தமிழக எதிர்காலம்* அண்ணாமலை கிட்ட இவனுங்க எப்படி வசமா சிக்கி இருக்கானுங்க பாருங்க..!
Very big post
But pls make time and read
👇👇👇
*தமிழக எதிர்காலம்*
அண்ணாமலை கிட்ட இவனுங்க எப்படி வசமா சிக்கி இருக்கானுங்க பாருங்க..!
அண்ணாமலை ஜாதிய சொல்லி திட்ட முடியாது..
தமிழன் இல்லணும் சொல்ல முடியாது..
படிக்காதவன் எனவும் சொல்ல முடியாது..
Data தெரியாதுனும் சொல்ல முடியாது..
நேர்மையை பத்தியும் தப்பா பேச முடியாது..
வயசாயிருச்சினு சொல்ல முடியாது..
விவசாயத்தை பத்தியும் பேச முடியாது..
பணக்கார வீட்டு பையன் எனவும் பேச முடியாது..
ஏதாவது சொல்லியும் பயமுறுத்தவும் முடியல..
கேப்டனை வீழ்த்தியது போல மீடியாவ வச்சும் வீழ்த்தலாம்ணு பார்த்தா.. ரிப்போர்ட்டர்ஸ் எல்லாம் தெறிச்சு ஓடுறானுங்க..
என்ன பண்ணுவது என தெரியாம, மெல்லவும் முடியாம விழுங்கவும் முடியாம அவஸ்தை படுறானுங்க..!
திமுக _ அண்ணாமலை
அதிமுக _ அண்ணாமலை
காங்கிரஸ் _ அண்ணாமலை
கம்யூனிஸ்ட் _ அண்ணாமலை
மதிமுக _ அண்ணாமலை
விடுதலை சிறுத்தைகள் _ அண்ணாமலை
நாம் தமிழர் _ அண்ணாமலை
இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பு _ அண்ணாமலை கிறிஸ்தவ மதவாத அடிப்படை அமைப்பு _ அண்ணாமலை
இடதுசாரி மீடியா பத்திரிகை ஊடகவியலாளர் _ அண்ணாமலை..
இப்படி..ஒரு மனிதனை எதிர்க்க எத்தனை நபர்கள். சும்மா சொல்ல கூடாது. இந்த மூன்று ஆண்டுகளில் இவ்வளவு நபர்களை இரவு பகல் பாராது கதற விட்டு கொண்டு உள்ளார் அண்ணாமலை. உண்மையில் இந்திய அளவில் மோடி அய்யா அவர்களுக்கு கூட இத்தனை எதிரிகள் கிடையாது. தமிழக அரசியலில் இவ்வளவு எதிரிகள் ஒரு நபருக்கு எதிராக உள்ளது, அண்ணாமலை அவர்களுக்கு மட்டுமே என்று நினைக்கிறேன்.
அண்ணாமலை வந்த பின்பு திமுக படும்பாடு !
தனியாருக்கு தாரை வார்க்கும் 5000 கோடி அனல் மின் நிலைய ஒப்பந்தம் ரத்து.
விவசாயத்தை சிதைக்கும் அன்னூர் சிப்காட் தொழிற்சாலை நிறுத்தம்.
பத்து ரூபாய் பாலாஜியின் சவால்கள் ஏற்று கொள்ளப்பட்டு, இன்று அவர் புழல் சிறையில்.
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சவடால்கள் ஏற்று கொள்ளப்பட்டு நிதியமைச்சர் பதவியே காலி.
வடக்கன் வடக்கு என்று பிரிவினை பேசி
வயிறு வளர்த்து திரிந்த வாய்கள்; இன்று அடங்கி ஒடுங்கி கிடக்கிறது.
இந்தி மொழி மீது வெறுப்புணர்வை பதிவு செய்து அரசியல் செய்த அட்டூழியங்கள் அடங்கி பொந்துக்குள் புகுந்து கொண்டது.
இந்தியாவின் மீது வன்மம் கொண்டு, தமிழகத்தை பிரிக்க வேண்டும் என்று பிரிவினை பேசிய கும்பல், தன்னுடைய நாக்கில் தானாகவே சூடு வைத்து கொண்டு ஒடுங்கி கொண்டது.
இந்து தர்மத்தின் மீது தினம் தினம் சேற்றை வாரி இறைத்து கொண்டிருந்த கும்பல், இன்று மன்னிப்பு கேட்கும் நிலைக்கு சென்று விட்டது.
அனைத்து கடைகளையும், டாஸ்மாக்கையும் திறந்துவிட்டு, கோவிலை மட்டும் பூட்டி வைத்த கும்பலை, ஒரே அறிவிப்பில் திறக்க வைத்தார்.
தேர்தல் வாக்குறுதிபடி ஆயிரம் ரூபாய் கொடுக்காமல் ஏமாற்றி வந்த கும்பலை, அதிரடி அறிவிப்பின் மூலம் வேறு வழியில்லாமல் கொடுக்க வைத்தார்.
ஆவின் ஊழல் பற்றி நாட்டிற்கு அண்ணாமலை தெரியப்படுத்த அமைச்சர் நாசர் வீட்டுக்கு போனார்.
கோயம்புத்தூர் தற்கொலை படை சிலிண்டர் வெடிகுண்டு வெடிப்பு தொடர்பாக, ஊரை ஏமாற்றி வந்த திமுகவின் முகத்தில் ஆணித்தரமான ஆதாரப்பூர்வமாக செய்தியாளர் சந்திப்பின் மூலம் கரியை பூசினார்.
சனாதன தர்மத்தை அழிப்பேன் என்று கூறிய உதயநிதியை, இனி ஒருபோதும் சனாதனம் பற்றி வாய் திறக்க மாட்டேன் என்று புறமுதுகிட்டு ஓட வைத்தார்.
மதமாற்றத்தால் பாதிக்கப்பட்டு இறந்த லாவண்யாவின் விவகாரத்தை, இந்திய அளவில் கொண்டு சென்று, பொய் கூறிய கும்பலை திணற வைத்தார்.
திமுக கும்பலின் சொத்து பட்டியலை வெளியிட்டு இந்தியாவையே அதிர வைத்து, மக்களுக்கு எதிராக சுரண்டும் கும்பலை அம்பல படுத்தினார்.
நீட் தேர்வை ஏன் எதிர்க்கிறார்கள் என்பதற்கு, ஆற்காடு வீராசாமி தொடங்கி ஜெகத்ரட்சகன் வரை செய்த தில்லுமுல்லுகளை அம்பலப்படுத்தி, திமுகவை திணற வைத்து கொண்டிருக்கிறார்.
கால்டுவெல் பாதிரி, ராமசாமி, அண்ணாதுரை, கருணாநிதி என அனைவரும் தமிழுக்கு, தமிழருக்கு, தமிழர்களின் தர்மமான இந்து தர்ம நம்பிக்கைகளுக்கு, தமிழகத்திற்கு எதிராக செய்த வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றி வருவதால் தற்போது திக்கி திணறுகிறது போலி திராவிடம்.
வடமாநிலத்தவர்களை ஆரியன் என்று திமுகவினர் வாய் கிழிய பிரிவினை பேசினால், ராகுல் காந்தியும், மம்தா பானர்ஜியும் ஆரியர்கள் தானே, அவர்களோடு எதற்கு கூட்டணி வைத்திருக்கிறாய் என்று மண்டை அடியாக போடுகிறார்.
மணல் மாஃபியாக்கள் செய்த பெருத்த ஊழல்களை அம்பலப்படுத்தி, இன்று அமலாக்கத்துறை முழுமையாக ஆராய்ந்து வருகிறது.
மின் கட்டண உயர்வை பற்றி தெளிவாக விளக்கி கூறி, மக்களின் ஆதரவை பெற்று, திமுகவை சின்னாபின்னம் ஆக்கி கொண்டிருக்கிறார்.
அறநிலையத்துறை செய்யும் அத்துமீறல்கள், சுரண்டல்கள், அட்டூழியங்களை படம் போட்டு காட்டியதால், சேகர்பாபுவை தலை தூக்க முடியாமல் தள்ளாட செய்திருக்கிறார்.
"என் மண் என் மக்கள்" எனும் மக்கள் யாத்திரை மூலம் ஒவ்வொரு பகுதி தொகுதிக்கும் சென்று, அந்த மக்களின் ஆத்மாவிலும் கலந்து வருவதால், திமுகவின் அடிநாளமே இப்போது கதி கலங்கி போயிருக்கிறது.
ஒவ்வொரு நிமிடமும் அண்ணாமலை என்ன செய்கிறார், எங்கு செல்கிறார், என்ன பேசுகிறார் என்பதை கவனிப்பதில் மட்டுமே தனது முழு உளவுத்துறையும் பயன்படுத்தி, அவர் பேசும் விவரங்களுக்கு, பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, சரி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டு, பல்லை இளித்து கொண்டிருக்கிறது திமுக கூடாரம்.
எடப்பாடி பழனிச்சாமி, திமுக செய்யும் திருட்டுகளை கண்டும் காணாமல் போவதால், அண்ணாமலை மக்களின் அத்தனை வாழ்வாதார பிரச்சனைகளுக்கும் குரல் கொடுப்பதால், தமிழக மக்கள் அண்ணாமலையை நோக்கி வர துவங்கி இருப்பதால், என்ன செய்வதென்று தெரியாமல் கையை பிசைந்து கொண்டிருக்கிறது திமுக.
இனியும் தொடரும் போலி திராவிட கும்பல், அதுவாகவே அழிய தொடங்கி விட்டது.
தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் உள்ள நிலையில், ஒரு கட்சி தலைவர் இப்படி ஊர் ஊராக சென்று, மக்களை சந்திக்கிறார்அவருக்கும் அலை அலையாக மக்கள் கூட்டம் கூடுகிறது.
சரி…இது என்ன அதிசயம்.? ஜெயலலிதா கருணாநிதிக்கெல்லாம் இதற்கு முன்பு இப்படி, அல்லது இதைவிட அதிக கூட்டம் கூடவில்லையா என்று கேட்கலாம்..
*நியாமான கேள்விதான்…*
ஆனால் இங்கே ஒரு கட்சி 68 முதல் ஆட்சியிலும், மற்றோரு கட்சி 77 முதல் ஆட்சியிலும் மாறி மாறி உள்ளது. இவர்களுக்கெல்லாம் கூட்டம் கூடுவதோ, அல்லது குவார்ட்டர் மற்றும் பிரியாணி கொடுத்து கூட்டம் கூட்டுவதோ ஒரு பெரிய விஷயமே இல்லை.
ஆனால் இன்று அவர்களே நினைத்தாலும், எதுவும் கொடுக்காமல் இப்படி ஓரு கூட்டம் கூட்ட முடியுமா என்றால் அது மிக பெரிய கேள்விக்குறியே.
ஆனால் 3-4 ஆண்டுகள் முன்பு வரை தமிழகத்தில் இந்த பாஜக எங்கே இருக்கிறது என்று நக்கலடிக்கப்பட்ட ஒரு கட்சிக்கு, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தன்னிச்சையாக இத்தனை பெரிய கூட்டம் கூடுகிறது என்றால், அது ஒரு பெரிய அதிசயம் தானே.
அண்ணாமலையின் personal charisma பாஜகவிற்கு இத்தனை கூட்டம் கூட உதவுகிறது. அது இன்று வேறு ஒரு எந்த பெரிய கட்சியின் அரசியல் தலைவருக்கும் இல்லை.
உடனே இந்த வயித்தெரிச்சல் பார்ட்டிகள், நாளைக்கு தேர்தலில் பாஜக சீட்டு எதுவும் ஜெயிக்க முடியாமல் போனால், அண்ணாமலையை நக்கலடிக்க கிளம்பும். நாளையே பாஜக தனியாக நின்று 40க்கு 40ம் வெல்லும் என்று நாங்கள் சொல்லவில்லை. மீண்டும் மீண்டும் சொல்வது, சீட்டு வெல்வதை விட வளர்ந்து வரும் வாக்கு சதவீதத்தை நிரூபிப்பதே முக்கியம்.
இங்கே இரு திராவிட கட்சிகளும் சிறுபான்மை வோட்டிற்கு ஆளாக பறந்து, முடிந்த அனைத்து தாஜாக்களையும் செய்து வருகின்றனர். இங்கே பாஜக வாங்கும் வாக்கு சதவீதம் என்பது இங்கே ஒரு பெரும் இந்து வாக்கு வங்கி உருவாகிக்கொண்டிருக்கிறது என்பதற்கான சாட்சியாக அமையும். அது இங்கே அரசியல் களத்தை குப்புற திருப்பி போடும். நீண்ட கால அரசியல் மாற்றத்திற்கு நிச்சயமாக வழிவகை செய்யும்.
அதற்கான அடித்தளத்தை அண்ணாமலை கனகச்சிதமாக அமைத்து வருகிறார் என்பது கண்கூடாக தெரிகிறது.!
அண்ணாமலை
முதல்வர் ஆனால்.! மக்கள் அபரிமிதமான ஆதரவை அண்ணாமலைக்கு கொடுத்தால்..!
1) தீவிரவாத இயக்கம் என்பது தமிழ்நாட்டில்
இருந்து வேறரூக்கப்படும்.
2) மதமாற்றத்தொல்லை அறவே இருக்காது.
3) அவரவருக்கு பிடித்த மதத்தை விரும்பியும் ஏற்றும் அமைதியாக வாழலாம்.
4) இளைஞர்கள் இளஞிகள் குடிபோதையிலிருந்து
காப்பாற்றப்படுவார்கள்.
5) சாராயக் கடைகள் மூடப்படும்.
6) இலவசம் என ஏழைகளை ஏமாற்றும் வேலையை முற்றிலுமாக ஒழித்து, தேவையான இலவசம் ஏழைகளுக்கு நேரடியாக கிடைக்கும். இடைத்தரகர்கள்
களை எடுக்கப்படுவார்கள்.
7) திருட்டு, தாலிபறிப்பு, பெண்களை பாலியல் தொல்லைக்கு ஆளாக்குவது, கற்பழிப்பு, கஞ்சா விற்பவன் ஆகிய இவர்கள் கழிவறையில் வழுக்கி விழுவார்கள்.
8) லஞ்சம் ஒழியும்.
9) அரசியல்வாதி அரசியல்வாதியாக இருப்பான். ரவுடியாக மாறமாட்டான்.
10) அரசு அலுவலகத்தில் குறிப்பிட்ட நாட்களுக்குள் குறிப்பிட்ட வேலை நடக்கும். பொதுமக்கள் அலைக்கழிக்கப்பட மாட்டார்கள்.
11) சரியான திட்டமிடல் இருக்கும். அதனால் அரசுபணம் விரையம் ஆவது தடுக்கப்படும்.
12) சட்டம் ஒழுங்கு சீர்பட்டு விடும். நேர்மையான காவல் அதிகாரிகள் கிடைப்பார்கள்.
13) அந்தந்த மாவட்ட மக்களுக்கு, மாவட்டத்திற்கு தகுந்த வளர்ச்சியை செய்யும் திறமையான IAS அதிகாரிகள்
நியமிக்கப்படுவார்கள்.
14) நில அபகரிப்பு, ஆள்கடத்தல், வியாபார தலத்தில் மாமுல் கேட்டல், கட்டப்பஞ்சாயத்து, அறவே ஒழிக்கப்பட்டுவதுடன், இவர்கள் நசுக்கப்படுவார்கள். ஒடுக்கப்படுவார்கள்.
15) நீர்நிலைகள் பாதுகாக்கப்படும். பராமரிக்கப்படும்.
16) கணிமவளத்தை கட்டுப்பாடுடன் காப்பாற்றப்படும்.
17) சுகாதரத்திற்கும், சுகாதார துறைகளுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.
18) விவசாயிகளுக்கு ஆக்க ஊக்க பயிற்சிகளும், விளைபொருள் பெருக்கத்திற்கும் அதிகாரிகளை முடிக்கி விடப்படுவார்கள்.
19) கந்துவட்டி தொழில் கட்டுப்படுத்தப்படும்.
20) நாடக காதல் முற்றுப்பெறும்.
21) மாணவர்களுக்கு நல் ஒழுக்கம் கற்றுத்தரப்படும்.
22) தொழில் தொடங்கவும் அதை தொடங்க வருபவரிடம்
கமிஷன், அராஜகம் இவைகள் முற்றிலும் தடுக்கப்பட்டு, முதலீட்டாளர்கள் தானாக முன்வந்து தமிழகத்தில் பயமில்லாமல் தொழில்செய்ய, தக்க உத்தரவாதம் வழங்கப்படும்.
23) தரமான கல்வி கிடைத்திடவும், உயர்கல்வியில்
தாய்மொழி தமிழுக்கு முழு பங்கு அளித்திட உத்திரவாதம் அளிக்கப்படும்.
உண்மையான அமைதிபூங்காவாக தமிழகத்தை அன்று தான் பார்க்க போகிறோம்.
ஒரு மனுசன IPS வேலைய விட வச்சி, கட்சில சேத்து, அவர தலைவர் ஆக்கி, அவருக்கு Z+ பாதுகாப்பு குடுத்து...
DMK Filesல ஆரம்பிச்சி, ஒரு அமைச்சரை உள்ள தள்ளி,
"என் மண் என் மக்கள்"னு யாத்திரை போக வச்சி, பட்டி தொட்டி கிராமம் வரைக்கும் அண்ணாமலை_னா யாருனு இப்ப தெரியவச்சிருக்கு பாஜக.
அதிமுக - திமுகவுக்கு அடுத்து அண்ணாமலைய பத்தி தினம் ஒரு செய்தினு, அவர் இல்லாம தமிழ்நாட்டுல செய்தியே இல்லங்கிற அளவு இப்போது அண்ணாமலை பிரபலமாகி இருக்கிறார்.
சரி..யார் இந்த அண்ணாமலை..?
ராஜ பரம்பரையின் இளவரசனா..?
ஐந்து முறை முதலமைச்சராக இருந்தவரின் மூத்த மகனா..?
பஞ்ச் டயலாக் பேசும் சினிமா நடிகரா..? அல்லது ஓட்டுக்கு ரூபாயும், வெள்ளி கொலுசும், வெண்கல குடம்மும், தங்க கம்மல் தருவேன் என்றும் வாக்குறுதி கொடுத்து ஓட்டு கேட்கும் அளவுக்கு கோடிகளை சேர்த்து வைத்த அரசியல்வாதியா..?
ஏன் இந்த எழுச்சி..?
மக்கள் முகத்தில் எப்படி இவ்வளவு சிரிப்பு..சிலிர்ப்பு..?
ஒரு ஆடு மேய்ப்பவன் மகனுக்கு எப்படி இவ்வளவு ஆரவாரமான வரவேற்பு..?
ஒரு விவசாயி மகன் நடந்தால் எப்படி உண்டாகிறது திருவிழா..?
ஒரு வயல்காட்டு நடவு கூலி தாயின் மகனால், தன் வாழ்க்கை மாறும் என்று எப்படி நம்புகிறது தமிழகம்..?
அண்ணாமலையாரை கிரிவலம் சுற்றினால் நல்லது நடக்கும் என்று நம்பும் மக்கள்..,
ஒரு குடிசை வீட்டில் கஞ்சி குடித்து வளர்ந்த குழந்தை, ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்று..26 வயதில் கர்நாடக சிங்கம் என்ற புகழை பெற்று.. 37 வயதில் அந்த பதவியை அங்கேயே தூக்கி போட்டுவிட்டு..தங்களுக்காக இங்கே வந்தவுடன்..கண்கள் தழும்பி, அண்ணாமலையாரே தங்களுக்காக நேரில் வந்து விட்டதாக எண்ணி மகிழ்ந்து நிற்கிறது இப்போது தமிழகம்..!
எங்கள் தமிழர்களின் வயிற்றில் அடித்த எவனையும் இனி விடுவதற்கிலை..!
எங்கள் மண்ணில் பசித்திருக்க ஒரு தனிப்பட்ட மனிதனையும்..இனி விடுவதற்கில்ல..!
இங்கே தமிழை வைத்து பிழைப்பு நடத்தும் திராவிட கூட்டம்..ஐயா கர்மவீரர் காமராஜரை காக்கையுடன் ஒப்பிட்டார்கள்..கருவாட்டுக்காரி மகன் என்று கொக்கரித்தார்கள்..கோடிகளை சேர்த்து வைத்த சீமான் என்று மனசாட்சியே இல்லாமல் பொயுரைத்தார்கள்.
இன்று அதே கூட்டம் தான் அண்ணாமலையை ஆடு என்கிறது..அவர் பேசும் அனைத்தும் பொய் என்கிறது..தனிப்பட்ட முறையில் அவர் குடும்பத்தையும் அசிங்கமாக பதிவிடுகிறது.
அன்று இந்தக் கூட்டத்தின் சூழ்ச்சி தெரியாமல், ஐயா கர்மவீரர் காமராஜரை தோற்கடித்து, மிக பெரிய பாவத்தை தேடிக்கொண்டோம் நாம்...இன்று அந்த பாவத்திற்கு பரிகாரமாக நாம் ஒவ்வொருவரும் இப்போது அண்ணாமலையை ஆதரிக்க வேண்டும்.
ஒரு நேர்மையான மனிதனை கட்சிக்கு தலைவராக்கியதால்.. தங்களால் வருங்காலத்தில் ஏதும் ஊழல் செய்ய முடியாமல் போய்விடுமோ என அச்சம் கொள்ளும் சொந்த கட்சிக்காரா்கள் ஒரு பக்கம்.! ஏற்கனவே செய்த ஊழலை இவர் அம்பலப்படுத்த தயங்கமாட்டார் என்ற பயத்தில் கூட்டணி கட்சிக்காரா்கள் ஒரு பக்கம்.! இன்னாருபுறம் தமிழகத்தை முழுவதும் சுரண்டமுடியாமல் தவிக்கும் எதிா்கட்சிகள்.! இந்த மூவருக்கும் இடையில்.. தனிமனித ஒழுக்கத்திலும், பொது வாழ்விலும், ஒரு நேர்மையான, திமிரான மனிதனாய் திகழ்வதே சிறப்புதான்.!
*அந்த திமிரான மனிதரை ஆதரிப்பதும் ஒரு கர்வம்தான்.!*
சொந்த வேலைய பார்க்காம, இதை எல்லாருக்கும் அனுப்புறதே, ஊழல் இல்லா ஆட்சி தமிழக மண் பார்க்கணுங்கிறதுக்காக தான்.
அண்ணாமலைக்கு கூடுகிற கூட்டத்தைப் பார்த்து, ஏமாற வேண்டாம்.! கூட்டம் ஓட்டாகாது.! என்பது சிலரின் கருத்தாக இருக்கிறது.
எம்.ஜி.ஆர். காலத்திலிருந்து பார்க்கிறேன்.
அவருக்கு கூடியது தானாக சேர்ந்த கூட்டம்.
மற்றபடி இரு கழகங்களும் காசு கொடுத்தே கூட்டம் சேர்ப்பார்கள். கூட்டத்தை சேர்ப்பது மாவட்ட செயலாளர், வட்டச் செயலாளர்களின் பொறுப்பு.
இன்று அண்ணாமலைக்கு கூடும் கூட்டம், நமக்கு ஆச்சரியத்தையும் நம்பிக்கையையும் தருகிறது.
அது அவருடைய ஆரம்ப கால பேட்டிகளிலேயே தொடங்கி விட்டது.
அவரிடம் சினிமா கவர்ச்சி இல்லை.
எந்தத் தலைவரின் பின்புலமும் இல்லை.
அவர் யாருடைய வாரிசும் இல்லை.
கவர்ச்சியான அடுக்கு மொழி பேச்சு இல்லை.
சீமான் போல அடாவடி பொய்கள் சொல்வதில்லை.
மிக சாதாரண மனிதனாக, மக்களில் ஒருவராக தான் தென்படுகிறார்.
அதுவே அவர் பலம்.
அவர் பேச்சில் இருக்கும் உண்மை தான் கவர்ச்சி.
திமுகவின் பண பலம், ஊடக பலம், அதிகார பலம், வன்முறை அச்சுறுத்தல் போன்றவற்றை அநாயாசமாக அவர் எதிர்கொள்ளும் விதம் மக்களுக்குப் புதிது.
திமுகவை தட்டி கேட்க ஒருவர் வந்து விட்டார் என்ற புத்துணர்வு.
எம்.ஜி.ஆரிடம் மக்கள் கண்டது திமுகவுக்கான மாற்று.
அண்ணாமலையிடம் மக்கள் காண்பதும் அதுவே தான்.
எடப்பாடியாரால் திமுகவை எதிர் கொள்ள முடியாது என்பதை இரண்டு வருட திமுக ஆட்சி நிரூபித்துள்ளது.
அதிமுகவை மிரட்டி ஒரு மூலையில் உட்கார வைத்து விட்டது திமுக.
எனவே எடப்பாடியார் திமுகவுக்கு மாற்று இல்லையென மக்கள் முடிவு செய்தது போல் தெரிகிறது.
1971க்கு பிறகு மக்கள் ஆதரவால் திமுக வென்றதில்லை.
திமுகவிற்கு மாற்று யார் தர முடியுமோ அவர்களுக்கே வெற்றி வாய்ப்பு.
தன்னிச்சையாக அண்ணாமலையை காண வரும் கூட்டத்தில் எம்ஜிஆர் காலத்தின் சாயலை காண முடிகிறது.
இது தான் இன்றைய உண்மையான யதார்த்தம்.
இரு கழகங்களும் பதறுவது அந்த எண்ணத்தை மேலும் உறுதி செய்கிறது.
சின்ன பையன் என எடை போட்டு, அண்ணாமலையை ஏற்க மறுத்தால், இழப்பு நமக்கே.!
என் மகன் எனக்கு ஒரு அறிவுரை சொன்னால் ஏற்றுக்கொள்வேன். "அவனென்ன சொல்வது நான் என்ன கேட்பது" இதெல்லாம் தான், "தான்" எனும் அகங்காரத்தின் வெளிப்பாடு.
அண்ணாமலை மக்களை சந்திக்கிறார். வயதானவர்கள் எழுந்து போய் அவரை கட்டி பிடித்து கொண்டாடுகிறார்கள்.
ஒரு கல்லூரி மாணவி, தனது மருத்துவ கல்லூரி சேர்க்கை பற்றிய சந்தோஷத்தை அவரிடம் வெளிப்படுத்துகிறாள். உணர்வு பூர்வமாக அவருக்கு சால்வை போர்த்த முயல்கிறாள். "இல்லை.! இல்லை.! இந்த வெற்றிக்கு சொந்தக்காரர் நீங்கள்தான்" என்று சால்வையை வாங்கி, அந்த பெண்ணுக்கே சாத்துகிறார். தலையில் கை வைத்து ஆசி வழங்குகிறார்.
வயதான அம்மையார் ஒருவர், தான் பெற்ற மகனை போல எண்ணி, அண்ணாமலையை முத்தமிட்டு, மனதார வாழ்த்துகிறார். அந்த வாழ்த்து வாயில் இருந்து வரவில்லை, அடி நெஞ்சின் ஆழத்திலிருந்து வருகிறது.
மக்கள் ஆரவாரிக்கிறார்கள். எதையும் எதிர்பார்க்காத கூட்டம் தானாய் வந்து குவிகிறது. அண்ணாமலையின் பெருந்தன்மையான அனுகுமுறை, அரவணைப்பு, தலைமைப்பண்பு அனைத்துமே வெளிப்படையாக தெரிகிறது.
நடிப்பு என்பதை துளி கூட அவரிடம் காணவில்லை. எல்லாமே இயல்பான உடல்மொழிகள். எதார்த்தமான அவரின் அணுகுமுறையால், எளிதாக மக்கள் அவரை நெருங்கிவிடுகிறார்கள்.
எதிரே நிற்பவர் சிலருக்கு தலைவனாக தெரிகிறார். சிலருக்கு தீர்வளிப்பவனாக தெரிகிறார். சிலருக்கு சாதிக்க பிறந்தவனாக தெரிகிறார்.. சிலருக்கு வெற்றி கொள்ள வந்தவனாக தெரிகிறார். சிலருக்கு சகலகலா வல்லவனாக தெரிகிறார். சிலருக்கு தீயாய் தெரிகிறார்.! சிலருக்கு அதிர்வாய் இருக்கிறார். சிலருக்கு கசப்பாய் இருக்கிறார். ஆனால், மக்கள் வெள்ளத்தின் ஊடே, பனியாய் கறைகிறார்.
உண்மையானவர். உயரிய பண்பு கொண்டவர். கற்று தேறிய உயர் சிந்தனையுடையவர். வல்லமையுடையவர். வள்ளல் பண்பு கொண்டவர். பதவி ஆசை இல்லாதவர். நேர்மையானவர். பிறவிப்பலனை சாதித்து காட்ட முயல்கிறவர். நேர்மையற்றவர்களை கடவுளராக பார்க்கப்பட்டாலும் அவர்களை ஏறி மிதிக்கக்கூடியவர். பெரும் பதவியில் இருந்தவன் என்றாலும், கீழ்மட்ட அரசியலில் இருந்து மக்களை கண்டு வருகிற சேவகன்.
ஆம், மக்களை ஏமாற்றும் மனச்சாட்சி அற்றவரல்ல அண்ணாமலை. மனங்களை வெல்லும் ஆற்றல் கொண்டவர்.
அண்ணாமலை நடத்துவது ஒரு பெரும் கொள்ளை சாம்ராஜித்திற்கு எதிராக நடத்தும் போர்..!
200 கோடி ஊழல் விவகாரத்தை சிபிஐ யிடம் தாக்கல் செய்ய போவதாக அண்ணாமலை கூறியுள்ளார். இது ஒரு சாதாரண விஷயமல்ல. இதில் எதோ மர்மம் இருப்பது போல் தோன்றுகிறது.
இத்தனை நாளும் மோடி அவர்களை கேலியும், கிண்டலும், கொடூர வார்த்தைகளாலும் பேசி கலாய்த்து கொண்டு இருந்தது கருணாநிதி குடும்பம்.
இது வரை அமைதியா இருந்த பிரதமர் மோடி, மெதுவாக தமிழகத்தின் பக்கம் திரும்ப ஆரம்பித்து விட்டார் என்பது போல் தோன்றுகிறது. அதனால் அண்ணாமலை அவர்களுக்கு ஒரு கண்ஜாடை காட்டி விட்டார் மோடி.
அதனால் தான் 2011ல் ஸ்டாலின் செய்த ஊழலை தூசி தட்டுகிறது மத்திய அரசு. இதில் எதோ முழுமையான ஆதாரம் சிக்கி இருப்பதாகவே படுகிறது.
அண்ணாமலை மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்கிறது திமுக. நடவடிக்கை எடுத்து பார் என்கிறார் அண்ணாமலை.
அவர் மீது மட்டும் திமுக கை வைக்கட்டும் பார்க்கலாம். அதன் பிறகு தெரியும் மோடி குரூப்ஸ் என்றால் என்னவென்று. நீங்கள் எல்லாம் சென்னை ரவுடிகள். அவர்கள் உலக ரவுடிகள். உலக நாடுகளே பயப்படும் அளவுக்கு ராஜ தந்திரத்தை கரைத்து குடித்தவர்கள். பீஸ் பீஸாக்கி தெறிக்க விட்டு விடுவார்கள் திமுகவை.
இதையெல்லாம் திமுக உணர்ந்து விட்டதாகவே நினைக்க தோன்றுகிறது
ஏனெனில் திமுக கழகத்திற்கு மேல் கத்தி தொங்குவதை பார்த்து, திமுக மிரண்டு இருப்பதை இப்போது கண் கூடாக தெரிகிறது. சட்டத்தின் கண் பார்வையில் சில காலம் மறைந்திருக்கலாம். ஆனால் நிரந்தரமாக முடியாது.
எல்லா நீதிபதிகளும் ஷைனி மாதிரி இல்லை..ஜெயலலிதா அவர்களுக்கு தண்டனை கொடுத்த நீதிபதிகளும் நம் நாட்டில் உண்டு.
உண்மையை சொல்ல போனால் ஊழல் செய்வதில் இரண்டு கழகங்களும் ஒன்றுக்கு ஒன்று சளைத்தவர்கள் அல்ல.
ஏமாந்தது ஒட்டு மொத்தமாக நமது பணம். தமிழர்களின் உழைப்பு தான் இந்த லஞ்ச பணம் மற்றும் அவர்களது சொத்து. இதற்காக கோபப்பட வேண்டியது, வெக்கப்பட வேண்டியது நாம் தான்.
இவையனைத்தும் உங்களது மற்றும் உங்களது குடும்பத்தாரின் பணமும், வியர்வையும், உழைப்பும், ரத்தமும், வரியும் உள்ளடக்கியது தான்.
உங்களிடம் சொத்து வரியை கூட்டி, மின்சார கட்டணத்தை கூட்டி, தண்ணி வரியை கூட்டி, டாஸ்மார்க் கட்டணத்தை கூட்டி, உங்களிடம் புடுங்கும் அத்தனை பணமும், இவர்கள் பைக்குள் சென்று விடுகிறது.
தமிழர்களின் ரத்தத்தை உறுஞ்சும் இந்த இரண்டு திராவிட கட்சிளை சுத்தமாக தமிழகத்திலிருந்து விரட்டப்பட வேண்டும்.
இதற்கு மேலும் மக்களாக பார்த்து திருந்தா விட்டால், இந்த திராவிட களவாணிகளை ஒன்றும் பண்ண முடியாது.
ஆனால் இதை மக்கள் உணரும் காலம் இப்போது வந்து விட்டது. நம் நாட்டை இந்த கயவர்களிடம் இருந்து காப்பது என உறுதி கொண்டு விட்டதாகவே தெரிகிறது. நமது கடமையும் கூட.
இந்த ஊழல்வாதிகள் சொத்து பட்டியலை, 2G நோட்டிஸ் போல் பட்டி தொட்டியெங்கும் கொண்டு செல்ல வேண்டியது பாஜகவின் கடமை.
இவ்வளவு ஆதாரங்களை திரட்டி மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்ததற்காக திரு. அண்ணாமலை ஐ.பி.எஸ் அவர்களை பாராட்டியே ஆக வேண்டும்.
எப்படியோ தமிழ் நாட்டில் அண்ணாவால் ஆரம்பிக்க பட்ட கட்சி, அண்ணாமலை வந்து அழியனும் என்பது விதி.
கடுமையான உழைப்பு.. நினைவாற்றலில் அசாத்தியம்..நல்ல பேச்சுத்திறன்..இவர் தான் நாம் எதிர்பார்த்த ஆளுமை..!
இப்படி ஒருத்தர் வரனும்னு தான் தமிழகமே எதிர்பார்த்து கொண்டிருந்தது..!
திமுக குடும்பத்தில் கலகத்தை உண்டு பண்ணி விட்டார் அண்ணாமலை.
திமுகவில், அவர்களுக்குள் தெரியும் எல்லோரும் சம்பாதிக்கிறார்கள் என்று. ஆனால் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என்று தலைமைக்கு சரியாக தெரியாது.
இன்று அண்ணாமலை தெளிவாக சொல்லி விட்டார்.
கிட்டத்தட்ட 18 மாதங்களில் அன்பில் பொய்யாமொழி 1000 கோடிக்கு மேல் சம்பாதித்ததாக சொல்கிறார் அண்ணாமலை.
ஜகத்ரட்சகனை பாருங்கள்.
ஜம்மென்று 58000 கோடிகள் சம்பாதித்து உள்ளார்.
அடுத்து T R பாலுவை பாராட்ட வேண்டும். என்ன மக்கள் சேவை செய்து இருந்தால் 12000 கோடி சம்பாதித்து இருக்க முடியும்.
அடுத்து எ வ வேலு, கே என் நேரு, கலாநிதி வீராசாமி ஓரளவு சேவை செய்து உள்ளார்கள் எனத் தெரிகிறது.
இப்போது பொன் முடி, துரைமுருகன் நாம் என்ன சேவையில் குறைந்து விட்டோம். நேற்று வந்த அன்பில் பொய்யாமொழி என்ன மக்கள் சேவை அதிகமாக செய்து விட்டார்.? எதில் நாம் கோட்டை விட்டோம்.? என யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
இதில் R S பாரதி வேறு இடையில் 15 நாட்களுக்குள் ஆவணங்களை கொடுக்காவிட்டால் வழக்கு தொடருவோம் என்கிறார்.?
இதைத்தானே அண்ணாமலை எதிர்பார்த்தார்.?
இப்போது பந்து திமுகவிடம். முடிந்தால் ஆடி பாருங்கள் என்கிறார் அண்ணாமலை.
மக்கள் மன்றத்தில் முறையிட்டு, திமுக கூடாரத்தை அலற வைத்து கொண்டு இருக்கிறார் அண்ணாமலை.
அண்ணாமலையின் டிஎம்கே ஃபைல்ஸ் வெளியீட்டிற்கு பிறகு என்ன மாதிரியான விஷயங்கள் அரங்கேறி வருகிறது.?
* ஊடகங்களின் இரட்டை வேடம் அம்பலமாகிவிட்டது. கவரேஜ் செய்ததில் காட்டிய ஆர்வத்தில் ஒரு பங்கினை கூட ஒளிபரப்புவதில் காட்டவில்லை.
* சமீபத்தில் ஒரு நடிகர் உயிரிழந்த போது, கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தில், நூறில் ஒரு பங்கு கூட தரப்படவில்லை என்பது வேதனையான விஷயம்.
* திமுக மேல்மட்ட தரப்பில் ஆழ்ந்த அமைதி காக்கப்படுகிறது. பதிலடி தருகிறோம் என்று இறங்கினால், விஷயம் வெகு ஜனங்களின் கவனத்தை ஈர்த்துவிடும் என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார்கள்.
* திமுக தரப்பில் கருத்து தெரிவித்த மிக சிலர் கூட, மேம்போக்காக பதிலளித்தனரே தவிர, அண்ணாமலைக்கு ஆக்ரோஷமான எதிர்ப்பினை காட்டவில்லை.
காரணம் 1, 2, 3...என பட்டியல் பெரிதாகும் போது, ஊழல் விவகாரம் பெரிதாக பேசப்பட்டு, ஆணிவேரையே அசைத்து விடுமே.
* லெட்டர் பேடுகள் பலவும் தங்களது திமுக விசுவாசத்தை வெளிக்காட்ட, குதித்து வருகின்றன.
* காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள் என கூட்டணி கட்சிகள் பலரும் அரசியல் தர்மத்தை மறந்து, சொத்துக் குவிப்பு ஒரு பெரிய விஷயம் இல்லை என்பது போல, எதிர்கால சீட்டு அரசியலில் ஆதாயம் பெறும் நோக்கில் பலமாக முட்டு கொடுத்து வருகின்றனர்.
* ஆட்சிக்கு எதிரான ஊழல்கள் குறித்த பேச்சினை எளிதாக மடைமாற்றி விட முடியும். ஆனால் தாங்கள் குவித்து வைத்துள்ள பல ஆயிரம் கோடிகள் சொத்துக்களை பற்றிய பட்டியலை முழுவதுமாக பொது வெளியில் தொடர்ந்து பகிர்ந்தால்..
அது பொது மக்களிடையே பெரிய அளவில் பேசு பொருளாகி, அது மக்களிடையே பலவிதமான அபிப்பிராயங்களை ஏற்படுத்தும்.
அதோடு தங்களது இலவச அரசியலும் இனி எடுபடாமல் போகும் வாய்ப்புகள் உருவாகுமோ என்ற அச்சம் திமுகவினருக்கு இப்போது ஏற்பட்டுள்ளது.
* திமுகவின் சொத்து குவிப்புகளுக்கு சற்றும் சளைக்காத அளவில் இருக்கிறது, அதிமுகவினரின் சொத்து மதிப்பு.
அதனால் அதிமுகவினரும் கதிகலங்கி போயிருப்பது நிதர்சனம்.
* நீண்ட கால திராவிட எதிர்ப்பாளர்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை ஒளி பிறந்துள்ளது. அவை ஒரே புள்ளியில் ஐக்கியமாகும் நிலை தொடங்கிவிட்டது. இனி அது விஸ்வரூபம் எடுக்கும். திராவிட கூட்டத்தை எதிர்க்க மாபெரும் சக்தி உருவாகி வருகிறது. இதில் எதிர்பாராத விதமாக பழைய காங்கிரஸார் பலரும் தனிப்பட்ட ஆதரவினை பகிர்வார்கள்.
* அண்ணாமலையாரின் ஃபைல்ஸ் எந்த அளவுக்கு மக்களிடையே ரீச் ஆகிறது என்பது அதி தீவிரமாக கவனிக்கப்பட்டு வருகிறது. இருபத்து ஐந்து சதவீதம் பேரை தாண்டி விவரம் போய் சேர்ந்து விட்டது என்பது தெரிய வந்தவுடன் வெளிப்படையாக அண்ணாமலை குறிவைக்கப்படுவார்,
பாஜகவினர் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படும் போது, மக்கள் மனநிலையில் பெரிய அளவில் மாற்றங்களை நிச்சயம் கொண்டு வர முடியும்.,
எதிரணியினர் ஏதேனும் ஜாதி, மத கலவரங்கள் தூண்டிவிடப்பட்டு பாஜகவின் மீதே பழி சுமத்தி தனிமைப்படுத்தும் முயற்சிகளும் இனி அரங்கேற்றப்பட கூடும். எனவே பாஜகவினர் கூடுதல் விழிப்புணர்வு உடன் செயல்பட வேண்டும்.
எந்த சூழலிலும் மேலிடத்தை தொடர்பு கொள்ள மறக்க வேண்டாம்.
கடைசியாக மக்களுக்கு:
இத்தனை காலம் இருக்கும் இடம் தெரியாமல் இருந்த"தமிழக பாஜக", இந்த அண்ணாமலை தலைமை ஏற்ற பிறகு அபரிமிதமாக வளர்ந்து வருகிறது.
மக்களாகிய நாமும் இனியாவது தமிழகத்தின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து, "தாமரை"க்கு வாக்களித்து, "அண்ணாமலை"யை முதல்வராக்கினால், மீண்டும் அப்பழுக்கற்ற "காமராஜர் ஆட்சி" தமிழகத்தில் மலரும்..மீண்டும் தமிழகம் தலை நிமிரும்.!
உங்களில் ஒருவன்
🪷🇮🇳🙏
Comments
Post a Comment