பழையகால தமிழ்படம் போல 80களில் நம்பியார் ஜெய்சஙர் என இரட்டை வில்லன்கள் வருவது போல நிஜமாகவே இரு வில்லன்கள் மேற்கு வங்க மாகாணம் சந்தேஷ்காலியில் பெரும் அட்டகாசங்களை செய்திருக்கின்றார்கள்
பழையகால தமிழ்படம் போல 80களில் நம்பியார் ஜெய்சஙர் என இரட்டை வில்லன்கள் வருவது போல நிஜமாகவே இரு வில்லன்கள் மேற்கு வங்க மாகாணம் சந்தேஷ்காலியில் பெரும் அட்டகாசங்களை செய்திருக்கின்றார்கள்
"ஊர் சொத்தெல்லாம் தன் சொத்து" என எல்லாவற்றையும் வளைத்து பெரும் அராஜகம் செய்திருக்கின்றார்கள் பெண்கள் உள்பட
இந்த இடம் தாழ்த்தபட்ட மக்கள் வாழும் இடம் வறிய மக்கள் இடம் என்பதால் நீண்டகாலமாக மிரட்டி ஒடுக்கி குட்டி சாம்ராஜ்யம் அமைத்திருக்கின்றார்கள்
ஷிபு பிரசாத் ஹஸ்ரா என்பவன் திரிணாமுல் காங்கிரஸில் முக்கிய புள்ளி அவன் தன் கூட்டாளி ஷாஜகான் ஷேக் என்பவனோடு சேர்ந்து பெரும் அராஜஹம் செய்திருகின்றான்
இது பல்லாண்டு காலம் நடந்திருக்கின்றது, ஆனால் இவர்களை தொட யாருமில்லை தமிழக திமுகவில் பெரிய ரெவிடிகள் உண்டு என்பது போல அங்கு இவர்கள் இருந்திருக்கின்றார்கள்
விஷயம் அமலாக்கதுறை சோதனையில் தொடங்கியிருகின்றது,செந்தில் பாலாஜியின் அல்லக்கைகள் போல அமலாக்கதுறையினரை சிலர் தாக்கிவிட விவகாரம் வெடித்து மத்திய போலிசார் காவலுடன் இவர்களை தொட்டபோது அதிர்ச்சியடைய வைக்கும் தகவல்கள் வந்தன
ஏகபட்ட மக்கள் புகார் கொடுத்தனர், அவ்வளவும் சொத்து மோசடி பெண்கள் விவகாரம் என நீள்கின்றது
ஒருவர் இருவரல்ல புகார் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டுகின்றது
தேசமே மம்தாவினை பார்த்து முறைக்க அம்மணி தலைகுனிந்து நிற்கின்றார், ஒருவன் இப்போது காவலில் இருக்க இன்னொருவன் ஷாஜகானை காணவில்லை
செந்தில்பாலாஜி தம்பி போல தலைமறைவாகிவிட்டான்
சிக்கியவனிடம் நடத்தும் விசாரணையிலும் ஏகபட்ட மக்கள் திரண்டுவந்து கொடுக்கும் புகாரிலும் மம்தா காத்த சமூகநீதி, மக்கள் நலம், சமத்துவமெல்லாம் பல்லிளிக்கின்றது
பழங்குடிவாரியம் நடந்த கொடுமையினை கண்டும் அதற்கு மம்தா துணைபோனதை கண்டும் அதிர்ந்து இந்த ஆட்சியே கலைத்தாலும் நல்லது என மேலிடத்துக்கு அறிக்கை அனுப்பியிருக்கின்றது
முன்பு மணிப்பூருக்கு ஓடி சென்ற கனிமொழி அம்மையார், அய்யா திருமா இன்னும் பல கோஷ்டிகள் இப்போது சத்தமே இல்லை
இப்போது தமிழக பாஜக அறிவிக்கவேண்டியது என்னவென்றால் அய்யா திருமா, அம்மையார் கனிமொழி போன்றோர் சந்தோஷ்காலி செல்ல நாங்களே பயணசீட்டு எடுத்து தருவோம் செலவெல்லாம் ஏற்றுகொள்வோம், அவர்கள் உடனே செல்லட்டும் என அறிவிப்பது
அதனை கமலாலயம் உடனே செய்யும் என எதிர்பார்ப்போம்
பஞ்சாப், மணிப்பூர் என்றால் பழைய லாட்டரி டிக்கெட் விற்பவன் செய்பவனை போல ஓயாமல் அறிக்கைவிடும தமிழக முதல்வரை இந்த சந்தோஷ்காலி விவகாரத்தில் காணமுடியவில்லை, வழமையாக அவருக்கு எழுதி கொடுக்கும் சங்கி விடுமுறையில் சென்றுவிட்டானோ என்னவோ? Kala vathy kalaa
Comments
Post a Comment