நரேந்த்ர மோதி ஜி ஆழ்கடலையும் விட்டுவைக்கவில்லை...😍 வைத்துவிட்டார் ஆப்பு...😍🪷 சற்று விவரமான பதிவு. பொறுமையாகப் படித்து அறியுங்கள். பெய்ட் (Bayte) துவாரகாவில் உள்ள இரண்டு தீவுகளுக்கு உரிமை கோரிய சன்னி வஃப் வாரியத்தின் மனுவை குஜராத் உயர்நீதிமன்றம் சென்ற மாதம் நிராகரித்தது. இந்துக்களின் புனித யாத்திரை ஸ்தலமான பெய்ட் துவாரகா தீவில் உள்ள இரண்டு தீவுகளுக்கு உரிமை கோரி குஜராத் உயர்நீதிமன்றத்தில் சன்னி வஃப் வாரியம் மனு தாக்கல் செய்தது.

 




நரேந்த்ர மோதி ஜி ஆழ்கடலையும் விட்டுவைக்கவில்லை...😍 வைத்துவிட்டார் ஆப்பு...😍🪷


சற்று விவரமான பதிவு. பொறுமையாகப் படித்து அறியுங்கள்.


பெய்ட் (Bayte) துவாரகாவில் உள்ள இரண்டு தீவுகளுக்கு உரிமை கோரிய சன்னி வஃப் வாரியத்தின் மனுவை குஜராத் உயர்நீதிமன்றம் சென்ற மாதம் நிராகரித்தது. இந்துக்களின் புனித யாத்திரை ஸ்தலமான பெய்ட் துவாரகா தீவில் உள்ள இரண்டு தீவுகளுக்கு உரிமை கோரி குஜராத் உயர்நீதிமன்றத்தில் சன்னி வஃப் வாரியம் மனு தாக்கல் செய்தது.


பெய்ட் துவாரகா தீவின் தொகுப்பில் 8 சிறிய தீவுகள் உள்ளன. பெய்ட் துவாரகாவில் தங்களுக்குச் சொந்தமான இரு தீவுகள் இருப்பதாக

வஃப் வாரியம் மனுவில் கூறியிருந்தது. நீதிமன்றம்,


“நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஸ்ரீக்ருஷ்ணர் நகரில் உள்ள நிலத்திற்கு வஃப் வாரியம் எப்படி உரிமை கோர முடியும்?” எனக் கேள்வி எழுப்பியது.


ஸ்ரீ க்ருஷ்ணர் துவாரகாவை ஆண்டபோது, பெய்ட் துவாரகாவின் இருப்பிடமாக இருந்த இடம், ஓகாவிலிருந்து படகில் 30 நிமிட பயணம். இந்தத் தீவில் தற்போது 7,000 குடும்பங்கள் வாழ்கின்றன. அதில் 6,000 குடும்பங்கள் முஸ்லீம்கள். இது எப்படி?


ஆரம்பத்தில் நமது பாரதம் போலவே இதுவும் ஹிந்துக்கள் எனப்படும் ஸநாதனிகள் மட்டுமே வாழும் இடமாகத்தான் இருந்தது இவ்விடம் கட்ச் வளைகுடாவில் த்வாரகா கடற்கரையில் அமைந்துள்ளது. க்ருஷ்ணரை ஸுதாமா வந்து சந்தித்த இடம் இதுதான். இதன் மற்றொரு பெயர் 🍃பெய்ட் ஸங்கோதரா🍃. 


ஸ்ரீக்ருஷ்ணர் பந்தயம் கட்டி விளையாடிய இடம் என்பதால் அப்பெயர் வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. மஹாபாரதத்தில், யாதவர்கள் படகுப்பயணம் செய்து செல்லும் இடமாகச் சொல்லப்படும் 🍃அந்தர்த்வீபா🍃 எனும் இந்த பெய்ட் த்வாரகா, சங்குகள் நிறைந்த பகுதியாதலால் ஸங்கோத்ரா என்றும் பெயர் பெற்றது.


ஆழ்கடல் ஆய்வுகள் இங்கு ஹரப்பன் நாகரிகம் மற்றும் மௌரிய நாகரிகத்தை ஒத்த குடியிருப்புகள் இருப்பதைக் கூறின.அகழ்வாராய்ச்சி அதை உறுதிப்படுத்தியது.  கி.பி.574 தேதியிட்ட ஸிம்ஹாதித்யாவின் கல்வெட்டும் இதைக் கூறியுள்ளது. 


ஸ்வதந்திரத்துக்குப் பின்னர் இது ஸௌராஷ்ட்ரா மாநிலத்திலிருந்து, மும்பையுடன் இணைந்தது. பின்னர் குஜராத் பிரிக்கப்பட்டபோது, பெய்ட் த்வாரகா ஜாம்நகரின் ஒரு பகுதியாக இணைந்தது.


National Institute Of Oceanography, 1981 - 1994 வரை நடத்திய ஆழ்கடல் ஆய்வில், பல தொல்பொருள் எச்சங்களைக் கண்டுபிடித்தது. அது ஹரப்பன் நாகரிகத்தினது என்பதை தொல்லியல் துறை உறுதிப்படுத்தியது.


1982-ல் 500 மீட்டர் நீளமுள்ள மதில்சுவர், கல் நங்கூரம், உறுதியான செப்பு மீன் கொக்கி, ஜாடி,

மற்றும் பல பொருட்கள், அதன் காலத்தையும், மஹாபாரதத்தில் சொல்லப்பட்ட கதைகள் பொய்யல்ல என்பதையும் நிரூபித்தன.


ஸ்ரீ கேஸவ்ராவ் கோவில், 500 ஆண்டுகளுக்கு முன்னர் வல்லபாச்சாரியாரால், க்ருஷ்ணரின் வாசஸ்தலத்திற்குச் சரியாக மேலே எழுப்பப்பட்டதாக கூறப்படும் கோவில். இதிலுள்ள ஸ்ரீக்ருஷ்ணரின் அசல் சிலை, ருக்மிணியால் நிறுவப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது த்வாரகாதீஷ் கோவிலில் உள்ள மூலவரை அப்படியே ஒத்திருக்கிறது. ஒரே ஒரு வித்யாசம், இதில் க்ருஷ்ணர் சற்று சாய்ந்த நிலையில் சங்கை ஊதுவதுபோல் இருக்கும். ஸுதாமா அவலைக் கொண்டு வந்ததன் நினைவாக, இங்கும் அரிசியிலும் அவலிலும்தான் பகவானுக்கு நிவேதனம் செய்யப்பட்டு, ப்ரஸாதமாகத் தரப்படுகிறது.


ஹனுமன் தண்டி கோவிலில் ஹனுமன் மற்றும் மகரத்வஜாவின் சிலைகள் உள்ளன. ஹனுமனின் வியர்வைத்துளி ஒன்றை ஒரு மகரம் விழுங்க, அதன் வயிற்றிலிருந்து பிறந்ததால் மகரத்வஜன் எனப்பட்ட, ஹனுமன் மகன் சிலையும் இருக்கும் கோவில்.


பெய்ட் த்வாரகாவின் தென்மூலையில் சிறு அபயமாதா ஆலயம் உள்ளது. இவை தவிர, பாமா, ருக்மிணி, லக்ஷ்மிநாராயணர், ஜாம்பவதி, லக்ஷ்மி, தேவகி, த்ரிவிக்ரமன், மத்ஸ்ய அவதாரம் மற்றும் பல ஸநாதன தர்மம் சார்ந்த கோவில்கள் உள்ளன.


இதில் தற்போது சிடி பாவா பீர் தர்கா ஹாஜி கிர்மா தர்கா என இரு தர்காக்கள்  

உள்ளன, புனிதத் தலங்களாம். 1960 கணக்கெடுப்பின்படி, அங்கே இருந்தது வெறும் 600 இஸ்லாமியர்களே. தற்போது? முஸ்லிம்கள் 85.08%, ஹிந்துக்கள் 14.57%😳


பெய்ட் த்வாரகாவின் படகுப் போக்குவரத்தில், ஹிந்துக்கள் படகுகளை வைத்திருந்தனர். மொகலாயர்கள் ஆட்சியில் மதம்மாறிய ஹிந்துமக்கள் இஸ்லாமியர்களாக

வாழ்ந்து வந்தனர். பின்னர் வஃப் வாரியம் அவர்களது தொழுகைக்கென இரு தர்காக்களை ஏற்படுத்தி, அது புனிதஸ்தலம் என ப்ரகடனப்படுத்தியது. (இன்று ஹிந்து மக்களை ஆயிரம் கேள்விகள் கேட்கும் எந்த வாயும், ”இது எப்படிடா சாத்தியம்?” எனக் கேட்கவில்லை. ஏன்?)


தங்களுக்கும் பிழைப்புக்கு எனக்கூறி, முதலில்

இரு படகுகளை வாங்கி ஓட்ட ஆரம்பித்தது. பின்னர், ராஜீவ் காந்தி கொண்டு வந்த Waqf Act 1935-ன் படி,

“உலகம் முழுதும் அல்லாவின் நிலம் ஆதலால், வஃப்வாரியம் எந்த நிலத்துக்கும் உரிமை கொண்டாடலாம்.”

என்ற மோசமான சட்டத்தால், பெய்ட் த்வாரகாவின் பல பகுதிகளை வஃப் வாரியம் தன்னுடையதாக்கியது. 2013-ல் காங்க்ரஸ் அரசு இச்சட்டத்தின் மூலம் மேலும் மட்டற்ற உரிமையை வஃப்வாரியத்துக்கு வழங்கியதில், கிட்டத்தட்ட 80% நிலம் அவர்களுடையதானது.


இரு படகுகளில் ஆரம்பித்து, மது-மாது ஆசையை ஹிந்துக்களுக்குக் காட்டியதில் அவர்களும் தடம்மாற, முஸ்லிம்களின் குயுக்தி புத்தியால்; எப்படி இன்று தனது  

தாய்மதத்தை இழந்ததோடு மட்டுமில்லாமல், அதற்கே எதிராகவும் மாறி முஸ்லிம்களாக வாழ்கிறார்களோ, அதே போல அங்கேயும் நடந்தது. ஹிந்துக்கள் தன் முகவரி இழந்தனர். சிலர் கேவலமாக மதம்மாறினர்... பலர் வெளியேறினர்.


இன்று 90% படகு சர்வீஸ் முஸ்லிம்களிடத்தில். கட்டணம் தாறுமாறாக வசூலிக்கப்படுகிறது. படகு வைத்திருக்கும் ஹிந்துக்கள் மிரட்டப்படுகின்றனர். நமாஸ் படிக்கவேண்டுமெனக்கூறி, வேண்டுமென்றே படகை நிறுத்தி வைப்பதும், கூட்டம் அதிகம் எனக்கூறி தாறுமாறாகக் கட்டணம் வசூலிப்பதும் என முஸ்லிம்களின் ஆட்டம் எல்லை மீறியது.


குஜராத் காவல்துறை ஐ.ஜி ராஜ்கோட் ரேஞ்ச் சந்தீப் சிங், பெட் துவாரகா தீவில் வசிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் மீனவர்கள். ஆனால் கடந்த சில ஆண்டுகளில், பல வணிகர்கள், சட்டவிரோத வியாபாரத்தில் ஈடுபட்டு, இந்தத் தீவுகளுக்குச் செல்லத் தொடங்கினர்.


அவர்கள் குஜராத் நிலப்பரப்பில் இருந்து கட்டுமானப் பொருட்களைக் கொண்டு வந்து, சட்டவிரோதமான கட்டிடங்களைக் கட்டினார்கள். கண்டறிதல் மற்றும் இடிக்கப்படுவதைத் தவிர்க்க, பெரும்பாலான கட்டமைப்புகளுக்கு மஜார் அல்லது தர்காக்கள் என்று பெயரிட்டனர் என்று பத்திரிகை நிருபர்களிடம் கூறியது குறிப்பிடத்தக்கது. 


(இப்போது புரிகிறதா? எப்படி புனிதத் தலங்கள் தோன்றின என்று?) குஜராத்தின் கடற்கரையில், இந்த ஆண்டு மார்ச் 12-ம் தேதி, தேவபூமி பெட் துவாரகா மாவட்டம் முழுவதும் உள்ள கிராமங்கள் 'சட்டவிரோத ஆக்கிரமிப்பாளர்களை' மாவட்டத்திலிருந்து வெளியேற்றுவதற்கான இயக்கங்களைக் கண்டபோது, ஹர்சித்தி கோவிலுக்கு அருகிலுள்ள காந்த்வி மீன்பிடித் துறைமுகத்தில், இதுவரை 200க்கும் மேற்பட்ட கட்டமைப்புகளை இடித்துத் தள்ள குஜராத் முதல்வர் பூபேந்த்ர படேல் உத்தரவிட்டுள்ளார்.


இவற்றில் வீடுகள், மசூதிகள், இஸ்லாமிய ஆலயங்கள் மற்றும் உள்ளூர் மக்களுக்குச் சொந்தமான கடைகள் ஆகியவை அடங்கும். காந்த்வியில் உள்ள பெரும்பான்மையான மக்கள்  அவர்களின் வாழ்வாதாரம் மீன்பிடித்தல்.  ஹர்சித்தி கோயிலருகில் உள்ள மெந்தா சிற்றோடையில் உள்ள ஹர்ஷத் துறைமுகம், அரசு நிலத்தில் கட்டப்பட்ட அனுமதியற்ற கட்டிடங்கள், இப்போது இடிக்கப்பட்டுள்ளன.

மேலும், கடற்பரப்பில் அமைந்துள்ள சொத்துக்கள் மற்றும் கிடங்குகள் கடத்தப்பட்ட போதைப் பொருட்களுக்கான இறங்குதளமாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனவும் துவாரகா நிர்வாகம் கூறியது.

Comments

Popular posts from this blog

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது

Om NAMO NArendra MOdi Namaha*🔥🙏🪷 Shri Narendra Modi Ashtotra Namavali ஓம் ஸ்ரீ நரேந்த்ராய நமஹ (Salutations to the revered Narendra) 1. ஓம் விஶ்வ-நேத்ரே நமஹ – Salutations to the leader of the world stage. 2. ஓம் பாரத-பக்தாய நமஹ – Salutations to India’s devoted champion. 3. ஓம் ஜடூ-ஜப்பி-ப்ரதாய நமஹ – Salutations to the giver of world-famous hugs.

The sound of gunfire pierced the air of the quiet valleys. A terrorist attack took place near the Pahalgam market area — *turning a place like paradise into hell.* People screamed. Blood flowed. There was chaos everywhere. *👺 "The terrorists were asking for names and religions and then firing bullets."*