இந்திய அரசு நேற்று (11/03/2024) அன்று தன் நீண்டகால தேவையான குடியுரிமை திருத்த சட்டத்தை நேற்று அறிவித்தது அதாவது இது புதிய சட்டம் அல்ல மாறாக பழைய குடியுரிமை சட்டத்தை மேம்படுத்தினார்கள் அல்லது இப்போதுதான் அதை செயல்படுத்துகின்றார்கள்
For the benefit of those who don't read it in fb
Stanley Rajan padivu.
இந்திய அரசு நேற்று (11/03/2024) அன்று தன் நீண்டகால தேவையான குடியுரிமை திருத்த சட்டத்தை நேற்று அறிவித்தது
அதாவது இது புதிய சட்டம் அல்ல மாறாக பழைய குடியுரிமை சட்டத்தை மேம்படுத்தினார்கள் அல்லது இப்போதுதான் அதை செயல்படுத்துகின்றார்கள்
இந்திய குடியுரிமை சட்டம் என்ன சொல்கின்றது?
இந்தியா எனும் பெரும் இந்துதேசம் 1947ல் இரு நாடுகளாக பிரிக்கபட்டபொழுது பாகிஸ்தான் (அதாவது இன்று வங்கதேசமாக இருக்கும் பகுதியும் சேர்த்து ) மற்றும் ஆப்கானில் (அப்பொழுது இந்தியாவின் அண்டை நாடான ஆப்கனிலும் நிரம்ப இந்துக்கள் இருந்தார்கள்) இருந்து இஸ்லாம் அல்லாத சிறுபான்மையினர் இந்தியாவுக்கு வந்தால் குடியுரிமை வழங்க வேண்டும் என்றும்
அப்படியே இந்தியாவில் சிறுபான்மையினரான இஸ்லாமியர் பாகிஸ்தானுக்கு சென்றால் அவர்கள் குடியுரிமை வழங்க வேண்டும் என்பதும் முடிவாயிற்று
இரு நாடுகளும் இதற்கான சட்டம் இயற்றி கொண்டன
அவ்வகையில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் ஹிந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க சட்டம் வழி செய்கின்றது, ஆனால் அங்கிருக்கும் இஸ்லாமியர்களுக்கு இங்கு குடியுரிமை வழங்க சட்டத்தில் இடமில்லை
பாகிஸ்தானில் பெரும்பான்மையான இஸ்லாமியர் இங்கே வந்து குடியுரிமை வாங்கமுடியாது அப்படியே இந்தியாவில் பெரும்பான்மையான இந்துக்கள் அங்கு சென்று குடியுரிமை வாங்கமுடியாது
இந்த சட்டத்தில் பாகிஸ்தான் எப்போதும் சரியாக இருந்தது, ஆனால் காங்கிரசின் இந்தியா சொதப்பி தள்ளியது
விளைவு எண்ணற்ற அயல்நாட்டினர் போலி ஆவணங்களுடன் வந்து குவிந்து பெரும் சிக்கலை ஏற்படுத்தினார்கள், இவர்களால் இந்திய மக்கள் நலன் முதல் எல்லா திட்டங்களும் குழம்பின
முக்கியமாக பாதுகாப்பு பெரும் சிக்கலாயிற்று
இதனால் இந்த சட்டத்தை சில திருத்தங்களுடன் அமல்படுத்த இந்திய அரசு தயாரானது, அதற்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன ஆனாலும் நேற்று அரசு நிறைவேற்றிவிட்டது
இச்சட்டபடி 2014க்கு முன்பு இந்தியா வந்த பாகிஸ்தான் ஆப்கன் பர்மா என அண்டை நாட்டில் இருந்து வந்த இந்துக்களுக்கு குடியுரிமை வழங்கபடும்
காரணம் இந்துக்களுக்கு வேறு நாடு இல்லை, இந்திய அடிப்படை குடியுரிமை சட்டமும் அதையே சொல்கின்றது
ஆனால் பாகிஸ்தான் வங்கதேசத்தில் இருந்துவந்த இஸ்லாமியருக்கு குடியுரிமை அளிக்கமுடியாது, சட்டத்தில் இடமில்லை அதனால் திரும்பி செல்லவேண்டும்
இந்த சட்டத்தின்படி இலங்கை தமிழர்களும் அதாவது அகதிகளாக இந்தியா வந்த இலங்கை மக்களும் இடம்பெறுவார்களா என்றால் அதற்காக தமிழக கலெக்டர்களுக்கு அனுமதி உண்டா என்றால் இல்லை
காரணம் இரண்டு
முதலாவது இந்தியா பாகிஸ்தான் ஆப்கன் பர்மா என இந்தியாவின் வட எல்லைகள் தொடர் இணைப்பிலும் சிக்கலிலும் இருந்தது போல் அல்ல இலங்கை, அவர்கள் இந்தியாவோடு ஒட்டாமல் ஒரு விலகலை கடைபிடித்தார்கள், இந்தியாவுக்கு அகதிகளாக செல்லும் நிலைவரும் என கனவிலும் அவர்கள் நினைத்ததில்லை, அப்படியே இந்திய சட்டத்திலும் இலங்கை பற்றி பெயர் இல்லை
எனினும் அவர்களுக்கும் குடியுரிமை வழங்கலாம் என பரிந்துரை செய்யபட்டால் இரண்டாம் விஷயம் சிக்கலானது
இச்சட்டம் மத அடிப்படையானது, இந்தியா எனும் இந்து பெரும்பான்மை தேசம் எல்லா நாட்டில் இருந்தும் ஓடிவரும் இந்துக்களுக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டும் எனும் நோக்கில் உருவானது, இதனால் இலங்கை தமிழர்கள் தங்கள் தமிழ அடையாளம் தாண்டி "இந்து" அடையாளத்தோடு அணுகினால் குடியுரிமை கிடைக்கும்,
இந்திய நீதிமன்றம் கூட இத்னை முன்பு சுட்டிகாட்டியது
ஆனால் காலமெல்லாம் "தமிழ்" "தமிழன்" என மோசடி செய்யபட்ட அந்த இனம் தன்னை இந்து என ஒப்புகொண்டாலும் தமிழக தமிழ் பிழைப்புவாதிகள் அவர்களை விடமாட்டார்கள்
இந்திய அரசின் சட்டம் மத அடிப்படையிலானது மொழி அடிப்படையில் அல்ல, அப்படி செய்திருந்தால் செப்பு மொழி 18ல் ஒன்றை படித்துவிட்டு ஆப்ரிக்கர் கூட நான் டமிலன், நான் மலையாளி, நான் ஒரியன் என இந்தியாவுக்கு ஓடிவரும் ஆபத்து உண்டு
இந்தியா வந்தால் இந்துக்களாக வாருங்கள் என்பதுதான் 1950களிலே எழுதபட்ட சட்டம் அம்பேத்கர் எழுதிய சட்டம் அதுதான்
இங்கே மத துவேஷம், இஸ்லாமியருக்கு எதிரான சட்டம் என்பதெல்லாம அபத்தம், இச்சட்டம் எல்லா நாட்டு சட்டத்தையும் ஒட்டி இயற்றபட்ட சர்வதேச நடைமுறை
அமெரிக்காவும் மெக்ஸிகொவும் கிறிஸ்தவ நாடுகள், ஆனால் அனுமதியின்றி மெக்ஸிகோ மக்கள் வரமுடியாது வந்தாலும் தங்கமுடியாது
எகிப்தும் பாலஸ்தீனமும் இஸ்லாமிய நாடுகள், ஆனால் பாலஸ்தீன அகதிகளை எகிப்து ஏற்பதில்லை
ஆப்கனும் பாகிஸ்தானும் இஸ்லாமிய நாடுகள் என்றாலும் சுமார் 5 லட்சம் ஆப்கன் அகதிகளை சில மாதங்களுக்கு முன் பாகிஸ்தான் நாடுகடத்தியது உலகறிந்தது
ஆக ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு சட்டமும் இறையாண்மையும் உண்டு, இஸ்ரேல் யூதமக்கள் எங்கிருந்தாலும் இஸ்ரேலில் குடியேறலாம் என அழைக்கின்றது அவர்கள் சட்டம் அப்படி, அதற்குத்தான் நாட்டை உருவாக்கினார்கள்
அப்படி இந்திய சட்டமும் இந்த நாட்டை இஸ்லாமியருக்கு பிரித்துகொடுத்தபின் எஞ்சியிருக்கும் இந்துக்களுக்கும் பாகிஸ்தானில் சிக்கிவிட்ட சீக்கிய இந்து சிறுபான்மையினருக்குமான நாடு
அப்படித்தான் சட்டத்தை அம்பேத்கரே எழுதியிருக்கின்றார், அது இப்போது அடிப்படை மாறாமல் செயல்படுத்தபடுகின்றது
ஆக இது முழுக்க முழுக்க பழைய சட்டத்தின் நடைமுறை அன்றி வேறல்ல, இது நாட்டு நலன் சார்ந்தது, இங்கே எதிர்ப்பு அரசியல் செய்வோர் சட்டத்தை மதிக்கவில்லை , நாட்டை மதிக்கவில்லை என்பதே பொருள்
அவ்வகையில் சட்டத்தினை மதிக்காத எவரும் சட்டபடி ஆட்சிநடத்த தகுதியானவர்களாக இருக்கவே முடியாது
தேசம் இச்சட்டத்தில் கடுமைகாட்டும் , இங்கே மாகாண அரசுகளால் ஏதும் செய்யமுடியாது காரணம் குடியுரிமை அவர்கள் அதிகாரத்தில் இல்லை, அதனால் சில குழப்பம் ஏற்படுத்தி வாக்குகளை வாங்க பார்ப்பார்களே தவிர அவர்களால் இதை தடுக்கமுடியாது
தேசிய அரசு சட்டபடி எதை செய்யுமோ அதை செய்யும், இதை மாகாண முதல்வர்கள் தடுக்க முயன்றால் செந்தில்பாலாஜி நிலை, வங்கத்தின் ஷாஜகான் ஷேக் நிலைதான் ஏற்படும், அது நிச்சயம்
இனி அனுமதியின்றி தங்கியிருக்கும் அயல்நாட்டவர் கள்ளகுடியேறிகளாக கருதபட்டு நாடுகடத்தபடுவார், அது யாராக இருந்தாலும் சட்டம் விடாது
மோடி அரசின் மிக துணிச்சலான சாதனை இது, நாட்டுக்கு எது மகா அவசியமோ அதை சரியாக செய்துவிட்டார்கள், இனி தேசம் முழு காவலும் வளமும் பெறும்
Comments
Post a Comment