நேபாளத்தில் சில நாட்களாக நடக்கும் ஆர்பாட்டமும் மக்கள் போராட்டமும் பெரும் கவனம் பெற்றுள்ளன, வழமைபோல் தமிழக ஊடகங்கள் இங்கு சத்தமில்லை அப்படி செய்யவும் மாட்டார்கள் காரணம் விவகாரம் அப்படியானது நேபாளம் உலகின் ஒரே இந்துநாடு எனும் பெருமையுடன் இருந்த தேசம், அது யாருக்கும் அடிமையாக இருந்ததுமில்லை, மொகலாயமோ செங்கிஸ்கானோ பிரிட்டிசாரோ அதை தொடவில்லை, அதன் நில அமைப்பு அப்படியானது
நேபாளத்தில் சில நாட்களாக நடக்கும் ஆர்பாட்டமும் மக்கள் போராட்டமும் பெரும் கவனம் பெற்றுள்ளன, வழமைபோல் தமிழக ஊடகங்கள் இங்கு சத்தமில்லை அப்படி செய்யவும் மாட்டார்கள் காரணம் விவகாரம் அப்படியானது
நேபாளம் உலகின் ஒரே இந்துநாடு எனும் பெருமையுடன் இருந்த தேசம், அது யாருக்கும் அடிமையாக இருந்ததுமில்லை, மொகலாயமோ செங்கிஸ்கானோ பிரிட்டிசாரோ அதை தொடவில்லை, அதன் நில அமைப்பு அப்படியானது
அங்கே இந்துமதம் காலம் காலமாக பிரதானம், புத்தன் அங்குதான் பிறந்தான் அருகிருக்கும் திபெத் பவுத்த பீடமாய் இருந்தது ஆனாலும் அங்கே இந்துமதத்தை அசைக்கமுடியவில்லை
துருக்கியரும் பாரசீகரும் மொகலயரும் கூட அதனை தொடமுடியவில்லை, பிரிட்டிசாரும் தோற்ற இடம் அது
அந்த இந்து பூமி எப்போதும் இந்துக்களுக்கு ஆதரவாய் இருந்தது, மராட்டிய படைகள் மொகலாயருக்கு எதிராக் பிரிட்டிசாருக்கு எதிராக நிகழ்த்திய போர்க்ளுக்கெல்லாம் அது அடைக்கலமாக இருந்தது
நேபாள அரசர்கள் இந்திய இந்து ஆலயங்களுக்கு அள்ளி கொடுத்தனர், நேபாள மன்னர்தான் ராமேஸ்வர ஆலயத்தின் அறங்காவலரில் ஒருவர், அவர் கொடுத்த நகைகளெல்லாம் இன்றும் உண்டு
அப்படி இந்துக்களின் காவல் அரணாக இருந்த நேபாளம் இந்து மன்னருடன் இந்துநாடு எனும் அடையாளத்துடன் இருந்தது
ஆனால் காங்கிரஸ் எனும் கட்சி இந்து எனும் பெயருக்கே விரோதமானது அல்லவா? இந்துக்களுடன் இலங்கையில் பகை , இந்து நண்பர்களான சீக்கியருடன் பகை என எங்கெல்லாம் இந்துக்கள் உண்டோ அவர்களுக்கும் இந்தியாவுக்குமான உறவை அறுப்பதில் ஒருவித விருப்பமுள்ள கட்சி
சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் ஒரு அரணாக இந்து அரணாக நின்ற நேபாளத்தை காங்கிரஸ் அரசு சரியாக அணுகவில்லை
ஆனால் சீனா உள்ளே புகுந்து கம்யூனிஸ்டுகளை ஏவிவிட்டு புரட்சி ஜனநாயகம் என பெரும் கிளர்ச்சி செய்தது, நேபாள மன்னரை காக்கவேண்டிய இந்தியா பெரிதாக எதையும் செய்யவில்லை
விளைவு அரசகுடும்பத்தில் மோதல் வந்து, துப்பாக்கி சூடெல்லாம் நடந்து, பின் நாடெல்லாம் கம்யூனிச கிளர்ச்சி வந்து அதன் பின் மேமாதம் 2001ம் ஆண்டு அது மக்களாட்சி நாடானது
அப்போது அதுவரை இருந்த இந்துராஜ்ஜியம் இந்துநாடு எனும் அடையாளம் மாற்றபட்டு "மதசார்பற்ற"நாடு என்றானது
சீனாவின் பிடிக்குள் நேபாளம் சென்றாலும் சீனாவின் கம்யூனிச இறுக்கம் அங்கில்லை மாறாக இந்துசமய நாடு இல்லை என்ற அறிவிப்பு மட்டும் வந்தது
இதனால் மதமாற்றம் பெருகின, குழப்பம் மேல் குழப்பம் வந்தது, மக்களாட்சியில் ஊழலும் குழப்பமும் தலைவிரித்தாடின, அரசியல்வாதிகளை விலைகொடுத்துவாங்கும் சீனாவினால் குழப்பமே மிஞ்சிற்று
சட்டம் ஒழுங்கு என எதுவுமில்லை, எங்கும் குழப்பம் மதமாற்றம் இன்னபிற
முக்கியமாக இந்து அரசன் இருந்தவரை மகாசீரும் சிறப்புமாக இருந்த இந்து ஆலயங்கள் பாழ்பட தொடங்கின, நிர்வாகம் கெட்டது, கோடான கோடி மதிப்புள்ள தங்க நகைகளெல்லாம் ஊழலில் கரைய தொடங்கின
தமிழக ஆலயங்கள் போல் அங்கும் சர்ச்சைகள் வந்தன
இதனால் சிந்தித்த மக்கள் இந்துநாடாக, ஒரு இந்து அரசனின் கீழ் பாதுகாப்பாக இருந்த தேசம் இப்போது "மதசார்பற்ற" நாடாக மாறி சீரழிவதை கண்டு களத்தில் இறங்கிவிட்டனர்
நேபாளத்தை இந்துநாடாக அறிவிக்கவேண்டும், இந்து தலைவன் வேண்டும், இந்து பாதுகாப்பு வேண்டும் என பெரும் கிளர்ச்சி நடக்கின்றது
சீன மறைமுக உத்தரவில் ராணுவம் களமிறங்கினாலும் சொந்த மக்களுக்கு எதிராக அது திகைக்கின்றது
இந்து மன்னர் ஆட்சி வேண்டும், இந்து நாடு வேண்டும் ,இந்து பூமி வேண்டும், இந்து ஆலயம் சிறப்புற துலங்க, ஆலயங்கள் காக்கபட இந்துநாடு அவசியம், இந்து சிறப்புசட்டம், இந்துகாவல் அவசியம் என பொங்கிவிட்டனர்
பெரும் போராட்டம் நடக்கின்றது
நிஜம் அதுதான், மதசார்பற்ற தேசம் என ஒன்று ஒருகாலமும் சாத்தியமில்லை. அப்படி இருந்தால் ஏதோ ஒருமதத்தை அழிக்க திட்டமிட்டுவிட்டார்கள் என பொருள்
ஒரு மதம் வாழ ஒரு அரசு அவசியம், ஒரு சட்ட காவல் அவசியம், இந்து ஆலயங்கள் துலங்க மதசார்பற்ற அதிகாரிகளை விடுத்து இந்து அதிகாரிகள் அவசியம்
மதசார்பற்ற அரசும் சட்டமும் இந்துக்கள் நிரம்பியுள்ள தேசத்தில் அமையுமானால் அது இந்துக்களின் வீழ்ச்சி, இந்துக்களை குழப்பி மதம்மாற்றமும் இந்து மத ஒழிப்பும் செய்யும் முயற்சி என்பதை நேபாள மக்கள் புரிந்துகொண்டுவிட்டார்கள்
இந்தியா நடக்கும் காட்சிகளை அமைதியாக ஆனால் உன்னிப்பாக கவனிக்கின்றது, இது நேபாளத்தின் உள்நாட்டு விவகாரம் என்றாலும் நேபாள மக்கள் போராட்டத்துக்கு இந்து அரசன் வேண்டும், இந்து நேபாளம் வேண்டும் எனும் கோரிக்கைக்கு இந்தியா ஆதரவு தெரிவிக்கும் என எதிர்பார்க்கபடுகின்றது
உலகை அதிரவைத்திருக்கும் போராட்டம் இது, உலகில் முதல் முறையாக இந்துக்களுக்கு அரசு வேண்டும் அரசன் இந்துவாக வேண்டும், இந்துமதம் காக்க இந்துமதம் வாழ இந்துநாடு வேண்டும் என குரல் கேட்டிருப்பது உலகை திரும்பி பார்க்க வைத்திருக்கின்றது
மன்னராட்சியில் இருந்து மக்களாட்சி வேண்டும் என குரல்கள் மாறி, மக்களாட்சி இந்துமதத்தை காக்காமல் சீனாவின் கைக்கூலியாக இந்துமதத்தை ஒழிக்கும் என்றால் அந்த ஆட்சியே வேண்டாம், மன்னராட்சியில் இந்துமதம் வாழும் இந்து நேபாளம் வேண்டும் என உரக்க சொல்லி வீதிக்கு வந்திருக்கும் நேபாள மக்களை உலகமெங்கும் உள்ள இந்துமக்கள் வியப்போடு பார்க்கின்றர்கள்
அந்த நேபாள பசுபதி நாதன் அவர்களுக்கு வெற்றியினை கொடுக்கட்டும்,சீதை அவதரித்த அந்த நாடு ராமன் கோவில் அயோத்தியில் துலங்கும் நேரம் தன் மத அடையாளத்தை மீட்டு கொள்ளட்டும்
நேபாளத்தில் பெரும் இந்து எழுச்சி ஏற்பட்டிருக்கும் நேரம் தமிழக ஊடம் திரிசா, மனிஷா யாதவ் என என்னென்ன கதைகளை பேசிகொண்டிருக்கின்றது என்பதில் அதன் அறம் நன்றாக தெரிகின்றது,அது அவர்கள் தர்மம்
ஆனால் பிரதான தேசாபிமான ஊடகங்களும் இதையெல்லாம் சொல்லவில்லை
நிச்சயம் இந்தியாவுக்கு வடக்கே ஒரு பலமான அரண் அவசியம், அது நேபாளம் இந்துநாடாக இந்து அரசனின் நாடாக சீன பிடியில் இருந்து விடுபட்ட நாடாக இருந்தால் நிச்சயம் நல்லது என்பது தேசாபிமானிகளின் எதிர்பார்ப்பு
அவ்வகையில் நேபாளத்தில் ஆட்சிமாற்றம் வந்து பாரதத்துக்கு உகந்த அரசும் இந்துமதம் காக்கும் அரசும் அமைய தேசம் வாழ்த்துகின்றது👍🙄
கம்யூனிசம், மதசார்பற்ற அரசு , சமதர்ம சமூகநீதி என்பதெல்லாம் எவ்வளவு பெரும் மோசடி, ஊழலுக்கான திறப்புவாசல் என்பது நேபாள இந்துக்களுக்கு புரிந்தது போல் தமிழக இந்துக்களுக்கும் புரியும் நாள் தொலைவில் இல்லை, விரைவில் புரியலாம்🕉️🇮🇳🙏🌹
Comments
Post a Comment