திருட்டு திராவிடம் புகுந்து நாசமாய் போன தமிழக கல்விச்சாலைகள் -- சென்னையில் உள்ள பச்சையப்பர் கல்லூரியின் சோகக்கதையே சான்று. பச்சையப்பர் கல்லூரியை பிடித்த சனியன் தான் என்ன ?

 


திருட்டு திராவிடம் புகுந்து நாசமாய் போன தமிழக கல்விச்சாலைகள் -- சென்னையில் உள்ள பச்சையப்பர் 

கல்லூரியின் சோகக்கதையே சான்று. 


பச்சையப்பர் கல்லூரியை பிடித்த சனியன் தான் என்ன ?


வள்ளல் பச்சையப்ப முதலியார் (1754-1794) தான் வாழ்ந்த குறுகிய காலத்தில் கோவில் திருப்பணி, அன்னதான சத்திரங்கள், வேத பாடசாலைகள் ‌என்று செய்யாத தர்ம காரியங்களே கிடையாது !தனது முடிவு நெருங்கி விட்டதை அறிந்த வாரிசு இல்லாத வள்ளல் பச்சையப்பர் தனது உயிலில் தனது சொத்தை இவ்வாறு பயன்பட வேண்டும் என்று எழுதி வைத்தார். "சிவனிற்கும் விஷ்ணுவிற்கும் புனித சேவை செய்வதற்கு காசி முதல் குமரி வரை உள்ள கோவில் மற்றும் புனித தளங்களில்  அறகட்டளைகளுக்கும், கோவில்கள் கட்டுவதற்கும், ஏழைகளுக்கு உதவி புரிவதக்கும், தமிழ் மற்றும் சமஸ்கிருதம் கற்று தரும் பாடசாலைகளுக்கும், பொதுவான தர்ம காரியங்களுக்கும்" பயன்படுத்த வேண்டும்.


1841 ஆம் ஆண்டு பச்சையப்பர்  அறக்கட்டளை உறுப்பினர்கள் பற்றி பல குற்றச்சாட்டுகள் எழவே, வெள்ளைகார நீதிமன்றத்துக்கு வழக்கு சென்று ரூபாய் 8 லட்சத்தை அறக்கட்டளைக்கு மீட்டுக்கொடுத்தது. இதில் 4.5 லட்சம் இந்து மதம் சம்பந்தமான நல்ல காரியங்களுக்கு  ஒதுக்கப்பட்டது. மீதி இருந்த தொகையில் கொண்டு கல்வி சாலைகள் தொடங்கப்பட்டன.


இங்கு தான் முதல் தவறு நடந்தது.அதுநாள் வரை பச்சையப்பர் அறக்கட்டளை நடத்திவந்த வேத பாடசாலைகள் மூடப்பட்டு பச்சையப்பர் பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. இந்து சமயம், கலை மற்றும் ‌கலாசாரப்படிப்புடன் நவீன கல்வியுடன் கூடிய பாடத்திட்டம் அமைந்திருந்தால் அது வள்ளல் பச்சையப்ப முதலியாரின் விருப்பத்தை பூர்த்தி செய்திருக்கும். மாறாக நவீன கல்வியும் சமயமும் பிரிக்கபட்டு முழுமையான மெக்காலே கல்வி கொண்டு வரப்பட்டது.


1880 ஆம் ஆண்டு பச்சையப்பர் பள்ளியோடு  பச்சையப்பர் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. இந்துக்களினால் இந்துக்களுக்காக அரசாங்க உதவி இல்லாமல் நடத்தப்படும் இந்து கல்விச்சாலை என்று வெள்ளைக்கார அரசாங்கத்தால் வர்ணிக்கபட்டது. சுதந்திர இந்தியாவின் மதசார்பற்ற கொள்கைகள் மூலம் இந்து கல்வி நிலையங்களில் மட்டும் தலையிடும் போக்கு பச்சையப்பர் கல்லூரியை வளர்ச்சி பாதையில் இருந்து திருப்பியது. 


1960-ஆம் ஆண்டு  பச்சையப்பர் கல்லூரியின் தரத்திற்கு மரண அடி விழுந்தது திருட்டு திராவிட அரசியலால்.அமேரிக்காவில் வியட்நாம் போரை எதிர்த்து மாணவர்கள் நடத்திய போராட்டத்தை முன் மாதிரியாக கொண்டு C.N அண்ணாதுரை பச்சையப்பர் கல்லூரி  மாணவர்களை இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் இழுத்தார்.பின்னர்  கருணாநிதி தனக்கு தேவைப்படும் போதெல்லாம் இந்த கல்லூரி மாணவர்களை தூண்டி விட்டு போராட வைப்பார் .இது  1990கள் வரை நடந்த கதை. 


இந்த கல்லூரியின் மாணவர் தலைவர் தேர்தல் மூலம் அரசியல் கட்சிகள் நுழைவதால் 1996யில் கல்லூரி முதல்வர் டாக்டர் ராகவன் இந்த தேர்தலை தடை செய்தார். பதிலுக்கு அவர்மேல் திமுக மாணவரணி ரவுடிகளால் ஆசிட் வீசப்பட்டது தனிக்கதை. 


நிற்க‌...., 


பச்சையப்பர் அறக்கட்டளையின் பெரும்பான்மையான சொத்துக்கள் இந்து  சமய சேவைக்காக ஒதுக்கப்பட்டது. அவற்றின் நிலை என்ன ? பண வருவாய் உள்ள ஒரு சிறிய பிள்ளையார் கோவிலை கூட விட்டு வைக்காத தமிழக இந்து அறநிலையத்துறை ஏன் பச்சையப்பர் அறக்கட்டளையை நெருங்கவில்லை ?


திமுக ஆட்சிக்கு வந்ததும் பச்சையப்பர் அறக்கட்டளையின் தலைவர்களாக வந்தவர்கள் முரசொலி மாறன், ஐசரி வேலன் - போன்ற சில பெயர்களை தெரிந்து கொண்டால் நமக்கு உண்மை விளங்கும்! பச்சையப்பர் அறக்கட்டளையை இந்து அறக்கட்டளையாக அறிவித்தால் திமுக  தலைவர்கள் நேரடியாக அறக்கட்டளை தலைமையை ஏற்க முடியாது ! இந்து அறக்கட்டளை சட்டம் சரியாக அமல் படுத்தப்பட்டால் அறக்கட்டளை சொத்துக்களை அபகரிப்பது அவ்வளவு  சுலபமாக இருக்காது. பச்சையப்பர் அறக்கட்டளை ஒரு இந்து அறக்கட்டளை என்பது தெரிந்தால் அதன் கல்வி நிறுவனங்களிலும் இந்து மதம்,சமய கலை மற்றும் கலாச்சார வகுப்புகள் நடத்த கோரிக்கை எழும் ! ஒரு இந்து அறக்கட்டளையை, திராவிட அறக்கட்டளையாக மாற்றப்பட்டு அதன் சொத்துக்கள் அபகரிக்கப்பட்டன. வள்ளல் பச்சையப்பரின்  எண்ணங்களும் கனவுகளும் முழுமையாக அழிக்கப்  பட்டுவிட்டது. இது தான் பச்சையப்பர் அறக்கட்டளையின் சோக வரலாறு.


முரசொலி மாறன், ஐசரி வேலன் என்று இந்த அறக்கட்டளை சம்பந்தப்பட்ட திராவிட திருடர்களின் வாரிசுகள் எல்லாம் செல்வ செழிப்போடு குபேரர்களாக  விளங்குகிறார்கள்! இது வள்ளல் பச்சையப்பர் முதலியாரின் அருளால் வந்ததா அல்லது பச்சையப்பர் அறக்கட்டளையின் சொத்துக்களை அபகரித்ததால் வந்த செழுமையா? கடவுளுக்கு தான் வெளிச்சம்!


திருட்டு திராவிட இயக்கங்களே பச்சையப்பர் கல்லூரியை பிடித்த சனியன்கள். பச்சையப்பர் அறக்கட்டளை பற்றி  இந்த வரலாறுகளை பல பெரியவர்கள் மற்றும் கல்விமான்கள் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். அங்கு 1965-ஆம் ஆண்டு படித்த என் கல்லூரி முன்னாள் பேராசிரியரும் விளக்கி சொன்னார். ஆனால் இன்றைய இளைஞர்களுக்கு திமுக அந்த கல்லூரியை அழித்த கதை தெரியாது. சென்னை  ப்ரெசிடெண்சி கல்லூரியையும் திமுகதான் இப்படி சீரழித்தது என்று சென்னை வாசிகளுக்கு தெரியாது. 


இந்துத்துவா இயக்கங்களும், ஆர்எஸ்எஸ் பேரியக்க  போராளிகளும், அண்ணன் H.ராஜா, அண்ணன் கல்யாணராமன், அண்ணன் அர்ஜுன் சம்பத் போன்ற தலைவர்களும்  பச்சையப்பர் அறக்கட்டளை குறித்து மேலும் பல விவரங்களை திரட்டி பச்சையப்பர் அறக்கட்டளை குறித்து   பொதுவில் குரல் எழுப்ப வேண்டும்.மாமனிதர் வள்ளல் பச்சையப்பரின் எண்ணங்களையும் கனவுகளையும் நிறைவேற்ற சங்கிகள்  போராட வேண்டும்.


நன்றி.. வணக்கம்...!


*#ஜெய்ஹிந்த்*


- selvakumar sastrigal


#save_dharma

Comments

Popular posts from this blog

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷

*TENT DECOR CATERING EXPO 2024* - 4,5,6-Oct-2024 - Chennai Trade Centre, Nandambakkam Chennai

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது