ஒய்வுபெற்ற திரு. பி.கே. பாசு IAS என்பவர் இப்படி எழுதி இருக்கிறார்... நண்பர்களே மற்றும் இந்திய மக்களே... நான் ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக மத்திய ஆட்சி பணியில் இருந்ததால், கிட்டத்தட்ட எல்லா அரசியல் கட்சிகளுடன் நன்கு நெருங்கிய பழக்கம் இருந்த காரணத்தால், நான் நேரிடையாக அனுபவித்த சில விஷயங்களை, தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

 







ஒய்வுபெற்ற திரு. பி.கே. பாசு IAS என்பவர் இப்படி எழுதி இருக்கிறார்...


நண்பர்களே மற்றும் இந்திய மக்களே...


நான் ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக மத்திய ஆட்சி பணியில் இருந்ததால், கிட்டத்தட்ட எல்லா அரசியல் கட்சிகளுடன் நன்கு நெருங்கிய பழக்கம் இருந்த காரணத்தால், நான் நேரிடையாக அனுபவித்த சில விஷயங்களை, தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


பொதுவாகவே என் பணி காலத்தில், எனக்கு பல அரசியல் கட்சிகளையும் அதன் தலைவர்களையும் நன்கு தெரிந்து இருந்தாலும், நான் என் மனசாட்சியின் படியும், இந்திய அரசியலமைப்புக்கும் மட்டுமே விசுவாசமாக இருந்து இருக்கிறேன்.


எனக்கு ஒதுக்கப்பட்ட பீகார் மாநிலத்தில், ஐஏஎஸ் அதிகாரியாக இருந்த போது, அப்போதைய பெரும் அரசியல் தலைவர்கள் மற்றும் முதல்வர்கள், திரு.கர்பூரி தாகூர், ஜெகன்நாத் மிஸ்ரா, சந்திரசேகர் சிங், பிந்தேஸ்வரி துபே, பகவத் ஜா ஆசாத், சச்சிதானந்த் சிங், லல்லுபிரசாத் யாதவ் மற்றும் தற்போதைய முதல்வர் நிதிஷ்குமார் ஆகியோருடன் அரசு பணி நிமித்தமாக நெருங்கி பழகியிருக்கிறேன்.


மத்திய அரசு பணியில் இருந்த போது, மத்திய அமைச்சர்களாக இருந்த திரு.கல்பனாத் ராய், என்கேபி.சால்வே, வேணுகோபாலச்சாரி, ஒய்.கே.அலக், அருண் சோரி, பா.சிதம்பரம் மற்றும் சரத் பவார் ஆகியோருடனும் பணி நிமித்தமாக நெருங்கி பழகி இருக்கிறேன்.


இவர்களை தவிர மத்திய அமைச்சர்களாக இருந்த திரு.பிரணாப் முகர்ஜி, ஜஸ்வந்த் சிங் மற்றும் தற்போதைய அருண் ஜெட்லி ஆகியாரிடமும் பணி நிமித்தமாக நல்ல பரிச்சயம் உண்டு.


ஆனால் இவர்கள் யாரிடமும், தனிப்பட்ட முறையில், எந்த எதிர்பார்ப்போ, அல்லது என்னை இவர்கள் ஞாபகம் வைத்து கொள்ள வேண்டும் என்கிற எதிர்பார்ப்போ, எனக்கு எப்போதும் நிச்சயமாக இருந்தது கிடையாது.


திரு.தேவ கவுடா, ஆர்கே.குஜ்ரால், நரசிம்ம ராவ், வாஜ்பாய் மற்றும் மன்மோகன் சிங் ஆகியோர் பிரதமராக இருந்த போது, இவர்களுடனும் மிக நெருங்கி பணியாற்றிய அனுபவமும் எனக்கு உண்டு.


நான் கடைசியாக, மத்திய அரசு பணியில், விவசாய துறை செயலாளராக இருந்து, 2012 மே மாதம், ஓய்வு பெற்றேன். மேலே குறிப்பிட்ட விதத்தில், நான் பணியாற்றிய அனுபவத்தை கொண்டு, என்னால் சில முடிவுகளை, அறிவுரையை தரமுடியும்.


தற்போதைய இந்திய பிரதமர் திரு.மோடி அவர்கள், பிரதமராக பதவி ஏற்றதிலிருந்து, பிரதமராக அவரின் நடவடிக்கைகளை நன்கு கவனித்து கொண்டு தான் இருக்கிறேன். உண்மையை சொன்னால், கடைசியாக, உறுப்பினர், மத்திய நிர்வாக நீதிமன்ற பொறுப்பில் இருந்து, ஓய்வு பெற்ற போது பிரதமர் மோடியை சந்திக்க, நான் ஆசையுடன் விரும்பினேன். அதற்கு காரணம், நம் தேசத்தின் மீது மிகுந்த பக்தி கொண்ட சுபாஷ் சந்திர போஸ், பால கங்காதர திலக், சர்தார் படேல் போன்ற பெரும் தலைவர்களை போன்று, மிகுந்த தேசப்பற்று உள்ள ஒருவரை, பிரதமராக நான் இதுவரை கண்டதில்லை என்பதால்.


உறுப்பினர், மத்திய நிர்வாக நீதிமன்ற பொறுப்பில் இருந்து, 2017 மே மாதம், ஓய்வு பெற்ற போது, பிரதமர் மோடியை சந்திக்க, அவர் அலுவலகத்தில் நேரம் கேட்டேன்.


நான் ஓய்வு பெற்றதால், மேலும் பணி நீட்டிப்பு சம்பந்தமாக, பிரதமரை சந்திக்க நேரம் கேட்கவில்லை என்பதை, அவர் அலுவலகத்துக்கு நான் தெளிவு படித்திய பின், பிரதமரை சந்திக்க எனக்கு நேரம் ஒதுக்கப்பட்டது.


நான், எனக்கு ஒதுக்கப்பட்ட 2017 ஜூலை 22ந் தேதி, குறித்த நேரத்தில், பிரதமர் மோடி அவர்களை சந்தித்தேன்.


நான் பிரதமர் மோடியை, அவரது அலுவலகத்தில் சந்திக்க சென்ற போது, தன் இருக்கையை விட்டு எழுந்து நின்று, இந்திய கலாச்சாரப்படி இரண்டு கைகளையும் குலுக்கி, வரவேற்று, என்னை இருக்கையில் அமர வைத்து விட்டு, பின் அவர் அமர்ந்த மரியாதையை பார்த்து, ஆச்சரியமானேன். 


கிட்டத்தட்ட 20 நிமிடங்களுக்கு மேலாக, மிக மிக சாதாரணமாக, என்னுடன் பேசி கொண்டு இருந்தார்.

பேசிக்கொண்டு இருக்கும் போது, நான் கூறுவதை, பிரதமர் மோடி, மிக கூர்மையாக கவனித்தது மட்டுமின்றி, அவருக்கு தேவையான கேள்விகளை கேட்டு, அதற்கான பதிலை, நன்கு உள்வாங்கி கொண்டார் என்பது எனக்கு மேலும் மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.


பின்..அவரிடம் விடைபெற்ற போது, மீண்டும் மிகுந்த மரியாதையுடன் எழுந்து நின்று, இரண்டு கைகளாலும் கைகொடுத்தே, மிக மகிழ்ச்சியுடன் ஆத்மார்த்தமாக வழியனுப்பினார். மேலும் இப்படியொரு கண்ணியமான வரவேற்பு எனக்கு இதற்கு முன்பு எங்கும், யாரிடமும் கிடைத்ததில்லை. 


நான் இதற்கு முன்பு, பணி நிமித்தமாக பல பிரதமர்களை சந்தித்திருப்பதால், சக்தி வாய்ந்த பிரதமர் மோடி, இப்படி மிக சாதாரணமாக பேசுவார் என்று நான் நினைக்கவே இல்லை.


நண்பர்களே...நான் என்னுடைய பணி காலத்தில் இருந்து ஒய்வு பெறும் வரை எல்லாவற்றையும் பார்த்து விட்டேன். ஆனால் தற்போதைய பிரதமர் மோடி, ஒரு "மிக தனித்தன்மையுடன் கூடிய திறமை வாய்ந்தவர்" என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


ஆக, என் கண்ணோட்டத்தில், நம் இந்தியாவை, உலகிலேயே பெருமையான முதன்மை இடத்தில் 'வல்லரசாக' வைப்பதற்காகவே, பிரதமர் மோடி இப்போது இருக்கிறார். உழைக்கிறார் என்றே நினைக்கிறேன். 


பிரதமர் மோடியின் முதல் குறிக்கோளும் சரி..கடைசி குறிக்கோளும் சரி, "நம் பாரதம்" தான், உலகின் தலைசிறந்தது, என்பதாக இருக்க செய்வது என்பதாகும் என்பதே.


நண்பர்களே...பிரதமர் மோடியின் மிக நெருங்கிய ரத்த சம்பந்தபட்ட உறவினர்கள், தன் தாய் முதற்கொண்டு வாழும் மிக சாதாரண வாழ்க்கை தரத்தை அறிந்து, அதை கவனத்தில் கொள்ளுங்கள்.


அவரின் அன்றாட புத்திசாலித்தனமான கடின உழைப்பை, கவனத்தில் கொள்ளுங்கள்.


பல ஆண்டுகளாக, முந்தைய ஆட்சியாளர்களால் கிடப்பில் போடப்பட்டிருந்த பல திட்டங்களை, அவர் அதிரடியாக நடைமுறை படுத்திய துணிச்சலான செயல்களை, கவனத்தில் கொள்ளுங்கள்.


நாட்டு மக்களை கணக்கில் கொண்டு, அவரால் கொண்டு வரபட்டிருக்கும், (மற்ற அரசியல் கட்சிகளால் மூடி மறைக்கப்படும்), நல்ல நல்ல திட்டங்களை, கவனத்தில் கொள்ளுங்கள்.


இந்திய பாதுகாப்பின் ஸ்திரத்தன்மையை கவனத்தில் கொண்டு, ராணூவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதை, கவனத்தில் கொள்ளுங்கள்.

இப்படி அவர் செய்த, மேலும் அதிக அளவில் செய்ய நினைக்கும், நீண்ட கால மக்கள் நல திட்டங்கள், அவரின் அர்ப்பணிப்பு உணர்வுடன் உழைக்கும் தன்மை பற்றி கூறிக்கொண்டே போனால், இங்கே எழுத இடமே பத்தாது.


இதைவிட முக்கியமாக, இவருடைய ஆட்சியில், சில ஊழல் அமைச்சர்கள்.. அதிகாரிகள் என யாரும் லஞ்சம் வாங்கவே அஞ்சுகின்றனர். இந்த விஷயத்தில், நன்கு அறிந்த வரையில், நான் கூறுவது முற்றிலும் உண்மை.


நான், ஏன் இந்த கடிதத்தை எழுதியிருக்கிறேன் என்பது பற்றி நீங்கள் ஆச்சரியப்படலாம். அதற்கான காரணம் தேர்தல் நெருங்கி வருகிறது என்கிற ஒரே ஒரு சுலபமான பதிலை தான் தரமுடியும்.


நான், என்னுடைய பல ஆண்டு கால அனுபவத்தில் அடித்து கூறுகிறேன். இந்தியா வல்லரசாவதற்கும், நாட்டின் தனி மனித பொருளாதாரம் வளர்ச்சி அடைவதற்கும் இதுவே நமக்கு கிடைத்திருக்கும் கடைசி வாய்ப்பாகும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.


இந்த நல்ல வாய்ப்பை, கெடுத்து, நழுவ விட்டு விடாதீர்கள் என்பது மட்டுமே, என் கோரிக்கை. 

பிரதமர் மோடி அவர்களை, மீண்டும் அதிக பெரும்பான்மையுடன் பிரதமராக அமர வைக்க, அனைவரும், கடமை என முயற்சி மேற்கொள்ள வேண்டும்.


அப்படி அனைவரும் ஒரே நோக்கத்துடன் பிரதமர் மோடியை ஆதரித்தால், நீங்கள், ஒரு வளர்ந்த வல்லரசான இந்தியாவை, உங்கள் பிள்ளைகளுக்கும், பேரப்பிள்ளைகளுக்கும் விட்டு செல்வீர்கள் என்பது மட்டும் நிச்சயம் என கூறுவேன்.


நான் என் பணி காலத்தில், பல அரசியல் கட்சிகளை பார்த்து விட்டேன். கிட்டத்தட்ட எல்லா கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான். இதில் பாஜகவுக்கு மட்டும் விதிவிலக்கு கிடையாது. அந்த கட்சியிலும் ஊழல்வாத, கொள்கை இல்லாமல் சுயநல தலைவர்கள், சிலர் இருக்கவே செய்கிறார்கள்.


இன்னும் சொல்லப்போனால், பாஜகவிலேயே, பிரதமர் மோடியை ஒழிக்க, சில பெரிய தலைவர்கள் ஆசை படுகிறார்கள் என நம்பகத்தன்மை இல்லாத செய்திகள் அவ்வப்போது வந்து கொண்டு தான் இருக்கிறது.


நண்பர்களே..


என்னை நம்புங்கள். நான் அறிந்த வரையில், தற்போதைய நம் பாரத பிரதமர் மோடி முற்றிலும் வித்தியாசமானவர். இப்படிப்பட்ட அரசியல்வாதியை, அரசியல் கட்சி தலைவரை, இதுவரை நாம் பார்த்ததே இல்லை என்பேன். இவரை தொடர்ந்து, பாரத பிரதமராக வைத்திருப்பதில் தான், நம் ஒவ்வொருவரின் வெற்றி அடங்கி இருக்கிறது என்பேன். 


இவர் எந்த கட்சியை சேர்ந்தவர் என்பது முக்கியமல்ல. இன்னும் சொல்ல போனால், நம் நாட்டில், பிரதமர் பதவிக்கு மட்டும் பொதுமக்களே ஓட்டு போடும் வழிமுறை இருந்து இருந்தால், மிக நன்றாக இருந்து இருக்கும்.


ஆனால் நமது நாட்டு, ஜனநாயக அரசியலமைப்பு சட்டப்படி, ஒரு பெரிய அரசியல் கட்சி மூலமே, பிரதமரை தேர்தெடுப்பது என்பது சாத்திமயமாகும்.

ஆக, பாஜகவுக்கு, அதன் கூட்டணி கட்சிகளுக்கு ஓட்டு போட்டு, ஆதரவு கொடுத்து, பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்து, மீண்டும் பிரதமராக மோடியை அமர வைக்க, நாம் ஒவ்வொருவரும் சபதம் ஏற்க வேண்டும் என்பதே என் வேண்டுகோள்.


என்னுடைய இந்த வேண்டுகோளில், அனைவரும் கவனம் செலுத்துவீர்கள் என நிச்சயமாக நான் நம்புகிறேன்.


அப்படி செய்யும் பட்சத்தில், நீங்கள், ஒருநாள், அதற்கான பெருமையை அடைவீர்கள் என்பது மட்டும் நிச்சயம் என்று, என்னால் இப்போது அடித்து கூற முடியும்.


பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளை ஆதரிப்போம். அனைவரும் வளம் பெறுவோம்.


"ஜெய் ஹிந்த்"


பி.கே. பாசு IAS

*தமிழாக்கம்: குரு*

Comments

Popular posts from this blog

நான் கிட்டத்தட்ட 22 வயது வரை நாத்திகனாக இருந்தேன். கோவில்களுக்குச் செல்வது பிடிக்க வில்லை. நான் அவற்றை பிராமணர்கள் மற்றும் பிறர் பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாகவே கருதினேன். ஒவ்வொரு அடியிலும் அவர்கள் எப்படி பணம் கேட்டார்கள் என்பதை நான் வெறுத்தேன்.

8th August 11am, Delhi: MAHA PANCHAYAT- 100Cr HINDU Movement for Abolition of totally Discrminatory HR&CE Act.1951, all over India. Temples should function as independently as MOSQUES & CHURCHES. Money taken/swindled should be given back by Govts.

1961 ஆம் வருடம் வெளிவந்த தேன்நிலவு படத்தில் உள்ள பாட்டு பாடவா என்ற மிக இனிய பாடல்... ஜெமினி கணேசன் வைஜெயந்தி மாலா நடித்த பாடல்.... அவ்வளவு இனிமையான பாடல்... ஆனால் படத்தில் பார்த்தால் இரண்டு பேரும் குதிரை மேல் உட்கார்ந்து கொண்டு மெல்ல குதிரை ஓட்டிக்கொண்டு செல்வார்கள்... ஆனால் இந்த காலத்து பசங்களும் அந்த பாட்டுக்கு கலக்கலாக நடனமாடி விட்டார்கள்... சில பல சாட்களை நான் இங்கே பப்ளிஷ் செய்துள்ளேன் பாருங்கள்... அந்தப் பாடலில் நடித்த வைஜெயந்திமாலா அப்போது எவ்வளவு அழகாக இருந்துள்ளார் பாருங்கள் மேலே போட்டோக்களை பார்க்கவும்