ரஞ்சனாநாச்சியார் இந்தம்மா யாரு என்னன்னு எல்லாம் தெரியாது* பெயரை பார்த்தா தென் மாவட்ட வீரமங்கையா இருக்கலாம்னு நினைக்குறேன் ஆனா பேருந்தில் படிக்கட்டிலும் & ஒருபடி மேலே போய் மேல் கூரையை பிடித்து தொங்கி செல்லும் மாணவர்களை கண்டித்ததார். *இது ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்க வேண்டிய அக்கறை*

 


*ரஞ்சனாநாச்சியார் இந்தம்மா யாரு என்னன்னு எல்லாம்  தெரியாது*

பெயரை பார்த்தா தென் மாவட்ட வீரமங்கையா இருக்கலாம்னு நினைக்குறேன் 

ஆனா பேருந்தில் படிக்கட்டிலும் &  ஒருபடி மேலே போய் மேல் கூரையை பிடித்து தொங்கி செல்லும் மாணவர்களை கண்டித்ததார்.

*இது ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்க வேண்டிய அக்கறை*

இப்பிடி தொங்கிட்டு வாராங்க நீ கண்டுக்காம வண்டி ஓட்டுறியே உன் வீட்டு பிள்ளை தொங்குனா இப்பிடி தான் பார்பியான்னு டிரைவர் & நடத்துரை கேள்வி கேட்டது என்ன தவறு

கொஞ்சம் கோவம் தூக்கலாச்சு.  ஆனால் சட்ட வார்த்தையில் சொன்னால் *குற்றமனம் (Mens rea)* இல்லாத செயல் அது 

அந்தம்மாவை ஏதோ தீவிரவாதிய கைது பண்ணுற மாதிரி அஞ்சாறு போலீஸ் வீட்டுக்கே போய் கைது பண்ணியிருக்காங்க

*காவல்துறை கைது பண்ண வேண்டிய பல பேர் தமிழ்நாட்டுல சுதந்திரமா சுத்திட்டு இருக்குது*

ஏற்கெனவே நாட்டுல என்னவும் நடக்குது நமக்கென்னன்னு பெரும்பாலும் மக்கள் போவதற்கு காரணமே நல்லது செய்ய போயி நமக்கு பிரச்சனை வருமோங்கிற பயம் தான்

இனி தைரியமா கேக்குற ஒருத்தன் ரெண்டு பேரும் *"நாடும் நாட்டு மக்களும் நாசமா போகட்டும்"* னு வசனம் பேசிட்டு  போயிட்டே இருப்பான்

போலீசுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுங்கன்னா எப்படி கொடுப்பான்

*ஆமா இவ்வளவு ஆபத்தா அந்த  பஸ் ஓட்டுன நடத்துனர் , ஓட்டுனர் தொங்கிட்டு போன பசங்கள கைது பண்ணுணீங்களா ஆபீசர்*

ஆயிரம் ரஞ்சனாநாச்சியார் வந்தாலும் உங்கள திருத்த முடியாதுப்பா

*கா.குற்றாலநாதன்*

வழக்கறிஞர்

நெல்லை

Comments

Popular posts from this blog

1378-ஆம் ஆண்டில், இந்தியாவின் ஒரு பகுதி பிரிந்து ஒரு இஸ்லாமிய நாடாக மாறியது — அதன் பெயர் ஈரான்.

The BRAVE Brahmin with a very Big Heart == The gentleman in the photo is Krishnamurthy Iyer ji - known as Kittu Mama.

சிறுகதை: *வெங்கட்ராமன் முடிவு சரியா தப்பா??* வெங்கட்ராமன் நன்கு படித்த பிராமண பையன். நல்ல வேலை. ஆள் பார்க்க மிக நன்றாக இருப்பான். வயது 38. ஆனால் திருமணத்திற்கு பிராமண பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சரியாக அமையவில்லை. அவர்கள் குடும்பம் பழமையான பிராமண குடும்பம். வெங்கட்ராமன் வீட்டுக்கு வந்து அம்மா அப்பாவிடம் பேசினான். "அப்பா, எல்லாம் நல்லபடியா முடிஞ்சது அந்த ஆபீசுக்கு போய் அந்த பொண்ணோட பேசிட்டேன்...