பாரத உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களின் பெயர் என்றென்றும் வரலாற்றில் இருக்கும் படியான ஒரு நிகழ்வு ஜம்மு & காஷ்மீர் சட்ட ஷரத்து 370/35A நீக்கம். அது எவ்வாறு சாணக்கியத்தனத்தோடு ஒவ்வொரு படிகளாக நிகழ்த்தப்பட்டது மற்றும் மஹ்பூபா முக்தியை முதல்வராக அறிவித்து அதாவது PDPயுடன் கூட்டு சேர்ந்த நாளிலிருந்து நிகழ்த்தபட்டது (05.04.2015) எவ்வாறு என்பதை கீழே காண்போம்.

 

தமிழில் எழுதியவர் நண்பர் Ramesh Kannan


ஏன் உச்சநீதிமன்றத்தில் சட்ட ஷரத்து 370 நீக்கத்தை தடை செய்ய முடியாது என்பதையும் மத்திய அரசு எவ்வளவு அழகாக திட்டமிட்டு காய்களை நகர்த்தயிருக்கிறது என்பதை பற்றி டுவிட்டரில் பிகு மாத்ரு என்பவரது ஆங்கில பதிவை தமிழாக்கம் செய்து பதிவிட்டிருக்கிறார். எளிதில் புரியாதவர்களுக்கும் புரியும் வண்ணம் ஒரு த்ரில்லர் மூவி போல இருக்கு.


பாரத உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களின் பெயர் என்றென்றும் வரலாற்றில் இருக்கும் படியான ஒரு நிகழ்வு ஜம்மு & காஷ்மீர் சட்ட ஷரத்து 370/35A நீக்கம். 


அது எவ்வாறு சாணக்கியத்தனத்தோடு 

ஒவ்வொரு படிகளாக நிகழ்த்தப்பட்டது மற்றும் மஹ்பூபா முக்தியை முதல்வராக அறிவித்து அதாவது PDPயுடன் கூட்டு சேர்ந்த நாளிலிருந்து  நிகழ்த்தபட்டது (05.04.2015) எவ்வாறு என்பதை கீழே காண்போம்.


- இது பிகு மாத்ரே என்பவரால் எழுதப்பட்ட ஆங்கில டுவிட்டர் பதிவை தழுவி எழுதப்பட்டது - 


மொத்த சட்ட ஷரத்து நீக்கத்தின் அடிப்படை கட்டமைப்பு பாஜக, பிடிபியுடன் கூட்டு சேர்ந்து அமைத்த அரசுதான் என்பது ஒரு சுவாரஸ்யமான தகவல். இந்த நிகழ்வை வழக்கம் போல எதிர்கட்சிகள் வன்மையாக கண்டித்தது. அதுபோக சோ கால்ட் தீவிர இந்துத்வர்களே வானத்துக்கும் பூமிக்கும் குதித்தனர்... எவ்வாறு பிடிபியுடன் கூட்டு அமைச்சரவை அமைக்க போச்சென்று. இது வழக்கம்தானே... இந்த குரூப்தான் தாங்கள் மட்டுமே இந்து தர்மத்தையும் பாரதத்தையும் காக்க வந்தது போல வால் அறுந்த பல்லி போன்று துடித்தனர். 😜


இனி இந்த சட்ட ஷரத்து நீக்கத்தின் ஒவ்வொரு படியும் எவ்வாறு நிகழ்த்தப்பட்டது என்பதை பார்ப்போம்.


படி 1:

ஜம்மு காஷ்மீர் மக்களின் ஜனநாயக வாக்களிப்பை மதித்து பிடிபியுடன் கூட்டு அமைச்சரவை அமைப்பது என்பது போல காட்டி ஜம்மு காஷ்மீர் அரசில் நுழைவது. 

1954லிருந்து நடந்த அரசு நிகழ்வுகளை அறிந்து கொண்டு மஹ்பூபா முக்தி அரசிற்கான ஆதரவை விலக்கிக் கொண்டது பாஜக.


இதற்கு எதற்கு அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். நேரடியாக களத்தில் இறங்கி அலுவலக தரவுகளை சேகரித்து கொள்ள வேண்டியதுதானே... பருத்தி மூட்டை கொடோவுனிலேயே இருந்திருக்கலாமே என்கிற கேள்வி வெகு நியாயமான கேள்வி. ஆனால் காஷ்மீரின் நிலைமையும் அரசு எந்திரத்தின் மனப்பான்மையும் அப்போதைய நேரத்தில் வேறுவிதமாக இருந்தது. 


பாஜக 19.06.2018அன்று மஹ்பூபா முக்திக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டது. இது ஒரு முக்கியமான முடிவு. அதனால் அனைத்து அரசு அதிகாரங்களும் ஆளுனர் கைக்கு வந்து விட்டது. இவ்வாறு நடைபெற மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபை அதன் ஆயுட் காலமான 5 வருடங்களில் 50% அதாவது 2 1/2 வருடங்கள் பூர்த்தி செய்திருக்க வேண்டும். பாஜக ஆதரவை விலக்கிக் கொண்டு சட்டசபை கலைக்கப்பட்ட போது சட்டசபையின் ஆயுட்காலம் 3வருடங்கள் 2 மாதங்களாகியிருந்தது. 


படி 2:

ஜம்மு காஷ்மீர் சட்டசபை அதிகாரங்களை பாராளுமன்றத்திற்கு மாற்றி ஜனாதிபதி உத்தரவு 2018ம் ஆண்டே சட்ட ஷரத்து 356யை பயன்படுத்தி ஜம்மு காஷ்மீர் ஆளுனரின் சம்மதத்தின் பேரில்   கொடுக்கப் பட்டுவிட்டது. இதுதான் இதில் தலையாய விஷயம். அதாவது சட்ட ஷரத்து 370  நீக்கம் பாராளுமன்றத்தின் வசம் வந்து விட்டது. இது எதனால் என்றால் அப்போதைய பிரதமர் நேரு சட்ட ஷரத்து 370 நீக்க வேண்டுமானால் ஜம்மு காஷ்மீர் சட்டசபை ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற ஷரத்தை சேர்த்திருந்தார். ஆனால் கவர்னர் ஒப்புதலுடன் ஜனாதிபதி இந்த அதிகாரத்தை பாராளுமன்றத்திற்கு மாற்றி விட்டிருந்தது ஒரு மாஸ்டர் மூவ்.


படி 3:

இதை மேலும் வலுப்படுத்தவும் எதிர்கட்சிகள் உச்ச நீதிமன்றம் மூலமாக  கடுமையான எதிர்ப்பை தவிர்க்கவும் புதிய ஜம்மு காஷ்மீர் SC/ST சட்ட திருத்தம் பாராளுமன்றத்தில் இந்த  புதிய அதிகாரத்தை பயண்படுத்தி இயற்றப்பட்டது. எதிர்பார்த்தது போலவே இதற்கு உயர்/உச்ச நீதிமன்றங்கள் எதுவும் சொல்ல முடியவில்லை.


இந்த நேரத்தில் SC/ST சட்ட திருத்தம் தேவையா? என்ன ஒரு பொதுவான அம்சம் உள்ளது?

இது மத்திய அரசின் இன்னொரு அருமையான வழிமுறை. பார்ப்போம் எப்படி என்று.


அதாவது SC/ST மற்றும் EWS சட்ட திருத்தங்கள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கென்று கவர்னர் ஒப்புதலுடன் எடுத்து வரப்பட்டு உச்ச நீதிமன்றத்தாலும் ஒத்துக் கொள்ளப்பட்டது. இதன் மூலம் சட்ட சபை இல்லாததால் ஆளுனரின் அதிகாரம் நிலை நிறுத்தப்பட்டது. 


இந்த சட்ட திருத்தங்கள் அங்கீகரிக்கப்பட்ட பின்பு ஆளுனரின் அதிகாரத்தை பற்றி எந்த நீதிமன்றங்களாலும் கேள்வி கேட்க முடியாது. 1952ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தை முன்மாதிரியாக கொண்டு 2018ல் ஆளுனருக்கு மாற்றி 2018ல் பாராளுமன்றம் மூலமாக இதை அங்கீகரித்தாகி விட்டது.  


படி 4:

இதற்கான வலை 2018ல் பாஜக பிடிபி கூட்டணியிலிருந்து விலகி சட்டசபையை கலைத்து ஆளுனருக்கு அதிகாரத்தை மாற்றியபோதே பிண்ணப்பட்டுவிட்டது. பாஜக கூட்டணியிலிருந்து விலகிய பின் பிடிபி ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியுடன் கூட்டணி வைக்க முயற்சித்ததால் அஜித் தோவல் ஆளுனரை உஷார் படுத்தி சட்டசபையை கலைக்க செய்து விட்டனர்.  


இதுவரை நடந்த விஷயங்களை சுருக்கமாக பார்ப்போம்.

1). ஜம்மு காஷ்மீரில் அரசில் பங்கேற்று சரியான சமயத்தில் வெளியேறி அதை கலைத்தது. 


2). அதன் பின்பு சட்டசபையை கலைத்து ஜனாதிபதி ஆட்சியை எடுத்து வந்தது. 


3). சட்ட ஷரத்து 356 பயண்படுத்தி சட்டசபை அதிகாரத்தை ஆளுனருக்கு மாற்றியது.


4). ஆளுனரின் அதிகாரத்தை SC/ST சட்ட திருத்தம் மூலம் நிலை நாட்டியது.


5). 1952 வழிமுறையை பின்பற்றி சட்டசபை அதிகாரத்தை ஆளுனருக்கு மாற்றியது.


6). ஜனாதிபதி, சட்ட ஷரத்து 370 நீக்கம் மற்றும் 370/35A சட்ட ஷரத்து அதிகாரமில்லாமல் ஆக்குதலுக்கு தனக்கு அதிகாரம் உள்ளதென அறிவித்தார்.


அடுத்து ஒரு பெரிய அடி...


மேற்கண்ட சட்ட ஷரத்து நீக்கம் 05.08.2019 அன்று ராஜ்ய சபையிலும் 06.08.2019 அன்று பாராளுமன்றத்திலும் 2/3 பெரும்பான்மையுடன்  நிறைவேற்றப்பட்டது.


தொடவே முடியாது என்று சொல்லப்பட்ட 72 வருட விஷயத்தை மோடி - அமித்ஷா - தோவல் கூட்டணி செய்து காட்டியது. 


அடுத்து உங்கள் மனதில் ஒரு கேள்வி எழலாம்.


ஏன் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் இரண்டாக பிரிக்கப்பட்டது? மூன்றாக பிரித்திருக்கலாமல்லவா?


1947-48ல் மஹாராஜா ஹரி சிங் ஜம்மு & காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்த ஆவணங்களில் ஊள்ள வாசகம் ஜம்மு & காஷ்மீர். அதாவது இரண்டையும் இணைத்துதான் அந்த ஆவணங்களில் உள்ளது‌. லடாக் தனியாக அதில் சொல்லப்படவில்லை. அதனால் லடாக்கை ஜம்மு & காஷ்மீரிலிருந்து பிரித்தெடுப்பது எளிதாகி போனது.


ஆனால் ஜம்மு & காஷ்மீர் என்பது ஒன்றாகவே இருந்தாக வேண்டும். ஏனென்றால் 1947-48ல் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரையும் சேர்த்துதான் மஹாராஜா ஹரி சிங் இந்தியாவுடன் இணைத்தார்.


பின்னொரு காலத்தில் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரை உரிமை கோரும் போது மேற்கண்ட ஆவணத்தை காட்ட வசதியாக இருக்குமல்லவா?


வெகு தெளிவாக திட்டமிடப்பட்டு ஆவணப்படுத்தப்பட்ட விஷயம் இந்த 370 சட்ட ஷரத்து நீக்கம்.


அடுத்த ஒரு கேள்வி எழுகிறது... இந்த 370 சட்ட ஷரத்து உச்சநீதிமன்றத்தில் நிற்குமா!


என்னுடைய கருத்துப்படி உச்ச நீதிமன்றம் இதற்கு எதிராக தீர்ப்பு கூற முடியாது. ஏனென்றால் ஏற்கனவே ஆளுனரின் அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் ஒத்துக் கொண்டுள்ளது. 


சட்ட நிபுணர் திரு. சுபாஷ் காஷ்யப் கூறியது:

" சட்ட விதிகளின் படி இந்த 370 சட்ட ஷரத்து நீக்கம் மிகச் சரியானது. இதில் எந்தவித தவறுகளையும் காண முடியாது. அரசு மிக கவனத்துடன் இதை தயாரித்துள்ளது".


கண்டிப்பாக உச்ச நீதிமன்றம் இதை ஆமோதிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.


- முடிவு.


மனுஷன் பிகு மாத்ரே அருமையாக லாஜிக்கலாக சட்ட ஷரத்து 370 நீக்கத்தை பற்றி எழுதியுள்ளார். 


இது ஏதோ திரைப்பட கதை போன்றுள்ளது. திரைப்படமாக எடுத்தால் திடுக்கிடும் திருப்பங்களுடன் அருமையாக இருப்பதால் படம் நன்றாக ஓடும் போல😂 ஓட்டுக்காக சட்டம் இயக்கறவங்க இப்படி பண்ணமாட்டாங்க, நாட்ட உயிரா நேசிக்கறவங்களால மட்டும் தான் இது சாத்தியம்.


இந்நேரம் வழக்கு ரிசல்ட் வந்துருக்கும், நாட்டு இறையாண்மைக்கு எதிரா தனிநாடு ஒன்றியம் குன்றியம்னுலாம் பேசுறவன் நெத்தில ஓங்கி ஆணிஅடிச்சமாரி ஒரு தீர்ப்பாகத்தான் அது இருக்கும்.


From S R Ravichandran

Comments

Popular posts from this blog

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷

*TENT DECOR CATERING EXPO 2024* - 4,5,6-Oct-2024 - Chennai Trade Centre, Nandambakkam Chennai

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது