முதலில் பாரீஸில் இருந்த வெளியூர் பஸ் நிலையம் மெல்ல கோயம்பேடுக்கு மாறியது. அது ஒன்றும் outer என்று சொல்ல முடியாது. நகரின் விளிம்பு என்று சொல்ல முடியாது. அதைத் தாண்டி அண்ணா நகர்/முகப்பேர் என்று நகரம் பறந்து விரிந்து இருந்தது; இருக்கிறது! இது பரவாயில்லை. இப்போது அங்கிருந்து கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையம் 33 கிலோ மீட்டர்! இதுகாறும் கோயம்பேட்டிலிருந்து வெளியூர் பேருந்தை பிடித்தவர்கள் தென் மாவட்டங்களுக்கு செல்வதென்றால் மூட்டை முடிச்சுகள் மற்றும் வயதான குடும்ப உறுப்பினர்கள், குழந்தைகளுடன் 33 கிலோ மீட்டர் தூரம் பயணித்து, டவுன் பஸ்ஸில் தொங்கி/ஆட்டோ காரனுடன் சண்டையிட்டு பேரம் பேசி/ஒலா, உபேருக்கு compulsory எக்ஸ்ட்ரா டிப்ஸ் கொடுத்து - கிளாம்பாக்கம் வந்து சேர்வதற்குள் - நொந்து நூடுல்ஸாகி, தாவு தீந்துடும்!

 





முதலில் பாரீஸில் இருந்த வெளியூர்  பஸ் நிலையம் மெல்ல கோயம்பேடுக்கு மாறியது. அது ஒன்றும் outer என்று சொல்ல முடியாது. நகரின் விளிம்பு என்று சொல்ல முடியாது. அதைத் தாண்டி அண்ணா நகர்/முகப்பேர் என்று நகரம் பறந்து விரிந்து இருந்தது; இருக்கிறது! இது பரவாயில்லை.


இப்போது அங்கிருந்து கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையம் 33 கிலோ மீட்டர்! இதுகாறும் கோயம்பேட்டிலிருந்து வெளியூர் பேருந்தை பிடித்தவர்கள் தென் மாவட்டங்களுக்கு செல்வதென்றால் மூட்டை முடிச்சுகள் மற்றும் வயதான குடும்ப உறுப்பினர்கள், குழந்தைகளுடன் 33 கிலோ மீட்டர் தூரம் பயணித்து, டவுன் பஸ்ஸில் தொங்கி/ஆட்டோ காரனுடன் சண்டையிட்டு பேரம் பேசி/ஒலா, உபேருக்கு compulsory எக்ஸ்ட்ரா டிப்ஸ் கொடுத்து - கிளாம்பாக்கம் வந்து சேர்வதற்குள் - நொந்து நூடுல்ஸாகி,  தாவு தீந்துடும்!


பழைய புறநகர் பேருந்து நிலையமான பாரீஸிலிருந்து தென் மாவட்டங்களுக்கு பயணிப்பவர்கள் என்றால் அவர்கள் இன்னும் அதிக தூரம், 42 கிலோ மீட்டர் பயணிக்க வேண்டும்.


ஆந்திர மாநிலம் செல்லும் பேருந்துகளை ஏற்கனவே கோயம்பேட்டில் இருந்து பிரித்து மாதவரத்திற்கு கொண்டு போயாச்சு!


இப்போது தென் மாவட்டத்திற்கு கிளாம்பாக்கம்!


வேலூர், பெங்களூர் பக்கம் செல்லும் பேருந்துகளுக்கு திருமழிசை பேருந்து முனையம்!


பிறகு CMBT பஸ் டெர்மினஸ் எதற்கு? ஆட்டோ ஸ்டாண்டா மாத்திடலாமா? 🤣😂


இனி வெளியூருக்கு போவதென்றால் வெளியூர் போய்தான் பஸ் பிடிக்க    வேண்டும்!  அடுத்த புறநகர் பேருந்து நிலையத்திற்கு இப்போதிலிருந்தே மதுராந்தகத்தில் அல்லது மாமண்டூரில் இடம் தேர்வு செய்வார்கள் போலிருக்கிறது. போகிற போக்கை பார்த்தால் ஆட்டோவிலேயே திருச்சி போக வேண்டும் போலிருக்கிறது! 


கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திட்டமிடப்பட்டு எப்போது அடிக்கல் நாட்டப் பட்டதோ - அப்போதே மத்திய அரசிடம் வலியுறுத்தி தாம்பரம் - செங்கல்பட்டு மார்க்கத்தில் வண்டலூருக்கும் ஊரப்பாக்கத்திற்கும் இடையில் ஒரு ஸ்டேஷன் அமைத்து - அங்கிருந்து ஒரு சுரங்கப்பாதை மற்றும் சாலையைக் கடக்க நடை மேம்பாலம் (எஸ்கலேட்டர் வசதிகளுடன்) அமைத்திருக்க வேண்டும். அப்படி அமைத்திருந்தால் இப்போது மக்கள் கிளாம்பாக்கத்தில் இருந்து விமான நிலையம்/சென்ட்ரல்/எக்மோர்/வேளச்சேரி போன்ற பகுதிகளுக்கு மிக எளிதில் செல்ல முடியும்!


விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை இப்போதுள்ள மெட்ரோ ரயில் நிலையத்தை விரிவு படுத்துவதென்பது  - கிளாம்பாக்கத்தில் ஒரு ரயில்வே ஸ்டேஷனை அமைப்பதை விட மிகப் பெரிய திட்டம். அதற்கு பல வருடங்கள் ஆகும்.


அதை விட ரயில்வே ஸ்டேஷன் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தி இருந்தால், கிளாம்பாக்கம் பேருந்து முனையம் திறக்கும் முன்னரே அது தயாராகி - பேருந்து பயணிகளை வரவேற்கத் தயாராக இருந்திருக்கும்! 


இப்போதைக்கு புறநகர் ரயிலில் வருவோர் வண்டலூரில் இறங்கி - அங்கிருந்து பஸ் அல்லது ஷேர் ஆட்டோவில் வரலாம். 


அநேகமாக விமான நிலையம்/தாம்பரம் பஸ் நிலையம்/ரயில் நிலையம் அருகில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரை சுழற்சி முறையில் ஷேர் ஆட்டோக்கள் இயங்கத் தொடங்கி இருக்கும் என்று நினைக்கிறேன். 


இது பொது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்!


கருத்தாக்கம்:


பட்டு சாஸ்திரிகள் 

1-1-2024.


 Comments as follows 


கொள்ளையடிக்கவே நேரம் சரியா இருக்கு இதுல மக்கள் நலன் குறித்து எப்படி சிந்திப்பது.கோயம்பேடு பேருந்து நிலயத்தை புடிச்சாச்சி அடுத்து கோயம்பேடு மார்கட்டை பூந்தமல்லி தாண்டி மாற்ற ஏற்ப்பாடு நடக்குது.ஏற்கனவே கொரானா அப்ப தற்க்காலிகமா செய்தது அப்ப வந்தது இந்த யோசனை .இப்ப மெயின் சிட்டியில் பல ஏக்கர் நிலங்கள் கைவசம் வரும் ஆட்டய போட்டு சுமார் 10 தலைமுறை உட்க்கார்ந்து சாப்பிடலாம். இதை எல்லாம் யார் கேக்கறது. மக்கள் பாத்துட்டு போய்கிட்டே இருப்பாங்க யாருக்கும் நேரம் இல்லை ஓடி ஓடி உழைச்சி இவனுகளுக்கு கொட்டி அழனும். மக்கள் அடிமையாக வாழ பழகி கொண்டார்கள் கேள்வி கேட்டால் குண்டர் தாக்குதல் போலீஸ் பிரச்சனை மற்றும் உயிருக்கு கூட ஆபத்து வரும் இதனால் வாய் மூடி மௌனியாக செல்கிறார்கள்.


அது ஒன்றும் இல்லை. MGR பெயரை இல்லாமல் செய்ய வேண்டும். இரண்டாவது அந்த இடத்தை பிளாட் போட்டு விற்று காசு பாக்க போறாங்க பாருங்கள்


பேருந்து நிலையம் அருகில் என்னுடைய மருமகன் ,மந்திரிகள் மானாவாரியாக இடம் வாங்கி போட்டு இருக்காங்க.அவுங்க லாபத்தை பார்ப்பதா அல்லது 1009₹,சாராயம் இலவசமாக கொடுத்தால் வாக்களிக்கும் முட்டால்ககளை பார்ப்பதா? எங்களுக்கு எப்போதும் எங்களுடைய வளர்ச்சி மட்டுமே


தலை எழுத்து  எங்கே போய் முட்டிக் கொள்வதென்று  தெரியவில்லை 

இந்த பஸ்ஸ்டாண்ட் மூலம்  எத்தனை கொல்லை ( கொள்ளை) அடிக்கப்பட்தோ 

ஆண்டவனுக்கத்தான் வெளிச்சம்🙏

Comments

Popular posts from this blog

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷

*TENT DECOR CATERING EXPO 2024* - 4,5,6-Oct-2024 - Chennai Trade Centre, Nandambakkam Chennai

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது