவர்கள், அதை வைத்து ஆரோக்கியமாக கட்சிக்கு செலவு செய்வதோ, அல்லது அதை கணக்கில் காட்டுவதோ இல்லை. கேட்டால் அது நான் இவ்வளவு நாளாக கட்சிக்கு செய்த செலவிற்கு என்று கதை சொல்லும் நிர்வாகிகள். அதிலும் நிர்வாகிகள், அதிமுக, திமுகவிடன் கைகோர்த்தவர்களாக இருப்பதை பார்க்க முடிகிறது என்கிறார்கள்.
அந்த விஷயத்தில் வசூல் செய்வது எப்படி என்பது மட்டும் நன்கு தெரிந்தவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று மட்டும் தெரியவில்லையா, அல்லது விருப்பம் இல்லையா? இதற்கு காரணம் அண்ணாமலை அல்ல, திராவிடம் தமிழகத்தில் வளர்த்த கலாச்சாரம்!
அதற்கு அண்ணாமலை தனது நடை பயணத்தில் ஓட்டுக்கு காசு வாங்குவதால், அதில் ஏற்படும் பிரச்சினைகள் என்ன என்பதையும் ஒரு விழிப்புணர்வாக முன்னெடுத்தல் அவசியம்.
📌 மேலும் நிர்வாகிகள் மட்டத்தில் ஒவ்வொரு லெவலிலும், ஈகோ, உள்குத்து, காலை வாருதல், பணம் 💰, என்று திராவிடத்தின் நிறைய சாயல்களை பாஜக நிர்வாகிகள் களத்தில் சாதரணமாக பார்க்க முடிகிறது.
📌 அப்புறம் நேர்மை, வெங்காயம்னு நிறைய எழுதராங்களே?
அப்படிப்பட்ட எழுதும் நாம் எல்லாம், வெறும் அட்டக் கத்திகள். நாம் ஒரு போதும் களத்தில் இறங்கி வேலை செய்வதில்லை.
🔥 அவர் நிர்வாகியா இருக்கும் அந்த ஊரில், பாஜகவில் உள்ள பொறுப்புகள் என்ன, தான் சேர்ந்த பகுதியில் இருக்கும் மற்ற நிர்வாகிகள் யாரென்றே பலருக்கு தெரியாத மிக மோசமான சூழல். அல்லது தெரிந்திருந்தாலும் அவர்களுக்குள் ஒரு இணக்கம் இல்லாத சூழல்.
அப்படி இருக்கும் சூழலில் அந்த ஊரில் யாரெல்லாம் பாஜக ஆதரவாளர்கள் என்பது நிவாகிகளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த பகுதி பாஜக நலம் விரும்பி ஒருவர், அண்ணாமலையின் பாஜக கூட்டம் என்று ஒன்றிற்கு போகும்போது, ஒரு குரூப்பாக, டீமாக போனால்தானே அங்கே இருக்கும் மற்ற வாக்களர்களுக்கு தெரியும்? அதை ஒருங்கிணைப்பவர்தான நிர்வாகி? எங்காவது இது நடந்திருந்தால் அவரை பாராட்டவும் நாம் கடமைப்பட்டவர்கள்!
ஆனால் பேருக்கு ஒரு Flex Banner ஐ வைத்துவிட்டு, அதில் சிலர் பெயரை போட்டிருக்கிறார்கள். ஒருவர் பெயர் அதில் இருப்பது அவருக்கே தெரியாது. அவரிடம் கேட்கவும் இல்லை. அடடா என்ன டீம் வொர்க்!
ஏன் இது அவ்வளவு முக்கியமா?
ஆம், மிக முக்கியம் என்பதை மேற்கு வங்கத்தில் நடந்த நிகழ்வுகளை வைத்து எழுதுகிறேன்.
பிரஷாந்த் கிஷோரின் டீம், ஒபீனீயன் சர்வே என்று பெயரில் மேற்கு வங்கத்தில் மூளை முடுக்கெல்லாம் சத்தமில்லாமல் எடுத்தார்கள். அவர்கள் மூலம் யார் பாஜக அதரவாளர்கள் என்று அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு பல இடைஞ்சல்கள், மிரட்டல்களை கொடுக்க திரிணமுல் காங்கிரஸ் குண்டாக்கள் ஆரம்பித்து விட்டார்கள்.
ஆனால் அந்த பாஜக ஆதரவாளனுக்கு லோக்கல் பாஜக நிர்வாகி யார் என்றே தெரியவில்லை. அப்படி தெரிந்து ஆதரவு கேட்டால், அடுத்த நாள் திரிணமுல் காங்கிரஸ் குண்டா வந்து, அதை சொல்லி அடிக்கிறான். அதாவது பாஜக நிர்வாகி என்ற பெயரில், திரிணமுள் காங்கிரஸின் மோல். மேலும் உதவ நினைக்கும் நிர்வாகிகள் ஒன்றாக இணைந்து டீம் வொர்க் செய்யாததால், தனிப்பட்ட வகையில் அவர்களை கட்டம் கட்டி கொல்லப்பட்டவர்கள் கூட உண்டு.
அந்த சூழலில் மேற்கு வங்க தேர்தல் வந்தபோது பாஜக ஓட்டுக்களை வாக்களிக்க. செல்லாதவாரு, அல்லது மிரட்டி பணியவைக்க அவர்களுக்கு தெரிந்திருக்கிறது. ஆனால் தனிமரமாக இருக்கும் தொண்டன், பாஜக ஆதரவாளன் தன் பாதுகாப்பு கருதி வாக்களிக்கவில்லை. பாஜக வாக்காளனுக்கு சுதந்திரமும், ஆதரவும் இருந்திருந்தால் சென்ற சட்டமன்ற தேர்தலில் இன்னும் கூடுதலாக பல தொகுதிகளில் பாஜக வென்றிருக்கும்!
இப்போது தமிழகத்தில், மேற்கு வங்கத்தில் இருந்த அதே நிலை இங்கே இருக்கிறது. பாஜக ஓட்டுக்கள் யார் என்று திரிணமுள் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு தெரிந்து இருந்தது போல திமுக, அதிமுக நிர்வாகிகளுக்கு நன்கு தெரிந்து இருக்கிறது, ஆனால் பாஜக நிவாகிகளுக்கு அது தெரியவில்லை, தெரிந்து கொள்ள விரும்பவுமில்லை. எல்லாம் அண்ணாமலையும், மோடியும் பார்த்துக் கொள்வார்கள்!
ஆனால் இதெல்லாம் செய்ய முடியாத, நேரமில்லாத, விருப்பம் இல்லாத ஒரு நிர்வாகி, எப்படி வசூல் வேட்டையை மட்டும் சிறப்பாக செய்ய தெரிந்திருக்கிறது? அப்படிப்பட்ட ஒரு நிர்வாகியை, திமுககாரர் எப்படி காசு கொடுத்து தேர்தலில் வாங்குவது என்பதில் கை தேர்ந்தவர்கள். திராவிட கட்சிகளில் பல உள்குத்து இருந்தாலும், அவர்கள் பணம் அல்லது பதவி என்ற ஏதாவது ஒரு கெட்ட விஷயதில் நல்ல இணைவை பார்க்க முடியும். அது பாஜகவிற்கு இயற்கையாக நேர்மையாக கொண்டுவர நாட்கள் ஆகும் என்றால், வருகின்ற தேர்தலில் தோல்வியை சந்தித்த பின்னர்தான் அதை கற்றுக்கொள்ள முடியும் என்றால், கையில் இருக்கும் பழம் வாய்க்கு எட்டாத நிலை, அதாவது 2031 என்ற தேர்தலில்தான் அது முடியலாம்.
🎯 இதையெல்லாம் சரி செய்தால் பாஜக கண்டிப்பாக 2024 தேர்தலில் தனியாக போட்டியிடலாம். அதுவும் அதிமுக என்ற ஊழல் கட்சியோடு நின்றுகொண்டு ஊழலை பற்றி பேசமுடியாத சூழல் ஒருபுறம், அதிமுக கட்சிகாரர்கள் உறவால் கரப்ஷன், கமிஷனை கற்றுக்கொள்ளும் நிர்வாகிகள் மறுபுறம் என்பதை தவிர்க்க முடியும்.
குறிப்பாக பாராளுமன்ற. தேர்தலிலேயே அதை செய்ய வாய்ப்புகள் உள்ளது, தமிழகத்தில் மோடியை 42% மக்கள் விரும்பும் இந்த சூழலில், வெறும் 21% மக்களே மோடி வேண்டவே வேண்டாம் என்று சொல்கிறவர்கள் இருக்கிறார்கள் என்று பாண்டேயின் சமீபத்திய கருத்து கணிபபு சொல்கிறது.
மேலும் எதிர்கட்சியான அதிமுகவே ஒரு பஞ்சாயத்து தலைவருக்கு 50 லட்சம் என்று ஏலம் விடும் மிக மோசமான, கேவலமான நிலை தமிழகத்தில் திராவிட கட்சிகளிடம் இருக்கிறது. அப்படி இருக்கும்போது, எதிர்கட்சியில் இருப்பவர்கள் கூட பாஜகவில் வாய்ப்பு கிடைத்தால் போட்டியிட தயாராக இருக்கிறார்கள்.
🔜 அண்ணாமலை மட்டுமே எல்லாவற்றையும் செய்துவிட முடியாது. அண்ணாமலை ஆபீஸில் இல்லை என்றால் காக்கை கூட அலுவலகம் வருவதில்லை. அதாவது அண்ணாமலைக்கு முன்னால் படம் காட்டுவதில்தான் கூட்டம் உள்ளது. அவர் கிளம்பி விட்டால் எல்லோரும் எஸ்கேப். உங்களுக்கு சந்தேகம் இருந்தால், இப்போது கமலாலயம் அல்லது உங்கள் அருகில் உள்ள லோக்கல் பாஜக அலுவலகம் போய் பாருங்கள்.
ஆனால் நாம் நினைப்பது போல அதை அவ்வளவு எளிதாக செய்து விட முடியாது. ஏனெனில் கட்சி நிர்வாகிகள் Volunteer தான். அவர்கள் தங்கள் கைக்காசை போட்டு செலவு செய்கிறார்கள். அப்போது அவர்கள் தங்களது சம்பாதிக்கு தொழிலை விட்டு கொடுக்க முடியாதல்லவா? அப்போது அதை யார் செய்வது? முதலில் தங்களது குடும்ப கடமையை முடித்த, அல்லது அதற்கு தேவையில்லாதவர்களுக்கு முழு நேர பொறுப்பை கொடுக்கலாம்.
அப்படி கட்சிக்காக உழைப்பவர்களிடம், எமோஷன் என்பது மட்டும் தகுதியில்ல, டீமை அரவணைத்து செல்லும் பக்குவம், அவர்களிடம் எளிதாக வேலை வாங்கும் லீடர்சிப் குவாலிட்டி, சரியானவர்களை இணங்கானும் அனுபவம் எல்லாம் தேவை. அதுவெல்லாம் இருந்தால், இன்றைய எலெக்ட்ரானிக் உலகத்தில் கோடி கோடியாக செலவு செய்யாமலே, வெற்றி பெற முடியும்.
ஆம், அண்ணாமலை என்ற அருமையான முகவரியும், மோடி என்ற நம்பிக்கையும், அமித்ஷா என்ற சாணக்கியனும், பாஜக என்ற மாபெரும் கட்டமைப்பும், அதன் அஸ்திவாரமான RSS இம் இருக்கின்ற இந்த நேரத்தில் இதை அடுத்த சில மாதங்களில் செய்ய முடித்தால், பாஜவின் வெற்றியை 2024 லேயே ருசிக்க முடியும்.
ஆனால் இன்றைய எதார்த்த நிலை என்பது இரண்டாம், மூன்றாம், நான்காம் கட்டம் என்று எல்லாம் இருந்தும் எதுவும் இணக்கமில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. ஆம், சிம்பிளாக சொல்லப்போனால் அண்ணாமலை என்ற பேனரில் Auto Run Mode ல் தமிழக பாஜக போய்க் கொண்டிருக்கிறது. அது கதைக்கு உதவாது!
📌 அதிமுகவில் டயரில் விழுந்தார்கள், திமுக அடிமைகள் திருட்டு கூட்டம் என்று அவர்கள் தோலுரிக்க அண்ணாமலை இருக்கிறார். அதை அவர் பார்த்துக் கொள்வார். ஆனால் மோடி, அண்ணாமலை விதைத்து, கதிராக விளைந்து கிடக்கும் பயிரை அறுவடை செய்து, களத்திற்கு கொண்டுவந்து, அடித்து, சுத்தப்படுத்தி, மார்க்கெட்டுக்கு கொண்டு வருவது அண்ணமலையின் வேலையல்ல, நிர்வாகிகள் வேலை! இங்கே அது இப்போது நடக்கவில்லை என்பதுதான் கவலைக்குரிய விஷயம்!?
இதை ஏன் ஓபனாக தெரிவிக்கிறேன்? இது போன்றவற்றை மூடி மறைத்தால் நாமும் தவறானவர்களே, தகுதியில்லாதவர்களே!
இது உண்மை என்று நினைத்தால் பயப்படாமல் கமெண்ட் செய்யுங்கள், இந்த பதிவை உங்கள் லோக்கல் பாஜக நிர்வாகிகளுக்கே தெரிந்தால் அனுப்புங்கள், தெரியாவிட்டால் அதையும், நான் இந்த தொகுதி, ஊர், எனக்கு தொகுதி நிர்வாகிகள் யார் என்றே தெரியாது என்று பாஜக தலைமைக்கு அனுப்புங்கள்.
இல்லை என்றால் வழக்கம்போல என்னை திபாஜக சொம்பு, இவன் எழுதுவதை பொருட்படுத்த தேவையில்லை, பிரியாணிக்காக எழுதுகிறான் என்று வழக்கம்போல கமெண்ட் போட்டுவிட்டு கடந்து செல்லுங்கள்.
இதற்கு சரியான ரெஸ்பான்ஸ் கிடைத்தால், பாஜகவிற்கு லிட்மஸ் டெஸ்ட் வைத்து, நிர்வாகம் எப்படி இருக்கிறது என்று ஒரே மாதத்தில் தெரிந்து கொள்ள அடுத்த பதிவில் விபரமாக எழுதுகிறேன். இல்லாவிட்டால் கனடா, சீனா என்று எனக்கு பிடித்த ஏரியாக்களில் எழுதுவதை வழக்கம்போல தொடர்கிறேன்.
It is time to act, otherwise West Bengal fate will repeat in Tamilnadu, though we have great leader Annamalai with us to lead us!
🪷🚩🪷🚩🤺
#Indhea
Comments
Post a Comment