வளைகுடாவில் சுற்றுபயணம் செய்யும் மோடி அபுதாபியில் அராபிய இஸ்லாமிய மக்கள் வாழ்த்த இந்து ஆலயத்தை திறந்துவைத்தார், பின் அங்கிருக்கும் இந்திய மக்களுடன் உரையாடினார்

 






வளைகுடாவில் சுற்றுபயணம் செய்யும் மோடி அபுதாபியில் அராபிய இஸ்லாமிய மக்கள் வாழ்த்த இந்து ஆலயத்தை திறந்துவைத்தார், பின் அங்கிருக்கும் இந்திய மக்களுடன் உரையாடினார்


1990களில் ராமர்கோவில் சிக்கல் கடைசிகட்டத்துக்கு வந்தபோது பாஜக எனும் கட்சி பூச்சாண்டியாக காட்டபட்டது, அரபு நாடுகள் இனி எண்ணெய் தராது பேரீச்சம்பழம் தராது இந்தியருக்கு வேலை தராது, பாஜகவினால் கெட்டது இந்தியா என காங்கிரசாரும், போலி மதசார்பற்ற கோஷ்டிகளும் அழிச்சாட்டியம் செய்தன‌


இந்திய பொருட்களை இனி அராபியா வாங்காது, எல்லாவற்றையும் கடலில் போடுங்கள் , நாடு வாழ அத்வாணியினையும் அதோடு சேர்த்து போடுங்கள் என்றெல்லாம் பயமுறுத்திகொண்டிருந்தார்கள்


இப்போது மோடி ஆட்சியில் ராமர்கோவில் கட்டபட்டு இன்று அராபியாவிலும் இந்து ஆலயம் எழுப்பபடுகின்றது


ஆனால் காங்கிரஸ் கோஷ்டி பூச்சாண்டிகாட்டியது போல் அல்லாமல் பாஜகவின் மோடி பிரதமராக அங்கு கவுரவிக்கபடுகின்றார், ஒவ்வொரு நாடும் விரும்பி அழைகின்றன‌


இந்திய காங்கிரஸ் கம்யூனிஸ்ட்டுகளும் இந்திய கைகூலி ஊடகங்கள் மூலம் கட்டமைத்த பிம்பமெல்லாம் பொய், முழு பொய் அது அட்டையில் கட்டபட்ட பொய் கோட்டை என்பதை மோடி உடைத்து காட்டிவிட்டார்


இப்போது ஐக்கிய அமீரககத்தை தொடர்ந்து கத்தாருக்கு சென்றிருக்கின்றார் மோடி


கவனியுங்கள், முன்பு ஈரானுக்கு ஜெய்சங்கரும், சவுதிக்கு ஸ்ம்ருதி இரானியும் சென்றார்கள் ஆனால் இப்போது மோடி நேரடியாக கத்தாருக்கே செல்கின்றார்


ஏன் என்றால் விஷயம் இல்லாமல் இல்லை


அராபியாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு நாடு அதிகாரம் செலுத்த முயலும், அவ்வகையில் எகிப்து, ஈராக், லிபியா, வரிசையில் கத்தார் பெரும் பிரயர்த்தனம் செய்கின்றது


சிறிய தீவு என்றாலும் தங்கள் அபரிமிதமான எரிவாயு வளம் தங்கள் கனவை அவர்கள் நிறைவேற்ற துடிக்கின்றார்கள்


அவர்கள் கனவு பெரிது, கொட்டும் பெரும் பணமும் பெரிது எடுக்கும் சவால் அதைவிட பெரிது


ஹமாஸின் தலைவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து இஸ்ரேலை சரிக்கு சரி பேசவைக்கும் அளவு தங்கள் செல்வாக்கை காட்டுகின்றார்கள், உலககோப்பை கால்பந்து போட்டியினை பல்லாயிரம் கோடியில் நடத்தினார்கள்


இன்னும் பெரும் பெரும் கனவுதிட்டங்களை பிரமாண்டமாக வைத்திருக்கின்றார்கள்


அராபிய அரசியல்படி பல குழப்பம் உண்டு சவுதியினை துருக்கிக்கு பிடிக்காது,சவுதிக்கு கத்தாரை பிடிக்காது, ஈரானுக்கோ யாரைய்மே பிடிக்காது


இங்கே எல்லோரையும் அணைத்து எல்லோருக்கும் பொதுவானவராக காட்டி தனக்கு தேவையான நல்ன்களை காத்துகொள்கின்றது இந்தியா


அவ்வகையில் இப்போது கத்தார் ஒரு தவிக்கமுடியா தேசம், அமெரிக்க ஆதரவு அவர்களுக்கு உண்டு


இதனால் அராபிய அரசியல் சூழலை கருத்தில் கொண்டு கத்தாருக்கு மோடி செல்கின்றார், கத்தாரும் இந்தியா மிக பலமான நாடு என்பதை உணர்ந்து இந்தியாவுடன் உறவினை விரும்புகின்றது


அதனால்தான் இந்திய முன்னாள் கடற்படையினரை விடுவித்து நட்புகரம் நீட்டியது அதை பற்றி கொள்கின்றது இந்தியா


மிக மிக கவனிக்க வேண்டிய விஷயம் பாகிஸ்தான் என்றொரு இஸ்லாமிய தேசத்தை அங்கு யாருமே தேடவில்லை அப்படி ஒரு நாடு இருப்பதையே மறந்துவிட்டார்கள்


இஸ்லாமிய சகோதரத்துவம் என்பது வேறு அரசியல் என்பது வேறு, அந்த அரசியலில் மிக சாதுர்யமாக காய்நகர்த்தி வெற்றிபெற்றுகொண்டிருக்கின்றது மோடியின் இந்தியாBHRAMA RISHIAR Fb

Comments

Popular posts from this blog

நான் கிட்டத்தட்ட 22 வயது வரை நாத்திகனாக இருந்தேன். கோவில்களுக்குச் செல்வது பிடிக்க வில்லை. நான் அவற்றை பிராமணர்கள் மற்றும் பிறர் பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாகவே கருதினேன். ஒவ்வொரு அடியிலும் அவர்கள் எப்படி பணம் கேட்டார்கள் என்பதை நான் வெறுத்தேன்.

8th August 11am, Delhi: MAHA PANCHAYAT- 100Cr HINDU Movement for Abolition of totally Discrminatory HR&CE Act.1951, all over India. Temples should function as independently as MOSQUES & CHURCHES. Money taken/swindled should be given back by Govts.

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷