இந்து அறநிலையத்துறையை எவ்வாறு வெளியேற்றுவது? தமிழ் நாட்டின் கோவில்கள் உலகப்ரஸித்தம் பெற்றவை. இந்தியாவிலேயே மிக அதிகமான கோவில்கள் தமிழ்நாட்டிலே தான் உள்ளது என்ற பெருமை இருந்தாலும் இங்கு தான் அரசின் குறுக்கீடுகள் எல்லா விதங்களிலும் உள்ளது என்பதும் ஒரு நெருடல்லன் விஷயமாக உள்ளது

 


M. no  1746

#trc8paper


இந்து அறநிலையத்துறையை எவ்வாறு வெளியேற்றுவது? 


தமிழ் நாட்டின் கோவில்கள் உலகப்ரஸித்தம் பெற்றவை. இந்தியாவிலேயே மிக அதிகமான கோவில்கள் தமிழ்நாட்டிலே தான் உள்ளது என்ற பெருமை இருந்தாலும் இங்கு தான் அரசின் குறுக்கீடுகள் எல்லா விதங்களிலும் உள்ளது என்பதும் ஒரு நெருடல்லன் விஷயமாக உள்ளது 

1. கோவில்கள் பணம் காய்க்கும் மரங்களாகத்தான் உள்ளன. 

2. அங்கு உள்ள சாஸ்திர சம்பிரதாயங்கள் என்னவாக இருந்தாலும் அது துச்சமாக மதிக்கப்பட வேண்டியது.

3. கோவில் சொத்து நாம் அனுபவிக்க தான் உள்ளதே தவிர அதன் பலன் கோவிலுக்கும் பக்தர்களாகிய பொது மக்களுக்கும் போய் சேரக்கூடாது 

4. கோவிலில் உள்ள பழமையான விக்கிரகங்கள் நமக்கு பொன் சேர்க்கும் பொக்கிஷமே தவிர அது தேசத்தின் பொக்கிஷம் அல்ல. திருடி வெளிநாட்டிற்கு கடத்தி விற்று கோடிக்கணக்கில் சம்பாதிப்பது தான் முக்கியம்


என்ற நோக்கில்லேயே கடந்த அறுபது வருடங்களாக ஆட்சி செய்த அரசாங்கங்கள் அதை ஒற்றை குறிக்கோளாக கொண்டு இந்தத் துறையை நடத்தி வருகிறார்கள்.


இந்த துறை ஆணியடித்த மாதிரி 60 வருடங்கள் நிலை குலையாமல் விக்கிரமாதித்தனை போல் சற்றும் மனம் தளராமல் வேலை பார்த்து வந்துள்ளதை கட்டாயம் பாராட்டியே ஆக வேண்டும். தமிழ் நாடு எந்த துறையில் முதலிடம் அடைந்ததோ இல்லையோ இந்த துறையில் நிச்சயமாக உலகில் (தாலிபானை தவிர) மிக சிறந்த வேலை செய்துள்ளது என்று எல்லாரும் மனம் உவந்து ( வெந்து) பாராட்டுகிறார்கள். 

அவர்கள் பாராட்டு மாலைகள் பிணம் மீது விழும் மாலைகள் என்று அறியாமல் இந்த அதிகாரிகளும், அரசும்  தம்மை தாமே மெச்சிக்கொண்டு வீறு நடை போட்டு வருகின்றனர்.


இந்த துறை இன்றே கலைக்க வேண்டிய துறை. இந்த துரைமார்கள் என்றோ துரத்தி அடிக்கப்பட்டிருக்க வேண்டியவர்கள். ஆங்கிலேய துரைமார்களுடன் போட்டி போட்டு வளத்தை அழிக்கும் இவர்கள் இனி இருக்கக்கூடாது என்று ஒவ்வொரு ஆன்மிக வாதியும் ,   பக்தியடன்  தெய்வ தரிசனத்துக்கு காத்திருக்கும் ஆண் பெண் அனைவரும் வேண்டுவது என்றால் மிகையாகாது.


ஆனால் இது அவ்வளவு எளிதான நடக்கக் கூடிய காரியம் இல்லை. இந்த துறை அடுத்த உண்மையான ஆட்சி மாற்றம் வந்தால் கட்டாயம் ஓழிக்கப்படும் என்பதில் ஐயம் இல்லை. 


ஆனால் அதற்கு பின்?


இந்த கேள்விக்கு பல சிந்தனையாளர்களும், திரு TR ரமேஷ் போன்ற தலை சிறந்த தன்னரவலர்களும் பல முறையில் சிந்தித்து வழி முறைகளை கூறியுள்ளார்கள். IIM Bengaluru ஒரு அறிக்கையே வெளிட்டுள்ளது.


எனது பார்வை இதோ:


தமிழக கோவில்களை எ, பி, சி என மூன்று வகையாக பிரிக்கலாம், இது வருமானம் என்ற குறியீட்டினை கொண்டு வகை செய்யப்பட்டது.

இதில் சி வகை கோவில்கள் அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வராது. ஏன் என்று எல்லாருக்கும் தெரியும்.


எ மற்றும் பி என்ற வகை கோவில்கள் பல நூறு கோடி முதல் சில லட்சம் வரை வருமானமே கொண்டது. 

இந்த கோவில்களை மேற்பார்வை செய்வது JC , DC  என்று பலவித அதிகாரிகள் தான். தர்மாதிகாரிகள் எல்லாம் ஒப்புக்கு தான் அல்லது ஒரே அணியாக செயல் படுபவர்கள்தான். (விதிவிலக்குகள் உண்டு).


இந்த அதிகாரிகளுக்கு மாற்று கொண்டு வந்து மேற்பார்வையாளர்களை கொண்டு வருவது சிரமமான காரியம் இல்லை. ஆனால் இது வரை “திறம்பட” நிர்வகிக்கப்பட்டு வந்த இந்த துறையை எவ்வாறு managable ஆக்குவது?


இங்கு size , location , complexity என்று பலவகையிலும் சோதிக்கும் விஷயங்கள் (challanges ) உள்ளன.


எனது பார்வையில்  கோவில்களை குழுக்களாக பிரித்து மேற்பார்வை செய்வது, அந்த குழுக்களுக்குள்ளே பிரிவுகளாக சிறு கோவில்களை இணைப்பது , அந்த கோவில்களின் தன்மைக்கேற்ப தனி அதிகாரிகள், மேற்பார்வையாளர்களை நியமனம் செய்வது, இதில் தன்னார்வலர்கள் மற்றும் சம்பளத்திற்கு திறமையான ஊழியர்களை நியமிப்பது, internal மற்றும் external  ஆடிட், கட்டிட துறையினர், கோவில் architecture தெரிந்தவர்கள், தொல்லியல்துறை வல்லுநர்கள் ஏன் பல துறை சார்ந்த திறமையாளர்களை இணைப்பது என்று பல வேறு முறையில் நிர்வாகம் செய்ய வழி கொண்டு வர வேண்டும்.


ஒரு மாநில அளவில் தலைமை குழு அமைக்கப்பட்டு அதன் தலைமையில் மற்ற குழுக்கள் இயங்க வேண்டும். இந்த மாநிலக்குழுவில் அரசியல் சார்ந்தவர் இருக்ககூடாது.  (இதைத்தான் கீழே மேல்மட்டக்குழு என்று குறிப்பிட்டுள்ளேன்).


குழுக்கள் என்றால் என்ன?


ஒரு கோவில்குழு என்பது, எனது கண்ணோட்டத்தில் ஒரு கடவுள் சார்ந்த கோவில்கள், ஒரு பிராந்தியத்தை சேர்ந்த கோவில்கள், ஒரே மடத்தின் கீழ் வரும் கோவில்கள் என்று பிரிக்கப்படலாம். 


உதாரணத்திற்கு, அறுபடை வீடுகள் எல்லாம்  ஒரே குழுவிற்குள் வரலாம். அந்த கோவில்களுக்கு அருகாமையில் இருக்கும் சிறு கோவில்கள் மற்றும் முருகன் கோவில்கள் எல்லாம் அந்த குழுவில் இருக்கும் பெரிய கோவில்களுடன் இணைக்கலாம்.


அதே போல் நவ திருப்பதிகள் என ஒன்றிணைக்கப்பட்ட நெல்லை மாவட்டத்தை சேர்ந்த வைணவ கோவில்கள் ஒரு குழுவாக அமைக்கப்படலாம்.


நவக்கிரக கோவில்கள் என்று புகழ் பெற்று வரும் தஞ்சை, நாகை மாவட்டங்களில் உள்ள கோவில்கள் ஒரு குழுவாக இணைக்கப்படலாம்.


இந்த குழுக்களில் உள்ள A தரத்தை சேர்ந்த கோவில்கள் அந்த குழுவில் உள்ள பி மற்றும் சி தரத்தில் இருக்கு கோவில்களுக்கு நிதி மற்றும் மற்ற கட்டமைப்பு உதவிகளுக்கு துணை இருக்கும். தினசரி நடக்கும் பல

 செயல்கள் தொய்வின்றி நடைபெற நாம் மிகவும் பிரயத்தனபட தேவை இருக்காது என்பதே என் கருத்து. 

மிக முக்கியமான் மற்றும் சிக்கலான விஷயம் என்பது சொத்துக்களை எடுத்துக்கொள்வது தான் 


Takeover  of  Assets :

HR &CE  துறையிடம் இருந்து கோவில்களை மட்டுமே பெற்றால்? அதன் நிலபுலன், அசையும் மற்றும் அசைய சொத்துக்கள் என்ன ஆகும்?

இது வரை இந்த துறையில் அரசாங்கங்கள் தமது எண்ணப்படி எந்த வித கட்டுப்பாடும்  இல்லாமல் தான் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை நிர்வகித்து வந்துள்ளன . இதற்கு எந்த வித audit   இல்லாமல் வருடாவருடம் கொடுக்கப்படும் கணக்குகள்  முரண்பட்டதாக   உள்ளதாகவும் மேலோட்டமாக  பார்த்தாலே  தெரியும். இந்த நிலையில் கணக்கு வழக்கு எதுவும் தெரியாமலேயே நிர்வாகத்தை எடுத்துக்கொள்வது மிகவும் கடினமான விஷயம் மட்டுமல்ல, ஆபத்தான விஷயமும் கூட.


ஒவ்வொரு வருஷமும் அரசாங்கம் கொடுக்கும் நில உடைமை கணக்கு பார்த்தாலே இதில் எவ்வளவு தகிடுதத்தம் நடக்கிறது என்று தெரிந்து விடும். 


மேலும் 1950 களில் இருந்தவர்களுக்கு ஓரளவு விஷயம் தெரிந்திருக்கலாம். ஆனால் இன்று இருப்பவர்களுக்கு இந்த கணக்கு வழக்கு எதுவும் தெரியாது. கோவில் சொத்தை கபளீகரம் செய்ய காத்திருப்பவர்களுக்கு இந்த அதிகார மாற்றம் தங்க தாம்பாளத்தில் வைத்துக்கொடுத்த வாய்ப்பாகவே அமையும். இதை சரியான முறையில் எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றி ஆழ்ந்து சிந்தித்து அதற்கேற்ற முறையில் வழி செய்ய வேண்டும்.


இதே கதை தான் நகைகள் மற்றும் விலை உயர்ந்த சொத்துக்களுக்கும்.. இந்தஅரசாங்கம், தங்கத்தை உருக்கினார்கள்.. அல்லது அது லட்டுவிற்குள் வைக்கபட்டய மூக்குத்தியா? மீனாட்சிக்கு எதுக்கு மூக்குத்தி என் கேட்டு ஆட்சிக்கு வந்தவர்களின் வாரிசுகள், மூக்குத்தி மட்டும் இல்லை, ஒட்டியாணத்தியே ஆட்டை போட்டிருப்பார்கள். இந்த சொத்துக்களை எடுத்துக்கொள்ளும் போது எந்த வகையிலெல்லாம் இதை பற்றி caveat எழுதி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது மிக முக்கியம். அது தான் உண்மையிலேயே சிக்கலான மற்றும் சவாலான விஷயமாக இருக்கும்.


அறநிலைய துறையிடம் இருந்து அதிகார மாற்றம்:

1 ) கோவில்கள் செயல்பாடு குழுக்கள் 

 ஒரு மேல்மட்ட குழு : இதில் தமிழகத்தின் உயர்நிலையில் இருக்கும் ஹிந்து மத குருமார்களின் அதிகாரபூர்வ பிரதிநிதிகள், மத நம்பிக்கை கொண்ட நிதி மற்றும் மேலாண்மையில் நிபுணர்கள், 

கோவில் மேலாண்மை பற்றி நுண்ணறிவு பெற்றவர்கள், தொல்பொருள் ஆய்வாளர்கள், கட்டட கலை நிபுணர்கள் முதலியோர் கொண்ட குழு அமைக்கப்படவேண்டும். இதில் ஒய்வு பெற்ற SC or HC நீதிபதிகளும் இடம் பெற வேண்டும். அவர்கள் தெய்வ நம்பிக்கை மாதர்

சனாதன தர்மத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்வகளாக எரிக்க வேண்டும். 


அவசியப்படுமெனில் இதன் கீழ் தனியாக நிபுணர் குழுக்கள் அமைக்கப்படவேண்டும் (உ.ம்,. கட்டுமான குழு, நிதி மேலாண்மை குழு etc )  


2 ) ஆகம கோவில்கள் எது என்று வரிசை படுத்தி அதனை அந்த ஆகமமுறைப்படி பராமரிக்க தனியாக ஆகம முறை தெரிந்தவர்கள் குழு ஒன்று அமைக்கப்படவேண்டும். இந்த குழு, எல்லா கோவில்களிலும் உள்ள நடைமுறையை அறிந்து சீர்படுத்த வேண்டியதை செய்ய வேண்டும்.


3 ) நிலங்கள் மற்றும் அசையா சொத்துக்களை மேலாண்மை செய்ய தனி நிபுணர் குழு அமைக்க வேண்டும். இந்த குழு, எல்லா அரசாங்க record களை சரி பார்த்து நடவடிக்கை பற்றி மேல்மட்ட குழுவிற்கு பரிந்துரை செய்ய வேண்டும்.

இதே போல் நகைகள் மற்றும் மற்ற சொத்துக்களை கண்காணித்து, அதை அரசாங்கத்தின் கைகளில் இருக்குமாயின் எடுத்துக்கொள்ள வேண்டிய வழி முறைகளை உண்டாக்க வேண்டும்.


4 ) இது வரை அரசாங்கம் தனது பெயருக்கு எடுத்துக்கொண்ட (கபளீகரம் செய்த) பணத்தை audit செய்து, அரசாங்கம் அதன் சட்டதிட்டங்களுக்கு  மேல் எடுத்த பணத்தை திரும்ப பெற வேண்டும். இது அசையா சொத்துக்களாக மாறி இருந்தால் அதை ஒரு டிரஸ்ட் ஏற்படுத்தி அந்த டிரஸ்ட் பெயருக்கு மாற்ற வேண்டும் அல்லது வேறு முறைப்படி அதை உயர்நிலைக்குழுவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவேண்டும். 


5) முதலில்  சொன்ன குழு அரசாங்கத்திடம் ஒரு உணர்வு ஒப்பந்தம் செய்து, அதன் மூலம் தெரிவிக்கப்படாத , அறியப்படாத, மறைக்கப்பட்ட   சொத்து (எவ்வகையாயினியும், அது சட்டவிரோதமான முறையில் வேறு ஒருவர் பெயரில் மாற்றப்பட்டதாக இருந்தாலும், அது பல காலம் இன்னொருவரின் சொத்தாக அறியப்பட்டாலும், அது இன்னொருவர், எந்த மாதமாக இருப்பினும் ) கோவில் சொத்து என அறியப்பட்டால் அது மீண்டும் அந்தந்த கோவிலின் சொத்தாக அறியப்பட்டு திரும்ப கொடுக்க வகை செய்ய வேண்டும், அதற்கு சட்டம் இயற்ற வேண்டும் என்றால் சாத்தியம் செய்ய வேண்டும். இந்த சட்டம் 1850க்கு பின் மாற்றம் செய்யப்பட்ட எல்லா சொத்துக்கள், குத்தகைக்கு விடப்பட்டு, குத்தகை காலம் முடிந்து அந்த பணம் கொடுக்கப்படாமல் இருந்திருந்தாலும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். அது போல் கொடுக்க வழி இல்லையெனில் மதிப்பீடு செய்து, மத்திய அரசு அசையா சொத்துக்களை எடுத்துக்கொள்ள எந்த வகை மதிப்பீடு செய்கிறதோ அந்த வகையில் மிக அதிகமான மதிப்பீடு தொகையை கொடுக்க வேண்டும். குத்தகை மற்றும் வடக்கை பாக்கி, இன்று உள்ள மதிப்பின் படி கணக்கிட்டு, எவ்வளவு வருடங்கள் வரவில்லையோ, அத்தனை வருடங்களுக்கு இன்றிய மதிப்பின் கீழ்  கொடுக்க வேண்டும்.

இதில் எந்த விதமான வகையில் அந்த நிறுவனம் இயங்கிக்கொண்டு இருந்தாலும், இழப்பீட்டுத்தொகை ஒன்றாகவே இருக்க வேண்டும்.

மேலும், கோவில் அருகாமையில் இருக்கும் நிலம் அல்லது அசையா சொத்துக்கள், கோவிலுக்கு திருப்பிக்கொடுத்து தான் ஆக வேண்டும். கோவில் குத்தகை முதலிய ஒப்பந்தங்கள் மீண்டும் பரிசீலிக்கப்பட்டு இன்றைய மதிப்பீடுகளுக்கு உட்பட்டதாக மாற்ற பட வேண்டும்.

 

இதில் ஒரு விஷயம் விவாதமாகும்:

அரசாங்கம் என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதே. அதனால்  அவர்கள் இருப்பது தான் நியாயம் . அதுவே  மக்களின்  பிரதிநித்துவதை  உறுதி செய்யும் என ஒரு கருத்தோட்டத்தை உருவாக்க முயற்சி நடக்கும். ஆனால், அதற்குச் சான்றாக எதைக் கூறி பீதியை உண்மையாக்க முடியும்? திருச்செந்தூரில் பக்தர் தரிசனத்திற்கு ரூ 1000, 2000  வசூல் செய்ததையா? அல்லது ஆட்சியளர்களின் உறவினர் வந்த போது தெய்வத்திற்கு பிடிக்கப்படும் வெண்கொற்ற குடையை பிடித்தய்யா?? அல்லது, அதிகாரிகளின் துஷ்ப்ரயோகத்தையா? 


இதற்கு சரியான பதிலும், இதற்கேற்ற உத்திரவாதமும் கொடுக்கப்பட்டாலொழிய அரசாங்கமும் அதன் அதிகாரிகளுக்கும் இடம் கொடுப்பது, வேலியில் போகும் ஓணானை எடுத்து தன் மேல் விட்டுக்கொண்டு கதைதான். ஒட்டகம் கூடாரத்திற்கு வெளியேயே இருக்கட்டும் என்பதே என் கருத்து.


TIME FRAME :

இதை செயல் படுத்த எவ்வளவு காலம் பிடிக்கும் ? 

இதற்கு பதில்  எவ்வளவு காலம் எடுத்துக்கொள்ளலாம்  என்பதே……


ஏன் என்றால் இது பண மதிப்பீட்டிழைப்பின் போது மத்திய அரசு எவ்வளவு காலம் எடுத்துக்கொண்டதோ, அதைப்போல செய்ய வேண்டும். Surgical  strike செய்ய பல திரைமறைவு செயல்கள் எப்போது, யார் தொடங்கினார் என்று நமக்கு தெரியாது, அனால் அவை முடிந்த பின் அதன் தாக்கமும், தீவிரமும் தெரிந்து உலகமே வியந்தது. இந்த செயல்களை செய்தால் நம்மால் கோவில்களை மீட்கும் இந்த செயலையும் செய்வது  நிச்சயமாக முடியும். 

முன்னேற்பாடான காரியங்கள் பின்புலத்தில் இப்போதே  தொடங்க வேண்டும். தனியாக குழுக்கள் மாவட்டங்கள் தோறும் அமைத்து, ஒவ்வொரு கோவிலின் அசையா சொத்து கணக்குகளை திரட்டவேண்டும். கடைகள், மனைகள் விவரங்களை திரட்டவேண்டும். தன்னலர்வலர்களைக் கொண்ட குழுக்கள் அமைத்தது கோவில்களின் செயல்பாட்டை இப்போதிலிருந்தே கவனிக்க வேண்டும். இது ஒவ்வொரு தெய்வ பக்தியுள்ள தமிழனும், இந்தியனும் தன் தேசப்பணி போல் செய்யவேண்டும். 


இதைச் செய்தால் சரியான ஆட்சி கூடிய விரைவில் வரும்போது இதை செய்ய அதிக நேரம் தேவைப்படாது. ஏனென்றால் இதை ஆட்சிக்கு வந்து தான் செய்யத் துவங்கவேண்டும்   என்றால் இந்தக்காரியம் ஒரு போதும் நடை பெறாது. 


அதற்கு இன்று கோவில்களுக்கு இந்த நிலைமையை உருவாக்கி இருக்கும் கூட்டம் எந்த விதமான முட்டுக்கட்டையும் போடும். தமிழகத்தில் ஐந்தாறு  ஆண்டுகளுக்கு முன் நடந்த போராட்டங்களே இதற்கு சாட்சி. 


ஒன்றே செய், 

அதை நன்றே செய், 

அதை இன்றே செய். 


தமிழகம் ஆன்மீக பூமி மட்டுமல்ல, கிட்டத்தட்ட ஒவ்வொரு நகரமும், கிராமமும்  ஊரும் ஆயிரம் வருடங்களுக்கும் மேலான சரித்திரச் சான்றுகளை சுமந்து கொண்டு, மக்களின், அவர்கள் ஆன்மாவின், பக்தியின், பல தலைமுறையினரின் வாழ்க்கையின் சான்றாக இருக்கும் கோவில்கள் நமக்கும் நம் வருங்காலத்தில் வரும் சந்ததியினர்க்கும் வழி காட்டும் தெய்வத்தின் இருப்பிடம். 


கொடியவர்கள் கூடாரமாகக்கூடாது. 


முதல் கையெழுத்து  இடத் தயார் படுத்திக்கொள்வது நம் வேலை. 


கையெழுத்து  இடும் மகானுபவன் யாராக இருந்தாலும் வரும் ஆயிரம் தலைமுறைகள்  அவரை வாழ்த்தும்  போது, அந்த வாழ்த்து  தமிழ் குலத்தின்  இக்காலத்தை சேர்ந்த நமக்கெல்லாம் கிட்டும். மன்னர்கள் கட்டி பெற்ற புகழ், நாம் காத்து பெற வேண்டுவோம்.


இது மக்கள் பணி மட்டுமல்ல, நிச்சயமாக மகேசனின் பணி. இதை செவ்வனே செய்தால், ஏழைகள் சிரிப்பும் மலரும், நம் முன்னே மகேசனும் தோன்றுவான். 


ஓம் நம சிவாய : ஓம் நமோ நாராயணாய. ஓம் ஷண்முகா

Comments

Popular posts from this blog

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது

Om NAMO NArendra MOdi Namaha*🔥🙏🪷 Shri Narendra Modi Ashtotra Namavali ஓம் ஸ்ரீ நரேந்த்ராய நமஹ (Salutations to the revered Narendra) 1. ஓம் விஶ்வ-நேத்ரே நமஹ – Salutations to the leader of the world stage. 2. ஓம் பாரத-பக்தாய நமஹ – Salutations to India’s devoted champion. 3. ஓம் ஜடூ-ஜப்பி-ப்ரதாய நமஹ – Salutations to the giver of world-famous hugs.

The sound of gunfire pierced the air of the quiet valleys. A terrorist attack took place near the Pahalgam market area — *turning a place like paradise into hell.* People screamed. Blood flowed. There was chaos everywhere. *👺 "The terrorists were asking for names and religions and then firing bullets."*