மாடி வீட்டு அம்மா அவசரமா எங்கோ போனாங்க. எங்கே என்று கேட்டால், அவர் வருவதை சொன்னாங்க. உடனே செய்து கொண்டு இருந்த வேலையே நிறுத்தி விட்டு சிறு பிள்ளை போல வேகமாக அங்கு சென்றது அக்மார்க் உண்மை.
மாடி வீட்டு அம்மா அவசரமா எங்கோ போனாங்க. எங்கே என்று கேட்டால், அவர் வருவதை சொன்னாங்க. உடனே செய்து கொண்டு இருந்த வேலையே நிறுத்தி விட்டு சிறு பிள்ளை போல வேகமாக அங்கு சென்றது அக்மார்க் உண்மை.
சாதாரணமாக தான் கூட்டம் இருந்தது. அந்த பகுதி மக்களுக்கே பலருக்கு அது தெரியாது. திடீரென அங்கு உற்சாகம் கரை புரண்டது. ஒரு வித ஆடம்பரம் இல்லை. வாண வேடிக்கை இல்லை. விளம்பரங்கள் இல்லை. காதை கிழிக்கும் ஒலி பெருக்கி இல்லை. அடுத்தவரை துன்புறுத்தும் வாழ்க கோஷம் இல்லை. பாரத் மாதா வாழ்க என்ற கோஷம் மட்டும் அதிர்ந்தது. சுதந்திர போராட்ட காலத்து எதிரொலி போல இருந்தது.
சாதாரணமாக ஆர்யா கவுடா சாலையில் இருந்து தன் தொண்டர்களும் சக தலைவர்களும் புடை சூழ மிக வேகமாக ஒரு நடை. சாலை இரு மருங்கிலும் உள்ள மக்களுக்கு வாழ்த்தும் வந்தனமும் கூறிய பாங்கு . புன்னகை மாறா முகம். மிக அருகில் வந்த போது தான் தெரிந்தது பயண களைப்பு . ஆனால் மனதில் கொண்ட உறுதி அதை திசை காணாமல் விரட்டியது.
பெரியவர்களும், இளைஞர்களும், அவரிடம் புத்தகத்தில் கை எழுத்து வாங்க முண்டி அடித்தார்கள். யாரையும் அவரின் பாதுகாப்பு காவலர்கள் விலக்கவில்லை ஆனால் கண் இமைக்காது கவனித்தார்கள். வாங்க என்றார். சாப்பிடீங்களா என்றார். மழையால் ரொம்ப கஷ்டப்பட்டீங்களா? என்றார். பேச்சில் ஒரு உண்மையான கரிசனம் இருந்தது. நாம் பேசுவதை காது கொடுத்து கேட்கிறார். கண் பார்த்து பேசுகிறார். பல அரசியல் புள்ளிகள் போல நாம் பேசிக்கொண்டிருக்க வேறு எங்கோ பார்ப்பதும் , ஏதோ சந்திரயான் விட நேரம் ஆகி விட்டது போன்ற அவசர பாசாங்குகளோ இல்லை. பேச்சிலே ஒரு நிதானம், பேசுவது ஒரு நட்பு தொனியில். இவ்வாறு ஒரு அரசியல் மனிதரை பார்த்து பல தலைமுறைகள் இருக்கும்.
நிச்சயம் உங்கள் எண்ணம் நிறைவேறும். அதற்குத்தான் உழைக்கிறோம் என்றார். ஆசிகளை மனதார பெற்றுக்கொள்கிறார். மேடை ஏறும் வரை அதே வேகம், புன்னகை. ஒரு பெரியவர் மிகவும் கஷ்டத்தில் இருப்பதாக சொன்னார். வாங்களேன் மேடைக்கு வாங்க பேசிக்கொண்டே போவோம் என்றார். அந்த முதியவர் முகத்தில் பிரகாசமான ஒளியை பார்க்க தவறியவர் சிலரே.
மேடையில் ஒரு சில நிமிடங்களே பேசினார். அரசியல் பேச வரவில்லை இந்த கடினமான நேரத்தில் என்றார். ஆனால் நீங்கள் கேட்க விரும்பும் பல கேள்விகள் மனதிலேயே இருக்கிறது. இன்னும் இரண்டு மூன்று நாளில் கேட்போம் என்றார். கரகோஷம் வெடித்தது. பாரத் மாதாவை வாழ்த்தி எழுந்த கோஷம் தந்த சிலிர்ப்பு உணர்ந்தால் தான் புரியும்.
மிகவும் வித்யாசமான நடைமுறை, எளிமை, நட்புணர்வு, அறிவுத்திறன், அஞ்சாமை, நேர்மை எல்லாம் ஒன்று கூடிய ஒரு இளம் தலைவராக பார்க்கப்டுகின்ற திரு அண்ணாமலை IPS தான் அவர்.
Comments
Post a Comment