பத்து கிணறுகள் ஒரு குளத்திற்குச் சமம், பத்து குளங்கள் ஒரு ஏரிக்குச் சமம், பத்து ஏரிகள் ஒரு வதற்குச் சமம், பத்து புத்திரர்கள் ஒரு மரத்திற்குச் சமம், எவர் ஒருவர் நற்கனிகள் பூத்துக் குலுங்கும் நல் மரங்களை நடுகின்றாரோ அவரிடம் தேவதைகளும் முனிவர்களும் கந்தர்வர்களும் மூன்று யுகங்களும் தங்கி அருள் புரிவர்.

 


பத்து கிணறுகள் ஒரு குளத்திற்குச் சமம், பத்து குளங்கள் ஒரு ஏரிக்குச் சமம், பத்து ஏரிகள் ஒரு வதற்குச் சமம், பத்து புத்திரர்கள் ஒரு மரத்திற்குச் சமம், 

எவர் ஒருவர் நற்கனிகள் பூத்துக் குலுங்கும் நல் மரங்களை நடுகின்றாரோ அவரிடம்

தேவதைகளும் முனிவர்களும் கந்தர்வர்களும் மூன்று யுகங்களும் தங்கி அருள் புரிவர். 


‘மரங்களில் நான் அரச மரமாக இருக்கிறேன்’ என்று பகவான் ஸ்ரீ.கிருஷ்ணன் கூறுகிறார்.


ஒரு *அரச மரம்* நட்டால் ஒரு ஆண்டு சொர்க்கலோக பதவி கிட்டும் என்று *விருஷ ஆயுர் வேதத்தில்* குறிப்பிடப் பட்டுள்ளது.

அதிக அளவில் ஆக்ஸிஜன் தரும் மரமாக அரச மரம் விளங்குகிறது. பிள்ளை வரம் வேண்டுவோர் அரச மரத்தைச் சுற்ற சொல்லி இருப்பதில் மருத்துவ காரணங்கள் உள்ளன.

அரச மரத்தின் அதிக பிராண வாயுவினால் சுவாசம் சுத்தமடைகிறது, அதனால் எண்ணம் சுத்தமடைகிறது, அதனால் புத்தி தெளிவாகிறது, ஞானம் பிறக்கிறது. 

*புத்தருக்கு ஞானம் அளித்த போதி மரம் என்பது ஒரு அரச மரமே*. அதன் காரணமாகவே அரச மரத்தின் அடியில் அமர்ந்து கிராம பஞ்சாயத்துகளில் நீதி வழங்கி னார்கள்.


*ஆல மரம்* வாக்கின் அடையாளம். அதன் காரணமாகவே வணிகர் ஜாதியினரான *பனியாக்கள்* அதன் அடியில் கூடி தங்கள் வணிகத்தை நடத்தினார்கள். அதன் காரணமாகவே 

அது ஆங்கிலத்தில் *பான்யன் ட்ரீ* என்று அழைக்கப் பட்டிருக்கிறது. ஆல மரம் மேகங்களை ஈர்த்து அதிக மழையை தருவிக்கக் கூடியவை, அதனால் ஆல மரங்களை நிறைய வளர்க்க வேண்டும்.

சாஸ்திர முறைப்படி இரண்டு ஆல மரங்களை நடுபவர்களுக்கு கைலாயத்தில் ஒரு இடமும் கூடவே கந்தர்வ கன்னியரும் கிடைப்பார்கள் என்றும் *விருஷ ஆயுர்வேதம்* நூல் சொல்கிறது.

மேகங்களை இழுக்கும் சக்தியுள்ள இன்னொரு மரமாக *இலுப்பை மரத்தையும்* அது ஆலையில்லா ஊருக்குச் சர்க்கரையானது. 

தமிழ் நாட்டில் அருகி வரும் இந்த இலுப்பை மரம் அவசரமாக மிக அதிக அளவில் மீண்டும் வளர்க்கப் பட வேண்டியதன் அவசியம் இலுப்பை மரத்தின் மகிமைகளைப் படிக்கும் பொழுது புரிகிறது. 


அரசு ஆண் மலடை நீக்கும் வல்லமை உடையதினாலும் வேம்பு பெண் மலடை நீக்கும் வன்மையுள்ளது என்பதினாலும் அரசுக்கும் வேம்புக்கும் திருமணம் செய்யும் ஃபெர்டிலிடி

ரைட்ஸ் உருவானது.


நூறு ஆண்டுகள் வாழ்வதற்கு வேப்ப மரப்பட்டையின் கஷாயம் அருந்த வேண்டும்.


நெட்டிலிங்க மரங்களே தமிழ் நாட்டில் *அசோக மரங்களாக* கருதப் படுகின்றன. *உண்மையான அசோக மரங்கள் இலங்கையில் இருந்து தருவிக்கப் பட்டு* தமிழ் நாட்டில் வளர்க்கப் பட வேண்டும்.


*இப்படி மரங்கள் குறித்தான எண்ணற்ற செய்திகள் ஒவ்வொரு மரத்தின் மீதும் பெரும் மரியாதையையும் பிரமிப்பையும் அளிக்கின்றன.* தமிழ் நாட்டில் பெய்த மழை அளவிலேயே அதிகமாக பெய்த இடம் திருஆலங்காடு. திருவாலங்காட்டின் தல விருட்சம் ஆல மரம் என்பதும் *ஆல மரங்கள் நிறைந்த இடத்தில் அதிக மழை பெய்தது இயற்கைதான்.* நாம் சாதாரணமாக எதிர் கொள்ளும் வேப்பமரத்தின் பயன் பாடுகள் பிரமிக்க வைக்கின்றன. *புங்கை மரத்தை* அதிகம் வளர்ப்பதினால் தமிழ் நாட்டின் பயோ எரிபொருள் தேவையில் தன்னிறைவை அடையலாம். பெட்ரோல் டீசல் விலையேற்றத்தை சமாளிக்க புங்கை மரத்தை அதிக அளவில் வளர்த்து புங்கை எண்ணெய் தயாரிப்பது ஒரு மாற்றாக அமையும் அதே நேரத்தில் மழையையும் பெற்றுத் தரும் போன்ற தகவல்கள் தமிழ் நாடு அரசு அவசியம் கவனிக்க வேண்டியவை.


*ஒரு அரசு, ஒரு வேம்பு, ஒரு ஆல், பத்து புளி, முக்கூட்டாக வில்வம், விளா, நெல்லி* அருகருகே நட்டுக் கூடவே *ஐந்து மாமரங்களையும் நடுவோர்* நரகத்துக்குப் போக மாட்டார்கள் என்று *விருஷ ஆயுர்வேதம்* சுட்டுகிறது. 

அந்தக் காலத்தில் இவை போன்ற *சுலோகங்கள் மூலமாகவே சூழலியலைப் போற்றி வளர்த்து இருக்கிறார்கள்*. *சொர்க்கம் நரகம் என்பதெல்லாம் நாம் வாழும் சூழலே* என்பதையும் நம் வாரிசுகளின் நன்மைக்காகவே இந்த பூமியை நாம் விட்டுச் செல்கிறோம் என்ற உண்மையையும் அவை உணர்த்துகின்றன. மரம் வளர்ப்பதினால் சொர்க்கத்தையும் நம் வாரிசுகளை மரமில்லாத நீரில்லாத மாசடைந்த நரகங்களில் இருந்தும் காக்கிறோம். தில்லை அம்பலமான சிதம்பரத்தின் தல விருட்சம் *தில்லை என்னும் மரம்*. இன்று அம்பலத்தில் நடராஜர் மட்டுமே ஆடுகிறார், ஆனால் தில்லை மரங்கள் மட்டும் அம்பேல் ஆகி விட்டது. *தில்லை மரம் ஒரு பாலுணர்வு ஊக்கி* மரம் மேலும் அவற்றை *அலையாற்றி மரங்களாக கடற்கரைகளில் வளர்த்தால் அவை சுனாமி தடுப்பாகவும் எரிசக்தி அளிக்கும் வளங்களாகவும் அமையும்*. *செஞ்சந்தன மரம்* அணுக்கதிர் வீச்சைத் தடுக்க வல்லது என்றும் *மோசஸ், சினாய் ஏரியில்* வீசி எறிந்து நீரைத் தூய்மை செய்த மரத்தடி செஞ்சந்தன மரமாகவே இருக்க வேண்டும். கல்பாக்கம், கூடங்குளம் பகுதிகளில் ஒரு பாதுகாப்பிற்காக செஞ்சந்தன மரத்தை அதிகம் நடலாம்.  


நாம் அதிகம் அறிந்திராத கண்டிராத மரங்களான *மருதம், சேராங்கொட்டை, செம்மந்தாரை, தான்றி மரம், வெப்பாலை, வன்னி, வாதநாராயணம், கடம்பு, புன்னை, நொச்சி, வேள்வேல், தழுதாழை, ஆனைப்புளி, பதிமுகம், மகோகனி, சிறுநாகப்பூ, தோத்தாங் கொட்டை, எட்டி, இயல்வாகை* ஆகிய அரிய வகை மரங்களின் 

மருத்துவ, சுற்றுச் சூழல் முக்கியத் துவங்களை அறிந்து நாம் அவற்றை அதிக அளவில் வளர்த்து மீட்டெடுக்க வேண்டும்.

மரங்களை பொறுத்து

அதன் தன்மையை சுருக்கமாக அறியலாம்.


*நெல்லி* - இந்தியாவின் எதிர்காலம்,


*மருதம்* - இதய நோய் நீக்கி,


*வெப்பாலை* - பல நோய் நிவாரணி,


*முருங்கை* - தாது புஷ்டி மரம்,


*வேள்வேல்* - மேக நிவாரணி,


*கொய்யா* - ஏழைகளின் ஆப்பிள்,


*கருங்காலி* - கருப்பு வைரம்


தொகுப்பு: வாழ்வு தரும் மரம்......



90 நாட்களில் மரம் வளர்ப்பது எப்படி?


மற்றவர்களைப் போல விதை போட்டு நாற்று வெச்சு மரம் வளர்த்தா எந்தக் காலத்துல நடக்கிறதுன்னு வேகமா வளர்க்கிற வழியைக் கண்டுபிடித்தாராம்.

கிராமங்களில் சாலைகளில் நிறைய மரங்களை நட்டு வருறேன். ஆலமரம், அரச மரம், பூவரசு, அத்திமரம், வாகை மடக்கி போன்ற மரங்களின் கிளையைக் கொண்டு வந்துடுவேன்.

சாக்குப் பையில் செம்மண் மற்றும் கரம்பை மணலோடு இயற்கை உரமான மக்கிய குப்பைகளைக் கலந்து தண்ணீர் ஊற்றி ஊறவிடுவேன்.

அதற்குப் பிறகு 6 அடி உயரமுள்ள மரக்கிளையை அதில் நடுவேன். 14வது நாள் துளிர்க்க ஆரம்பிச்சுடும். 30வது நாள் இலைகள் வந்துடும். 70வது நாள் ஒரு மரம் நடத் தயாராயிடும்.

ஆடு, மாடு, நாற்றைத் தின்னுடும். வெயிலில் காய்ஞ்சுடும்னு கவலையில்லாம ஒரு ஃபாஸ்ட் ஃபுட் மாதிரி ஒரு ஃபாஸ்ட் ட்ரீ ரெடி” என்கிறார் அர்ச்சுனன்.


அரசு கொஞ்சம் உதவினால்… 20 மீட்டர் இடைவெளியில் 700 கிலோ மீட்டர் தூரத்துக்கு சென்னை முதல் குமரி வரை நாற்கரச் சாலையில் 35 ஆயிரம் மரங்களை நட்டால் ஒரு மினி காட்டுக்குள் ஏஸிக்குள்ளே தமிழ்நாடே இருக்கும்.


செடி நட்டு, அது மரமாக வளர ஆண்டுக் கணக்காகும். அதனால், மரக்கிளைகளை வெட்டி, நட்டு, மரங்களாக உருவாக்கும் முயற்சி செய்தேன். விதை போட்டு மூன்றாண்டுகளில் வளரக்கூடிய மரக்கன்றுகள், மரக்கிளைகளை வெட்டி நட்டால் 90 நாட்களிலேயே மரமாக வளர்ந்து விட்டன. மரக்கிளைகளை வெட்டி நட்ட ஆயிரம் மரங்கள் இராஜவல்லிபுரத்தைச் சுற்றி உள்ளன. இதை என் சொந்தச் செலவிலேயே செய்தேன். மேலும் எங்கள் ஊர் குளத்துக்கரையைச் சுற்றிலும் பனங்கொட்டைகளை சும்மா விதைத்து வைத்தேன். தற்போது சுமார் 2,000 பனைகள் குருத்துவிட ஆரம்பித்துள்ளன.


கடந்த மூன்றாண்டுகளில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், கோயில்கள், தனியார் நிறுவனங்களுக்கு 27 ஆயிரம் மரங்களை இலவசமாக வழங்கியுள்ளேன்" என்கிறார் அர்ஜுனன்.


90நாட்களில் மரம் வளர என்ன செய்ய வேண்டும்?


*பெரிய மரத்தின் நடுத்தர அளவு உடைய கிளைகளின் கம்புகளை 6 அடி நீளத்தில் வெட்ட வேண்டும்.


*ஒரு சிமெண்ட் கோணிப்பையில் மண் நிரப்பி வைத்துக்கொண்டு, கம்பின் பச்சைத்தன்மை மாறுவதற்குள் நட்டு விட வேண்டும்.


* கால்நடைகளின் சாணம் போன்ற இயற்கை உரங்களே போதுமானது. குறைந்தளவு நீர் ஊற்றிவர வேண்டும்.


* நடப்பட்ட கம்பை அசைக்கவோ, மாற்றவோ கூடாது. கால்நடைகள் இலையை மேய்ந்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இப்படிப் பராமரித்தால், 30 நாள்களில் தளிர ஆரம்பித்து விடும். 90 நாள்களிலிருந்து நிழல் கொடுக்கிற அளவுக்கு மரம் வளர்ந்துவிடும்.


* வேம்பு, அத்தி, மா, பூவரசு போன்ற தமிழக தட்பவெப்ப நிலைக்கு உகந்த அனைத்து மரங்களையும் இம்முறையைப் பயன்படுத்தி வளர்க்கலாம்.


மரம் தேவைப்படும் கிராம பஞ்சாயத்துகள் விரும்பினால், ஒரு கிராமத்திற்கு 1,000 மரங்கள் வரை இலவசமாகக் கொடுக்கத் தயாராக உள்ளேன். தனிநபர்கள் என்றால், பயிற்சி தர தயாராக உள்ளேன்" என்கிறார் அர்ஜுனன்.


தொடர்புக்கு : திரு.அர்ஜுனன்


அலைபேசி : 97903 95796


வாழ்த்துகள்

 *நன்றி* 

    🙏🏻🙏🏻🙏🏻

Comments

Popular posts from this blog

நான் கிட்டத்தட்ட 22 வயது வரை நாத்திகனாக இருந்தேன். கோவில்களுக்குச் செல்வது பிடிக்க வில்லை. நான் அவற்றை பிராமணர்கள் மற்றும் பிறர் பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாகவே கருதினேன். ஒவ்வொரு அடியிலும் அவர்கள் எப்படி பணம் கேட்டார்கள் என்பதை நான் வெறுத்தேன்.

8th August 11am, Delhi: MAHA PANCHAYAT- 100Cr HINDU Movement for Abolition of totally Discrminatory HR&CE Act.1951, all over India. Temples should function as independently as MOSQUES & CHURCHES. Money taken/swindled should be given back by Govts.

1961 ஆம் வருடம் வெளிவந்த தேன்நிலவு படத்தில் உள்ள பாட்டு பாடவா என்ற மிக இனிய பாடல்... ஜெமினி கணேசன் வைஜெயந்தி மாலா நடித்த பாடல்.... அவ்வளவு இனிமையான பாடல்... ஆனால் படத்தில் பார்த்தால் இரண்டு பேரும் குதிரை மேல் உட்கார்ந்து கொண்டு மெல்ல குதிரை ஓட்டிக்கொண்டு செல்வார்கள்... ஆனால் இந்த காலத்து பசங்களும் அந்த பாட்டுக்கு கலக்கலாக நடனமாடி விட்டார்கள்... சில பல சாட்களை நான் இங்கே பப்ளிஷ் செய்துள்ளேன் பாருங்கள்... அந்தப் பாடலில் நடித்த வைஜெயந்திமாலா அப்போது எவ்வளவு அழகாக இருந்துள்ளார் பாருங்கள் மேலே போட்டோக்களை பார்க்கவும்