சனாதனம்...! சனாதனத்தை புரிந்து கொள்ள யாராலும் முடியாது புரிந்தது போல் ஒருவர் அதனை இகழலாம் அல்லது புகழலாம்... *ஆனால் அது முதலும் முடிவும் அற்றது அதுவே இந்து மதம்* அதை இகழ்பவனும் , புகழ்பவனும் அதனுள்ளே அடக்கம்

 


#சனாதனம்...! 


சனாதனத்தை புரிந்து கொள்ள யாராலும் முடியாது புரிந்தது போல் ஒருவர் அதனை இகழலாம் அல்லது புகழலாம்...


*ஆனால் அது முதலும் முடிவும் அற்றது அதுவே இந்து மதம்*


அதை இகழ்பவனும் , புகழ்பவனும் அதனுள்ளே அடக்கம்


இந்த  உலகிற்கு நிகர் அன்னையும் தந்தையும் என தெரிவித்தவர் :  *விநாயகர்*


ஒருவர் சிரசினை மற்றொருவருக்கு பொருத்தும் இக்கால விஞ்ஞான முயற்சியின் ஆரம்பம்  : *விநாயகர்*


அக்கால அணுகுண்டு : *பிரம்மாஸ்திரம்*


கலப்பு திருமணம் :*முருகன்*


அன்றே பெண்ணுக்கு சம உரிமை  :  *அர்த்தநாதீஸ்வரர்*


கணவன் சொல்லை மீறியதன் விளைவு  :  *தாட்சாயிணி*


எல்லை தாண்டியதன் விளைவு  :  *சீதா*


கடவுளுக்கு பக்தியின் மிகுதியில் எச்சில் பழங்களை தந்தவர்  :  *சபரி*


தான் அணிந்த மாலையை தந்தவர்  :  *ஆண்டாள்*


அறுசுவை அற்ற உணவை அளித்தவர் : *விதுரர்*


அதையும் விரும்பி உண்டவர்  :  *பார்த்த சாரதி*


ஓர் சத்ரியன் சாமியார் ஆகலாம்  :  *விஸ்வாமித்திரர்*


ஓர் பிராமணன் ஆயுதம் ஏந்தி போர்க்களம் புகலாம் : *பரசுராமர்*


தந்தை கூறியதால் ஏன் என்று மறுகேள்வி கேட்காமல் தாயின் தலை கொய்தவர்  :  *பரசுராமர்*


ஓர் பட்டியலினத்தவர் மிகச்சிறந்த நாயன்மார் ஆகலாம்  :  *நந்தனார்*


ஓர் வேடுவனும் நாயன்மார் ஆகலாம்  :  *கண்ணப்ப நாயனார்*


*ஓர் திருடனும் இதிகாசம் எழுதலாம்  :  *வால்மீகி*


அடுத்தவர் மனைவியின் மீது ஆசை கொண்டால் அது  விலங்கானலும் , மனிதரானாலும், இராட்சசனானாலும் ஏன் தேவாதி தேவரே ஆனாலும் தண்டனை உண்டு  :  *வாலி, துட்சாதணன், இராவணன், இந்திரன்*


கொடுத்த வாக்கை காப்பாற்ற இறுதிவரை பிரம்மச்சரியம்  :  *பீஷ்மர்*


செஞ்சோற்று கடன் தீர்க்க தம்பிகள் என்று தெரிந்த பிறகும் அதே நிலையில் தொடர்வது  :  *கர்ணன்*


தர்மத்தை காக்க சாரதியாகவும்  :  *கண்ணன்*


கண்ணனும் , இராமனும் ஒருவரே என்று தெரிந்தாலும் என் பிரபு இராமர் மட்டுமே என்று பக்தி பிடிவாதமாக :  *ஹனுமன்*


தாயின் வாக்கை காப்பாற்ற அதே பிரபுவை எதிர்ப்பது  :  *ஹனுமன்*


வேடுவனும் , விலங்கும் எனது தம்பிகள் என்று பாராபட்சம் காணதிருப்பது : *இராமன்*


தனது அண்ணனுக்காக தான் கட்டிய மனைவியை பிரிந்து 14 ஆண்டுகள் துயிலடையா நிலை மேற்கொண்டது. :  *இலட்சுமணன்*


இந்த பரதத்தை விட என் பரந்தாமனின் பாதசுவடுகளே எனக்கு முக்கியம் : *பரதன்*


தன் கணவன் காணாததை தானும் கான விரும்பேல் :  *காந்தாரி*


பக்தியால் பரந்தாமனை கட்டுற செய்தவன் : *சகாதேவன்*


பக்தியால் பிரபுவை எதிர்த்து நின்றவன் : *ஹனுமன்*


தன் அண்ணன் செய்வது தவறு என்று சுட்டிக் காட்டி வெளியேறிவன் : *விபூஷ்ணன்*


தன் அண்ணன் செய்வது தவறே ஆனாலும் இறுதிவரை உடன் நின்றவன். :   *கும்பகர்ணன்*


நண்பணின் மனைவியினை அபகரித்து சென்றவனை மறைந்திருந்து தாக்கியவன். : *இராமன்*


தன் மனைவியை அபகரித்து சென்றவன் நிராயுதபாணியாக நிற்கும் பொழுது இன்று போய் நாளை வா என்று கூறிவன். : *இராமன்*


தன்னை நூறு முறை வஞ்சிக்க அனுமதி தந்தவன் : *கண்ணன்*


பக்தனின் ஹரி நாராயண எனும் ஒரு குரலுக்கு ஓடோடி வந்தவன்:  *நரசிம்மன்*


அன்றைய TEST TUBE BABY :  *தோரோணாச்சாரியார்*


அன்றைய incubator  :  *கமண்டலம்*


வந்திருப்பது கடவுளே ஆனாலும் தன் சீடன் மகாபலியை காப்பாற்ற முயற்சித்தார் :  *சுக்கிராச்சாரியார்*


வந்திருப்பது கடவுளே ஆனாலும் தன் வாக்கை காப்பாற்ற தானம் செய்தவன் :  *கர்ணன்*


தன் மனைவியும் தன் நண்பனும் பழகுவதை எள்ளளவும் சந்தேக நோக்கோடு பார்த்ததில்லை :  *துரியோதனன்*


கருவறையில் போர் அறிவு பெற்றவன்  : *அபிமன்யு*


எதிரியே ஆனாலும் தன் தொழிலில் நேர்மை தவறாதவன்  :  *சகாதேவன்*


உலகை காப்பவனே ஆனாலும் தன் திருமணத்திற்காக கடன் வாங்கியவன்  :  *சீனீவாசன்*


கடவுளுக்கே கடன் தந்தவன்  :  *குபேரன்*


தன் திறமையை நிருபிக்க பறவையின் கண்ணை கொய்தவன்  :  *அர்ஜுனன்*


மாலை நேரம் பறவையின் வாயில் உணவு உள்ளது அது நிச்சயம் தன் குஞ்சுகளுக்கு உணவினை எடுத்து செல்வதாக தோன்றுவதால் என்னால் தாக்கயிலாது  :  *கர்ணன்*


அன்றைய அதி நவீன போர் விமானம்  :  புஷ்பக விமானம்


அடுத்தவர் மண் மீது ஆசை பட்டால்  : *மகாபாரதம்*


அடுத்தவர் பெண் மீது மோகம் கொண்டால்  :  *இராமாயணம்*

Comments

Popular posts from this blog

Om NAMO NArendra MOdi Namaha*🔥🙏🪷 Shri Narendra Modi Ashtotra Namavali ஓம் ஸ்ரீ நரேந்த்ராய நமஹ (Salutations to the revered Narendra) 1. ஓம் விஶ்வ-நேத்ரே நமஹ – Salutations to the leader of the world stage. 2. ஓம் பாரத-பக்தாய நமஹ – Salutations to India’s devoted champion. 3. ஓம் ஜடூ-ஜப்பி-ப்ரதாய நமஹ – Salutations to the giver of world-famous hugs.

The sound of gunfire pierced the air of the quiet valleys. A terrorist attack took place near the Pahalgam market area — *turning a place like paradise into hell.* People screamed. Blood flowed. There was chaos everywhere. *👺 "The terrorists were asking for names and religions and then firing bullets."*

SUGA Elite Cruise Travellers Club* SUGA Elite Cruise Travellers Club is in tie-ups with international Cruise T I'll keep you ours and Travels companies. We can travel with the following major cruise lines: