சத்குரு ஜக்கிதேவ் பற்றி எமக்கு எந்த அபிப்பிராய பேதமுமில்லை, இந்துமதம் தன்னில் அடிக்கடி பல யோகியரை பல வழிகளில் உருவாக்கும் வல்லமை கொண்டது* *இங்கு சீர்திருத்தவாதிகளோ இல்லை புதுவழி காட்டுபவர்களோ காலத்துக்கு ஏற்ப மாற்றங்களை அடிப்படை ஆதாரத்தில் இருந்து வழுவாமல் சொல்பவர்களோ வந்து கொண்டேதான் இருப்பார்கள்*
*சத்குரு ஜக்கிதேவ் பற்றி எமக்கு எந்த அபிப்பிராய பேதமுமில்லை, இந்துமதம் தன்னில் அடிக்கடி பல யோகியரை பல வழிகளில் உருவாக்கும் வல்லமை கொண்டது*
*இங்கு சீர்திருத்தவாதிகளோ இல்லை புதுவழி காட்டுபவர்களோ காலத்துக்கு ஏற்ப மாற்றங்களை அடிப்படை ஆதாரத்தில் இருந்து வழுவாமல் சொல்பவர்களோ வந்து கொண்டேதான் இருப்பார்கள்*
*அவர்கள் ஏதோ ஒருவடிவில் வருவார்கள், இந்துமதத்தின் சிறப்பே இப்படியானவர்கள் எவ்வகையில் வந்தாலும் அவர்களை ஏற்றும் கொள்ள்ளும்*
*குரு என்பதன் அடையாளம் வேறு, யோகியர் ஞானியர் மகரிஷியர் என்ற வரிசை வேறு எனப்தில் எப்பொழுதுமே ஒரு தெளிவு வேண்டும்*
*குரு என்பவர் லவுகீகவாழ்வில் தாமரை இலையில் நீர் போல இருப்பார், அவர் போதனைகள் செய்வார் அதற்கான தட்சனையோ கூலியோ வாங்குவார் அதை கொண்டு அவரின் கடமையும் இன்னும் பல காரியங்களையும் செய்வார்*
*யோகியர், ரிஷிகள், ஞானியர் என்பவர் வேறு அவர்கள் பட்டினத்தார் போல வேறுபாதை கொண்டவர்கள் அவர்கள் நோக்கமும் வழிபாடும் போதனையும் வேறு*
*குரு என்பதிலும் பல வடிவம் உண்டு, காஞ்சி பெரியவர் ஒருவழியான குரு என்றால் இன்னும் லவுகீகத்தில் இருந்துகொண்டே போதித்த ராமகிருஷ்ண பரம்ஹம்சர் போன்றவர்கள் உண்டு*
*சத்குரு ஜக்கிதேவ் பற்றி எம்மால் ஒரு விஷயமே உறுதியாக கூறமுடியும்*
*இந்துமதம் அதற்கான ஆபத்து எந்த வடிவில் வருமோ அந்த வடிவில் ஒருவரை உருவாக்கி தன்னை தற்காக்கும் ஆச்சரியமான மதம்*
*அரிஸ்டாட்டில் எழும்பினால் அது சாணக்கியனை உருவாக்கும்*
*அலெக்ஸாண்டர் எழும்பினால் அது சந்திரகுப்தனை உருவாக்கும்*
*புத்தன் எழும்பினால் அது ஆதிசங்கரரை உருவாக்கும்*
*சமணரும் பவுத்தரும் சாத்வீகமாக எழும்பினால் அது சம்பந்தரையும் அப்பர் சுவாமிகளையும் உருவாக்கும்*
*ஒளரங்கசீப் வாளோடு எழும்பினால் அது வீரசிவாஜியினை உருவாக்கும்*
*கிறிஸ்தவ போதகர்கள் பலர் எழும்பினால் அது விவேகானந்தரை உருவாக்கும்*
*எதிரி எவ்வழியோ அவ்வழியில் தனக்குரிய காவலர்களை இந்துமதம் உருவாக்கும்*
*தமிழகத்தில் கூட சினிமா திராவிட ஆபத்து இந்து எதிர்ப்பாக வந்தபொழுது அது எம்ஜி ராமசந்திரன் என சினிமாவில் இருந்தே இந்துமத காவலனை உருவாக்கிற்று, அதை நம்பத்தான் வேண்டும்*
*அப்படி இந்த மாறுபட்ட உலகில் ஒருமாதிரியான உலக தரத்தில் இந்துமதத்துக்கான ஆபத்து உருவாகும்*
*பொழுது மாய தோற்றங்களில் பிரமாண்ட வேடங்களில் எதிரிகள் வரும்பொழுது அது சத்குரு ஜக்கி வாசுதேவ், பங்காரு அடிகள் போன்றோரை உருவாக்கும்*
( *சர்சைகள் இருந்தாலும் நித்தியானந்தா சுவாமியும் இவ்வகைதான், அவர் மேல் யாரும் பாதிக்கபட்டதாக புகார் அளிக்கவில்லை, எந்த பெண்ணும் நேரடியாக வழக்கு தொடுக்கவுமில்லை*
*அவர் சரியில்லாதவராக இருந்திருந்தால் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் அவர் ஆசிரமங்கள் தொடர்ந்து நடக்கவும் முடியாது*
*ஆக மக்களை வசபடுத்தும் ஒரு ஆன்மீகம் அவரிடம் இருப்பது நிஜம் அதை மறுக்கமுடியாது )*
*காலம் எப்படியோ அப்படித்தான் இந்துமதத்துக்கு காவலர்கள் வருவார்கள் இது வரலாறு, இவர்களால் மதமாற்றம் தடுக்கபடும் பாரத இந்துமத பெருமை உலகெல்லாம் காக்கபடும் அது நிஜம்*
*சத்குரு என வணங்கபடும் ஜக்கிவாசுதேவ் இல்லாவிடில் இன்னொருவரை அதே வடிவில் இந்துமதம் நிறுத்தத்தான் செய்யும்*
*ஒரு ஆஸிரமத்துக்கு பாரத பிரதமரும் ஜனாதிபதியும் சும்மா வரமுடியாது, ஆயிரம் தகவல்களை உறுதிபடுத்திய பின்புதான் அவர்கள் கால்வைப்பார்கள்*
*இல்லையேல் அது அவர்களின் கட்சி அரசியல் எல்லாவற்றுக்குமான சர்ச்சையாக வந்துவிடும் ஆபத்தும் உண்டு*
*அவ்வகையில் சத்குரு சர்ச்சைக்கு அப்பாற்பட்டவராகத்தான் இருக்கமுடியும் ஜனாதிபதியின் வருகை அதை சொல்கின்றது*
*ஆம், காலம் எதுவோ அவ்வடிவில் இந்துதம் தன்னை மீட்டெடுக்கும், அக்காலமே இப்பொழுது ஜக்கிதேவினை அப்படி உருவாக்கியிருக்கின்றது, அதற்கு அவரும் சரியானவர் என தன்னை நிரூபித்துகொண்டும் இருக்கின்றார்*
*இந்துமத பெருமையினை உலகறிய செய்யவேண்டும் என விரும்பிய ராமநாதபுர மன்னர் செய்ததும் இந்து தொண்டு, அவரால் அனுப்பபட்ட விவேகானந்தர் அமெரிக்காவில் செய்ததும் இந்து தொண்டு*
*அவ்வகையில் ஜக்கிவாசுதேவ் தான் உணர்ந்த இந்து ஆன்மீகத்தை ஏகபட்ட சிந்தனைமிக்க கேள்விகள் எழும் இந்த காலத்தில் இந்த தலைமுறைக்கும் உலகுக்கும் விளக்கிகொண்டிருக்கின்றார், அவ்வகையில் அவர் செய்வது சரியான சேவை அதை மறுக்க முடியாது*
*"நதிமூலம் ரிஷிமூலம் பார்க்க கூடாது" என்றது இந்துமதம் அதையெல்லாம் நோக்கினால் இன்றுவரை அருணகிரி நாதரை ஏற்கமுடியாது, பட்டினத்தாரை ஏற்க முடியாது*
*பத்ருஹரி முதலான பல மகான்களை எட்டிபார்க்கவே முடியாது*
*ஒன்றின் தொடக்கம் அல்ல அதன் முடிவே கவனிக்கதக்கது எனும் வகையில் அய்யா ஜத்குருமேல் சர்ச்சைகள் அவசியமற்றவை*
*அவரும் இந்துமதத்தின் தாத்பரியங்களை உயர்நிலையினை விளக்குகின்றார், சிவராத்திரியில் எல்லோரும் உற்சாகமாக இருக்க வழிவகைகள் செய்கின்றார்*
*அங்கே ஆட்டம்பாட்டம் மட்டுமல்ல உரியநேரம் வழிபாடுகளும் இதர விதிகளும் சரியாக பின்பற்றபடுகின்றன என்பதையும் கவனிக்க வேண்டும்*
*எல்லா மக்களும் யோகம், தவம், தியானம் என சென்றுவிடமுடியாது, எல்லோர் மனநிலையும் ஒன்றாக இருக்கமுடியாது, அவ்வகையில் பெரும்பான்மையான மக்களை உற்சாகமாக கொண்டாடவைக்க சில விஷயங்கள் அவசியம்*
*அதன்படி சரியாக சிவராத்திரியினை சிறப்பிக்கின்றார் சத்குரு அங்கே சர்ச்சையும் விதண்டாவதமும் அவசியமற்றவை, இந்துமதத்தை புரிந்தவன் அதை செய்வதில்லை... தமிழ் எழுத்துக்களை சரி செய்தவர் Bjpஇன்பராஜன்.🪷🪷🪷🙏🙏🙏🙏 .*
Comments
Post a Comment