பொதுவாக வலைதளத்தில் மிகவும் பொறுப்பற்ற முறையில் பலவிதமான ட்ரோலிங் மெசேஜ் வருகின்றது பொள்ளாச்சி என்று படிக்கச் சொன்னாள் புள்ளதாட்சி என்று படிக்கக்கூடிய கட்சியிலிருந்து இந்த மாதிரி ஒரு ட்ரோலிங் போடுகிறார்கள் அதையும் சிலர் ரசித்து ஃபார்வேர்ட் செய்கிறார்கள்

 


பொதுவாக வலைதளத்தில் மிகவும் பொறுப்பற்ற முறையில் பலவிதமான ட்ரோலிங்  மெசேஜ் வருகின்றது பொள்ளாச்சி என்று படிக்கச் சொன்னாள் புள்ளதாட்சி என்று படிக்கக்கூடிய கட்சியிலிருந்து இந்த மாதிரி ஒரு ட்ரோலிங் போடுகிறார்கள் அதையும் சிலர் ரசித்து ஃபார்வேர்ட் செய்கிறார்கள். ஒரு இஸ்லாமிய பெண்ணின் குழந்தைக்கு பெயர் வைக்க சொல்லி கொடுக்கும் போது ஜெயக்கடா என்று பெயர் வைத்தவர் ஒரு நாட்டின் முதலமைச்சர் அவருக்கு பரிந்து பேச முட்டுக் கொடுக்க ஆட்கள் உள்ளார்கள் இதில் இவர்கள் ட்ரோல் செய்கிறார்கள் இவர்களுக்கு அந்த தகுதி இருக்கிறதா.  அவர்கள் எதிர்க்கின்ற மோடியை பற்றி யார் எது வேண்டுமானாலும் போட்டு விட்டால் அது உண்மையாகிவிடும் பத்து வருடத்தில் கொரோனா காலகட்டமும் உண்டு அதையெல்லாம் வெற்றிகரமாக கடந்து வந்து உலகிலேயே ஜிடிபி அதிகமாக உள்ள நாடு இந்தியா இன்ஃப்ராஸ்ட்ரக்சர் அதாவது உள்நாட்டு கட்டமைப்பு அதற்காக பெரிய அளவில் பல லட்சம் கோடிகள் செலவிடப்படுகிறது மோடியின் ஆட்சியில் உள்நாட்டு கட்டமைப்புக்கு எத்தனை லட்சம் கோடிகள் இந்த பத்து ஆண்டில் செலவு செய்திருக்கிறார்கள் என்று இதற்கு முன் 2014க்கு முன் எவ்வளவு செலவு செய்திருக்கிறார்கள் என்று மனசாட்சி உள்ளவர்கள் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளவும். காஷ்மீர் மலையை குடைந்து ரயில்வே அமைக்கிறார்கள் லடாக் என்ற எல்லை மாகாணத்திற்கு அருமையான ரோடு போடுகிறார்கள் நமது மிலிட்டரி பட்ஜெட் செலவுகளை அதிகரித்து நமது பாதுகாப்பு படையை மிகவும் நவீனப்படுத்தியுள்ளார்கள் பலவிதமான ஆயுதங்களை தயாரித்து பிறருக்கு விற்கவும் ஆரம்பித்து விட்டார்கள் மேலும் பல எதிரிகளை அழிக்க கூடிய ஏவுகணைகளை கண்டுபிடித்து அதை வெற்றிகரமாக செயல்படுத்தி காட்டியுள்ளார்கள் அத்தனையும் மறந்து விட்டு சல்லி உடைக்கிறார் என்று ஒருத்தர் போடுகிறார் இவர்களுடைய மனசாட்சி இவர்களுடைய நேர்மை தன்மை பற்றி என்ன சொல்வது. இந்த குரூப்பில் நல்லவர் ஒருவர் இருந்தால் கூட போதும். அவர்களிடம் விட்டுவிடுகிறேன் ஒரு நாட்டை தப்பு செய்பவனை விட அந்த தப்பை ஆதரிப்பவன் அல்லது அதை கண்டு கொள்ளாமல் இருப்பவன் மிகப் பெரிய துரோகி. என்ன செய்வது இவர்களுடன் தானே வாழ வேண்டும். அவரவர் வினைப்பயன் அவர்களை சாரும். இதைச் சொன்னால் யாரும் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அதை எதற்காக சொல்கிறேன் என்றால் வினைப்பயன் உங்களை சேரக்கூடாது என்று தான் சொல்கிறேன். எல்லோருக்கும் இறைவன் என்று உண்டு. அவன் மனசாட்சி இல்லாமல் இருப்பவர்களை கவனித்துக் கொள்வான். மோடி என்பவர் இரவு பகல் பாராமல் உழைக்கிறார் அவர் உழைப்பை மதிக்காமல் அவரை கடுமையாக விமர்சிக்கிறார்கள் அவர் மட்டும் இல்லை என்றால் இன்று இந்தியா இந்த மோசமான காலகட்டத்தில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும். நான் இதை கண்டிப்பாக சொல்கிறேன். மோடியை எதிர்ப்பவர்கள் பிச்சை எடுக்கும் போது அதை உணர்வார்கள். ஆனால் அவர்களுக்கும் சேர்த்தே நான் போராடுகிறேன் ஏனென்றால் அவர்கள் பிச்சை எடுக்கும் போது நானும் பிச்சை தான் எடுக்க வேண்டும் இந்த நாடு நன்றாக இருந்தால் தான் நானும் நன்றாக இருக்க முடியும் அந்த நாடு நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக சொல்கிறேன் எனக்கு இதனால் எந்த ஒரு பலனும் இல்லை என் மனசாட்சி சொல்கிறது நான் செய்கிறேன் உங்கள் மனசாட்சியை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். ஒருவர் 18 மாத டிஏ வரவில்லை என்று அடிக்கடி வருத்தப்படுகிறார் இத்தனைக்கும் அவருக்கு அத்தனை மாத சம்பளமும் வீட்டுக்குள் உட்கார்ந்து கொண்டே வாங்கி விட்டார் ஆனால் வருத்தப்படுகிறார் அந்த சமயத்தில் பொதுஜனம் எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் என்று கொஞ்சமாவது யோசித்து இருந்தால் இந்த நாட்டிற்காக அதை விட்டுக் கொடுப்பார்கள் பக்கத்து வீட்டில் ஒரு வேலைக்காரம்மா இருந்தார்கள் முதல் கொரோனாவிற்கு மூக்குத்தி தோடு இவைகளை விற்று வயிற்றுக்கு உணவு தேடி கொண்டார்கள் ஆனால் இரண்டாம் முறை கொரோனா வந்த போது விற்பதற்கு கூட எதுவும் இல்லை அந்த அளவிற்கு ஜனங்கள் கஷ்டப்பட்டார்கள் இவர்களுக்கு 18 மாத டிஏ வரவில்லை என்றால் மோடியை தூக்கி எறிவார்கள் அவ்வளவு சுயநலவாதிகள் இந்த சுயநலவாதிகள். அரசியல்வாதிகள் மற்றும் சிறுபான்மை மக்கள்  நான் காலங்காலமாக அந்த கட்சிக்கு தான் ஓட்டு போடுகிறேன் என்று சிந்தனை இல்லாமல் பேசுகின்ற மக்கள் இவர்களெல்லாம் சேர்ந்துதான் மோடியை எதிர்க்கின்றார்கள் ஆனால் இவர்கள் மோடியை எதிர்ப்பது எனக்கு ஒன்றும் பெரிதாக தெரியவில்லை சிந்தனை என்பது ஒவ்வொருத்தருக்கும் மாறுபடும் அது சரியானது தான் ஆனால் மோடி வேண்டாம் என்று தீர்மானிக்கும் பொழுது யாரிடம் போவார்கள் அவர்களுடைய தன்மை என்ன இதையும் அவர்கள் யோசிக்க வேண்டும் ஆனால் இப்பொழுது மோடியை எதிர்பார்ப்பவர்கள் எல்லாம் இந்த நாட்டின் சாபக்கேடு என்று நினைக்கிறேன்.  அடுத்த கட்சியை ஆதரிக்கிறார்கள் இதற்கு விஞ்ஞானமாக பேசுகிறார்கள் ஒருவர் ஹிட்லரை ஒப்பிட்டு மோடியை போட்டு இருந்தார் எல்லோரையும் சர்வாதிகாரமாக நடத்துகிறார் என்று கைது பண்ணுகிறார் என்று கைது பண்ணியவர்கள் எல்லாம் உத்தமர்களா ஹிட்லர் பண்ணினார் என்றால் அவர் உத்தமர்களை கைது பண்ணினார் ஆனால் மோடி கைது பண்ணவர்கள் எல்லாம் உத்தமர்களா என்று ஒரு நிமிடம் யோசித்துப் பார்க்கவும். கொரோனா காலகட்டத்தில் இங்கிருந்த அதிமுக ஆட்சியில் அவ்வளவு கொள்ளை அடித்தார்கள் எரிகின்ற வீட்டில் புடுங்கியது லாபம் என்ற மாதிரி செய்தார்கள் அப்ப எல்லாம் இந்த சமூக போராளிகள் என்ன செய்தார்கள் பார்த்துக் கொண்டு  சும்மா தானே இருந்தார்கள் இவர்களுக்கெல்லாம் ஒரு முடிவு காலம் கொண்டு வர வேண்டும். ஒரு தத்தி முதலமைச்சரை ஏற்றுக் கொள்பவர்கள் ஒரு ஐபிஎஸ் படித்து இந்த நாட்டிற்காக உழைப்பவரை எதிர்க்கிறார்கள் இவர்கள் எல்லாம் இந்த நாட்டில் சுதந்திரத்தை அனுபவித்து கொண்டு நாட்டிற்காக எதிராக செயல்படுகிறார்கள் தன்னுடைய மதத்தை இழிவுபடுத்துவர்களுடன் கூட்டு வைத்துக் கொள்கிறார்கள் இதையெல்லாம் எப்படி சகித்துக் கொள்வது இந்த நாட்டில் இந்து மதம் இருக்கும் வரை தான் எல்லா மதங்களும் இருக்கும் இந்து மதம் என்பதே அழிந்துவிட்டால் அதற்கு அப்புறம் இந்த நாட்டில் எப்பொழுதும் சண்டையும் சச்சரவு தான் இருக்கும் உதாரணம் இஸ்லாமிய நாடுகள் அவை 100  சதம் இஸ்லாமிய நாடுகளாக இருந்த போதும் அவர்களுக்குள் சண்டை இல்லாமல் இருக்கிறார்களா என்று கவனியுங்கள் இப்படிப்பட்ட ஒரு விஷயத்தில் சிஏஏ என்பது என்ன என்று கூட தெரியாமல் அதற்கு எதிராக போராடுகிறார்கள் மேலும் ஏர்லைன்ஸ் வித்ததை பற்றி கூட ஒருத்தர் போட்டிருந்தார் அதற்காகத்தான் அதை விற்பதற்கு முன்பே நகைச்சுவைக்காக மீம்ஸ் வந்தது விற்கப் போகிறார்கள் இப்பொழுது வாங்கிக் கொள்ளுங்கள் விற்ற பிறகு இந்த அரசாங்கம் அவர்களுக்கு விற்று விட்டது என்று சொல்லாதீர்கள் என்று மீம்ஸ் கூட வந்தது மேலும் அந்த ஏர்லைன்ஸில் பல லட்சம் கோடிகள் கடன் இருந்தது அந்த கடனுடன் சேர்த்துதான் இந்த ஏர்லைன்ஸ் கொடுத்திருக்கிறார்கள் அதாவது லியபிலிட்டி என்று சொல்வார்கள் அந்த லியபிலிட்டியை வாங்கியவர்கள் தான் பொறுப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற முறையில் கொடுத்திருக்கிறார்கள் இன்று அது நன்றாக நடக்கிறது இது இவர்களுக்கு என்ன மோசம் பலவிதமான நிதி கையாளுமையை கொண்டு பல வரா கடன்களை தள்ளிவிட்டு சில நஷ்டப்பட்ட பேங்க் ஒன்றாக சேர்த்து இன்று திவாலாகமல்  பார்த்துக் கொண்டார்கள். அதில் கடனை தள்ளுபடி பண்ணிவிட்டார்கள் கடனை தள்ளுபடி பண்ணி விட்டார்கள் என்று கெட்ட பெயரை பயன்படுத்தினார்கள் அது வரா கடனாக இருந்ததை கேரி பார்வேர்ட் பண்ணிக் கொண்டே இருந்தார்கள் இருந்தார்கள் காங்கிரஸ் அரசாங்கம் அப்படி இருந்தால் ஒரு நாட்டின் உண்மையான நிதி நிலைமையை தெரிந்து கொள்ள முடியாது அதாவது 90 ரூபாய் வரா கடனாக இருக்கும் ஆனால் இவர்கள் 100 ரூபாய் இருப்பதாக பேலன்ஸ் சீட்டில் காட்டினால் அது நம்மை தவறாக வழி நடத்தும் ஆகவே என்ன கையில் உள்ளதோ அதை மட்டும் வைத்துக்கொண்டு பட்ஜெட் போட வேண்டும் அதற்காக 90 ரூபாய் என்பதை தள்ளுபடி செய்தார்கள் இருக்கும் பத்து ரூபாயில் எவ்வாறு சரி செய்வது என்று யோசித்து செய்தார்கள் இதற்கெல்லாம் அவர்களுக்கு கிரெடிட் கொடுக்க வேண்டும் ஆனால் அரசியல்வாதிகள் தான் கொடுக்கவில்லை என்றால் பொதுமக்களாகிய நாமும் அதை சிந்திக்க மறுக்கிறோம் ஏனென்றால் நாம் அடிப்படையில் சுயம் சார்ந்த சில பல விஷயங்களை வைத்துக் கொண்டு மோடியை திட்டுபவர்களாக ஆகிவிட்டோம் இவர்களுக்கு சம்பளம் மட்டும் அதிகமாக வேண்டும் ஆனால் அதற்கு ஏற்ற விலைவாசி ஏறக்கூடாது. இதற்கு அவர்கள் உதாரணமாக எடுத்துக்காட்டுவது எல்பிஜி சிலிண்டர் விலை முதலில் ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும் பெட்ரோல் என்பது நமது நாட்டில் உற்பத்தியாவது அல்ல அதை நாம் இறக்குமதி செய்கிறோம் அந்த இறக்குமதி என்பது நம்முடைய  அந்நிய செலாவணி என்று சொல்வார்கள். அதை நாம் ஏற்றுமதி செய்து சம்பாதிக்க வேண்டும் இந்த விலைவாசி உயர்வை கொடுக்கவில்லை என்றால் அந்நிய செலாவணி இருப்பை நாம் கைக்குள் வைத்திருக்க முடியாது அப்படி வைத்திருக்க முடியாது என்றால் நம்மால் பெட்ரோலை இறக்குமதி பண்ண முடியாது அப்படி பண்ண முடியவில்லை என்றால் இந்த நாட்டில் என்ன ஆகும் பெட்ரோலுக்காக கியூ நிற்க ஆரம்பித்து விடுவோம் அதுபோல் இல்லாமல் பார்த்துக் கொண்டார்கள் அதற்காக மோடிக்கு நன்றி சொல்லுங்கள். எதை எடுத்தாலும் மோடி தான் காரணம். இந்தியாவில் என்ன நடந்தாலும் அது மோடி தான் காரணம் என்று திட்டுகிறார்கள் அது பரவாயில்லை அப்பொழுது இந்த இந்தியா நன்றாக இருப்பதற்கும் அவர் தானே காரணமாக இருக்க முடியும் மேலும் பாக்கிஸ்தான் என்ற நாட்டை பண மதிப்பிழப்பின் மூலம் ஒன்றும் இல்லாமல் செய்து விட்டார்கள் உலக அரங்கில் இந்தியாவிற்கு ஒரு மிகப்பெரிய மரியாதையை கொண்டு வந்து கொடுத்திருக்கிறார்கள் உக்கரைன் மற்றும் பல  வார் வந்தபோது கூட அங்கிருக்கும் மக்களை பத்திரமாக மீட்டுக் கொண்டு வந்தார்கள் அதற்காக அந்த அரசாங்கத்துடன் சுமூகமாக உறவு வைத்துக் கொண்டு அதை செய்ய முடிந்தது. மேலும் பல விஷயங்களை சொல்ல முடியும்.  த

 மோடியை எதிர்பாளர்கள் போடும் மீம்ஸ் இங்கு போடுகிறார்கள். அதுபோல் மீம்சை யார் போடுகிறார்கள் என்றால் பெரும்பாலும் இந்த திராவிட உருட்டுக்களும் சிறுபான்மை சமுதாய மக்களும் தான் இருப்பார்கள் அவர்களுக்கு இந்து மக்கள் மீது ஏறி சவாரி செய்து கொண்டே இருக்க வேண்டும் அதை தட்டிக் கேட்பவர்கள் வந்துவிட்டால் அவர்களுடைய உரிமை போய்விட்டதாக நினைப்பார்கள் 14 வருடம் குஜராத்தில் மோடி ஆட்சி செய்தார் அதன் பிறகு பத்து வருடம் இந்தியாவில் ஆட்சி செய்கிறார் எந்த சிறுபான்மையினர் நலத்தை கெடுத்தார்களா என்று சொல்ல முடியுமா இதையெல்லாம் அரசியல் ஆக்க பார்க்கிறார்கள் அவர்கள் பார்த்தால் பரவாயில்லை ஆனால் நீங்கள் பார்ப்பது எனக்கு ஏன் என்று புரியவில்லை அதே சமயத்தில் வலைதளத்தில் போய் பாருங்கள் youtube-யில் போய் பாருங்கள் மோடியை சப்போர்ட் செய்து எவ்வளவு பேர் எவ்வளவு எழுதுகிறார்கள் என்று தெரியும் ஆகவே உங்கள் அனைவருக்கும் என்னுடைய பணிவான வேண்டுகோள் என்றால் நீங்கள் நல்லவர்களை ஆதரிங்கள் மோடியை எதிர்ப்பேன் என்பதற்காக ஒரு சாபக்கேடான அரசாங்கத்தை கொண்டு வந்து விடாதீர்கள் என்று தாழ்மையுடன் உங்களுக்கும் சேர்த்து தான் நான் கேட்டுக்கொள்கிறேன் இதை புரிந்தால் எடுத்துக் கொள்ளுங்கள் இல்லை என்றால் எதிர்த்து கூட போடுங்கள் ஆனால் ஒவ்வொரு பதிவிற்கும் என்னால் இவ்வளவு தூரம் விவரமாக பதில் அளிக்க இயலாது நீங்கள் கேட்கும் அத்தனை கேள்விக்கும் என்னால் பதில் இருந்தால் சொல்வேன் இல்லை என்றால் ஒத்துக் கொள்வேன் அதில் ஒரு விஷயம் என்னவென்றால் வடநாட்டுக்காரர்களை இங்கு வேலையில் அமர்த்துவது தவறுதான் அதை நான் ஒத்துக் கொள்கிறேன் அப்புறம் ஒரு மனிதர் எழுதியிருந்தார் வடக்கத்தி காரர்கள் இங்கு வந்து வேலை செய்கிறார்கள் என்று அதற்கு காரணம் யார் 65 67 வருடங்கள் ஆண்ட காங்கிரஸ் கட்சியா அல்லது 10 வருடம் வாழ்ந்த மோடி கட்சியா எந்தவிதமான யோசனை இன்றி எழுதுவது அது ஆகவே நீங்கள் உங்கள் மனசாட்சி படி சுயநலமில்லாமல் யோசித்து செயல்படுங்கள் நாட்டிற்கு நன்மை பயக்கும் செயல்களை செய்யுங்கள் தீமை செய்பவர்களை ஆதரித்து வினை பயனை தேடி கொள்ளாதீர்கள் நான் சாபமாக செல்லவில்லை உங்கள் மேல் அக்கரையாக சொல்கிறேன் அதே சமயத்தில் அதே வினை பயனை நானும் உணர்ந்து தான் சொல்கிறேன் நீங்களும் அதை உணருங்கள் உணர்ந்தும் நீங்கள் ஆதரிப்பது தான் சரி என்றால் அந்தக் கட்சியை ஆதரிங்கள் நன்றி வணக்கம் என்னுடைய சொந்தங்கள் அனைவருக்கும் எதிராக நான் பேசுவது என்பது எனக்கு பிடித்த செயல் அல்ல ஆனாலும் நேர்மைக்காக போராடுகிறோம் நேர்மைக்காக சொல்கிறோம் என்ற மனசாட்சி என்னிடம் இருப்பதால் என்னால் இவ்வளவு டைம் செலவு செய்து எழுத முடிகிறது அனைவரும் வாழ்க வளமுடன்

Comments

Popular posts from this blog

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது

Om NAMO NArendra MOdi Namaha*🔥🙏🪷 Shri Narendra Modi Ashtotra Namavali ஓம் ஸ்ரீ நரேந்த்ராய நமஹ (Salutations to the revered Narendra) 1. ஓம் விஶ்வ-நேத்ரே நமஹ – Salutations to the leader of the world stage. 2. ஓம் பாரத-பக்தாய நமஹ – Salutations to India’s devoted champion. 3. ஓம் ஜடூ-ஜப்பி-ப்ரதாய நமஹ – Salutations to the giver of world-famous hugs.

The sound of gunfire pierced the air of the quiet valleys. A terrorist attack took place near the Pahalgam market area — *turning a place like paradise into hell.* People screamed. Blood flowed. There was chaos everywhere. *👺 "The terrorists were asking for names and religions and then firing bullets."*