சென்ற நூற்றாண்டில் காந்தியளவுக்கு இந்தியர்களின் காதில் பூச்சுற்றிய இன்னொரு ஆத்மா "அன்னை" தெரெசா மட்டும்தான். ஆனால் "மகாத்மா" காந்தியானவர் தெரெசாவையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டதொரு மனிதர். அவர் சொன்னதில் அங்கொன்றும், இங்கொன்றுமான உண்மைகள் இருக்கலாம்.
சென்ற நூற்றாண்டில் காந்தியளவுக்கு இந்தியர்களின் காதில் பூச்சுற்றிய இன்னொரு ஆத்மா "அன்னை" தெரெசா மட்டும்தான். ஆனால் "மகாத்மா" காந்தியானவர் தெரெசாவையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டதொரு மனிதர். அவர் சொன்னதில் அங்கொன்றும், இங்கொன்றுமான உண்மைகள் இருக்கலாம்.
ஆனால் அடிப்படையில் அவரது நோக்கங்களும், எண்ணங்களும் சந்தேகத்திற்கிடமானவை. காந்தியின் போதனைகளைக் கேட்டு அப்பாவி ஹிந்து பட்ட துயரங்கள் அளவில்லாதவை. அதையெல்லாம் அறியாத ஒருவனால் மட்டுமே காந்தியை தோளில் தூக்கிச் சுமக்க முடியும்.
என்னுடைய இந்த முடிவு திடீரென்று எடுக்கப்பட்டதல்ல என்பதனை மட்டும் இங்கு சொல்ல விழைகிறேன். காந்தியைக் குறித்து ஆழ்ந்து படித்தபிறகே என்னுடைய முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நூற்றாண்டிலாவது காந்தியின் போலித்தனம் தோலுறிக்கப்பட்டால் என்னை விட சந்தோஷமான மனிதன் எவனும் இருக்கமாட்டான்.
காந்தி தனக்கென ஒரு சுயநலக் கொள்கையும், பிறருக்கென வேறொரு கொள்கையும் கொண்ட விசித்திர மனிதர். அவருடைய நெருங்கிய சொந்தங்களிடமும் அவரது சைக்கோத்தனத்தை (ஆம்; சைக்கோத்தனம்) காட்ட அவர் தயங்கியதில்லை.
உதாரணமாக, நோயுற்றுக் கிடந்த அவரது மனைவி கஸ்தூர்பாவுக்கு பெனிசிலின் ஊசியைப் போடவிடாமல் பிடிவாதமாகத் தடுத்து அவரது இறப்புக்குக் காரணமாக இருந்தது. அதற்கு அவர் சொன்ன காரணம், ஊசி மருந்து என்பது அயல்தேச மருந்தாகையால் அதனைத் தன் மனைவிக்குப் போடக்கூடாது என்பதுதான். அதே "உத்தம" காந்தி தனக்கு மலேரியா வந்தவுடன் அதே அயல் தேச மருந்தினைத் தனக்கு உபயோகித்து உயிர் பிழைத்தார். அப்போது அது அவருக்கு அயல் தேசத்து மருந்தில்லை.
காந்தியின் மனைவியான கஸ்தூர்பா 1944-ஆம் வருடம் ஃபிப்ரவரி 22-ஆம் தேதி, மஹாசிவராத்திரி நாளில், தனது 74வது வயதில் பூனாவின் ஆகாகான் மாளிகையில் இறந்தார். காந்தி துவங்கிய வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டதால் காந்தியுடன் சேர்த்து அவரையும் கைது செய்து சிறையில் அடைத்து வைத்திருந்தான் பிரிட்டிஷ்காரன்.
அங்கு உடல் நலம் குன்றிய கஸ்தூர்பா காந்திக்கு பெனிசிலின் ஊசியைப் போட்டால் மட்டுமே உயிர் பிழைக்க முடியும் என பிரிட்டிஷ் டாக்டர்கள் சொன்னதால், காந்தியின் இளைய மகனான தேவதாஸ் காந்தி பெனிசிலின் மருந்தினை கல்கத்தாவிலிருந்து விமானத்தில் வரவழைத்தார். ஆனால் அயல்தேசத்து மருந்து கொண்ட அந்த ஊசியை கஸ்தூர்பாவுக்குப் போடக் கூடாது எனப் பிடிவாதமாக காந்தி சொல்லிவிட்டார்.
அதற்கும் மேலாக அந்த மருந்தினை வரவழைத்த தேவதாசிடம், "நீ ஏன் கடவுளை நம்ப மறுக்கிறாய்?" என கோபத்துடன் கேட்டுவிட்டு, அந்த அறைமுழுக்க அவரது அடிப்பொடிகளை நிறைத்து பக்திப் பாடல்களைப் பாடி பஜனை செய்து கொண்டிருந்தார். அதாகப்பட்டது, உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் கஸ்தூர்பாவுக்கு அமைதியைக் கொடுப்பதை விட்டுவிட்டு "மகாத்மா" அவருக்கு பஜனைகள் பாடி தொல்லைகள்வேறு கொடுத்தார்.
பெனிசிலின் ஊசி நிச்சயமாக கஸ்தூர்பாவின் உயிரினைக் காப்பாற்றி இருக்கும். காந்தியின் இந்தச் செயலைக் கண்டு பிரிட்டிஷ்காரர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்து போனார்கள். ஒரு நல்ல மனிதன் நிச்சயமாகத் தன் மனைவியின் உயிரைக் காப்பாற்ற எந்த மருந்தினையும் உபயோகிக்கத் தயங்கியிருக்க மாட்டான். ஆனால் "மகாத்மா"வின் மனநிலை விசித்திரமானது.
காந்தி அத்துடன் நிற்கவில்லை. தன் தவறான செயலால் தனது மனைவி இறந்துவிட்டாளே என்கிற நினைப்பு சிறிதும் இல்லாமல் அதற்கு சப்பைக்கட்டு கட்டவே காந்தி முனைந்தார். கஸ்தூரிபாவின் மரணத்தைக் கேள்விப்பட்டு அங்கு வந்த சுசீலா நய்யாரிடம் காந்தி சொல்கிறார், "கடவுள் எனது நம்பிக்கையை எப்படி சோதனை செய்திருக்கிறான்! பெனிசிலின் ஊசியைப் போட்டிருந்தாலும் கஸ்தூரிபா உயிர் பிழைத்திருக்க முடியாது...அதற்கும் மேலாக எனது நம்பிக்கையை அது சிதைத்திருக்கும்...."
என்ன ஒரு சுயநலம் பாருங்கள்! தன்னுடைய மனைவியின் உயிர் போனாலும் பரவாயில்லையாம். ஆனால் அவரது நம்பிக்கை மட்டும் முக்கியமானதாம்! என்னவொரு கேவலச் சிந்தனை!!
கஸ்தூர்பா இறந்த சிறிது காலம் கழித்து காந்தி மலேரியாவினால் பாதிக்கப்பட்டார். தனது மனைவிக்கு அன்னியதேச மருந்து உபயோகிக்கக் கூடாது என்று தடுத்த அதே காந்தி, தனக்கு மலேரியா வந்தவுடன் உயிர் பிழைப்பதற்காக அன்னியதேச மருந்துகளை எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் எடுத்துக் கொண்டு குணமானார்.
"ஹிந்த் ஸ்வராஜ்" பத்திரிகையில் எழுதிய கட்டுரை ஒன்றில் அன்னியதேச மருந்துகள் தீமையானவை எனச் சாடி எழுதிய அதே காந்தி தனக்குக் குடல் அழற்சி (appendicitis) நோய் வந்தவுடன் அதே அன்னியதேச மருத்துவர்களைக் கொண்டு appendectomy செய்துகொண்டது இன்னொரு வரலாறு.
(குறிப்பு: காந்தி கஸ்தூர்பாவுக்கு அன்னியதேச மருந்து கொடுப்பதனைத் தடுக்கவில்லை என யாரோ புளுகி எழுதியிருந்ததைப் படித்ததின் காரணமாக மேற்படி விளக்கத்தை எழுத நேரிட்டது. காந்தியை எவ்வளவு தூக்கிப் பிடித்தாலும் உண்மை அவரை நோக்கிப் பல்லிளிக்கும். ஏனென்றால் உண்மைக்கு என்றுமே மரணமில்லை).
Comments
Post a Comment