கோவைகுண்டு_வெடிப்பு. 14/2/1998. அணைவரும் படிக்க வேண்டும் அப்போ எனக்கு 10 வயது. Sixth standard. அந்த வயதுக்கு உரிய கவலைகள் மட்டும் தான். அதை மாற்றியது கோவை குண்டு வெடிப்பு சம்பவம். எங்கள் பள்ளி, Christian convent in main place in கோவை. முதல் குண்டு வெடித்த நாள், வீடு வந்து சேர்வதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது. அந்த வயதில், யார் வைத்தது, எதற்காக என்று எல்லாம் தெரியவில்லை. ஆனால் அன்று ஒரு முஸ்லிம் தோழி கூட பள்ளிக்கு வராதது இன்றும் ஞாபகத்தில் இருக்கிறது. என் அண்ணாவும் அதே பள்ளி தான். அவன் வகுப்பிலும் எந்த முஸ்லிம் நண்பர்களும் வரவில்லை. ஒரு முஸ்லிம் டீச்சர் இருந்தார்கள். அவர்களும் வரவில்லை.
#கோவைகுண்டு_வெடிப்பு.
14/2/1998.
அணைவரும் படிக்க வேண்டும்
அப்போ எனக்கு 10 வயது. Sixth standard. அந்த வயதுக்கு உரிய கவலைகள் மட்டும் தான். அதை மாற்றியது கோவை குண்டு வெடிப்பு சம்பவம். எங்கள் பள்ளி, Christian convent in main place in கோவை. முதல் குண்டு வெடித்த நாள், வீடு வந்து சேர்வதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது. அந்த வயதில், யார் வைத்தது, எதற்காக என்று எல்லாம் தெரியவில்லை. ஆனால் அன்று ஒரு முஸ்லிம் தோழி கூட பள்ளிக்கு வராதது இன்றும் ஞாபகத்தில் இருக்கிறது. என் அண்ணாவும் அதே பள்ளி தான். அவன் வகுப்பிலும் எந்த முஸ்லிம் நண்பர்களும் வரவில்லை. ஒரு முஸ்லிம் டீச்சர் இருந்தார்கள். அவர்களும் வரவில்லை.
அவன் மாலை வீட்டிற்கு அனைவரும் வந்ததும் சொன்னான்: அம்மா, அப்போவே ஒரு முஸ்லிம் நண்பன் சொன்னான் "ஏதோ நடக்க போகுது, மசூதியில் பேசிக்கராங்க, யாரும் காந்திபுரம், டவுன் ஹால், எல்லாம் அடுத்த பத்து நாள் போகாதீங்க" என்று. உடனே என் அம்மா, சித்தி இருவரும் பூஜை அறைக்குள் சென்றவர்கள் சித்தப்பா வீடு வந்ததும் தான் வெளியே வந்தார்கள். ஏனெனில், சித்தப்பா அலுவலகம் காந்திபுரம் தாண்டி. அவர் வந்து சேரும்போது மணி 11.
அப்படி என் குடும்பம் பயந்து அது வரை நான் பார்த்தது இல்லை. அது வரை இந்து, முஸ்லிம் எல்லாம் அவரவர் கும்பிடும் சாமி என்று இருந்தது போய், இதனால் அப்பாவி உயிர்கள் போகும் என்று உலகம் புரிந்தது அன்று.
அதை விட கொடுமை, என் தோழியின் அப்பா அந்த குண்டு வெடிப்பில் இறந்தது. அவர் எப்போவும் காந்திபுரம் போக மாட்டார். அன்று யாரையோ விட போய், குண்டு வெடித்து அவர் இறந்து, அந்த குடும்பம் நிலை குலைந்தது. என் பள்ளிக்கு அவள் திரும்பி வந்தபின், முஸ்லிம் classmates udan அடுத்த 5 வருடம் அவள் பேசவில்லை. இன்னும் பலருக்கு பல நஷ்டம். அந்த சம்பவத்திற்கு அப்புறம் நாங்கள் எல்லாரும் அவர்களுடன் கொஞ்சம் ஜாக்கிரதையாக தான் பழகினோம். தேவை இல்லாமல் வீட்டு address, phone number yaarum தரவில்லை. இதெல்லாம் அந்த வயதில் யாரும் சொல்லி தரவில்லை, எங்களுக்கே தோணினது தான். அதை வைத்து அவர்கள் ஒன்றும் செய்து இருக்க மாட்டார்கள் தான், ஆனாலும் எதுக்கு ரிஸ்க் என்று தான் எல்லாரும் (ஹிந்து, கிறிஸ்டியன், ஜெயின்) நினைத்தோம். அவர்களும் அதை புரிந்து தனி செட் ஆகி விட்டார்கள். என்ன தான் அதற்கு பின் பழகினாலும் ஒரு லைன் நடுவில் இருந்தது.
அன்று யாராவது ஒரு தோழி அல்லது அந்த டீச்சர் கொஞ்சம் வீட்டில் இருங்க என்று சொல்லி இருந்தால் பல உயிர்கள் தப்பித்து இருக்கும். ஆனால் அவர்கள் மட்டும் safe aaga இருந்து சின்ன பிள்ளைகள், நம் தோழிகள் என்று கூட கவலை படாமல் இருந்து விட்டார்கள். அந்த கலவரத்தில் நாங்கள் யாராவது இறந்து இருந்தால்? அதற்கு அப்புறம் நான் அந்த டீச்சர் ku மட்டும் good morning சொல்ல மாட்டேன். She stopped being a teacher that day!
அந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்ந்து, பத்து நாள் கலவரம் நடந்தது. கோவை பற்றி எரிந்தது! முதல் முறை, எப்போ திறக்கும் என்று தெரியாமல் லீவ் விட்டார்கள் (இப்போ lockdown போல தான்). பால், காய்கறி எல்லாம் நிறுத்தி விட்டார்கள். இங்க bomb வைத்தார்கள், அங்க தீ வைத்தார்கள் என்று பல நியூஸ். என் வீட்டில் நியூஸ் பார்க்க விடவில்லை. ஆனால் அண்ணா அப்போ அப்போ சொல்லுவான். அது வரை அமைதி பூங்காவாக இருந்த கோவை அன்று முதல் கொஞ்சம் கொஞ்சமாக மாறி விட்டது. நம் நண்பர்கள், அண்டை அயலார் எல்லாம் நம் மக்கள் என்ற உணர்வு போய் விட்டது. பம்பாய் படம் பார்த்த போது புரியாதது எல்லாம் புரிய ஆரம்பித்தது.
இது நடந்து 22 வருடம் ஆனாலும் அந்த வலி, பயம் இன்னும் போகவில்லை. மிதவாத கொள்கை எனக்கும் உண்டு, நான் அதை வரவேற்கிறேன். எனக்கு யாரிடமும் வெறுப்பு இல்லை, அவர்வர் வாழ்வு அவரவருக்கு என்று நம்புகிறேன்.
ஆனால், எனக்குள் இருக்கும் சிறுமி, மறுபடி நம்மை ஏமாற்றி குண்டு வைத்து விடுவார்கள் என்று நடுங்கும் போது, அதை தடுக்க வழி தெரியாமல் இருக்கிறேன். என்னை போல் பலர் இந்த religious violence aal இருபக்கமும் பாதிக்க பட்டவர்கள் இருப்பார்கள். நாம் மிதவாத கொள்கை வேண்டும் என்று விரும்பும்போது, அது ஒரு பக்கம் மட்டும் இருந்தால் வலிகளும் ஏமாற்றங்களும் தான் மிஞ்சும். அதை அனைவரும் உணர வேண்டும்.
PS:
இன்றும் நான், என்ன தான் நம்மிடம் நன்றாக பழகினாலும் அமெரிக்காவில் இருக்கும் முஸ்லிம்கள் (middle east, Iran, Europe) யாருக்கும் இந்து மதம் பற்றி பெரிதாக தெரியவில்லை என்றாலும் (Indian, Pakistan, Bangladeshi Muslims know, most others don't), அவர்களுடன் பேசும் போது, பழகும்போது ஜாக்கிரதையாக தான் இருக்கிறேன். இன்னொரு முறை ஏமாற எனக்கு சக்தி இல்லை.
from MADHYAMAR nila sj
Comments
Post a Comment